30

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நால்வரும் சென்னைக்கு திரும்பி விட நாட்கள் அதன் போக்கில் அழகாய் சென்றுகொண்டிருந்தது .விக்ரம் நவ்யாவின் காதல் சிறிது ஊடல் நிறைய புரிதலுடன் சென்றுகொண்டிருக்க சரணும் ஸ்வஸ்திகாவும் தாங்கள் காதல் பூத்த தினத்திலிருந்து சண்டைகளுக்கு சற்று விடுமுறை அளித்துவிட்டு சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்தனர்.

3 மாதத்திற்கு  பின்,

அன்று அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர் விக்ரமும் நவ்யாவும் .அன்று அவர்கள் எடுக்க போகும் புது ப்ரொஜெக்ட்டிற்கான டெண்டர் quotation தயாரித்துக்கொண்டிருந்தனர் இருவரும் .

மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்த விக்ரமின் கவனத்தை திசை திரும்புவதை போல் அவனது செல்போன் மணி அடிக்க தான் செய்து கொண்டிருந்த வேலைகளிலிருந்து வெளி வந்தவன் அவன் போனில் இருந்த எண்ணை பார்த்து விட்டு முகம் சுருங்க காதில் வைத்தவன் வெறும் ம்ம் மட்டும் கொட்டினான் .

அவன் செயல்களை கவனித்து கொண்டே இருந்தாள் நவ்யா .அவளும் கவனித்துக்கொண்டு தானே இருக்கிறாள் அவள் இங்கு வேலைக்கு சேர்ந்த 6 மாதங்களில் நாள் தவறாமல் சரியாக மதிய உணவு வேளையிலோ அல்லது அதன் பின் சற்று நேரத்திலோ விக்ரமிற்கு போன் வரும் .

அனைத்து போன் callgalukum சிரித்தமுகமாய் பதிலளிப்பவன் அந்த போனிற்கு மட்டும் ம்ம் என்ற வார்த்தையை தவிர்த்து வேறு எதுவும் சொல்ல மாட்டான் இறுகிய முகத்துடனே பேசி விட்டு வைத்து விடுவான் .

என்ன என்று அவனிடம் கேட்க நினைத்தும் இது வரை அவள் கேட்டதில்லை.பல நாட்களாய் தன் மனதில் அரிக்கும் விஷயத்தை அவனிடம் கேட்கலாம் என்று அவன் அருகில் சென்றவள் அப்புறம் என்ன சொல்லப்பட்டதோ "reach ஆயிட்டிங்கள்ல சரி வரேன் வைங்க போனினை" என்று வேண்டா வெறுப்பாய் கூறியவன் தான் அணிந்திருந்த டை யை கழற்றி தலையில் கைவைத்து அமரவும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.

அவன் அருகில் சென்று அவன் தலை முடியை கோதியவள் "என்னாச்சு விக்ரம் தலைவலிக்குதா ?"என்க

அவனும் "ஆமா நவி ரொம்ப தல வலிக்குது ஒரு காபி கிடைக்குமா ?"என்க அவன் அலுவலக அறையை ஒட்டி அமைந்திருந்த ஒரு சிறு kitchenirku சென்றவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் நுரை ததும்ப ஆளை தூக்கும் வாசனையுடன் சூடான காபி கோப்பையுடன் அவன் முன் நின்றாள்.

அவளிடம் ஒரு சிறு வரவழைக்கப்பட்ட புன்னகையை சிந்தியவன் தேங்க்ஸ் என்றவாறு காபி கப்பை வாங்கி அதை மிடறு மிடறாய் உறுஞ்சியவன் அவனது இருக்கையிலிருந்து எழுந்து ஜன்னலோரமாய் போடப்பட்டிருக்கும் sofaavirku சென்றவன் சைகையால் அவர்கள் தயார் செய்து கொண்டிருந்த கோப்புடன் அவளை அவன் அருகில் வந்து அமர கூறினான் .

அவன் கூறியதை போல் அந்த கோப்புடன் அவன் அருகில் சென்று அவள் அமர அந்த கோப்பை ஒரு கையால் புரட்டியவன் காபியை குடித்து முடித்துவிட்டு "நவி இந்த projectoda raw detailslaam figure out பண்ணிட்டோம் ரைட் "என்க அவள் ஆமோதிப்பாய் தலை அசைத்தாள் .

பின் அவன் "ஓகே make a detailed report அண்ட் file இட் .எனக்கு important work இருக்கு so நா அங்க கிளம்புறேன் டேக் கேர்"என்க

அவளோ "பட் விக்ரம் இது முடுஞ்சப்ரோம் உங்களோட sign வேணும் இன்னைக்கு ஈவினிங் குள்ள நாம இந்த quotationah கிளைண்ட்க்கு அனுப்பனும் .அண்ட் இந்த plannayum நீங்க எஸ்பிளான் பண்ண வேண்டி வரும் "என்க

சிறிது நேரம் யோசித்தவன் "ஓகே fileah prepare பண்ணிட்டு என்னோட வீட்டுக்கு 5ku வந்துரு வீடியோ confrence மூலமா explain பண்ணிக்கலாம் now let me leave "என்றவன் அவளிடம் ஒரு மெலிதான புன்னகையை சிந்திவிட்டு கோட்டை நாற்காலியிலிருந்து எடுத்தவன் அதை அணிந்து கொண்டு வெளியேறினான் .

அவன் சென்றபின் அவன் கூறிய வேலைகளை செய்து முடித்தவள் filegalai எடுத்துக்கொண்டு தன் scootyil அவன் வீட்டை வந்தடைந்தாள்.இத்தனை மாதங்களில் அவள் அவன் வீட்டிற்கு வருவது இதுவே முதல் முறை .இன்றே அவன் அனுப்பி வைத்திருந்த லொகேஷனை வைத்து google ஆண்டவரின் உதவியோடு வந்து சேர்ந்தாள்.

வெளியே gateil தன்னை அடையாளம் காண வேண்டி அவள் தன் id கார்டை தேட அந்த காவலாளியோ "ஐயோ நீங்க எதுக்கும்மா idlaam தேடிகிட்டு உள்ள போங்கம்மா "என்க அவளிற்கோ அந்த காவலாளியின் செய்கை குழப்பமூட்டுவதாய் இருந்தது .பின் தன் scootyai உள்ளே பார்க் செய்தவள் அப்பொழுதே அவன் வீட்டை நிமிர்ந்து பார்த்தாள் .

அவனது வீட்டை பார்த்தாள் கண்கள் வியப்பில் ஆழ்ந்தது .ஒவ்வொரு இடமும் ரசித்து ரசித்து உருவாக்கப்பட்டிருப்பதை போல் கடற்கரைக்கு அருகில் இருபுறமும் புல்வெளியுடன் கூடிய அழகிய மலர்ச்செடிகளும் இன்ன பிற செடிகளும் இருக்க சூரியன் மறையும் அந்த மாலை வேளையில் எழிலோவியமாய் தெரிந்தது அவ்வீடு .

அதன் வெளிப்புறத்தோற்றத்தை ரசித்து கொண்டே உள்ளே சென்றவள் அங்கிருந்த தோட்டக்காரர்கள் முதற்க்கொண்டு அவளிடம் ஒரு ஸ்நேஹப் புன்னகையையும் மரியாதை கலந்த பார்வையையும் சிந்த அவளிற்கு அவர்களின் செய்கை அனைத்தும் புதிராய் இருந்தது .

பின் அந்த வீட்டிற்குள் நுழைந்தவள் "விக்ரம்.....விக்ரம் "என்றழைக்க

அவளது குரலிற்கு அவளின் பின்னிருந்து ஒரு கம்பீரமான பெண்ணின் குரல் பதிலாய் வந்தது "யார் நீ?" என்று.

குரல் வந்த திசையில் திரும்பியவள் கண்டதென்னவோ எளிமையான காட்டன் புடவையில் அளவான ஒப்பனையில் காதில் சிறிய அளவிலான ஒரு வைரத்தோடும் கழுத்தில் ஒரு chainum மிடுக்கான தோரணையில் கண்களில் முதலில் இருந்த அதிகாரத்தோரணை அவளின் முகத்தை பார்த்ததும் கனிவாய் மாறிட விக்ரமின் கம்பீரத்தை தன்னில் இருந்து வழங்கியவர் போல் அவன் முகச்சாயலில் 50 வயது மதிக்க தக்க பெண்மணி நின்றிருந்தார் .

அவரை பார்த்தவள் கேள்வியாய் நோக்க அவரோ அவள் அருகில் வந்தவர் "யு ஆர் நவ்யா ரைட் "என்றவர் அவள் கன்னத்தில் தன் கரத்தை வைத்து அவளை ஒரு முறை புன்னகை ததும்பும் முகத்துடன் நோக்க

அவளோ அவரது புன்னகையில் தன் இதழ்களும் விரிய அவரை பார்த்தவள் "ஆமா நா தான் நவ்யா . நீங்க ?என்ன எப்படி உங்களுக்கு தெரியும் ?"என்று கேள்வியாய் நோக்க

அவரோ சிரித்தவர் "உன் விக்ரமோட அம்மா தன் நான் பேரு மஹா .அண்ட் உன்ன எப்படி தெரியும்னு கேட்டல்ல அதுக்கு பதில்" என்று அவள் எதிரே இருந்த சுவற்றை காட்ட அதில் அவர்கள் இருவரும் மகாபலிபுரத்தில் இரவில் கடலிற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரிதாக்கி மாட்டப்பட்டிருந்தது .

விக்ரம் அவனது வீட்டிற்கு அதிகமாய் யாரையும் அனுமதிப்பதில்லை அவன் வீட்டிற்குள் அவன்,அவனது அம்மா ,சரணை அன்றி இன்று வரை யாரையும் அனுமதித்ததில்லை .ஆதலால் எந்த தயக்கமும் இன்றி அவர்கள் இணைந்திருக்கும் புகைப்படத்தை அவன் வீட்டு சுவற்றில் மாட்டி இருந்தான் .

அதை கண்டு வெட்க புன்னகை சிந்திய நவ்யா "சாரி அத்தை எனக்கு உங்கள தெரியாது அதான் அப்டி கேட்டுட்டேன் "என்க

அவளது அத்தை என்ற அழைப்பில் உருகியவர் "இட்ஸ் ஓகேடா என்ன சாப்பிடுற ?"என்க

அவள் "ஒன்னும் வே......"என்று முடிப்பதற்குள் விக்ரமின் குரல் அவளை இடை வெட்டியது "நவ்யா இங்க என்ன பண்ற?" என்று

அவனை திரும்பி பார்த்தவள் "என்னங்க நீங்க அத்தை போட்டோவை கூட என்ட இப்போ வர காட்டாம இருந்துருக்கீங்க பாருங்க யாருனு கேட்டுட்டு இருக்கேன் "என்க

அவனோ அவனது அன்னையை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தவன் " உன் கிட்ட intoduce பண்ற அளவுக்கு இவுங்க எனக்கு இம்போர்ட்டன்ட்டாக தெரில. "என்க அவன் உதிர்த்த வார்த்தைகளில் அவன் அன்னையின் முகம் சுருங்கி விட்டது .

அதை கண்ட நவ்யா அவனிடம் திரும்பி ஏதோ கூறும்முன் அவனோ தன் அறை நோக்கி வேக எட்டுக்களை எடுத்து வைத்தவன் "சீக்கரம் பைலை எடுத்துட்டு என் ரூம்க்கு வா "என்று பணித்து விட்டு செல்ல அவனின் விசித்திரமான நடவடிக்கையில் குழம்பிய நவ்யா மஹாவின் புறம் திரும்ப அவள் தன் புறம் திரும்புவதை உணர்ந்தவர் தன் கண்களில் தானாய் சேர்ந்திருந்த கண்ணீரை அவசரமாய் துடைத்து வரவழைக்கப்பட்ட புன்னகையோடு "மேல போமா "என்க

அவர் கையை பிடித்த நவ்யா ஏதோ கூற வரும்முன் விக்ரமின் குரல் ஓங்கி ஓலித்தது "நவ்யா ஐ said யு டு come up " என்று

அவனின் கோபத்தை அவன் குரலிலேயே உணர்ந்தவள் அவரை தயக்கமாய் நோக்கி அவரின் கரத்தில் ஒரு அழுத்தத்தை கொடுத்துவிட்டு மேலே filegaludan அவன் அறைக்குள் நுழைந்தாள்.அவன் அறைக்குமுன் ஒரு வரவேற்பறை இருக்க அதன் பின்னே படுக்கையை அறை அமைந்திருந்தது .

பின் அவன் அறையுடன் ஒட்டி இருந்த அவனது அலுவலக அறைக்குள் நுழைந்தவள் அவன் முகத்தை இருகியவாறு வைத்திருக்க இப்பொழுது அவனிடம் ஏதாவது கேட்டால் நிச்சயம் பதில் வராது என்று உணர்ந்து மௌனமாய் வேலை தொடர்பாய் பேச ஆரம்பித்தாள் .

அவனது முகபாவமும் இறுகிய தோற்றத்தில் இருந்து சற்று இயல்பிற்கு வர fileil சில மாற்றங்களை செய்தவன் வீடியோ conferencing மூலமாய் அந்த clientsudanaana meetingai சிறப்பாய் முடித்தான் .

அவனது ஐடியாக்கள் அவர்களுக்கு பிடித்து விட order இவனுக்கே கிடைத்தது .ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் சிரிப்பு ஒட்டிக்கொள்ள நவ்யாவை நோக்கி ஒரு புன்னகையை அவன் செய்ய அவள் அவனை கேள்வியாய் நோக்கினாள்.

அவள் மண்டையில் என்ன கேள்விகள் ஓடுகிறதென்பதை அவள் கண்வழியே உணர்ந்து கொண்டவன் அவள் அருகே சென்று அமர்ந்து அவள் கையை பற்றினான் .

அவன் ஸ்பரிசத்தை உணர்ந்தவள் அவனது கண்ணை பார்க்க அவனோ "உன் மண்டைல என்ன ஓடுதுனு தெரியுது பட் ப்ளீஸ் இப்போ என்ன எதுவும் கேட்காத நேரம் வரேல நானே சொல்றேன் இப்போ கொஞ்சம் சிரியேன்"என்று அவள் நாடியை பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தியவன் இதழ்களை விரித்து சிரி என்பதை போல் சைகை செய்ய அவனது தற்போதய மனநிலையை கெடுக்க விரும்பாதவன் சிரித்து அவனது அறையை ஆராயும் பார்வை பார்க்க அவள்பார்வையை உணர்ந்து கொண்டவன் "நீ இன்னும் என் ரூமை சுத்தி பார்களேள வா காட்டுறேன் "என்று அவள் கையை பற்றி அலுவலக அறையை விட்டு வெளியே அழைத்து சென்றான்.

அந்த அறையின் நடுவே நின்றவன் "நவி என் ரூம் மூணு secionaa இருக்கும் முதல்ல நுழையுறப்போ ஒரு ஹால் இருக்கும் அதை தாண்டி தான் என்னோட bedroom உள்ள வரும் போதே அதை கவனிச்சுருப்ப என்றவன் பின் அந்த bedroomin இடப்பக்க ஓரத்தில் இருந்த ஒரு கதவின் அருகில் கூட்டி சென்றவன் அதை திறந்து உள்ளே அழைத்து சென்றான்.

"இது ஜிம்"என்க அவளது பார்வையோ அங்கிருந்த சிறு பார் போன்ற அமைப்பில் நிலைகுத்தி நின்று இவனை ஒரு முறை முறைத்தாள் .

அவளது பார்வையை புரிந்து கொண்டவன் அசடு வழிய சிரித்து"ஈஈஈ இப்போல்லாம் எப்போவாச்சும் தான் நவி ட்ரின்க் பண்றேன் "என்க

அவள்"என்னவோ பண்ணி தொலைங்க ஆனா நம்ம கல்யாணத்துகப்ரோம் இந்த கண்றாவிலாம் இருந்துச்சு.........."என்க

அவனோ கேலியாய் புருவம் தூக்கியவன் "இருந்துச்சுன்னா என்ன botteleah எல்லாம் ஒடச்சுருவியா ?"என்க

அவளோ மறுப்பாய் தலை அசைத்தவள் "சா சா botteloda சேர்த்து உங்க மண்டையையும் உடைப்பேன் எப்படி வசதி"என்க

அவனோ மனதில் "கொலைகாரி "என்று நினைத்தவன் இவளை இதற்குமேல் இங்கு விட்டு வைப்பது நல்லதல்ல என்றெண்ணி அவளை அவ்வறையிலிருந்து தள்ளிக்கொண்டு வெளியே அழைத்து வந்தான் .

பின் அந்த bedroomilirundha balcony கதவை திறந்தவன்.இது தான் என்னோட favourite ஸ்பாட் என் கடல் தோழியோட நா தினமும் பேசுற மீட்டிங் ஸ்பாட் என்று அவளை அங்கு அழைத்து செல்ல அந்த ஆர்ப்பரிக்கும் ஆழியின் அதிசுந்தர அழகை கண்டவளது இதழும் முகமும் மலர அங்கிருந்த கம்பிகளில் தன் கையை ஊன்றிக்கொண்டவள் beautiful என்று விட்டு அவன் புறம் திரும்பாமலே "ராசனக்காரன்டா நீ "என்க

அவள் பின்னே வந்து அவளது இடையை தன்னுடன் மென்மையாய் அணைத்தவண்ணம் அவள் தோளில் தன் தாடையை பதித்தவன் அவள் காதிற்கு வெகு அருகில் சென்றவன் "ஆமான்டி குட்டச்சி" என்று விட்டு தன் மூக்கால் அவள் காதுமடலை உரச உடல் கூசி சிலிர்த்து அடங்கினாள் நவ்யா .

பின் சற்று நேரம் இருவரும் கண்மூடி நிற்க விக்ரம் "நவி ..."என்று மெல்லமாய் அழைக்க அவள் காற்றிற்கும் நோகாதவாறு "ம்ம் "என்க

அவனோ அவளை நன்றாய் தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டவன் "உன் அண்ணன் கிட்ட வந்து பேசவாடி .சத்தியமா என்னால ரொம்ப நாள் வெயிட் பண்ண முடியாது "என்க

அவளிற்குமே விரைவில் அவனுடனான திருமணம் நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவனை வெறுப்பேற்ற எண்ணியவள்"என்னங்க அவசரம் ஒரு ரெண்டு வருஷம் லவ் பண்ணிட்டு அப்ரோமா கல்யாணம் பண்ணலாம் "என்க

அவனோ திடுக்கிட்டு அவளை விட்டு விலகி அவளை தன் புறம் திரும்பியவன்"எது ரெண்டு வருஷமா .........."என்று வாயை பிளக்க

அவன் செய்கையில் எழுந்த சிரிப்பை அடக்கியவன் சாதாரணமாய் முகத்தை வைத்துக்கொண்டு "என்ன விக்ரம் நீங்க இப்போ தான லவ் பண்ண ஆரம்பிச்சுருக்கோம் ஒரு ரெண்டு வருஷம் jollyaah லவ் பண்ணிட்டு அப்பறோம் கல்யாணம் பண்ணலாமே "என்க

அவனிற்கோ எங்கு சென்று முட்டிக்கொள்ளலாம் என்றிருந்தது அவள் அருகில் வந்து அவள் தாடையை பிடித்தவன் "நவி நவி first கல்யாணம் பண்ணிக்குவோம் அப்பறோம் எவ்ளோ நாள் வேணாலும் லவ் பண்ணிக்கலாம் ஓகேவா. இப்டி ரெண்டு வருஷம் மூணு வருஷம்னு குண்ட தூக்கி போடாதடி மீ பாவம் "என்க

அத்தனை தொழில்களை ஒற்றை ஆளாய் சிங்கம் போன்ற கம்பீரத்துடன் ஒற்றை கண்பார்வையில் தன் கீழ் இருப்பவர்களை நடுநடுங்கச்செய்யும் விக்ரம் தன் முன் எந்த ஈகோவும் இன்றி இப்படி கொஞ்சிக்கொண்டிருப்பது நவ்யாவிற்கு அவன் மேல் இருந்த காதலை பன்மடங்காய் கூட்டியது அவனை மேலும் சோதிக்க விரும்பாதவள் சிரித்துவிட அவளின் கள்ளத்தனத்தை புரிந்தவன் "யு நவி......." என்று அவளை நெருங்க அவளோ அவனை அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டவள் வெவெவேவே என்று பழிப்பு காண்பித்து விட்டு ஓடி விட்டாள்.அவள் சென்ற திசையை நோக்கி பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பியவன்

எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி

date பண்ணவா இல்ல chat பண்ணவா

உன் கூட சேந்து வாழ ஆச தான் வந்துடுச்சுடி

என்று பாடிக்கொண்டே படுக்கையில் சென்று விழுந்தான்.

இங்கே இவன் குஷி மூடில் இருக்க அங்கே ஸ்வஸ்திகாவோ

என்றும் போல் காலேஜிற்கு வந்தவள் சரணின் பாடவேளையில் மட்டும் அவன் நடத்தும் சத்தத்தை mute செய்து விட்டு அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க அவனோ தப்பி தவறி கூட அவள் புறம் திரும்பாமல் பாடம் நடத்திக்கொண்டிருந்தான் .(அவளை பார்த்தா காத்து தான வருது பாடம் வர மாட்டேங்குதே ஹீஹீஹீ).

பின் கல்லூரி முடிய அவனது வண்டியின் அருகில் நின்றுகொண்டிருந்த ஸ்வஸ்திகா அவனின் வருகைக்காக காத்திருக்க அவனோ என்றும் போல் அந்த மாலினியுடன் சிரித்தபடி பேசிக்கொண்டு வர அது வரை சற்று இறுகிய ஸ்வஸ்திகாவின் முகம் கடைசியில் மாலினி அவனை லேசாய் அணைத்துவிட்டு விலக ஸ்வஸ்திகாவோ ரெத்தம் சூடாக தன்னவனை அணைத்த அந்த மாலினியின் கையை வெட்டி விடும் க்ரோததோடு அவளை முறைத்தாள்.

அவளோ கடுப்பில் அடுப்பை போல் கொதித்துக்கொண்டிருக்க அவளின் அந்த முகமாற்றத்தை பார்த்த சரண் மனதில் அவளது posessivenessai கண்டு சிரித்துக்கொண்டே அவள் அருகில் வந்து கை கட்டி நிற்க அவளோ அவன் மீது கோபத்தில் இருந்தவள் அவன் தன்னை பார்த்து சிரிக்கவும் மேலும் கோபம் வர அங்கிருந்த ஒரு சிறு கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தவள் அவன் பைக்கை ஒரு உதை உதைத்துவிட்டு அவள் scootyயில் ஏறினாள்.

அவனோ அவள் எறிந்த கல்லிலிருந்து தப்பித்து சுற்றி முற்றி பார்த்துவிட்டு அவள் அருகில் சென்றவன் அவள் கையை பற்றி தன் அருகில் இழுக்க அவன் மீது மோதி நின்றவள் இரண்டு கைகளாலும் சரமாரியாக அவனை தாக்கினாள்.

ஸ்வஸ்திகா "frauduh பொருக்கி அப்போ தான் அந்த லூசோட பேசுனேனா இப்போவும் ஈஈன்னு இளிச்சுட்டு இருக்க அதுவும் என் முன்னாடியே உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும் பக்கி பரதேசி "என்க

அவனோ சிரித்தபடி அவள் இருகைகளையும் தன் ஒரு கையால் பிடித்தவன் "ஏண்டி உன் முன்னாடி மத பொண்ணுட்ட பேச கூட கூடாதாக்கும் madamku அவ்ளோ posessiveness வருதா."என்று கேலியாய் புருவம் உயர்த்த

அவனை முறைத்த ஸ்வஸ்திகா அவன் கைகளை உதறிவிட்டு "தன் scootyil சென்று அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்ய அவனோ அவள் scootyசாவியை பிடிங்கி தன் கையில் வைத்து சுழற்றியவன் "உன் scootyல இன்னிக்கு ஒன்னும் போக வேணாம் இன்னிக்கு என் பைக்ல வெளிய போலாம்.கேட்டா service விட்டுட்டான்னு சொல்லிக்கோ "என்க

அவளோ "சரண் அடி வாங்காத ஒழுங்கா சாவிய குடுத்துரு உன்னோடலாம் பைக்ல வரமுடியாது "என்க

அவனோ "அப்டியா மேடம் அப்போ நீயே சாவிய எடுத்துக்கோ "என்று தன் கையை முழு உயரத்திற்கு தலைக்கு மேல் உயர்த்தி சாவியை மேலே தூக்கி பிடிக்க அவன் சாதாரணமாய் வைத்திருந்தாலே ஸ்வஸ்திகா எம்பி குதித்து தான் சாவியை எடுக்க வேண்டும் இதில் இத்தனை உயரமாய் வைத்திருந்தால் எங்கே அவள் சாவியை கைப்பற்ற ? மனதிற்குள்ளே அவனை"இம்ச"என்று கருவியவள் அவன் பைக்கில் வந்து அமர்ந்தாள்.

அவள் பைக்கில் அமர்ந்ததும் சிரித்தவன் பைக்கில் பயணித்துக்கொண்டே"அவ ஏன் பேசுனானு கேக்கவே இல்லையே ஸ்வஸ்தி நீ" என்க

அவளோ வேண்டாவெறுப்பாக "கேக்கலேனா மட்டும் விடவா போற சொல்லி தொலை என்ன சொல்லுச்சு அந்த லூசு "என்க

அவனோ ஒரு கையால் பைக்கை இயக்கி கொண்டே முன்னே இருந்த திருமண அழைப்பிதழை அவளிடம் கொடுக்க அதில் மணமக்கள் பெயரில் மாலினியின் பெயர் இருப்பதை பார்த்தவள் முகத்தில் அதன் பின்னே சிரிப்பு வந்தது .அவளது முகமாற்றத்தை கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டிருந்த சரனிற்கு அவளை நினைத்து சிரிப்பு தான் வந்தது .

அதில் இருந்த மணமகனின் பெயரை பார்த்து மானசீகமாய் அவனிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை கூறிக்கொண்டு அந்த அழைப்பிதழை தன் பைக்குள் வைத்துக்கொண்டவள் இது வரை கம்பியை பற்றி இருந்த தன் கையை எடுத்து அவன் இடுப்பை சுற்றி அணைத்து அவன் முதுகில் தன் முகத்தை வைத்துக்கொண்டு "எங்கே மாமா போறோம் "என்க

அவனோ அவளது மாமா என்ற அழைப்பில் திகைத்தவன் பின் அவள் புறம் லேசாய் திரும்பியவன் "சொல்றேன் "என்றவாறு அவளது கரத்தை எடுத்து முத்தமிட்டு சாலையில் தன் கவனத்தை பதித்து பைக்கை ஓட்ட துவங்கினான்.

இரு ஜோடிகளும் தத்தம் காதலிகள் தந்த நினைவுகளில் சந்தோஷத்தில் திளைத்திருக்க அந்த சந்தோஷம் நீடிக்குமா?

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro