38. ஷக்தி பிரசன்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

38. ஷக்தி பிரசன்

"இல்லை" என கதிர் தலையசைக்க அதை கண்ட எழிலின் கண்களோ சில நொடிகளில் ஏமாற்றத்தையும் வெறுமையையும்  பிரதிபலித்து கடைசியாக கண்ணீரை வெளியிட்டது.... 

கண் வழியே அவளின் வலியை உணர்ந்த கதிர் "கதி...ர...ழ...கி.....'' என அவளை அழைக்க "வேண்டாம்" என தலையசைத்தவள்.

 'உன் மனதில் நான்  இல்லையா..... நான் மட்டும் இல்லையா???'என அடிபட்ட பார்வை பார்த்தவள்  அவன் கூற வருவதைக்கூட கேட்காமல் கொட்டும் மழையின் நடுவே தனது கண்ணீரையும் கலக்க விட்டு வீட்டை நோக்கி சென்றாள். 

செல்லும் அவளின் உருவம் மறையும் வரை அங்கேயே நின்றவனின் கண்களும் தான் காணும் காட்சி மறையும் அளவிற்கு கண்ணீரை உகுத்தன... 

'ஏன் டாபி... என்னை அப்படி ஒரு பார்வை பார்த்த... நா உன்னை ரொம்ப காதலிக்கிறேன்டி..... உன்ன மட்டும் தான்டி... அது உனக்கு தெரியலையாடி... ஏன் என்கிட்ட எதுவும் கேக்கல.... எப்பவும் திட்டுற மாறியாச்சும் திட்டிட்டு போய் இருக்கலாம் தானே... ஏன்டி ஏதும் சொல்லாம போன.....???' என அங்கேயே நின்றவன் அருகில் நின்ற மாறனின் அழைப்பில் தன் எண்ணங்களை கலைத்தான். 

"ப்ரோ என்ன ஆச்சு...??? ஏன் இப்டி நிக்கிறீங்க....?? உங்க ஆளு இன்னும் சமாதானம் ஆகலையா....?? நா கூப்பிட கூப்பிட கேட்காம போறா... ??" என்றான்.

"இல்ல மாறன்.. அப்படியெல்லாம் இல்ல. நா.... ஒன்னும்... பிராப்ளம் இல்ல நீ... நீ... இன்னும் போலையா...??" என்றான் திக்கி திணறி.

மழையில் நனைந்து கண்ணீர் தெரியாமல் இருந்தாலும் அவனின் கண்களில் தெரிந்த சோகத்தினை கண்டு கொண்டவன் அதை பற்றி கேட்க மனமின்றி 

"இல்ல ப்ரோ இங்க பக்கத்துல ஒரு ஷாப்ல சாட் ஐட்டம்ஸ் நல்லா இருக்கும் மழைக்கு சாப்டலாம்ன்னு  அங்க இருந்தேன்.... சரி ப்ரோ நானும் கிளம்புறேன் நைட் டின்னர் வேற இருக்கு... நீங்களும் கிளம்புங்க..." என அவன் செல்ல கதிரும் அங்கிருந்து சென்றான்.... இவை அனைத்தையும் கண்ட அந்த முகமோ ஒரு எள்ளல் சிரிப்புடன் சென்றது.... 

வீட்டிற்குள் நுழைந்த எழிலை கண்ட திவ்யா 

"ஏன்டி இப்போ தான் உடம்பு சரி ஆகிட்டு இருக்கு. கொஞ்சம் மழை நின்ன அப்பறம் வர வேண்டியது தானே.... மாப்பிள்ளை எங்க... நீ மட்டும் வந்து இருக்க....???" என்ற குரலில் தன்னிலை அடைந்தவள் 

"ஆ..... மா..." என முழிக்க

"என்ன டி முழிக்கிற…? போ போய் டிரஸ்ச மாத்து அப்படியே தலையையும் காயவை... நா போய் உனக்கு மிளகு மஞ்சள் போட்டு பால் கொண்டு வர்றேன்.....   என்ன தான் பொண்ணோ... இப்டி மழையோட மழையா வரணும் ..." என சலித்தபடி கிட்சனுள் நுழைய, எழில் தனது அறைக்குள் நுழைந்தவள் 

"ஏன் கதிர்.... உன் மனசுல நா மட்டும் தான் இருக்கேன் இருப்பேன் இருக்கணும்னு நினைச்சேன் அது தப்பா.... உன்னோட மனசுல நா மட்டும் தான் இருக்கணும்னு நினைச்சேன்.... ஆனா... ஆனா... அங்க வேற ஒரு பொண்ணோட பேர நீ... நீ..." என அதிலேயே அழுது புலம்பியவள் தாயின் காலடி ஓசையில் நினைவு பெற்று உடைமாற்றி வந்தாள்.... 

"இந்த இத குடி.... துண்டை குடு தலைய துவட்ட சொன்னா அப்படியே உக்காந்து இருக்க... நாளைக்கு மாமியார் வீட்டுக்கு போய் உன் வேலையையாச்சும் நீயே பண்ணுடி... என்னோட மானத்தை அங்க போய் வாங்கிடாத...." என திட்டி கொண்டே துவட்ட 

"மா தலை வலிக்கிதுமா.... கொஞ்ச நேரம் உன் மடில படுத்துக்கவா...." என கேட்க அவளை மடியில் சாய்த்தவர் 'ஏதோ சரி இல்லை என உணர்ந்தவர்' தைலத்தை பூசி கொண்டே  "மாப்பிள்ளை போன் பண்ணி வீட்டுக்கு வந்துட்டியான்னு கேட்டார்.... நானும் இப்பதான்னு சொல்லிட்டு மேல வந்தேன் நீ கொஞ்ச நேரம் தூங்கு... அப்பறமா  வந்து எழுப்புறேன்...." என தலை கோதி விட்டு சென்றார்.... 

"இந்த இந்த அக்கறை தான்டா உன்ன எனக்கு மட்டும்ன்னு நினைக்க வச்சது....." என தலையணையில் முகம் புதைத்து கண்ணீர் சிந்தினாள்…

********

கதிரின் வீட்டில், உள்ளே நுழைந்த அவனின் முகத்தை கண்டே ஏதோ சரியில்லை என உணர்ந்த தாயின் மனமோ பதற, அதை கண்ட சியாமளா... "மா நா பாக்குறேன் நீ  பதட்ட படாத..." என்று சமாதனப்படுத்தினாள்.

"எப்டி டி பதட்ட படாம இருக்க முடியும்? நாலு வருஷம் முன்னாடி ஒரு நாள் இப்டி தான் வந்தான். இப்போ மறுபடியும் அதே மாறி வந்து நிக்கிறான்... எனக்கு என்னமோ பயமா இருக்குடி..."  என்றார் வருத்தமாய்.

"மா ஏதாச்சும் சின்ன பிரச்சினையா தான் இருக்கும். நா போய் கேக்குறேன். நீ அமைதியா இரு..."  என மேலே செல்ல... அவனோ திவ்யாவிடம் பேசிவிட்டு போனை அனைத்தான்.

"என்ன சகோதரரே…? மழையில் நல்லா நனஞ்சுட்டு வந்து இருக்கீங்க?? போங்க போய் டிரஸ் மாத்திட்டு வாங்க..." என அவள் சொல்ல ஏதும் பேசாமல் அதன்படியே செய்தவன் வந்து கட்டிலில் அமர, பக்கத்தில் அமர்ந்த அக்காவின் மடியில் தலை சாய்த்தான். 

"என்ன ஆச்சு?" என்றாள் அவனின் தலை வருடியபடி.

"என்னை நம்பாம போய்ட்டாக்கா.. இவளும் அவள மாதிரியே என்னை நம்பாம போய்ட்டா.. நா வேண்டாம்ன்னு போய்ட்டா..." என்றான்…

சில வருடங்களுக்கு முன்பு கேட்ட அதே வார்த்தைகள்.... அதிர்ச்சியோடு கதிரை பார்க்க, அவனோ தனக்கு எதிரே மாட்ட பட்டிருந்த கதிரழகியின் போட்டோவை பார்த்து கொண்டிருந்தான். 

"கதிர்! இங்க பாரு. என்ன ஆச்சு…? முதல்ல சொல்லு…?" என்றாள் பதட்டமாக.

"என்னோட அழகி இதை பார்த்துட்டு (மார்பை காட்டி) ஆசையா எனக்கான்னு  கேட்டா? ஆனா, நா அவ மனச உடைச்சிட்டேன்க்கா. உனக்கு தெரியுமா... இன்னைக்கு அவளோட அத்தை பையன் அவளை கடத்தி தாலிகட்ட பார்த்தான். ஆனா, என்னோட டாபி நா வருவேன்னு எனக்காக வெயிட் பண்ணுன்னாக்கா... என்னை பார்த்ததும் அவளோட முகத்துல அப்படி ஒரு சந்தோசம் நிம்மதி வந்துச்சு... அந்த நிமிஷமே.. இத்தனை வருசம் இருந்த என்னோட குற்றவுணர்ச்சி எல்லாமே போய்டுச்சி. என்னோட அழகி மட்டும் தான் என்  மனசு முழுசும் இருந்தாக்கா… ஆனா, கடைசியா என்னை பார்த்து உன் மனசுல நா மட்டும் இல்லையான்னு கண்ணாலேயே கேட்டுட்டு போய்ட்டாக்கா…" என்று கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அவளின் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தான்.

"கதிர் இங்க பாரு. எழில்க்கு உன்மேல வருத்தம் தான் இருக்கும். எல்லா பொண்ணுங்களுக்கும் தன் கணவனோடு காதல் தனக்கு மட்டும் தான் இருக்கணும்ன்ற எண்ணம் இருக்கும். இப்போ அப்படி இல்லங்கிறத அவளால ஏத்துக்க முடியால... நீ தான் அவளுக்கு புரிய வைக்கணும் உன்னோட மனசுல அவ மட்டும் தான் இருக்காங்குறத… நீ தான் புரியவைக்கனும். இப்டி நீயே ஃபீல் பண்ணினா அவளுக்கு யார் புரியவப்பா…? நீதான் சொல்லி இருக்க உன்னோட ஆளு ஒரு தத்தின்னூ..." என்று அவனை வம்பிழுக்க…

 தன்னால் மட்டுமே அவளுக்கு தன்னை பற்றி புரியவைக்க முடியும் என நினைத்தவன் நாளை அவளிடம் பேச மாமனாரிடம் அக்காவின் உதவியுடன் அனுமதி வாங்கினான்.

நிலவின் குளுமையில் மூழ்கி திளைத்திருந்த நெற்கதிர் தன் நிலை புரிந்து சூரியனின் ஸ்பரிசத்திற்கு ஏங்குவது போல, இவன் மனமும் அவளுக்காய் தவிப்பதை உணர்த்த ஆதவனும் வெளியே வந்தார்.

"பாப்பா..." என்றார் தயாளன்.

"சொல்லுங்கப்பா..." என்றாள் தந்தையை பார்த்து.

"இல்லடா மாப்பிள்ளையோட அக்கா சியாமளா உன்கிட்ட ஏதோ பேசனுமாம். பக்கத்துல இருக்கிற காப்பி ஷாப்க்கு பத்து மணிக்கு வர சொன்னாங்க… போய்ட்டு வந்தாரியா…?" என்றார்.

எதற்கென ஓரளவுக்கு தெரிந்தாலும் சரி என தலையசைத்து சென்றாள். 

"பத்து மணிக்கு வர சொன்னாங்க.. மணி பத்து மூனாச்சு... இன்னும் வரல... கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல..." என்று காப்பி ஷாப்பில் உட்கார்ந்திருந்த எழில் (மேடம் தினமும் எத்தனை மணிக்கு எந்திரிப்பங்கன்னு தெரியலை.... அவசரத்துல ஒன்பது மூனுக்கெல்லம் வந்து உக்காந்துட்டு இன்னும் வரலையாம்  அவன்....)  மனதுக்குள் பொங்கிகொண்டிருக்க மனசாட்சி நேரம் தெரிந்தும் அவளிடம் திட்டு வாங்க பயந்து அமைதியாய் இருந்தது.

"வணக்கம் கதிரழகி. சாரி எழிலழகி..." என்று ஒரு முகம் தெரியாத ஆடவன் அவள் எதிரே வந்து அமர... 

'யார்?' என தெரியாவிட்டாலும் தனது கதிர் மட்டும் அழைக்கும் பெயரை கூறி அழைத்தவனை கண்டு திட்ட வாயெடுக்க அவனின் சாரியில் சிறிது அமைதியானாள். 

"நா யாருன்னு உங்களுக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியும். ஆனா, நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு பெரிய சம்பந்தம் இருக்கு." என அவன் புரியாமல் பேச, ஏற்கனவே கதிரிடமிருந்து சிறிது விலகியிருந்த கோவத்துடன் சிறிது எரிச்சலும் சேர.... அமைதியாக பற்களை கடித்தபடி அவனை வார்த்தைகளால் கடித்து துப்ப நேரம் பார்த்து கொண்டிருந்தாள்.

"உங்களுக்கு அந்த கதிரோட கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்களாமே…? உங்களுக்கு அவன் வேண்டாம். ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்பி ஏமாத்திட்டான். நீங்க கூட அதுனால தானே நிச்சயத்தை நிறுத்துனிங்க..." என்றான்.

"இது நம்ம போட்ட பிளான் ஆச்சே..." என எழில் நினைக்க... 

அவனோ அத்தோடு நில்லாமல் "நாலு வருடத்திற்கு முன்பு.." என  மேலும் பேச அவளின் அமைதி சிறிது சிறிதாக குறைய தொடங்கியது... 

"அவனுகெல்லாம் மன்னிப்பே கிடையாது. சரியான கல் நெஞ்சகாரன்... அவனால ஒரு பொண்ணோட வாழ்க்கை அழிந்தது தான் மிச்சம்..." என பேசி முடிக்க கொலைவெறியுடன் காளியாக எழுந்து நின்றாள் எழிலழகி இல்லை கதிரின்  கதிரழகி. 

"டேய் யாருடா நீ…? உனக்கு தெரியுமா என்னோட நிச்சயம் எப்டி நின்னுச்சு யாரால நின்னுச்சுன்னு…? யாருக்குடா கல் மனசு…? என் குடும்பத்தாலக்கூட மன்னிக்க முடியாத என்னோட அத்தை குடும்பத்தையே மன்னிச்சு ஏத்துகிட்டவன்டா என்னோட கதிர்.

 அவனுக்கு நீ… மன்னிப்பு தர்றியா…? ஒழுங்கா ஓடி போய்டு. இப்போ நா அவன் மேல கொஞ்சம் கோவமா இருக்கேன். அதனால தப்பிச்ச... இல்ல மவனே நீ பேசுனதுக்கு உன்னை காலி பண்ணிடுவேன்" என டேபிலில் இருந்த கத்தியை எடுத்து அவன் முன்னாடி நீட்ட்டினாள். 

ப்இருவரையும் பார்த்துக்கொண்டே பதட்டமாக உள்ளே நுழைந்த கதிர், அவள் பேசியதை கேட்டு உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியில் காட்டாமல் அவள் கத்தியை நீட்டவும் அவளருகில் வந்து கத்தியை வாங்கினான். 

"ஏன்டா... உன்னால சீக்கிரம் வர முடியாதா…? எவ்வளவு நேரம் வெயிட் பன்றது…? உங்க அக்காகிட்ட சொல்லி பர்மிஸ்ன் கேட்டா மட்டும் போதாது.. கரெக்ட் டைம்க்கு வரணும்…" என்று எதிரில் இருப்பவனை பார்த்து முறைத்தபடி "டேய் நீ இன்னும் போலையா பெருசா பேச வந்துட்டான்... என்னோட கதிர் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு சோ நீ..." என வாயிலை நோக்கி கையை காட்ட…

 அவனோ கதிரை முடிந்த அளவு முறைத்துவிட்டு சென்றான். கதிர் நக்கல் கலந்த பார்வையில் இவள் என்னவள் என்ற நிறைவுடன் அவனை பார்த்தான்.

"ஹலோ பாஸ்.. போஸ் குடுத்தது போதும். நா இன்னும் கோவமா தான் இருக்கேன்... சோ நீங்க சொல்ல வேண்டியதை சொன்ன நா கிளம்புவேன்..." என்று கண்களில் காதலுடன் என்னை நம்புவாயா? என்ற கேள்வியையும் கலந்து நோக்கியவனின் பார்வையில் தொலைந்தவள் உன் அன்பு எனக்கில்லையா என்ற ஏக்கத்துடன் இழுத்து பிடித்து வைத்த கோபத்துடனும் வினவியது. 

அவளருகில் அமர்ந்தவன் அவளின் கரத்தை தனது கரங்களுக்குள் பொத்தி வைத்தவன் அவளை பார்த்து. 

"நா அப்போ காலேஜ் பைனல் இயர் படுச்சுகிட்டு இருந்தேன்... எனக்கு ப்ரெண்ட்ஸ் அப்படின்னா அது முகி, மதுரா, பாலாஜி தான்... அதுல பாலாஜி மட்டும் கம்யூட்டர் சைன்ஸ் நாங்கெல்லாம் கெமிஸ்ட்ரி... காலேஜ் ஆரமிச்சு ஒரு மூணு மாசம் ஆகி இருக்கும்..." 

"பிளஷபாக்"

"டேய் மச்சான் உன்ன பிரின்சி கூப்பிடுறாருடா...." என முகில் கூற... 

"இதுக்குதான் ரொம்ப படிக்காத... எல்லா வேலையும் செய்யாத.... இருக்குற புரோபசர்கிட்டேல்லாம் நல்ல பேர் வாங்கதன்னு சொல்லுறது நிம்மதியா ஒரு சமோசா சப்ட முடியுதா..." என பாலாஜி குறைகூறி  கதிரின் சமோசா மீதும் கை வைக்க கையிலேயே போட்டாள் மதுரா... 

"இத சாப்பிட்டுட்டு போலாம் நானும் வர்றேன் என்னையையும் கூப்பிடாராம்... இப்போதான் ஒரு பொண்ணு வந்து சொல்லிட்டு போனா..." என்றாள்.

"ம்ம் ஓகே" என்றபடி சாப்பிட்டு பிரின்சி அறை கதவை தட்ட உள்ளேயிருந்து அனுமதிவர… இருவரும் உள்நுழைந்தனர். 

"அந்த காலேஜ்ல லவ் அப்படி இப்படின்னு பிரச்சனைங்கவும் தான் இங்க ஹாஸ்டல்ல சேத்து இருக்கேன் நீங்க தான் பாத்துக்கணும்..."

"அதெல்லாம் பாத்துக்கலாம். கதிர் இவரு என்னோட ஸ்கூல் ப்ரெண்ட் இது அவரோட பொண்ணு.... மதுரா இவுங்க உன்னோட ஜூனியர் பார்த்துக்கோங்க... அண்ட் நோட்ஸ் எல்லாம் குடுத்து ஹெல்ப் பண்ணுங்க... நீ இவுங்க கூட போமா..." என அனுப்பி வைத்தார்.

வெளியே மதுரா "ஓய் பொண்ணே உன் பேர் என்னா..???" 

"இனியாள்... எழிலினியாள்..." என்றாள் உதட்டில் புன்னகையுடன்... கண்களில் தயக்கத்துடன்…

**********

Pratilipi id: சக்திபிரசன்
Watpad id: sakthiprasan23

**********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro