56.ஹேமெழில் 💞 சஜி 💞

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

56. ஹேமெழில் 💞 சஜி 💞

எழிலழகியின் கேள்விக்கு, என்ன சொல்லி சமாளிப்பது என தெரியாமல் விழித்தான் இளங்கதிர்.

"என்ன கதிர்... நான் கேட்டுட்டே இருக்கேன் நீ எதுவும் சொல்ல மாட்டேங்குற?" என்று அவன் தோளை பற்றி உலுக்கியவள், மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.

"அது... அது...வந்து... " என்று பதில்கூற முடியாமல் திணறினான் கதிர்.

"என்ன வந்து போயினு இழுக்குற என்ன ஆச்சு கதிர் உனக்கு? நீ இப்படி இருக்க மாட்டியே... பதில் சொல்லு" என்று எழில் குழப்பமாய் கேட்க,

"ஹே... அதெல்லாம் ஒன்னும் இல்ல எழில்... கல்யாணத்துக்கு அப்புறம் நீ ரொம்ப அழகா தெரியுற... அதனால தான் அப்படி கூப்பிட்டேன்... நீ ஏன் இதை பெருசா யோசிச்சு கேள்வி மேல கேள்வி கேக்குற எழில்...?" என்று வெளியே சமாளித்தாலும் உள்ளுக்குள் மேலும் குழம்பி போனான் கதிர்.

"உண்மையாவா சொல்றிங்க கதிர்..." என்று வெட்கத்துடன் கேட்டவள்.

"இருந்தாலும் நீங்க எழில் இல்ல இனியா னு கூப்பிடுறது தான் எனக்கு பிடிச்சி இருக்கு... அழகினு கூப்பிடும் போது வேற யாரையோ கூப்பிடற மாதிரி பீல் ஆகுது கதிர் " என்றவள் நித்திரைக்கு சென்று விட , கதிருக்கு தான் தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது.

'இவளுக்கு என்ன தான் ஆச்சு ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கா? ஒருவேளை இனியாளோட ஆவி எதாவது புகுந்து இருக்குமோ?' என்று நினைத்தவன், மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டான்.

'என்ன இப்படி எல்லாம் யோசிச்சிட்டு இருக்கேன்...? எல்லாம் இந்த அழகி பண்ற வேலை... எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்... ஐயோ... விவேக் மாதிரி புலம்ப விட்டுட்டாளே....ஏன் அழகி இப்படி நடந்துக்குற...? என் அழகி... கதிரழகி... உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டி...' உள்ளுக்குள் புலம்பி தீர்த்தான்.

அன்றலர்ந்த மலராக எவ்வித சலனமும் இன்றி உறங்கும் தன் மனையாளை கண்டவன் கைகள் தன்னிச்சையாக அவள் கேசத்தை வருட, அவளது நெற்றியில் தன் இதழ் பதித்தவன், 'சீக்கிரமே உன்னை பழைய மாதிரி மாத்திடுவேன் அழகி... உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் நான் எப்பவும் உன்கூட  இருப்பேன்...' என்று தனக்குள் உறுதியாக கூறிக்கொண்டான்...

=============

"டேய் அபி... நீ என்னடா நினைக்குற?" என்றான் அகரன்.

"எதை பத்தி டா கேக்குற..." என்று அபிநவ் கேட்க அவனை முறைத்த அகரன்.

"டேய் கதிர்! மாமா சொன்ன விஷயத்தை பத்தி தான் டா கேக்குறேன்? அக்காவுக்கு என்ன பிரச்சனை தெரியல... அவ ஏன் இப்படி நடந்துக்குறானு தெரியல... என்னடா பண்றது...? அவளுக்கு ஏதாவதுன்னா எங்களால தங்க முடியாது.. என்ன பண்றது எனக்கு எதுவுமே புரியல டா" அகரன் தன் உடன்பிறந்தவளை எண்ணி வருந்தினான்.

"கவலைப்படாதே டா அகரா! எல்லாம் சரி ஆகிடும்... மாமா பார்த்துக்குவாரு... நாம பேசாம மாமாவுக்கே போன் பண்ணி கேட்கலாமா அங்க என்ன நடக்குதுன்னு?" என்று கூற, அதை ஆமோதித்தான் அகரன்.

அபினவ் தன் அலைபேசியில் கதிரை அழைக்க, அங்கே எழிலழகி பற்றிய சிந்தனையில் மூழ்கி இருந்தவனை நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தது அந்த அழைப்பு.

அபினவ் அழைத்ததை பார்த்தவன், எழிலை பார்க்க அவளோ நன்கு உறங்கிக்கொண்டு இருந்தாள்.

அழைப்பை ஏற்றவன் வெளியே செல்ல எத்தனிக்கையில்,  தூக்கத்தில் எழில் ஏதோ உளற, அருகில் சென்று கேட்க,

"டேய் நெட்டகொக்கு இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்குமா?" என்று கேட்க, கதிருக்கோ மகிழ்ச்சியும் குழப்பமும் ஒருசேர தோன்றியது.

அவனது அலைபேசி நின்றுவிட்டு மீண்டும் அலற, அதன் சிணுங்களில் தன்னிலை உணர்ந்தவன், கதிரழகியின் நுதலில் சிறு முத்தம் பதித்துவிட்டு வெளியே சென்றவன் அழைப்பை ஏற்க, அகரனும் அபிநவும் ஒருசேர,

"மாமா! அங்க எதாவது பிரச்சனையா, ஏன் போன் எடுக்க இவ்ளோ நேரம் ?", என்றனர் பதற்றமாக.

"டேய் எழில் தூங்கிட்டு இருக்கா டா... அதான் வெளில வந்து எடுத்தேன்... இங்க ஒரு பிரச்னையும் இல்ல ",=" என்றான் அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு.

"மாமா அக்கா எப்படி இருக்கா? சரியாகிட்டாளா?" அகரன்.

"இல்லடா அகரா. அவ இன்னமும் இனியா மாதிரியே தான் பேசிட்டு இருக்கா.... இன்னும் சொல்லனும்னா எனக்கும் இனியாளுக்கும் மட்டும் தெரிஞ்ச விஷயங்கள் பத்தி பேசுறா, எனக்கு ஒரே குழப்பமா இருக்கு டா..."

"மாமா அப்படி லேடி டெவில் உடம்புல உண்மையாவே டெவில் புகுந்து இருக்குமோ?" என்றான் அபினவ்.

"டேய்" என்றனர், மாமனும் மச்சானும் ஒருசேர.

"சரி நான் எதுவும் சொல்லல... " என்று வாயை ஜிப் போட்டு மூடுவது போல் பாவனை செய்தான் அபினவ்.

தன் அக்கா மேல் இருந்த பாசத்தில் கத்தினானே தவிர அகரனுக்குமே இந்த சந்தேகம் இருக்க தான் செய்தது... சிந்தித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்தான் கதிர்

"அகரா.. நீ மாறனுக்கு லைன் போடு நான் பாலாஜிக்கு போடுறேன் எல்லார்கிட்டயும் நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..." என்றான் கதிர்.

"சரி மாமா" என்றவன் மாறனை அழைக்க அது வெயிட்டிங் காலில் சென்றது... 'இந்த மாறன் அண்ணா கொஞ்சம் கூட சரி இல்லையே எங்கயோ வசமா சிக்கிட்டாரு போல' என்று எண்ணும் போதே அவனது அழைப்பு ஏற்கப்பட்டது.

"ஹலோ.. சொல்லு அகரா என்ன இப்போ கூப்பிட்டு இருக்க? ஏதும் பிரச்சனை இல்லையே " என்றான் மாறன்.

"இல்ல அண்ணா. மாமா தான் நம்ம கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாரு அதான் " என்று அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே இணைப்பில் வந்து விட்டனர் பாலாஜியும் கதிரும்.

ஐவரணியில் ஆறாவதாக மதுராவும் உடன் இருக்க அன்று நடந்தவற்றை எல்லாம் கூறினான் கதிர்...

"டேய் நீ சொல்றதெல்லாம் பார்த்தா பேய் பிடிச்ச மாதிரி தான் டா தெரியுது... நீ அங்க இருக்க கோவிலுக்கு கூட்டிட்டு போ... அவ உள்ள வரலைனா கண்டிப்பா பேய் தான் பிடிச்சி இருக்கு " என்றான் பாலாஜி.

"டேய் நீ சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்ட டா..." என்றான் கதிர்.

"அப்படி இல்லடா நீயே யோசிச்சு பாரு இனியாளுக்கும் உனக்கும் மட்டும் தெரிஞ்ச விஷயம் எல்லாம் எழிலழகிக்கு எப்படி தெரியும்..." என்று பாலாஜி கேட்க,

மற்றவர்களும் அதை ஆமோதிப்பது போல் அமைதியாக இருக்க, மதுரா தான் கதிருக்கு சாதகமான முறையில் பேசினாள்.

"கொஞ்சமாச்சும் படிச்சவன் மாதிரி பேசு பாலா... இந்த காலத்துல போய் பேய் பிசாசுன்னு சொல்லிட்டு இருக்க, எனக்கென்ன தோணுதுன்னா ஷி ஹேட் எ மெண்டல் ஸ்ட்ரெஸ்... நீ ஒரு நல்ல சைகாட்ரிஸ்ட்ட பார்க்குறது பெட்டர்னு தோணுது கதிர் " என்றாள் மதுரா.

"சைகாட்ரிஸ்ட்டா... நானும் இதையே தான் யோசிச்சேன் மதுரா... ஆனா அவளை எப்படி சமளிக்குறதுனு தான் எனக்கு தெரியவே இல்ல... என்ன சொல்லி அவளை நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவேன்... நான் எதாவது சொல்ல போய் அவளுக்கு அது இன்னும் பெரிய பிரச்சனை ஆகிட கூடாது இல்ல... அதான் யோசிக்குறேன்" என்றான் கதிர் வருத்தமாக.

"அண்ணா... நீங்க வருத்தப்படாதீங்க சீக்கிரம் சரியாகிடும் கடவுள் எல்லாத்துக்கும் ஒரு வழி காட்டுவார் " என்றான் மாறன்.

"சரி எல்லாரும் யோசிச்சு சொல்லுங்க இப்போ நான் போனை வைக்குறேன் நாம நாளைக்கு பேசுவோம் " என்று அனைவரிடமும் விடை பெற்றவன் திரும்ப அங்கு இவ்வளவு நேரமும் அவன் பேசியதை கேட்டுக்கொண்டு நின்றிருந்தார் பக்கத்து அறையில் இருப்பவர்.

அவரை பார்த்து மெலிதாக புன்னகை செய்தவன் செல்ல எத்தனிக்க, அவனை தடுத்தவரை கேள்வியாக நோக்கினான்.

"சார் என் பேர் ஆதித்யா... நீங்க இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்ததை எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்... சார் தப்பா நினைக்காதீங்க... ஒட்டு கேட்டேன்னு நினைக்க வேணாம்... தூக்கம் வரலன்னு வெளியே வந்த... அப்போ தான் நீங்க ஏதோ டென்ஷனா பேசிட்டு இருந்திங்க... அதான் எதாவது உதவி பண்ணலாமேனு கேட்டேன்... நீங்க பேசினதை கேட்ட அப்புறம் கண்டிப்பா என்னால உங்களுக்கு உதவ முடியும்னு தோணுது..." என்றார்.

"என்ன சார் அப்படி பார்க்குறீங்க... புரியலையா? இது என்னோட கார்டு ", என்று ஒரு விசிட்டிங் கார்டை நீட்ட அதை பார்த்தவன் முகம் பிரகாசமானது.

Dr. ஆதித்யன்.MS. MD(psychiatric)ஒரு மனநல ஹிப்னோ மருத்துவர். இவர் ஹிப்னோ தெரபி, Para Hypno Therapy, Past lite Therapy முறைகளை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்து  தற்போது இந்தியாவில் பணியாற்றி வருகிறார்.

"கடவுள் வழி காட்டுவார் " என்று மாறன் கூறியது கதிரின் நினைவில் வந்து போனது.

"சார் இப்பவாச்சும் நம்புறீங்களா என்னால் உங்களுக்கு உதவ முடியும்னு..." புன்னகைத்தவாறே கேட்க

"நிச்சயமா நம்புறேன் சார்... இப்போ இந்த சூழ்நிலையில் உங்களை கடவுள் தான் இங்க அனுப்பி இருக்கார்னு நினைக்குறேன்..." என்றவன் கண்களில் நீர்த்துளிகள்.

"சார் சார் னு கூப்பிடாம ஆதி... ஆதித்யா னு பேர் சொல்லியே கூப்பிடலாம் மிஸ்டர்...?", என்று கேள்வியாக நோக்க,

"சாரி நான் கதிர்... இளங்கதிர்... சென்னை காலேஜ் ப்ரொபசர்... இப்போ தான் கல்யாணம் ஆச்சு... கல்யாணம் நடக்குறதுல நிறைய பிரச்சனை... ஒரு மாறுதலுக்காக இங்க வந்தோம்..." என ஆரம்பித்து எழிலை சந்தித்தது முதல் நேற்று நடந்தவரை எல்லாவற்றையும் சுருக்கமாக கூறினான்.

அனைத்தையும் வார்த்தை மாறாமல் உள்வாங்கிகொண்ட ஆதித்யன், பேச தொடங்கினார்...

"கதிர் கண்டிப்பா உங்க மனைவிக்கு மனநலம் சார்ந்த பிரச்சனை தான்... இதை நான் அவங்கள பார்த்த அப்பவே கொஞ்சம் கெஸ் பண்ணிட்டேன்... இப்போ நீங்க சொன்னதையெல்லாம் கேட்கும் போது தெளிவா புரியுது... உங்களுக்கும் புரியுற மாதிரி சொல்றேன்... கொஞ்சம் பொறுமையா கேளுங்க... எனக்கு என்ன தோணுதுனா உங்க மனைவியை யாரோ ஹிப்னாடைஸ் பண்ணி இப்படி மாத்தி இருப்பாங்களோன்னு ஒரு சந்தேகம் இருக்கு..."

"புரியல ஆதி... என்ன சொல்றிங்க... ஹிப்னாடைஸ்ஸா.... எப்படி சொல்றிங்க... கொஞ்சம் தெளிவா சொல்லுங்க எனக்கு பயமா இருக்கு இதை சரி பண்ண முடியும் தானே " என்றான் படபடப்பாக.

"கண்டிப்பா சரி பண்ணிடலாம். ஆனா அதுக்கு நீங்க தான் முழு ஒத்துழைப்பு கொடுக்கணும்... உங்க மனைவியை நாளைக்கு கூட்டிட்டு வாங்க... ஒண்ணா வெளில போற மாதிரியே நான் கெஸ் பண்ணது சரியானு டெஸ்ட் பண்ணிட்டு உங்களுக்கு விளக்கமா சொல்றேன்..." என்றார்.

"சரிங்க ஆதி... கண்டிப்பா கூட்டிட்டு வரேன்... ஆனா உங்களுக்கு தான் எங்களால் சிரமம்... நீங்க ரிலாக்ஸ் பண்ண வந்த இடத்துலயும் உங்களுக்கு தொந்தரவு..." என்றான் கதிர் தயக்கத்துடன்.

"அப்படி ஏதும் இல்ல கதிர் நானும் என் மனைவியின் ஸ்ட்ரெஸ் குறைக்க ஒரு மாறுதலா இருக்கும்னு தான் வந்தேன்... ஆனா எனக்கு முன்னாடி ஒரு பிரச்சனை அதுவும் என்னால சரி பண்ண முடியும் அப்படிங்குற பிரச்சனை வரும் போது அத சரி பண்றது தான் என்னோட கடமை... மனிதாபிமானமும் கூட..." என்றவர்.

"சரி கதிர்... போய் தூங்குங்க நாளைக்கு முழுக்க நீங்க என்கூட தான் இருந்தாகணும்... காலைல பார்க்கலாம்..." என்று விடைபெற்று சென்றுவிட்டார்...

மறுநாள் அவர் சொன்னது போலவே ஒருநாள் முழுக்க நால்வரும் ஒன்றாக சுற்றிகொண்டு இருக்க ஆதித்யா தனக்கு தேவையான தகவல்களை எழிலிடமிருந்து சேகரித்து கொண்டிருந்தார்... அனைவரும் மாலை ரிசாட்டிற்கு வந்து அவரவர் அறைக்கு சென்றனர்.

அறைக்கு வந்த எழில் முதலில் குளித்து வந்தவள், கதிர் குளித்துவிட்டு வருவதற்குள் உறங்கிவிட, அவளை ஆதரவாய் வருடியவன், ஆதி அழைக்கவும், வெளியே சென்றுவிட்டான்... தன்னிலை உணரா பேதையும் நித்திரையில் அவளவனுடன் கனவுலகில் உலவிக்கொண்டு இருந்தாள்...

=============

"என்ன ஆதி சொல்றிங்க... நீங்க சொல்றது உண்மையா?" என்று பயத்துடன் கேட்க,

"ப்ளீஸ் கதிர். நீங்க பயப்பட்டா அவங்கள எப்படி சரி பண்ண முடியும்.  நீங்க கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளுங்க..." என்றவர் பேச ஆரம்பித்தார்.

"ஆங்கிலத்தில் ஹிப்னாடிசம் (HYPNOTISM) கேள்விப்பட்டு இருப்பிங்க தானே, அத தான் தமிழில் நோக்கு வர்மம் அப்படினும் சொல்ராங்க... பொதுவாக மனிதர்களிடம் உள்மனம், வெளிமனம் என இரண்டு மனம் இருக்கின்றது. வெளிமனம்
நம்முடைய அன்றாட செயல்களில் துணைபுரிகின்றது.

நம் அன்றாட வாழ்கையில் நடைபெறுகின்ற செயல்களை சேமித்து வைகின்றது. ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நிலைத்து வைத்திருக்காது.

தனக்கு தேவையானதை தவிர மற்றதை காலப்போக்கில் மறந்து விடும். வெளிமனம் என்று ஒன்று இருப்பதால் தான் நாம் நமது வாழ்கையில் நடந்த துக்கமான நிகழ்வுகளையும், அவமானங்களயும் மறந்து சகஜமாக வாழ முடிகின்றது.

உள்மனம் அபார சக்தி வாய்ந்தது. பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புடையது. ஒருவருக்கு ஏதேனும்
ஒரு விபத்தினால் பழைய ஞாபகங்கள் மறந்து போனாலும், பேசுகின்ற மொழி, எழுதுவது போன்றவை
மறக்காது.

ஏனெனில் அவை எல்லாம் உள்மனதில் பதிந்திருக்கும். உள் மனதின் ஆற்றல் இத்தோடு நிற்கவில்லை. நம்முடைய எண்ணங்கள் இந்த பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டது.

நமது உள் மனதை நமது கட்டுபாட்டில் கொண்டுவருவதன் மூலம் நாமும் இந்த பிரபஞ்சத்தின் சக்தியை உள் வாங்கி
கொள்கின்றோம். மேலும் நம்முடைய கட்டுபாட்டில் உள்ள உள் மன சக்தியின் மூலம் பிறருடைய மனதிலும் மாற்றத்தை கொண்டு வரமுடியும்." என்றார்.

"நீங்க சொல்றதையெல்லாம் கேக்கும் போது ஏழாம் அறிவு படம் பார்க்குற மாதிரி இருக்கு ஆதி... " என்று கதிர் கூற,

"கிட்டத்தட்ட அப்படி தான் ஆனா படத்துல வர மாதிரி பார்த்த வினாடியிலேயே
அடுத்தவர் மனதை கட்டுப்படுத்துவதும், தான் பல வருடங்கள் கற்ற கலையை, அடுத்தவர் மூலம் செயல்படுத்துவதும், படத்திற்காக புனயப்பட்டதே...

ஹிப்னாடிசத்தில் ஒருவனுடைய வெளிமனதை உறங்க செய்து உள் மனதுடன் நேரடியாக
தொடர்புகொண்டு அவனது உள்மனதில் உள்ள விரும்பதகாத நினவுகளை கலைந்து அவனது உள் மனதில் தன் நம்பிக்கையை வார்ததைகளை விதைப்பதன் மூலம் அவனை தன்னம்பிகை மிகுந்த மனிதனாக மற்றலாம். அதே போல் அவனை தீவிரவாதியாகவும், தற்கொலை படையாகவும் கூட மாற்ற முடியும்.

ஹிப்னாடிசம் என்பது ஆழ்மனதை வசப்படுத்துவது தான். ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ
அதுவே அவனுக்கு உண்மையாகிறது... இப்படி தான் உங்க மனைவி மனசுலயும் இனியாளோட நினைவுகளை புகுத்தி இருப்பாங்களோன்னு தோணுது கதிர்" என்றார் ஆதி.

"இன்னும் நம்ப முடியலையா? இன்னொரு விஷயம் சொன்னா உங்களுக்கு புரியும்னு நினைக்குறேன்...
எர்னெஸ்ட் ஹில்கார்டு (Ernest Hilgard) அப்படினு ஒரு உளவியல் அறிஞர், 1970களில் செய்த சோதனை ஒன்றில் நன்றாகக் காது கேட்கும் சக்தி உள்ள ஒரு குருடனை ஹிப்னாடிசத்திற்கு உள்ளாக்கி ‘உன் காதுகள் கேட்கும்
சக்தியை இழந்து விட்டன’ என்று அவன் ஆழ்மனதை நம்ப வைத்தார்.

பின் அவனிடம் கேட்ட எந்த
கேள்விகளுக்கும் பதில் இல்லை. எத்தனை பெரிய சத்தத்தை உண்டாக்கினாலும் அவனிடம் எந்த
பாதிப்பும் இல்லை. காதுக்கு அருகே ஏற்படுத்தப்பட்ட சத்தங்கள் கூட அவனை எதுவும்
செய்யவில்லை. டமாரச் செவிடு என்பார்களே அது போலவே ஹிப்னாடிசத்தில் இருந்து வெளிவரும்
வரை அவன் இருந்தானாம்... "

"நிஜமா தான் சொல்றிங்களா ஆதி... இப்படியெல்லாம் கூட நடக்குமா? ", கதிர் வினவ,

"நடந்ததை தானே சொல்றேன் கதிர்...", என்ற ஆதித்யன் தொடர்ந்தார்..

"இப்போ உங்க மனைவியோட பிரச்னையும் இது தான்... நீங்க சொன்னதை வச்சி பார்த்தா அவங்க ஏற்கனவே மனசளவுல ரொம்ப பலவீனமா இருந்து இருக்காங்க... அதனால தான் இப்போ இப்படி நடந்துக்குறாங்க... அவங்கள கண்டிப்பா என்னால சரி பண்ண முடியும்... ஆனா பிரச்சனை என்னனா இப்படி பழிவாங்குற அளவுக்கு அவங்களுக்கு யார் எதிரி... அதுவும் கூடவே இருக்க யாரோ தான் இதை கண்டிப்பா செஞ்சு இருக்கனும்... சீக்கிரம் கண்டுபிடிங்க கதிர்... அது தான் உங்களுக்கு நல்லது..." என்றவர் கிளம்பி விட, கதிருக்கு தான் குழப்பத்திற்கு மேல் குழப்பம்...

"எதிரியா? யாராக இருக்கும்... இப்போ தான் எல்லாம் சரி ஆச்சின்னு நினைச்சா அதுக்குள்ள இன்னொரு எதிரியா? அதுவும் கூடவே இருக்காங்களா? இன்னும் எவ்வளவு பிரச்சனை தான் வருமோ?", என்று யோசித்தவனுக்கு எப்படி தெரியும் இது பழைய பிரச்சனையின் தொடர்ச்சி என்று....

***********

பிரதிலிபி ஐ.டி: 💞 ஹேமெழில் 💞 சஜி 💞

***********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro