மை டியர் க்ரஷ் by @maayaadhi

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

லவ்விற்கும் க்ரஷ்ஷிற்கும் உள்ள வித்தியாசத்தை மிக தெளிவாக காட்டிய ஒரு குட்டி கதை.

கதையில் வரும் இரண்டு கதாபாத்திரங்களின் தன்மையையும் எழுத்தாளினி மிக தெளிவாக எடுத்துக்காட்டியமை பாராட்டுக்குரிய விடயம். நந்தினி , கீர்த்தனா இருவரின் நட்பும் எப்படியானது என்பதை இந்த குட்டிகதையில் மிக எளிமையாக காட்டியிருந்தார்.

கதைக்குள் சென்றால்,
கீர்த்தானா தினமும் ஒரு பையனை சைட் அடிப்பதே கதை. அதை அவள் எப்படி செய்தால், அவனை கான அவள் என்ன என்ன திருகு தாலங்கள் செய்தால் என்பதே கதை. இவள் அந்த பையனை சைட் அடிப்பதை தன் தோழியிடம் அப்படியே ஒப்பித்து விடுவது அவளுக்கும் நந்தினிக்கும் இடையிலான் நட்பை நமக்கு தெளிவாக காட்டுகின்றது.

இறுதியில் கீர்த்தனாவை பார்த்து நந்தினி "கீர்த்து கஷ்டமா இருக்கா" என்று கேட்க அவள் கூறும் பதில் சூப்பராக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் கீர்த்தனா போல எல்லோரும் தெளிவாக இருந்தால் பெண்களை பெற்றவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள்.  "இந்த பித்து எப்போது தெளியும்" என்று நந்தினி கேட்க அதுக்கு கீர்த்தனாவின் பதில்தான் இங்கு ஹைலைட் ஆனா விசயம்.

இங்கு நாம் இரண்டு கதாபாத்திரங்களையும் கொஞ்சம் ஆழமாக நோக்கினால் கீர்த்தனா காதலுகும், க்ரஷ்ஷிற்குமான வித்தியாசத்தை தெளிவாக உணர்ந்த பெண். ஆனால் நந்தினி தோழியின் க்ரஷ் உணர்வால் கூட அவள் மனம் நொந்துவிட கூடாது என்று எண்ணும் ஒரு தோழி. இருவரும் வெவ்வேறு மாறுபட்ட கருத்தை உடையவர்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. இங்கு யாரின் மன நிலை சிறந்தது என கேட்டால் இருவரின் மனநிலையும் சிறந்தது என்றுதான் கூற முடியும். காரணம் கீர்த்தனாவின் தெளிவு நம்மை புல்லரிக்க வைத்தாலும், நந்தினி தன் தோழிக்காக கவலைப்படுவது வேறுவகையில் நம்மை ஆட்கொள்கின்றது. நந்தினி போன்ற தோழ, தோழியரை எல்லோரும் வாழ்வில் கண்டிருப்பார்கள். அப்படி யாரும் கானவில்லை என்றால் simply wasted.

க்ரஷ்- ஈர்ப்பு. இதற்கான அர்த்தம் கொடுத்தது மிக அருமை.
"  கற்பனையில் களிப்பை தேடி, கானலில் காட்சிபடும் அர்த்தமற்ற உணர்வு அது. எல்லாருக்கும் எல்லா இடத்திலும் கிடைத்திடாத அற்புதம் அது.

        அழகான பொருள் மீதுதான் ஈர்ப்புணர்வு வருமா என கேட்டால் இல்லை. நமக்கு எது அழகாக தெரிகிறதோ, நம் மனது எதை அலங்கரிக்க ஆர்பரிக்கிறதோ அதன் மீதே ஈர்ப்பு ஏற்படும். ஆணுக்கு பெண் மீதோ பெண்ணுக்கு ஆண்மீதோ தான் இந்த ஈர்ப்பு வசப்படுமா என்றாலும் கிடையாது.
   
        சின்னஞ்சிறு மொட்டு அவிழும் கணம், குழந்தை கொடுக்கும் எச்சில் முத்தம், புல்லரிக்கும் புத்தக வரி, ஆண்கள் தாடியை ஒழுங்குபடுத்தும் அழகு, சேலையணிந்த பெண்களின் நளினம் என ஈர்ப்பு தோன்றிடும் முதல் வித்து  வரையறுக்கமுடியாததாகும். "

எங்கு இருந்துதான் எழுத்தாளினி இப்படி எல்லாம் யோசித்தார்களோ தெரியவில்லை. சூப்பரா சொல்லியிருக்காங்க. அதே போல அவனை கீர்த்தனா பார்க்கும் போதெல்லாம் அவள் மனதில் தோன்றும் அலைகள், வயலின் இசை, உச்சந்தலை குளிர், உதறல் இது எல்லாம் வாசிக்கும் போது நாமே அந்த இடத்தில் இருப்பது போல இருந்தது.

இதுதான் நான் படித்ததும் குறுகிய நேரத்துக்குள் எழுதிய ரிவ்யூ.
இன்னும் இந்த கதை பற்றி பேச ஆசைதான். ஆனால் வேலை பழு காரணமாக முடியவில்லை..

நான் படித்த one of best short story இது. எல்லோரும் படிங்க. உங்க காலேஜ் அல்லது பாடசாலை நட்புக்களை மீட்டுப்பாருங்கள்.
Maayaadhi

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro

#review