2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"ப்ளீஸ் அழக்கூடாது.... இங்க பாரு" என்று வரும் குரலிடம் என்ன சொலது என்று தெரியாமல் திணறி நின்றாள்.

"நீ என்ன சொல்ற ஷ்ரவன்? நேத்து வரைக்கும் உன்னை எனால பாக்க முடியும் ஆனா இன்னைக்கு நீ என் கூட இல்லை... இதை எப்படி என்னால ஜீரணிக்க முடியும். நீ இல்லாம் நான் எப்டி இருக்க முடியும்? நீ ஏன் இப்படி பண்ண ஷ்ரவன்?" என்று கதறுபவளிடம் எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் தானும் தவித்து கொண்டிருந்தது அந்த ஆத்மா.

"மதிம்மா! உனக்கே தெரியும் நான் உன்கூட சேர்ந்து வாழ்போற அந்த நாட்களை எண்ணி எவ்ளோ சந்தோஷமா இருந்தேன்னு? ஆனா .... " என்று பாதியில் குரல் உடைந்து போகவும் ஷ்ரவன் அழுகின்றான் என்று தெரிந்தும் தன்னால் அவனுக்கு ஆறுதலாய் தடவி கொடுக்க முடியவில்லையே என்று நரகமாக கழிந்தது அந்த நொடி ஷன்மதிக்கு.

"ஷ்ரவன் உன்னால என்னை பார்க்க முடியுது ஆனா என்னால உன் குரலை மட்டும்தான் கேட்க முடியுது ப்ளீஸ் அழாத." என்று அவளும் உடைந்து போனாள்.

"உன்னை விட என்னால இதை தாங்க முடியலை. நான் எதிர்பார்க்கலை ஷன்.. எதிர்ல ஏதோ ஒரு லாரிக்காரன் வண்டியை ஏடாகூடமா ஒட்டிவறதை பார்த்த எனக்கு நிச்சயமா நம்ம மேல மோத போகுதுன்னு தெரிஞ்சிருச்சு. அந்த நொடி எனக்கு எதுவும் தோணலை மதிம்மா. நீ மட்டும் தான் என் கண்ணனுக்கு தெரிஞ்ச. எப்படி என்னோட உன்னையும் சேர்த்து கொண்டு போக என்னால செல்பிஷா யோசிக்க முடியும். இல்ல... என்னால் முடியாது... எனக்கு தோணினது எல்லாம் உன்னை காப்பாத்தனும். ஒரு நொடி என்னையும் மீறி நானே உன்னை கிழே தள்ளிவிட்டுட்டேன். ரொம்ப அடி பட்டுடுச்சா மதிம்மா..." என்றான் கனிவாக.

இறந்த பின்பும் அவனின் அன்பால் தன்னை கொல்வதை ஷன்மதியால் தாங்க முடியாமல் மீண்டும் வெடித்து அழுதாள்.

"மதி இன்னொரு தடவை நீ ந முன்னாடி இப்படி அழுதன்னா நா இங்க இருக்க மாட்டேன். அப்புறம் என் குரலையும் உன்னால கேட்க முடியாது." என்றான் சற்று கடுமையாக.

"இல்ல ஷ்ரவன் நான் அழமாட்டேன். ப்ளீஸ் உன் குரலை கேக்ற அந்த நிம்மதியை கூட எடுத்துக்காத." என்று கண்களை துடைத்தாள்.

"நான் உன்னை பார்க்கணும் ஷ்ரவன் ப்ளீஸ்..." என்றாள் கெஞ்சலாய் குரல் வந்த திசையில் பார்வையை வெறித்து.

சிறிது நேரம் அமைதி நிலவ, "சரி இந்த கண்ணாடி முன்னே நில்லு" என்றான் நடுங்கும் குரலில்.

ஒரு நொடி அவளின் மனது துள்ளி குதிக்க, ஓடி சென்று கண்ணாடி முன் நின்றாள்.

கண்ணாடியையே உற்று பார்த்துக்கொண்டிருக்க, "உன் கண்ணை மூடு மத்திமமா" என்றான் ஷ்ரவன்.

படபடக்கும் இதயத்தோடு விழிகளை மூடினாள் ஷன்மதி.

அங்கே அவளுக்கு பின் நிழாக நின்றிருந்தான் ஷ்ரவன்.

"இப்போ பாரு டா" என்று அவள் செவிகளில் விழுந்தது அவனுடைய காதல் குரல்.

இருக்கும் நிலையிலும் அவளின் உடலில் சிலிர்ப்பு தட்ட, விழிகளை திறந்தவள் அவளுக்கு பின்னால் ஜோடியாக நிற்கும் அவனின் பிம்பத்தை விழிகளில் கண்ணீரோடு நிரப்பினாள்.

"ஷ்ரவன்" என்று மெதுவாய் இதழில அவனின் நாமத்தை கூறிக்கொண்டே அவனை தழுவ முயற்சிக்க அது முடியாமல் வெறும் காற்று தான் கலைந்தது அந்த இடத்தில்.

மாறாக அவன் அவளை மெதுவாய் தனக்குள் வாஞ்சையாய் கட்டிக்கொள்ள அந்த உறுதியான உடல் தெரியவில்லை. ஆனால் அவனின் ஸ்பரிசம் தெரிந்தது.

"நீ இல்லாம நான் எப்படி இருக்க போறேன் ஷ்ரவன். இல்லே. என்னால் இங்க இருக்க முடியாது. நான் உன்கட வந்துட்றேன்டா" எட்ன்று கரைந்தாள்.

"இல்ல மதிம்மா. எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்கு உன்னோட ராசிதான் காரணம்னு சொன்னவங்க முன்னாடி நீ நல்லா வாழ்ந்து காட்டனும். அதுவரைக்கும் நான் உன்கூட தான் இருப்பேன்" என்றான் ஷ்ரவன்.

"நிஜமா?" என்றாள் விழிகளை விரித்து அழகாக.

"நிஜமா" என்று அவளின் விழிகளில் தொடுதல் மூலம் உணரமுடியாத உள்ளதால் உணரும் ஒரு முத்தத்தை கொடுத்தான்.

"சரி. நான் சொல்றதெல்லாம் நீ கேட்கணும்" என்றான் ஷ்ரவன்.

"சரி" என்று புன்னகைத்தாள்.

"இங்க பாரு எப்பவும் உன்கூட நான் இருப்பேன். ஆனா இந்த வீடுக்குள்ள மட்டும் தான் நீ என்கூட பேசணும் மத்த இடத்துல சாதரணமா தான் நடந்துக்கணும்." என்றதும் வாளின் முகம்சுருங்குவதை கண்டவன்.

"மதிம்மா. இந்த உலகம் இருக்குல்ல? அது ரொம்ப மோசமானது. நமக்கும் மனசு இருக்கு அதில் காயங்களை எற்படுத்துறோம்னு தெரிஞ்சும் வேணும்னே கண்டதை மனசு நோக பேசுவாங்க." என்று அவளை பார்க்க, "ஆம்" என்பது போல் தலை ஆட்டினாள்.

"உன்னை பலவிதமாக பேச தயாரா இருக்காங்க எல்லோரையும் புறம் தள்ளிட்டு நீ முன்னேறி போகணும். நா இருக்கேன்னு நீ யார்கிட்டையாவது சொன்னா உனக்கு மூளை குழன்ம்பிடுசுன்னு கதை கட்டுவாங்க. அதனால மத்தவங்க முன்னாடி நீ எப்பவும் போல இரு." என்றான்.

"சரி" என்றாள்.

"முதல்ல எழுந்துரு. போய் குளிச்சிட்டு வா." அவளை குளியலறைக்குள் தள்ளியவன் அந்த அறையை நொடி பொழுதில் சுத்தம் செய்தான்.

குளித்துவிட்டு வந்தவளுக்கு அப்பொழுது தான் உரைத்தது தான் இரண்டு நாளாக பச்சை தண்ணிகூட வாயில் படாமல் அழுது கொண்டிருந்தது.

அவனின் குரல் எங்கும் தென்படாததால் "ஷ்ரவன்" என்று அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

வீடு முழுவதும் பளிச்சென்று இருக்க, இது நிச்சியம் அவனின் வேலை தான் என்று நினைத்தாள்.

அவனுக்கு எப்பொழுதுமே வீடு பளிச்சென்று இருக்க வேண்டும்.

"ஷ்ரவன்! " என்று மீண்டும் கூப்பிட்டபடி நடக்க, சமையலின் வாசம் அவளை இழுத்தது.

சமையலறைக்குள் நுழைந்தவள், அங்கே யாருமில்லாமல் கரண்டி மட்டும் மாவை ஊற்றி தோசை வார்ப்பதை கண்டு "நீ இங்க இருக்கியா? ஒரு நொடி நான் மறுபடியும் தனியா ஆகிட்டதா நினைச்சி பயந்துட்டேன்" என்று அங்கிருந்த மேடையின் மேல் அமர்ந்தாள்.

ஷ்ரவனுக்கு மதி அங்கே அமர்ந்து தான் செய்யும் சமையலை சாப்பிட வேண்டும் என்பது ஆசை என்று பலமுறை கூறி இருக்கிறான். அதனாலயே அவளும் அங்கே அமர்ந்து அவனில்லாத வெற்றிடத்தை கண்டு யோசிக்கலானாள். .

"ரொம்ப யோசிக்காத. உனக்கு ரொம்ப பசிக்குதுல்ல சாப்பிடு" என்று தட்டு மட்டும் நின்றது அவளின் முன்.

"ஷ்ரவன்! நான் உன்னை எப்பவும் பார்க்கணும். ப்ளீஸ்" என்றாள் கெஞ்சலாய் மதி.

"ஏன் பயமா இருக்கா? " என்று குரல் கேட்க.

"ச்சே ச்சே இல்ல ஷ்ரவன். எனக்கு உன்னை பார்க்கணும். " என்று கண்கள் கலங்கிட குனிந்தாள்.

"மதிம்மா" என்று மெல்லிய குரல் கேட்க நிமிர்ந்த்வளின் விழிகளுக்கு அவன் ஜொலிக்கும் ஒளியில் எப்பொழுதும் போல் கைகளை கட்டி கொண்டு கன்னத்தில் குழிவிழ சிரித்துக்கொண்டிருந்தான் ஷ்ரவன்.

"ஐ லவ் யு" என்றாள் விழிகளில் கண்ணீர் சிந்தியபடி புன்னகைத்து.

"நானும் தான் என் பொண்டாட்டியை லவ் பண்றேன்" என்று அவளின் நெற்றியோடு நெற்றி மோதினான்.

"வீட்டில எதுவுமே இல்லடா? நான் முதல்ல கொஞ்சம் திங்க்ஸ் தான் சமைக்க வாங்கிட்டு வந்திருந்தேன். மாவு யாரோ பிரிஜல வச்சிருந்தாங்க. அதனால இன்னைக்கு சும்மா செஞ்சிருக்கேன்" என்றான் ஷ்ரவன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro

#love