பகுதி 44😍

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அந்த வாரத்தோட கடைசில வீட்டுக்கு வந்த எல்லாரும் ஊருக்கு போயிட்டாங்க... தாரா கேட்ட மாதிரியே பரதம் க்ளாஸ், மேக்ஸ் க்ளாஸ் எடுக்க ஆரமுச்சாங்க... காலைல 6-8.30  பரதம் க்ளாஸ், சாயங்காலம் 5-8.30 மேக்ஸ் க்ளாஸ் டைம்மிங் இருந்துச்சு.. தாராக்கு மனசு அமைதியா இருந்துச்சு,, ஆனா கண்ணன் தா பாவம்...

காலைல கண்ணன் எந்திரிக்கும் போதே சாப்பாடு ரெடியா டேபிள்ள இருக்கும்.. அத கடனேனு சாப்ட்டுட்டு வேலைக்கு போனா... சாயங்காலம் வேல நேரத்த 6.30ல இருந்து 8.30அ மாத்திக்கிட்டா. வேலைல இருந்து வர வழீல தாராவ க்ளாஸ்ல இருந்து கூப்ட்டுட்டு வந்துருவான் ...  சாயங்காலம் க்ளாஸ்க்கு போறதுக்கு முன்னாடியே சமையல் வேலைய முடுச்சுட்டு தான் போவா.. நைட் வந்ததும் சாப்ட்டு தூங்கீருவாங்க..

தாராவோட ஒடம்பு கொஞ்சம் கொஞ்சமா குணம் ஆகீட்டு வந்துது. ஆனா அடிக்கடி அந்த கொழந்த அம்மா  னு கூப்டற மாதிரி குரல் மட்டு கேக்குதுனு சொல்லறா... க்ளாஸ் எடுக்கறனால அவளுக்கும் மனசு கொஞ்சம் ஆறுதலா இருந்துது...

ஒரு மாசம் இப்டியே போக...

காலைல கண்ணன் தூங்கீட்டு இருக்கும் போது....(dreams 😍) தாரா பக்கத்துல வந்து உட்காந்து கண்ணன எழுப்பறா..

தாரா: ஏங்க.....

கண்ணன்: ம்ம்ம்ம்....

தாரா: ஏங்க எந்திரிங்க..... நேரம் ஆச்சூ

கண்ணன்: 2நிமிசம் டி 😍 என் தங்கம்..

கண்ணன் மூக்க தாரா புடுச்சு இழுக்கறா ...

தாரா: என்னங்க என்ன கண்டுக்கவே மாட்டீரீங்க... நா இவ்லோ எழுப்பற... போங்க நா போற...

கண்ணன்: ஹேய் இரு டி...
(கண்ண திறந்து பாக்கறா😂 )

கண்ணன்: ம்ச்ச் கனவா... ஒரு மாசம் மனச சரி பண்ற மனச சரி பண்றனு என்ன இப்டி பைத்தியம் ஆக்கீட்டயே டி.. உன்ன ரொம்ப மிஸ் பண்ற... ஐ லவ் யூ.... (கண்ணன் காதுல தாராவோட குரல் கேக்குது ஐ லவ் யூ டா லூசூ,, அவன் திரும்பி பாக்கவும் அங்க தாரா இல்ல)

கண்ணன்: டேய் கண்ணா இது சரிபட்டு வராது பேசாம வேலைக்கு கெலம்பீரு டா... (எழுந்து கிட்சன்க்கு போறா அங்க தாரா காபி கப்போட இந்தா டா காபி,, சீக்கரம் குளுச்சுட்டு ரெடி ஆகு,, கண்ணன் அதகேட்டு கிட்ட போயி கப்ப வாங்க போற தாரா அங்க இல்ல)..

கண்ணன்: ஐயோ டேய் கண்ணா நீ பைத்தியம் ஆகீட்ட போல.... ஒருவேல 3 மூவில தனுஷ்க்கு அந்த உருவம் தெறியறமாறி எனக்கு தெறியுதோ🤔... நோ... நோ நம்ம நல்லாத்தான் இருக்கோம்...

(கண்ணன் காபி குடுச்சுட்டு குளிக்கப்போறா... பாத்ரூம்குள்ள போயி கதவ சாத்தீட்டு,,,  தாடிய சேவ் பண்ணீட்டு இருக்கா அப்போ தாரா முகம் கண்ணாடில எனக்கு நீ லைட்டா தாடி வெச்சாதா புடிக்கும் மாமா...  தாரா முகம் மறஞ்சுருச்சு)

கண்ணன் : ஏன் டி என்ன இப்டி😍 லவ் டார்ச்சல் பண்ற... பேசாம போ நா வேலைக்கு கெலம்பனும்...

(கண்ணன் சாப்ட வர தாரா கைல தட்டோட சீக்கரம் கண்ணா டைம் ஆச்சூ பாரு சீக்கரம் ஆஆஆ காட்டு தாரா உருவம் மறஞ்சுருச்சு)

கண்ணன்: 😈😈 உன்ன பொரு இன்னைக்கு ஆபீஸ் லீவ் போட்டுட்டு நானும் உன்ன 😍 டார்ச்சல் பண்ற...

கண்ணன் ரெடி ஆகி அவனோட R15 ல தாராவ பாக்க பறக்கறான்.. மனசெல்லாம் ஒரே ஒரு பாட்டு வரி மட்டு தான் ஓடுது...

"" எதிலும் உனது முகம் வந்து😍😍
😘😘எனது கவனம் தடுமாரும்😘😘
   அதிலும் கூட சுகமாக😍😍😍😍
😘😘 ஓர் அமைதி காண்கிரேன்""
(Neeyee neeyee album song Tamil version lysics la center la Vara 2 lines )

அங்க போயி உள்ள போகாம கதவுகிட்ட நின்னவன் கீர்த்தியும், தாராவும் அங்க குட்டி குட்டி தேவதைகளுக்கு பரதம் முத்திரைகள் பத்தி சொல்லி குடுத்துட்டு இருந்தாங்க.. அந்த குட்டீஸ்சும் அழகா அவங்களோட 😍 பிஞ்சு கைல முத்திரை வெச்சு பழகீட்டு இருக்காங்க.. (க்ளாஸ்ல எல்லா கொழந்தைகளும் 10வயசுக்கு உள்ள தான் இருந்தாங்க)

இந்த உலகத்துலையே ரொம்ப அழகான விஷயம் கொழந்தைங்க தான்,, அதுவும் அவங்க ஒரு விஷயத்த பழகும் போது குட்டி குட்டி தப்பு பண்றதும் அதுக்கு அழகா முளிக்கறதும்,,, மழலை மொழில பேசறதும் ரொம்ப அழகு😍... மனசுல எவ்லோ வலி இருந்தாலும் குட்டீஸ்ஸ பாத்தாலே சந்தோசம் நம்மல தொத்திக்கும்😊... கண்ணனுக்கும் அப்டிதான் தன்ன மறந்து கொழந்தைங்க பண்ற குரும்ப ரசிக்கறா...

அதுல ஒரு குட்டி பாப்பா (5வயசு இருக்கும்) தாரா பண்ற மாதிரி கைய வெக்க ட்ரை பண்ணுது,, இன்னொரு குட்டி பாப்பா (6 வயசு இருக்கும்) அந்த பாப்பாக்கு சொல்லிக்குடுக்குது...  இன்னொரு பாப்பா ரொம்ப நேரமா ஸ்டெப் போட ட்ரை பண்ணீட்டு இருந்துது.. கண்ணனுக்கு இதபாத்து லைட்டா உதட்டோரத்துல சிரிப்பு வர..

அங்க இருந்த ஒரு குட்டி பாப்பா கண்ணன பாத்து  " மிஸ் அங்க யாரோ ஒரு அங்கிள் ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்காங்க மிஸ்" னு சொன்னதும் கீர்த்தியும், தாராவும் உடனே திரும்பி பாக்க..

கீர்த்தி: ஹாய் அண்ணா,, வாங்க வாங்க...

தாரா: டேய் ஆபீஸ் போகலயா??

கண்ணன்: ஆமா போகல கொஞ்சம் டையர்டா இருந்துச்சு அதா லீவ் போட்ட.. (மனதிற்க்குள்- பாக்கற எடுத்துல எல்லா வந்து வந்து டிஸ்டப் பண்ணீட்டு இப்போ ஏன் ஆபீஸ் போகலனா கேக்கற பக்கி)

தாரா: சரி இன்னும் 20மினிட்ஸ்ல க்ளேஸ் முடுஞ்சுரும் ... அப்றம் வீட்டுக்கு போலா ( மனதிற்க்குள்- டையர்டா இருந்தா தூங்கீருப்பானே🤔)

கீர்த்தி: அண்ணா எங்க பிள்ளைங்க அழகா ஆடுவாங்க,,, நீங்க இங்க நின்னு பாருங்க ( ஒரு எடத்த காட்ட, கண்ணன் அங்க போயி நின்னுகிட்டான்)

கண்ணன்: ஓகே டா இங்கையே நின்னு பாக்கற.. நீங்க சொல்லிக்குடுங்க ..

தாரா: (மனதிற்க்குள்- இவன் பார்வையே சரி இல்லையே....)

கண்ணன் அங்க நிக்கவும் தாராவும், கீர்த்தியும் சொல்லிக்குடுக்க கொழந்தைங்க அதையே பண்ணாங்க.. ஆனா கண்ணன் மட்டும் தாராவ பாத்துட்டே இருந்தான்.. ஒரு நொடிகூட கண்ணு வேற பக்கம் போகல... அவன் பாக்கறது தாராக்கு ஒரு மாதிரி ஆகுது... ஸ்டெப்பே வரல

தாரா கண்ணன பாக்க அவன் "என்ன" னு கண்ணால கேக்க தாரா எதுவும் பேசாம தலைய குனுஞ்சுகிட்டா.. (10seconds kaluchu)... மருபடியும் கண்ணன பாக்க அவன் 😉😘கண்ணடிக்க தாரா வேகமா வேற பக்கம் திரும்பிகிட்டா... (10seconds kaluchu)... மருபடியும் கண்ணன பாத்து எதுக்கு வந்த னு கண்ணால கேக்க,,, அதுக்கு கண்ணன் உனக்காக னு ஆள்காட்டி விரலால காட்ட...

தாரா ஏன் னு கண்ஜாடைல கேக்க அவன் ஐ லவ் யூ னு சத்தம் இல்லாம உதடமட்டும் அசைக்க அது தாராக்கு புருஞ்சு ம்ம்ம்ம் சரி சரி னு தலைய ஆட்டுறா.. அந்த நேரம் பாத்து தாரா தலைல கீர்த்தி ஒரு கொட்டு வெச்சு..

கீர்த்தி: எரும எரும என்ன டா பிள்ளைங்க ஸ்டெப் போடாம நின்னுட்டு இருக்காங்கலேனு பாத்த (கண்ணன பாத்து) அண்ணா ஏன் ணா சின்ன கொழந்தைக முன்னாடி இப்டி பண்றீங்க... ச்சே யாருக்கும் பொருப்பே இல்ல பா...😤...

கண்ணன்: நா ஒன்னும் பண்ணல கீர்த்தி,, தாராதா என்ன பாத்து கண்ணடிச்சா...

தாரா: இல்ல டி இவன் தா கண்ணடிச்சா...

ஒரு குட்டி பாப்பா: கீர்த்தி மிஸ் இந்த அங்கிள் தா தாரா மிஸ்ஸ மொறச்சு பாத்துட்டே இருந்தாங்க மிஸ்...

இன்னொரு பாப்பா: ஆமா மிஸ் என்னமோ சத்தம் இல்லாம சொல்லி தாரா மிஸ்ஸ பயமுருத்துனாங்க மிஸ்..

இன்னொரு பாப்பா: மிஸ் இந்த அங்கிள் தான் தாரா மிஸ்ஸ பாத்து இப்டி (கண்ணடிச்சு காட்டுது) இப்டி பண்ணாங்க மிஸ் ..

கீர்த்தி, தாரா : 😂😂😂😂😂 மாட்னயா😂😂😂😂😂😂😂

கண்ணன்: ஐயோ நா உங்க மிஸ்ஸ ஒன்னு பண்ணல பா என்ன விடுங்க..

கீர்த்தி: அப்டிலா விட முடியாது.. பணிஸ்மென்ட் குடுப்போம்... இல்ல குட்டீஸ்

குட்டீஸ் கோரஸ்: எஸ் மிஸ் பணிஸ்மென்ட் குடுக்கனும்...

கண்ணன்: பணிஸ்மென்ட்டா😰

கீர்த்தி: தாரா நீயே சொல்லு என்ன பணிஸ்மென்ட் னு...

தாரா: என்ன பணிஸ்மென்ட் தரலாம்🤔🤔🤔🤔🤔

ஒரு குட்டி பாப்பா: மிஸ் ட்ரெயின் ஓட்டலாம் ,,, அங்கிள் தா இன்ஜின் மாதிரி சவுன்டு விடனும்...

கண்ணன்: ட்ரெயின் ஓகே பட் எனக்கு அப்டி சத்தம் போடத்தெறியாதே குட்டி... அங்கிள் பாவம்ல டா ....

குட்டி பாப்பா: சரி கீர்த்தி மிஸ் முன்னாடி போகட்டும் நம்ம எல்லா பின்னாடி போலாம் ஓகே வா...

கீர்த்தி: என்னது நானா...

குட்டீஸ் கோரஸ்: மிஸ் மிஸ் ப்ளீஸ் மிஸ்...

கீர்த்தி: சரி வாங்க...

கீர்த்தி ட்ரெயின்ல முதல்ல நிக்க அவளுக்கு பின்னாடி குட்டீஸ் நிக்க அதுக்கு அப்றம் தாரா,, தாராக்கு பின்னாடி கண்ணன் நிக்கறா😉...

ட்ரெயின் ஸ்டார்ட் ஆகீருச்சு..🚂

க்கூகூ...... குசுக்..... குசுக்..... குசுக்... குசுக்..... க்கூகூ.......😂😂😂

எல்லாரும் ட்ரெயின் மாதிரி ஓட தாராக்கு பின்னாடி கண்ணன் அவ ஜடைய புடுச்சு இழுக்க..

தாரா: என்ன டா...

கண்ணன்: ஐ லவ் யூ😍😍😍

தாரா: ஷ்ஷ்ஷ் கொழந்தைங்க கண்ணா.....

கண்ணன்: ஐ மிஸ் யூ.... (ஜடைய வேகமா இழுக்க தாரா அவன் மேல விழுக)...... ரொம்ப மிஸ் பண்ற டி உன்ன.....

தாரா: கண்ணா இது வீடு இல்ல... விடு பாத்தர போறாங்க... (கண்ணன் அவள விட்டுட்டு அவளோட தலைல செல்லமா ஒரு கொட்டு வெக்க,, அத பாத்த ஒரு குட்டி பாப்பா)

"மிஸ் தாராமிஸ்ஸ அந்த அங்கிள் முடிய புடுச்சு இழுத்து கொட்டி வெக்கறாங்க மிஸ்" னு கத்த..

கீர்த்தி: அண்ணா ஏன் ணா??🤦

தாரா: (குட்டீஸ்ஸ பாத்து) ஆமா டா அங்கிள் என் முடிய புடுச்சு இழுத்தாங்க... கொட்டி வெச்சாங்க.. எனக்கு வலிக்குது..

கண்ணன்: (மனதிற்க்குள்- அடிப்பாவி ரொமேன்டிக்கா முடிய புடுச்சு இழுத்த சின்ன புள்ள தனமா கம்ப்ளைன்ட் பண்ற,,, வெளங்கீரும் என் வாழ்க்க)

ஒரு குட்டி பாப்பா: மிஸ் நாங்க அங்கிள அடிக்கறோம் மிஸ் நீங்க பீல் பண்ணாதீங்க மிஸ்...

இன்னொரு பாப்பா: எங்க தாரா மிஸ் முடிய புடுச்சு இழுக்கறயா உன்ன... (கண்ணன அட்டேக் பண்ணீயாச்சு அதுக்குள்ள)

அததொடர்ந்து எல்லா கொழந்தைகளும் கண்ணன அடிக்க, கொட்ட,,, கண்ணன் வாலன்டியரா தரைல உட்காந்து அடி வாங்கிகிட்டா (குட்டீஸ் கையால அடிவாங்கறதுக்கே ஒரு தனி வரம் வாங்கி வந்துருக்கனும்,,)

ஒரு குட்டி பாப்பா: ஐஐஐ அங்கிள் அடிவாங்கறது ஜாலியா 💃💃இருக்கு..

இன்னொரு பாப்பா: " ஹேய் மதனிகா நீ கீழ இறங்கு நான்தா அங்கிள் தோள்மேல உட்காந்து முடிய புடுச்சு இழுப்ப ..."

5நிமிசம் அடிவாங்குன கண்ணன்

கீர்த்தி, தாரா: 😂😂😂 போதும் போதும் குட்டீஸ்... விடுங்க பாவம்😂😂

கண்ணன்: வலிக்குது....😭 (பொய்யா நடிக்க)

உடனே எல்லா குட்டீஸ்சும் சாரி கேக்கறாங்க... அவங்க அடுச்ச எடத்த அவங்களே தேச்சுவிட்டு "சாரி அங்கிள்" னு சொல்லவும் எல்லாரும் ப்ரண்ட்ஸ் 🤝 ஆகீட்டாங்க..

டைம் ஆகவும் எல்லாரும் வீட்டுக்கு போயிட்டாங்க... கீர்த்திக்கு பாய் சொல்லீட்டு ரெண்டு பேரும் வீட்டுக்கு வர... உள்ள வந்து கதவ தெறந்ததும்...

கண்ணன்: ஜாலியா இருக்கு தாரா கொழந்தைககூட...

தாரா: ம்ம்ம்ம் ஆமா டா...

கண்ணன்: ரொம்ப நாளைக்கு அப்றம் ரொம்ப சந்தோசமா இருக்க டி...

தாரா: நானும் தா டா... சரி டையர்டா இருக்குனு சொன்னல நீ போயி ரெஸ்ட் எடு கண்ணா...

கண்ணன்: (தாராவ பின்பக்கத்துல இருந்து அணச்சுகிட்டா) இல்ல.... சும்மா சொன்ன.... உன்ன கொஞ்சதான் லீவ் போட்ட... (அப்டியே தாராவ தூக்கி சுத்த சரியா போன் வருது)

தாராவோட அப்பா போன் பண்ணி ஆடிப்பெருக்குக்கு ஊருக்கு கூப்றாங்க.. மூனு நாள் கழுச்சு ஆடி நோம்பிக்கு எல்லாரும் ஊருக்கு போறாங்க....

கிராமத்துல ஆடி நோம்பி எப்டி போகுதுனு....Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro