12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மனதின் காயங்களுக்கு மிகச்சிறந்த மருந்து காலம். சக மனிதர்களால் குத்திக்கிழிக்கப்படும் மனதுக்கு அது கேட்கும் நிம்மதியை எப்போதும் கொடுப்பது காலம்தான். ஆனால் அதே காலம் நம்  வாழ்க்கையை சில நேரங்களில் தலை கீழாக புரட்டி போட்டுவிடும்.

ரூபினி அங்கிருந்து வெளியேறியதும் அந்த அறையில் மிகவும் அமைதியான ஒரு சூழல் உருவானது. அறையின் கதவின் அருகில் இருந்த க்ரிஷ்ஷை தன் அருகில் வருமாறு ராதா அழைக்க க்ரிஷ்ஷும் அவள் அருகில் சென்றான். அவள் அவன் கைகளை பிடித்து கட்டிலில் உட்கார செய்ய அது சிறிய கட்டில் என்பதால்  இருவரும் அமர கொஞ்சம் கஷ்ட்மாக இருந்தது. ராதா கரிஷ்ஷை ஒரு தாய் தன் மகனை மிருதுவாக அணைத்துக்கொள்வது போல அணைக்க க்ரிஷ் தீ பட்டவனை போல அவள் அணைப்பில் இருந்து விடுபட முயன்றான். அவன் தன் மீதுள்ள கோபத்தில்தான் இப்படி செய்கின்றான் என ராதா நினைத்தாள்.

" ஏண்டா அக்கா தொடக்கூடாத. கைய இப்படி இழுத்துக்குற. முன்னாடிலாம் அக்கா அக்கானு என் துப்பட்டாவ பிடிச்சிக்கிட்டு சுத்தினவந்தானேடா நீ. இப்போ என்ன என் மேல கோவமா? அன்னைக்கு உன்ன அப்பா வீட்ட விட்டு போக சொன்னப்போ என்னால அவர எதிர்த்து பேசியிருக்க முடியும். உனக்கே தெரியும் அப்பா ஒரு ஹார்ட் பேசண்ட்னு. அன்னைக்கு அவரு சொன்னது ' உன்ன யாரும் நம்பினா அவங்களும் உன்கூட போகலாம்'  அப்படின்னு. எனக்கு என் தம்பி மேல 200% நம்பிக்கை இருந்திச்சி. இப்பவும் இருக்கு.

ஒரு வேலை நான் அன்னைக்கு அப்பாவ எதிர்த்து பேசியிருந்தாலோ இல்லை உன்கூட வந்திருந்தாலோ நம்ம அப்பா அன்னைக்கே உயிர விட்டிருப்பாரு. எனக்கு நீயா இல்லை அப்பாவான்னு வரும் போது நிச்சயமா நீதான் க்ரிஷ். இந்த உலகத்துல உன்னவிட எனக்கு எதுவுமே பெரிசில்ல. இதோ நிக்கிறாரே சுரேஷ் அவர கூட உனக்காக தூக்கிய எறிய பார்த்தவ நான். ஆனா அன்னைக்கு இருந்த நிலமையில அப்பா கூட ஒருத்தர் இருந்து உன் பக்கம் தப்பு இருக்காது என்பத நிரூபிக்கத்தான் நான் உன்கூட வரல்ல. நீ வீட்டை விட்டு போனதும் எப்படியும் ஷக்தி, இல்லைன்னா உன் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போவேன்னுதான் நினைச்சேன். ஆனா நீ இப்படி யாருக்கும் தெரியாம உன் படிப்ப கூட பாதியில விட்டுட்டு போவேன்னு கனவுலயும் நினைக்கல" என்று பேசி முடித்தவள் மூச்சுவாங்கினாள். பக்கதில் இருந்த தண்ணீர் பாட்டிலை கைகாட்டி கேட்க க்ரிஷ் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தான்.

' வயித்து புள்ளக்காரி தாகத்துல தண்ணீ கேட்குறா. இவன் எடுத்துக்கொடுக்காம இப்படி இருக்கானே' என்று மீனாக்‌ஷி மனதுக்குள் அவனை அர்ச்சித்தாள்.

" அக்கா" என்று க்ரிஷ் கூற பல வருடங்களின் பின் அவனின் குரலில் அக்கா என்ற வார்த்தையை கேட்டதும் ராதாவுக்கு மகிழ்ச்சியில் கண்ணீர் கொட்டியது.

" என்ன நீ சந்தேகப்படலயா? நிஜமா உன் தம்பி அந்த தப்ப பண்ணியிருக்க மாட்டான்னு நினைச்சியா? இல்லை இன்னைக்கு நான் இப்படி இருக்கேன்னு பரிதாப்பட்டு இப்படி பேசுறியா?" என்று கேட்க

" என் வயித்துல இருக்குற குழந்தை மேல சத்தியமா உன்ன நான் கொஞ்சம் கூட சந்தேகப்படலடா. அப்பாவ விட்டு வர முடியாத சூழ்நிலை. ஆனா நீ இப்படி சொல்லிக்காம காணாம போவேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல்ல"  என்றவள் அவனின் கைகளை பற்ற முயல அவன் தன் கைகளை வெடுக்கென்று இழுத்துக்கொண்டான்.

" இன்னும் என்னடா? நான் உன் கைய பிடிக்க கூடாதா?" என்று கேட்க க்ரிஷ் அழ தொடங்கினான்.

" இதை அன்னைக்கே நீ சொல்லிருக்கலாமேக்கா. என் வாழ்க்கை இப்படி அழிஞ்சி போயிருக்காது. அம்மாவோட அன்பு தெரியாம வளர்ந்த எனக்கு அம்மாக்கு அம்மாவா அப்பாக்கு அப்பாவா இருந்து என்னை பார்த்துக்கிட்டது நீதானே. முதல்ல நான் மீனாக்‌ஷிக்கிட்ட அந்த தப்ப பண்ணலன்னு எடுத்து சொல்ல எவ்வளவோ டிரை பண்ணேன். ஆனா அவகிட்ட ஒரு வார்த்தை கூட பேச அன்னைக்கு நம்ம அப்பா அனுமதிக்கல. அவர நம்ம அப்பானு சொல்ரத விட உன் அப்பான்னு சொன்னா நல்லாருக்கும்.

அன்னைக்கு மீனாக்‌ஷி என்ன நம்பலன்னத விட நீ என்ன நம்பலையோ என்ற கவலைதான் அதிகமா இருந்திச்சி. உன் கண்ணு முன்னாடீயே செத்து போயிடலாமான்னு நினைச்சேன். ஆனா எப்பவாச்சும் ஒரு நாளைக்கு அந்த தப்ப நான் பண்ணலைன்னு தெரிய வரும் போது உன் மனசு என்ன பாடு படும்னுதான் அதை நான் செய்யல. தற்கொலை செஞ்சிருந்தா கூட  ஒரே தடவையில செத்திருப்பேன். ஆனா இப்போ தினமும் சாகுறேன்கா.

ஆனா உன் தம்பி க்ரிஷ் அன்னைக்கே செத்துட்டான். இப்போ இருக்குறது மாசம் ஒரு வாட்டி ரூபினிகிட்ட போற க்ரிஷ். என்ன நீ தொட்டா உன் வயித்துல இருக்குற குழந்தைக்கு என்னோட துரதிஷ்டம் ஒட்டிக்கும். அதனாலாதான் நான் நீ என்ன தொட வரும் போதெல்லாம் விலகி விலகி போனேன்" என்று கூறினான்.

மீனாக்‌ஷிக்கு இப்போதுதான் புரிந்தது க்ரிஷ் தன் குழந்தையை கூட ஏன் அவன் வாங்கவில்லை என்பது. க்ரிஷ் கூறுவதை கேட்டதை ராதா அவனின் கைகளை பலவந்தமாக பிடித்து தன் முகத்தில் வைத்துகொண்டவள்

" க்ரிஷ் போனதெல்லாம் போகட்டும். அதான் இப்போ அக்கா வந்துட்டேன்ல. இனி நம்ம எல்லோரும் ஒன்னா இருக்கலாம்டா" என்று கூறினாள்.

" அதெப்படிக்கா என் வாழ்க்கைதான் நாசம் ஆகிடிச்சி. எனக்கு ஒழுங்கான ஒரு தொழில் இல்லை. படிப்பும் முழுசா முடியல. இனிமேல் என்னால புதுசா எதுவும் படிக்க கூட முடியாது. இதோ நான் காதலிச்ச மீனாக்‌ஷி என்ன நம்பாம ஷக்திய கல்யாணம் பண்ணிக்கிட்டா. எனக்கு என்ன பண்றதுன்னே புரியல. எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு" என்றவன் சிறிது அமைதியா இருந்தான்.

" அக்கா  பைத்தியம்னு சொல்லும் போதுதான் நினைவுக்கு வந்தது, என்கூட வந்த ரூபினி இருக்காலே அவ ரொம்ப நல்ல பொண்ணுக்கா. என்ன பண்ற தொழில்தான் மோசம். அவளோட கதைய கேட்டின்னா அது என் கதைய விட ரொம்ப பாவமா இருக்கும். அவள இனிமே எக்காரணம் கொண்டும் திட்டாத. உங்கள எல்லாம் பிரிஞ்சி வந்து ஒருவருசம் ஒழுங்காத்தான் இருந்தேன். ஆனா என் மனசுல ஒரு வெறுப்புடன் கூடிய கவலை எப்போமே வந்துகிட்டே இருக்கும். அதை சரிசெய்யலன்னா பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கும். எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்க நான் தெரிவு செஞ்சவதான் ரூபினி.

நான் செஞ்சது சரியா தப்பான்னுலாம் தெரியல. ஆனா ரூபினி மட்டும் இல்லைன்னா இன்னைக்கு உன் தம்பி ஏதாச்சும் பைத்தியகார ஹாஸ்பிடல்லதான் பார்த்திருக்கனும்" என்றான். இவனின் பேச்சுக்கு என்ன பதில் கூறுவது என்று யோசித்த ராதா

" ருபினி மட்டும்தானா? இல்லை.." என்று இழுக்க அவன் இதழில் புன்னகையுடன்

" நீ என்ன நினைக்கிற" என்று கேட்டான்.

" அவ மட்டும்தான் இருக்கனும்னு நினைக்கிறேன்" என்று கூறி அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்.

" உன் தம்பி ஒன்னும் பொம்பள பொறுக்கி இல்ல. எந்த ஒரு ஆணுக்கும் ஒரு பொண்ணோட அரவனைப்பு அவன் வாழ்க்கை பூரா தேவைப்படும். எனக்கு முன்னாடி நீ இருந்த, அப்புறமா மீனாக்‌ஷி. ஆனா நீங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல என்ன விட்டு போனப்போ ஒரு வருசம் என்னால தாக்குபிடிக்க முடிந்தது. ஆனா அதுக்கு அப்புறமா என்னால முடியல. நான் யாரையும் காதலிக்கிற நிலமையிலயும் இல்ல. அதான் ஏதாச்சும் ஒரு பொண்ணு கிட்ட போகலாம்னு இருந்தப்போதான் ரூபினியோட பழக்கம் கிடைச்சது. you know what, the best medicine for a lonely broken perosn is sex. இப்படி பேசுறேன்னு தப்பா நினைக்காத. என் வாழ்க்கையில அதுதான் நிஜமாச்சி" என்று கூற ராதா எதுவும் கூறாமல் கண்களை மூடி இருந்தாள்.

கண்களை மூடிய ராதவின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகளும் இரண்டாயிரம் விடைகளும் அந்த ஒரு கனத்துக்குள் வந்து போனது. தன் தம்பியின் நிலை இப்படியாக மீனாக்‌ஷியை விட தாந்தான் முக்கிய காரணம் என்பது அவளுக்கு புரிந்தது. தன்னிடமே ஒரு ஆணுக்கு உடல்ரீதியாக என்ன வேண்டும் என்று பேசுகின்ற அளவுக்கு அவன் பக்குவம் அடைந்துவிட்டான் என புரியும் போது அவளுக்கு கவலையாக இருந்தது. வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிகழ்வு அவன் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடும் என்பதற்கு க்ரிஷ்ஷே உதாரணம் என நினைத்தாள்.

" சரி ராதா ரெஸ்ட் எடுக்கட்டும். நானும் க்ரிஷ்ஷும் வெளியில இருக்கோம். மீனாக்‌ஷி நீ ராதா கூட இரு" என்று கூறி சுரேஷும் க்ரிஷும் வெளியில் வந்தனர.

சுரேஷுடன் வெளியில் வந்த கரிஷ் ஒரு பதினைந்து நிமிடம்தாம் அவனுடன் பேசினான. சுரேஷ் கூறிய விடயங்களை கேட்டதும் க்ரிஷ்ஷிற்கு தலை சுத்துவது போலானது.

" க்ரிஷ் என்னால உன்கிட்ட இத சொல்லாம இருக்க முடியல. உன் வாழ்க்கை இப்படி ஆக நானும் ஒரு காரணமாகிட்டேன். ஆனா தயவு செஞ்சி ராதா கிட்ட மட்டும் சொல்லிடாத. அப்புறம் அவ என்ன ஆயுசுக்கும் மன்னிக்க மாட்டா" என்று அவனின் கைகளை பற்றி கெஞ்ச சுரேஷ் க்ரிஷின் கைகளை பற்றிய கெஞ்சுவதும் அதை க்ரிஷ் தட்டிவிட்டு செல்வதையும் உள்ளிருந்த மீனாக்‌ஷி கண்ணாடின் கதவின் வழியில் பார்த்துக்கொண்டிருந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro