15

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஹாய் வட்டீஸ்,
இந்த ஸ்டோரி எழுதுறதுக்கு முதல் காரணம் மினாக்‌ஷி அவள் குரலில் பாடி க்ரிஷ்ஷிற்கு அனுப்பிய இந்த பாடல்தான். ஒரு 5 நிமிடம் 57 வினாடிகள் செலவழித்து இந்த பாடலை கேட்டுவிட்டு இந்த அப்டேட்டை படியுங்கள். இல்லை என்றால் இந்த பாடலின் இருக்கும் ஃபீல் புரியாமல் போய் விடும். 2001 இல் வந்த பாடல் இது. பலர் கேட்டிருக்க மாட்டீர்கள். " ஆயிரம் பொய் சொல்லி" என்ற வெளியிடப்படாமல் இருக்கும் திரைப்பட பாடல்.  என்னை பொறுத்தவரை இந்த பாடலை கேட்காமல் இந்த அப்டேட்டை படித்தால் க்ரிஷ் மற்றும் மீனாக்‌ஷியின் உணர்வுகள் புரியாமல் போய்விடும். அப்டேட் படிச்சிட்டு, இந்த பாட்ட கேட்டு படிச்சவங்க காமண்ட்ஸ்ல சொல்லுங்க.

--------------------------------

இரவு தூங்க வந்தவன் தனது மொபைலை பார்க்க அதில் மீனாக்‌ஷியின் ஆடியோ மெசேஜ் இருந்தது. அதை பார்த்தவன் மொத்த நேரம் மூன்று நிமிடம் என காட்ட

' இந்த லூசு இன்னைக்கு என்ன வாய்ஸ் மெசேஜ்லாம் பண்ணிருக்கு' என்று எண்ணியவன் காதில் ஹெட்செட்டை மாட்டியவன் கேட்க தொடங்கினான்.

" ஏதோ மின்னல் ஏதோ மின்னல் தேகம் தொடுகிறதே...
போட்டி போட்ட தாழம்பூவின் பூட்டு உடைகிறதே....
சல்லாப வெயில் அடிக்க கல்லூறும் புயல் அடிக்க...
ஆசை மொட்டு விட நாணம் கட்டிலிட கூந்தல் கூட சுடுதே..
பார்வை பின்னலிட ஜாடை ஜன்னலிட தாகம் மூட்டிவிடுதே...

அந்தி மஞ்சள் அரைத்தெடுத்தேன்
நட்சத்திரத்தால் குழல் முடித்தேன்,

மேகம் பறித்து மெத்தை தைத்தேன்
பூவாய் எனையோ கொட்டிவைத்தேன்,

வானவில்லில் உடை தரித்தேன்
வாசல் கதவில் விழி பதித்தேன்,

இதழின் ரசத்தில் இலை விரித்தேன்
விருந்தாய் எனையே கடை விரித்தேன்,

ஒரு பொக்கிசத்தை எடுத்து வந்தேன்
புது நதியில் குளிக்க வந்தேன்..."

இந்த பாடலை மீனாக்‌ஷி மிகவும் ரசித்து பாடி அவனுக்கு அனுப்பியிருந்தாள். க்ரிஷ் தனது மெசேஜை கேட்டுவிட்டான் என்பது தெரிந்ததும் அடுத்த வாய்ஸ் மெசேஜை அவனுக்கு அனுப்பினாள்.

இங்கு க்ரிஷிற்கு அந்த பாடலை அவளின் குரலில் கேட்டதில் அவன் மனதை ஏதோ ஒரு இனம் புரியாத ஒன்று ஆட்கொண்டது. அவள் குரலில் இருந்த வசீகரம், மற்றும் அவள் அனுபவித்து பாடியது எல்லாம் அவனுக்கு புதிதாக இருந்தது. ஒரு கணம் கண்மூடி தன்னை ஒரு நிலைக்கு கொண்டுவந்தவனுக்கு அடுத்த மெசேஜும் வாய்ஸ் மெசேஜாக வர அதை கேட்க ஆரம்பித்தான்.

" க்ரிஷ் எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நான் இன்னைக்கு உன்ன எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லத்தான் வந்தேன். ஆனா நீ ஏதேதோ பேசி என்ன கோபப்படுத்திட்ட. அதனாலதான் நான் ஷக்திய லவ் பண்றியான்னு நீ கேட்டதுக்கும் நான் எதுவுமே சொல்லாம கோபமா வந்துட்டேன். ஆனா நீ அதை கூட ஜாலியா கலாய்க்கிற. எனக்கு உன்கிட்ட பிடிச்சது இரண்டு விசயம்தான். ஒன்னு நீ உங்க அக்கா மேல வெச்சிருக்கிற கண்மூடித்தனமான பாசம். அடுத்தது எதையுமே அலட்டிக்காம ஜஸ்ட் லைக் தட்னு இருக்குற சுபாவம். இது ரெண்டும்தான் எனக்கு உன்மேல ஈர்ப்பு வர காரணமாச்சி.

எனக்கும் உனக்கு வயசு வித்தியாசம் இருக்கு. ஆனா நீதானே அன்னைக்கு சொன்ன, மகேஷ் பாபுவுக்கும் அவரு பொண்டாட்டிக்கும் மூனு வருச வித்தியாசம் இருக்குன்னு.  ஒரு பொண்ணா வெட்கத்த விட்டு சொல்றேன்னு க்ரிஷ். ஐ லவ் யூ. நான் சொன்ன காரணங்கள் சரியான்னு தெரியல. பட் ஐ லவ் யூ. உனக்கும் என்ன பிடிச்சிருந்தா நாளைக்கு வந்து பேசு. பிடிக்கலன்னா சொல்லிடு. அதுக்கு அப்புறமா நான் உன் பக்கமே வரமாட்டேன். குட் நைட்" .

இந்த மெசேஜை கேட்டதும் க்ரிஷிற்கு ஒரு கணம் என்ன நடந்தது என்று புரியவே பத்து நிமிடம் ஆனது. மீண்டும் மீண்டும் மீனாக்‌ஷி அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்டவன், தெளிவாக அவள் அவனுடைய பெயரை கூறியதால் மட்டுமே மீனாக்‌ஷி அவனை காதலிக்கின்றாள் என்று உறுதி செய்துகொண்டான்.

க்ரிஷ்ஷிற்கு இது ஒரு புதுவகையான அனுபவம். ஒரு பெண் அவனை காதலிப்பதாக கூறியது. அவன் பாடசாலை காலம் முழுவதும் படித்தது ஆண்கள் மட்டும் பயிலும் பாடசாலையில். கல்லூரியில் சேர்ந்த பின்னே அவனுக்கு பெண் தோழிகள் கிடைக்க ஆரம்பித்தனர். அதற்கு முன் அவனுக்கு பெண் தோழிகள் என்று யாருமே இல்லை. காலேஜில் கூட மீனாக்‌ஷியிடம் மட்டுமே அதிகம் பேசுவான். அதுவும் அவன் காலேஜுக்கு வந்த முதல் நாள் தொடக்கம் அவளுடன் பழகியதால் அவளுடன் இலகுவாக பேச முடிந்தது. ஆனால் மீனாக்‌ஷி திடீரென்று அவனை காதலிப்பதாக கூறுவாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. மறு நாள் காலேஜுக்கு சென்று மீனாக்‌ஷியை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்து யோசித்தே அவனுக்கு அன்றைய இரவின் தூக்கம் வரவில்லை. காதலின் அவஸ்த்தையால் பெண்களுக்கு மட்டும்தான் தூக்கம் தொலையுமா என்ன? காதலின் சுகமான அவஸ்த்தை மற்றும் அடுத்து என்ன செய்ய போகின்றோம் என்ற குழப்பத்தில் க்ரிஷ் தன் தூக்கத்தை தொலைத்தவன் பின்னிரவில்தான் தூங்க ஆரம்பித்தான். ஆனால் அவனை இம்சிக்க கனவிலும் மீனாக்‌ஷியே வந்தாள்.

' ஐ லவ் யூ க்ரிஷ் ' என்று அவள் உதடு குவித்து பறக்கும் முத்தமிடுவது, மறுகணம் அவன் அருகில் வந்து அவனின் கன்னத்தில் முத்தமிடுவதும் என அவனுக்கு அன்றைய இரவு முழுவதும் ஒரு சுகமான அவஸ்த்தையாகவே கழிந்தது.

அடுத்த நாள் காலை க்ரிஷ்ஷால் காலேஜுக்கு செல்ல முடியவில்லை. காரணம் இரவு மீனாக்‌ஷி கனவில் அவனை போட்டு படுத்திய பாடு. காலையில் எழுந்தவனுக்கு காய்ச்சல் கொஞ்சம் அதிகமாக இருக்க அன்றைய நாள் காலேஜுக்கு அவன் செல்லவில்லை.

இங்கு காலேஜில்...
" ஏய் பக்கி , என்ன அவன்கிட்ட சொல்லிட்டியா" என்று ரேஷ்மா கேட்க மீனாக்‌ஷி தன் காதலை அவனிடல் எப்படி கூறினாள் என்பதை கூற அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

" ஆனா மீனாக்‌ஷி அவன் என்ன வேணா சொல்லலாம். ஒரு வேலை அவன் " நோ" என்று சொன்னா அதை தாங்கிக்கிற மனப்பக்குவத்த ரெடியா வெச்சிக்க. ஏன்னா உங்களுக்குள்ள வயசு வித்தியாசம் இருக்கு" என்று கூற அதை சற்று யோசித்தவள்

" இவன் முடியாதுன்னு சொன்னா ஷக்தி இருக்கான் நமக்கு" என்றவள் சற்று யோசித்தவள்

" சரி நம்ம எப்படியும் இவங்க குடும்பத்துக்கு மருமகளாக போறது மட்டும் நிச்சயம்" என்று கூற ரேஷ்மா அவள் இடுப்பில் இடித்தாள்.

" மீனாக்சி உங்கக்கா உங்கள விட்டு போனதுக்கு அப்புறமா நீ இன்னைக்குத்தான் இவ்வளவு ஹாப்பியா பேசி பார்க்குறேன். இதே சந்தோசம் உன் முகத்துல எப்பவுமே இருக்கனும்டி" என்ற ரேஷ்மாவை மீனாக்‌ஷி

" ஐ அம் சோ டயர்ட்டி. என்னால முடியல. அக்கா இருக்கும் வரைக்கும் எங்க வீடே ரொம்ப கலகலப்பா இருக்கும். அன்பான அம்மா, அப்பா. அப்பப்போ ரெஸ்ட்டூரண்ட் சாப்பாடு, எப்பவாச்சும் சினிமா இப்படின்னு சந்தோசமா போயிகிட்டு இருந்திச்சி. அக்கா எங்கள விட்டு போனதும் எங்க வீடே ஒரு மயானம் மாதிரி ஆகிடிச்சி. தினமும் ஐஸ் கிறீமும், சாக்லேட்டுமா சாப்பிட்டவன இனிமே நீ இனிப்பு பண்டம் எதுவுமே சாப்பிட கூடாதுன்னு சொன்ன மாதிரி ஆகிடிச்சி என் வாழ்க்கை.
இப்போலாம் அப்பாவ பார்த்துக்கிறதுக்கே அம்மாவுக்கு நேரம் சரியா இருக்கு. என்கூட ஒரு நிமிசம் கூட நிம்மதியா மனசு விட்டு பேச அவங்களுக்கு டைம் இல்லை. நானும் என்னடி பண்ணுவேன். வீட்டுல கடைகுட்டின்னு எப்பவும் எனக்குத்தான் எல்லோரும் செல்லம் கொடுப்பாங்க. ஆனா இது எல்லாத்தையும் கடவுள் ஒரே நாள்ள என்கிட்ட இருந்து புடிங்கிட்டாரு.

எனக்கு ஏன் தெரியுமா க்ரிஷ்ஷ பிடிச்சது. அவனோட ஜஸ்ட் லைக் தட் அப்படின்னு இருக்குற பிஹேவியர். எது பண்ணாலும் ரொம்ப சிம்பிளா எடுத்துக்குவான். ரொம்பலாம் ஃபீல் பண்ண மாட்டான். இதுதான் அவன்பக்கம் என்ன சாய வெச்சிது" என்று கூற அவளை தலை முதல் கால் வரை ஒரு முறை ஏற இறங்க பார்த்தாள் ரேஷ்மா.

" நான் ஒன்னு சொல்லட்டா மீனாக்‌ஷி. காதல் வர்றதுக்கு எல்லாம் எந்த ஒரு காரணமும் இருக்காது. நமக்கு ஒருத்தர் மேல காதல் வந்திடும். ஆனா நம்ம அதுக்கு அப்புறமாத்தான் அதுக்கான காரணத்த தேடுவோம். எப்படி சொல்ரதுன்னா, ஒரு துப்பட்டா வாங்கிட்டு அதுக்கு மேட்ச்சா சுடிதார் தேடுற மாதிரி. இன்னைக்கு பல பேரோட காதல் அப்படித்தான் இருக்கு. எனக்கு நீ சொல்ற காரணம் கூட அப்படித்தான் தோனுது. அதுக்குன்னு நான் அதை தப்பு சொல்லல. ஆனா தயவு செய்து க்ரிஷ் மேல ஏன் காதல் வந்ததுன்னு மட்டும் சும்மா சப்ப கட்டு கட்டாத. ஐ நோ யு லைக் ஹிம் சோ மச். பட் யூ டோண்ட் நோ த ரீசன். அதுதான் நிஜம். அதை ஏத்துக்க. உன் காதலுக்கு ஒரு ரீசன் தேடாத" என்று கூற ரேஷ்மாவின் பேச்சில் இருந்த உண்மை மீனாக்‌ஷிக்கு புரிய ஆரம்பித்தது.

" எனக்கு புரியுது. நீ சொல்ரதும் நிஜம்தான். அவன் மேல ஏன் காதல் வந்ததுன்னு சத்யமா எனக்கு தெரியல. ஆனா நான் இப்படி காதல் வர காரணம் தெரியலனு சொன்னேன்னே கேட்குறவங்களுக்கு தப்பா தோனும்னுதான் நான் ஏதேதோ காரணங்கள தேட டிரை பண்றேன். ஆனா நீ என்னோட உயிர்த்தோழி என்பதால என் மனச உடனே கண்டுபிடிச்சிட்ட பக்கி. சும்மாவா சொன்னாங்க உயிர் கொடுப்பாள் தோழின்னு" என்று கூற ரேஷ்மா

" தோள் கொடுப்பான் தோழன் தெரியும். அதென்ன உயிர் கொடுப்பாள் தோழி. புதுசா இருக்கு" என்று கேட்டாள்.

"அதெல்லாம் தத்துவம். ஆராயக்கூடாது. அப்படியே ஃபீல் பண்ணனும் பேபி" என்றவள் ரேஷ்மாவின் கன்னத்தை கிள்ளினாள்.

ரேஷ்மா கொஞ்சம் வசதியான வீட்டுப்பெண். காலேஜில் ஷக்தியை இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கும் பலரில் இவளும் முக்கியமான ஒருத்தி. ரேஷ்மாவிற்கு மீனாக்‌ஷியை ஸ்கூல் நாட்களில் இருந்தே பழக்கம். காலேஜ் சேர்ந்த பிறகு இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். மீனாக்‌ஷியின் காதலை முதலில் அவளிடன் கூறும் அளவுக்கு அவர்கள் நெருக்கம் இருந்தது. ஆனால் ரேஷ்மாவிற்கு க்ரிஷ் மீது நல்ல அபிப்ராயம் என்பது கொஞ்சம் குறைவு. ஆனாலும் அவளின் ஒரு சுயநலத்திற்க்காக மீனாக்‌ஷி க்ரிஷ்ஷை காதலிப்பதாக கூறியதற்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றாள்.

தன் தோழி க்ரிஷ்ஷை காதலித்தாள் அதன் மூலமாக அவள் ஷக்தியை நெருங்க முடியும் என்பது அவள் கணக்கு. அது போக ஷக்தி அதிகம் பெண்களிடம் பேசமாட்டான். அவன் அவ்வப்போது பேசுவது என்றாள் அது மீனாக்‌ஷியிடம் மட்டுமே.

அவர்கள் காலேஜில் ஆளை அடிக்கும் அழகில் இருக்கும் ஒரு சில பெண்களில் மீனாக்‌ஷியும் ஒருத்தி. ஒரு வேலை மீனாக்‌ஷி க்ரிஷ்ஷை காதலிக்காமல் அவள் மனது ஷக்தியின் பால் திரும்பினாள் தனக்குத்தான் ஆபத்து என நினைத்தாள். தனக்கு க்ரிஷ் மீது பெரிதாக  நல்ல அபிப்ராயம் இல்லை எனினும் தன் சுய நலத்திற்காக அமைதியாக இருந்தாள். அதற்காக மீனாக்‌ஷி மீது அவளுக்கு அக்கறை இல்லை என்று இல்லை. மற்றவர் மீதுள்ள அக்கறையை விட நம்மீது நமக்கு இருக்கும் அக்கறை அதிகம் என்பதே இங்கு ரேஷ்மாவின் நிலைப்பாடு.

--------
ஹாய் வட்டீஸ்,
கடவுள் சித்தம் இருந்தாள் இனிவரும் நாட்களில் வாரத்திற்கு 3 அப்டேட்கள் பதிவுட தீர்மானித்துள்ளேன். ஏப்ரல் மாதம் ஆரம்பத்துக்குள் இந்த கதையை முடிக்கும் எண்ணம் உள்ளது.

இந்த கதை யாரையும் சுட்டிக்காட்டும் நோக்குடன் எழுதப்படவில்லை. முற்றிலும் இது ஒரு கற்பனை கதை. " ஆகாஷனா" கதையாச்சும் ஒரு சிலரின் வாழ்வில் நான் கண்ட காட்சிகளை மாற்றம் செய்து எழுதினேன். அவர்கள் வாட்பெட்டில் இல்லை. ஆனால் இந்த கதை முற்றும் முழுதாக ஒரு கற்பனை கதை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro