2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"அம்மா, அம்மா" என்று வீட்டிற்குள் வந்த மீனாக்‌ஷியை அவளின் தாய்

"எதுக்குடி இப்போ என்ன ஏலம் விடுற. சத்தம் போடாம வர தெரியாதா உனக்கு" என்று அவள் மீது எரிந்து விழுந்தாள்.

கல்லூரி வாழ்க்கையில் முதல் நால் அனுபவத்தை தன் தாயிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்ற ஆசையில் வந்தவளுக்கு தன் தாயின் பாராமுக பேச்சு அவளின் உற்சாகத்தை கலையிழக்க செய்தது. மீனாக்‌ஷியின் வீடு கடந்து மூன்று வருடங்களாக அமைதியாகவே இருக்கின்றது. ஆனால் அதுவே மூன்று வருடங்கள் முன் என்றால் வீடே ஒரே கலகலப்பாக சத்தமாக இருக்கும். தனது அக்கா செய்துகொள்ள இருந்த கலப்பு திருமணம் அவர்கள் வீட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது. அது நல்ல மாற்றமா என்றால் கண்டிப்பாக இல்லை.

மீனாக்‌ஷியின் தாய் தந்தையர் தங்களின் இரண்டு மகள்களின் மீதும் அளவுக்கதிமாக பாசம் வைத்திருந்தனர். அவர்கள் கேட்பவை எல்லாமே அவர்களுக்கு கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். அது போலவே தங்கள் மூத்த மகள் கலப்பு காதல் திருமணத்திற்கு அனுமதி வேண்டி நின்ற போது கூட, எந்த ஒரு தயக்கமும் இன்றி சம்மதம் தெரிவித்தனர். ஆனால் விதி வேறு வழியில் விளையாடியது.

மீனாக்‌ஷியின் பெற்றோர் சாதி, மத பேதங்களில் அதிக நாட்டமில்லாதவர்களாக இருந்தாலும் ஜோதிடத்தில் அவர்களுக்கு அதீத நம்பிக்கை இருந்தது. தங்கள் மகளின் திருமணத்திற்கு முன் தம்பதியினர் குலதெய்வ கோயிலுக்கு போய் வரவேண்டும் என்று அவர்களின் குடும்ப ஜோசியர் கூற, அது போலவே மீனாக்‌ஷியின் அக்கா வள்ளியும் அவளின் காதலனும் சென்றனர். சென்றவர்கள் சென்றவர்கள்தான். திரும்பி வரவில்லை. மூன்று வருடமாக அந்த இருவர் பற்றிய எந்த ஒரு தகவல் கூட இல்லை. உயிருடன் இருக்கின்றார்களா? இல்லை இறந்துவிட்டார்களா? என்பது கூட யாருக்குமே தெரியவில்லை. வள்ளியின் காதலனுடைய பெற்றோர் சாதியை தங்கள் உயிர் மூச்சாக கருதுபவர்கள். ஒரு வேலை அவர்கள்தான் எதுவும் செய்துவிட்டார்களோ என்று கூட தேடிப்பார்த்தாகிவிட்டது. அவர்களும் 'தங்களுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை எனினும் அவர்களை கொல்லும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் காட்டுமிராண்டிகள் இல்லை' என கூற மீனாக்‌ஷியின் பெற்றோருக்கு இவர்களை பற்றி அறிய எந்த ஒரே ஒரு ஊடகமும் இல்லாமல் போனது. அன்றிலிருந்து மீனாக்‌ஷியின் வீடு ஒரு ஜீவனற்ற உடலை போலானது.

தன் மகள் தன்னிடம் ஏதோகூற வந்து அதை தான் புறக்கனித்தது புரிய மீனாக்‌ஷியின் தாய்

"மீனா, ஏதோ சொல்ல வந்தியே. என்னாது" என்று கேட்க அவள்

"இன்னைக்கு காலேஜ்ல முதல் நாள் பத்தி உங்கிட்ட பேசலாம்னு வந்தேன்மா" என்று கூற அவளின் அருகில் அமர்ந்தவர் "சரி நீ சொல்லு. நான் கேட்கிறேன்" என்றார். அவர் கூறியதும்தான் தான் தாமதம் உள் அறையில் இருந்து மீனாக்‌ஷியின் தந்தை அவளின் தாயை அழைத்தார்.

"மரகதம், கொஞ்சம் வாம்மா. எனக்கு அவசரமா பாத்ரூம் போகனும்" என்று கூற மரகதம் உடனே தன் கணவனை பார்க்க சென்றார். தங்கள் மூத்த மகள் கானாமல் போன சேதி அறிந்த மீனாக்‌ஷியின் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்படிருந்தார். அவரால் தனது வேலைகளை சுயாமாக பார்த்துக்கொள்ள முடியாது.

தன் அறைக்குள் வந்த மீனாக்‌ஷி அதன் ஒவ்வொரு அங்குலத்தில் தன் அக்கா வள்ளியின் நினைவுகள் இருப்பதை கண்டு கண் கலங்கினாள்.எந்த பொருட்களை பார்த்தாலும் அவளுக்கு வள்ளியை ஞாபகப்படுத்தாமல் இல்லை. தான் எவ்வளவுதான் கண்கலங்கினாலும் போன தன் அக்கா திரும்ப வரபோவதில்லை என தெரிந்தவள் அதை நினைத்து கவலைப்படுவதை விடுத்து தனது மொபைலில் பாட்டு கேட்டபடியே தூங்கி போனாள்.

-------------------

"தம்பி கிருஷ்னா" என்று தன்னை அழைத்த அக்காவை முறைத்தவன்

"எரும, எரும உங்கிட்ட எத்தன தடவை சொல்லிருக்கேன். கிருஷ்னா அப்ப்டினு கூப்பிடாதனு.ஒன்னு க்ரிஷ்னு சொல்லு இல்லை க்ரிஷ்னானு சொல்லு. அதென்ன கிருஷ்னா" என்று க்ரிஷ் தன் அக்கா ராதாவை பார்த்து சத்தமிட்டான். வெளியில் இருந்த அவனின் தந்தை

"என்ன உள்ள சத்தம்" என்று கூற உடனே அமைதியானவனை கண்ட ராதா

"ஹாஹா, உன் வெட்டி வீராப்பெல்லாம் என்கிட்ட மட்டும்தான் போல. பொட்ட புள்ளைகிட்ட இப்படி வீராப்பு பேசுரதுக்கு பதிலா உன்னால முடிஞ்சா நம்ம விருமாண்டி கிட்ட பேசிப்பாரேன். வீராப்பா எல்லாம் வேணாம் வெறும் நாலே நாலு வார்த்தை கரக்டா பேசு பார்க்கலாம்" என்று அவனுக்கு மட்டும் விதமாக மெதுவாக கூற அவளை அடிக்க வந்தான்.அவன் அடிக்க வருவதை கண்டு சுதாகரித்தவன்

"அது ஒன்னுமில்லப்பா, தம்பி கிருஷ்னா என்கிட்ட பேசிகிட்டு இருந்தான்" என்று கூற ராதாவை அடிக்க வந்தவன் அவள் தந்தையிடம் பேசுவதை கண்டு அமைதியாகி நின்றான்.

ராதா எப்போதும் தன் தம்பியை கலாய்த்துக்கொண்டே இருப்பாள். தாய் இல்லாத பிள்ளை என்று அவள் அவனுக்கு அதிகமாகவே செல்லம் கொடுத்தாள். ஆனால் ராதாவின் தந்தையோ க்ரிஷிற்கு அன்பை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாகவே கொடுத்தார். அதிலும் குறிப்பாக கண்டிப்பு கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.

"சரி க்ரிஷ்னா, சும்மா உன்ன கலாய்க்கத்தான் அப்படி கூப்பிட்டேன். சரி உன்னோட முதல் நாள் காலேஜ் எப்படி போச்சி" என்று கேட்க அவன் மிகவும் ஆர்வத்துடன் தன் அக்காவுக்கு கூற ஆரம்பித்தான்.

"பர்ஸ்ட் டே செம்மயா போச்சிக்கா. நம்ம ஷக்தி இருக்கான்ல. அவனுக்கு காலேஜ்ல ஒரு மாஸ் இமேஜ் இருக்கு. இந்த மீசைய முறுக்கு படத்துல சொல்வாங்களே 'சுதாகர் தம்பினு சொல்லு' அப்படின்னு. அதே போல இவனும் ஷக்தி தம்பினு சொல்லு அப்படிங்குறான். நான் வேற இவன் ஏதோ நம்ம கிட்ட பில்டப் கொடுக்குறதுக்குத்தான் அப்படி சொன்னான்னு நினைச்சேன். ஆனா நிஜமாவே அவன் பெயருக்கு பெரிய ஒரு மரியாதை இருக்கு. ஏன் சில பொண்ணுங்க நான் அவன் தம்பின்னதும் என்கிட்ட வந்து தானா பேசினாங்க. அதுவும் ஷக்தியோட ஜூனியர் பொண்ணுங்க எல்லாம் ரொம்ப வழிஞ்சாங்க என்கிட்ட" என்று கூற தன் தம்பியின் தலையில் செல்லமாக குட்டினாள்.

"ஷக்திக்கு ஜூனியர்னா உன்னோட direct சீனியர் பொண்ணுங்களா?"

"ஆமாக்கா"

"ஆமா, எப்போமே நீதானே பொண்ணுங்க பின்னாடி வழிஞ்சி திரிவ. இன்னைக்கு என்ன அது உல்டாவா நடந்திருக்கு" என்று கூற தன் தாயுமான அக்கா என்ன கூற வருகின்றாள் என்பதை புரிந்தவன் அமைதியாக இருந்தான்.

"இங்க பாரு க்ரிஷ் நீ பத்தாவது படிக்கிறப்போ பண்ண அலப்பறையால அப்பாக்கு ரொம்ப அவமானம் ஆகிடிச்சி. மறுபடி இதே மாதிரி ஒரு தவறு செஞ்சி அவருக்கு தலை குணிவ கொண்டு வந்திடாத. அம்மா இல்லாம அக்கா வளர்த்த பையன் தானே என்று வெளியில இருக்குறவங்க கேலி பேசுற மாதிரி வெச்சிக்காத. உனக்கா நான் என்னோட வாழ்க்கையில நிறைய இழந்திருக்கேன்.

நான் காலேஜ் படிச்சப்போ உன்ன பார்த்துக்கனும் என்ற நினைப்பிலேயே என்னால ஒழுங்கா படிக்க முடியல. இருபத்தி ஆறு வயசாகியும் நான் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்னு கூட உனக்கு தெரியும். நான் கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு போனா உன்ன பார்த்துக்க யாரும் இல்லாம போயிடுவாங்க என்ற பயம்தான். நீ காலேஜ் முடிச்சதும்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு இருக்கேன். இதை நான் ஏன் உனக்கு அப்பப்ப ஞாபகபடுத்த்துறேன் தெரியுமா, நீ அடிக்கடி ஏதாச்சும் தப்பு செஞ்சிட்டு வரும் போது அப்பா உன்ன திட்டுறத என்னால தாங்க முடியாம என்னோட வற்புறுத்தலாள அப்பா உன்ன அவரு வேலை செய்ற காலேஜ்ல சேர்க்காம ஷக்தி படிக்கிற காலேஜ் சேர்த்திருக்காரு. என் தம்பி இந்த வாட்டி என்ன அப்பா முன்னாடி தலை குணிய வைக்கமாட்டான்னு நம்பிக்கை இருக்கு. தயவு செஞ்சி அத காப்பாத்திடு. நீ படிக்கலன்னாலும் பரவாயில்லை. தப்பு மட்டும் எதுவும் செஞ்சிடாத" என்று கூற க்ரிஷ் அவன் அக்காவை பார்த்து கண் கலங்கினான்.

"அக்கா லவ் யூ. லவ் மோர் தன் எனி திங்க் இன் திஸ் வேர்ல்ட். உன் பேரு கெட்டு போற மாதிரி எதுவுமே பண்ண மாட்டேன்கா. இது உன் மேல ப்ராமிஸ்" என்றவனை விதி பார்த்து சிரித்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro