31

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இன்று.....

ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு உணர்வு என்பது இயற்கைகாயகவே கடவுள் அவளுக்கு அளித்த வரம். உதாரணமாக, மனதில் வலி உள்ள ஒரு பெண்ணிடம் வேற்று ஆண் ஒருவன் ஆறுதலாக பேச ஆரம்பிக்கும் போது அவளின் உள்ளுணர்வு ஆரம்பத்தில் அந்த ஆணுடன் கொஞ்சம் கவனமாகவே நடக்கும்படி கூறும். அவன் யார்?அவனின் பின்புலம் என்ன? நல்லவனா கெட்டவனா?அவன் தன்னுடன் பேசக்காரணம் என்ன?  என்பது போன்ற பல விடயங்கள் அவள் மனதில் ஓடும். ஆனால் அதுவே காயம் கொண்ட ஆணின் இதயத்திற்கு ஒரு பெண் ஆறுதல் கூறினாலோ அல்லது அந்த நேரத்தில் அவன் மீது அவள் கரிசனை எடுத்தாலோ போதும். அவள் யார் என்றெல்லாம் அந்த ஆணின் மனது பார்க்காது. நமது சமூகம் இன்றும் ஏற்றுக்கொள்ளாத ஒரு சாரார் நம் மத்தியில் உள்ளனர் என்றார் அது விபச்சாரிகள்தான். திருநங்கைகளை கூட நம் சமூகம் இப்போது ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டது. ஆனால் விபச்சாரிகளை ஏற்றுக்கொள்ள இன்னமும் தயங்குகிறது. ஆனால் காயம் கொண்ட இதயமுடைய ஆண் அந்த பெண் விபச்சாரியாக கூட இருந்தால் கூட  அவளை தன் அருகில் வைத்துக்கொள்ள துடிப்பான். அது ஒன்று தோழியாக இருக்கலாம், அல்லது காதலியாக இருக்கலாம், அல்லது மனைவியாக இருக்கலாம்.

க்ரிஷ்ஷின் முழுகதையையும் கேட்ட ரூபினிக்கு யார் மீது கோபம் கொள்வது, யார் மீது பரிதாபப்படுவது என்று தெரியவில்லை. ஆனால் எது எப்படி இருந்தாலும் அவள் சுரேஷை மட்டும் மன்னிக்க தயாரில்லை.

தன் துப்பட்டாவில் சொருகியிருந்த ஊசியை எடுத்த ரூபினி க்ரிஷ் கையில் சரக் சரக் என்று குத்தினால். வலியில் அவன் துடிக்க அவளை பார்த்து

" ஏண்டி இப்போ ஊசியால என்ன குத்தின" என்று கேட்க அவனை முறைத்தவள்

" நீ சொன்ன கதை எல்லாமே கரக்ட்டு. உன் வாழ்க்கையில நீ ரொம்ப கஷ்டப்பட்டு இருக்க. ஆனா அதெல்லாம் எதனால வந்தது. மீனாக்‌ஷிகிட்ட நீ ஆபாசமா போட்டோ கேட்க போயித்தானே வந்தது. உங்களுக்கு பொம்ப்ளையோட உடம்ப பார்க்கனும்னா ஒன்னு என்ன மாதிரி வேசிங்க கிட்ட போங்க. அதுக்கு தைரியம் இல்லைன்னா உங்கள மாதிரி ஆளுங்களுத்தான் லட்சக்கணக்குல வெப்சைட்ஸ் இருக்குதே. அதுல போய் பாருங்க. பாவம் ஒரு பொண்ணோட வாழ்க்கைய இப்படி அழிச்சிட்டீங்களே" என்று கோபமாக பொரிந்து தள்ளினாள். அவளின் பேச்சில் சிறிது கடுப்பான க்ரிஷ்

" அவ வாழ்க்கை எல்லாம் ஒன்னும் அழிஞ்சி போகல்ல. ஷக்தி கூட அவ சந்தோசமாத்தான் வாழ்றா. என் வாழ்க்கைதான் இப்படி அந்தரத்துல நிற்குது" என்று கூறியவனை அவன் எரித்துவிடுவது போல பார்த்தாள்.

" இங்க பாரு க்ரிஷ், உன் முன்னாடி இங்க உட்கார்ந்து இருக்குற ரூபினி உன் ஃப்ரெண்ட். அவ கார்ல் கேர்ல் இல்ல. சோ ஒரு ஃப்ரெண்டா நான் சொல்ரேன் கேட்டுக்க. உன் மேல தப்பில்லன்னு தெரிஞ்சதும் மீனாக்‌ஷி மனது எவ்வளவு வேதனை பட்டிருக்கும் தெரியுமா. தன் புருசனே தன்னோட காதலுக்கு எதிரியா இருந்திருப்பான்னு அவ கொஞ்சம் கூட நினைச்சிருக்க மாட்டா. ஒரு வேல அவங்களுக்கு இப்போ குழந்தை இல்லாம இருந்திருந்தா அவ உன்கிட்ட ஓடி வந்திருப்பா. உன் வீட்லயாகட்டும், இல்லைன்னா ஹாஸ்பிடல்ல அவ உன்கிட்ட கோபமா பேசினதாகட்டும். எல்லாமே எதனாலன்னு நினைக்கிற. உன்மேல பரிதாபப்பட்டா எங்க அவ மனசு உன் மேல மறுபடி தாவிடுமோ என்ற பயம். அது அவ கண்ணுல நான் நல்லாவே பார்த்தேன். அந்த கண்ணுல அவ எதிர்காலத்த நினைச்சி பயம் இருந்தது.  உன்ன அவ எந்தளவுக்கு காதலிச்சிருந்தா நீ கேட்ட மாதிரி போட்டோவ உன் மொபைலுக்கு அனுப்பியிருப்பா. உன்ன இழந்தததுக்கு அவ வருத்தப்படுறத விட அவள மாதிரி ஒரு பொண்ண இழந்ததுக்கு நீதான் வருத்தப்படனும். இந்த ஆம்பளைங்க நீங்க எல்லாருமே இப்படித்தான். கையில ரத்தினத்த வெச்சிக்கிட்டு ரோட்டில இருக்குற கல்ல புறக்க ஆசைப்படுவீங்க் " என்று கூறி ஊசியால் க்ரிஷ்ஷை குத்திய இடத்தில் மெதுவாக தன் விரல்களால் வருடிக்கொடுத்தாள்.

ரூபினி பேசிய பிறகுதான் இந்த பிரச்சினையால் மீனாக்‌ஷியின் மனம் எவ்வளவு புன்பட்டிருக்கும் என்று க்ரிஷ்ஷிற்கு புரிந்தது. ஆனால் ரூபினி கூறியது போல மீனாக்‌ஷிக்கு தன் மீது மீண்டும் காதல் வருமோ என்ற எண்ணம் தோன்றிய போது அவன் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றாமல் இல்லை. அது அவளின் குடும்ப வாழ்க்கையை நாசம் செய்து அவளுடன் சேர்வதற்கு அல்ல. மாறாக திருமணம் முடித்த பின்னும் தன் கணவன் செய்த துரோகத்தால் பழைய காதலன் மீது அவள் மனது செல்லும் என்பதை உணர்த்தியமைக்கு. இருந்தாலும் க்ரிஷ் மிகவும் தெளிவாக இருந்தான். ஷக்தி, மீனாக்‌ஷியின் வாழ்க்கை கூட்டுக்குள் இனி அவன் செல்வதில்லை என்று.

" குத்துறதையும் குத்திட்டு இப்போ தடவி வேற கொடுக்கிறியா. ரூபினி இப்போ நீ என்ன ஒருமையில பேசினதும் நான் உன்ன ஒருமையில பேசுறதும் ஒரு வகையில மனசுக்கு இதமா இருக்கு. வாங்க, போங்கனு பேசும் போது ஒரு நெருக்கம் வர மாட்டேங்குதுல்ல" என்று கூற அவனை பார்த்து புன்னகைத்தாள்.

" இப்போ நம்ம ரொம்ப க்லோசா பேசி, அதுக்கு அப்புறமா காதலிச்சி கல்யாணமா பண்ணிக்க போறோம்" என்று கேட்க க்ரிஷ் சற்றும் யோசிக்கவில்லை.

" நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன தப்பு ரூபினி" என்று கேட்டவன் அவள் முகத்தை பார்த்தான். ஒரு வினாடி, ஒரே ஒரு வினாடி அவள் முகத்தில் வெட்கம் படர அடுத்த நொடி அவள் முகம் கோபத்தில் சிவந்தது.

" என்ன சார் ஒரு வேசிக்கு வாழ்க்கை கொடுக்க டிரை பண்றீங்கலா. நான் வேசின்னா என்கிட்ட வந்த நீங்க ஒன்னும் உத்தமன் கிடையாது. நானாச்சும் காசு தேவைன்னு கண்டவன் கூட படுக்கிறேன். ஆனா நீங்க எல்லாம் வெறும் உடல் சுகத்துக்கு என்கிட்ட வர்றீங்க. இப்போ என்ன  கல்யாணம் பண்ணி உலகத்துக்கு நீங்க பெரிய தியாகின்னு காட்டனுமோ. உன்ன பார்த்து ஆம்பளைங்க மேல எனக்கு ஒரு நல்ல எண்ணம் வந்தது. ஆனா நீயும் பண்ண தப்ப மறைக்க, தப்பு பண்ண ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து சமூகத்துக்கு முன்னாடி நல்லவன்னு காட்டிக்க பார்க்குறேல்ல.
எனக்கு உன்கிட்ட பிடிச்ச விசயங்கள் என்ன தெரியுமா. சுயநலமில்லாம நீ என்கிட்ட பழகினது. நம்ம உறவு வெச்சிக்கும் போது கூட என்ன கேவலபடுத்தாம என்ன சக மனுசியா பார்த்தது. மத்தவங்க எல்லாம் வக்கிரமா என்ன திட்டும் போது நீ என்ன ஒரு பொண்ணா பார்த்தது. ஆனா இன்னைக்கு நீ பேசுறத பார்க்கும் போது நீயும் ஒரு சராசரி ஆம்பள என்பத நிரூபிக்க டிரை பண்ற.
உன் குடும்பம் இப்போ உன் மேல தப்பில்லன்னு தெரிஞ்சிகிடிச்சி. இப்போ நீ பண்ண தப்ப, அதான் ஒரு வேசிக்கிட்ட வந்தத மறைக்க என்ன கல்யாணம் பண்ணி உன்ன பெரிய தியாகி மாதிரி காட்டிக்க பார்க்குற.

நம்ம சமுதாயத்தில ஒரே தப்புக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு எதிர்வினை இருக்கும். ஒரு ஆண் வேறு வேறு பெண்ணுடன் தொடர்பை கொண்டாலும், அதே நேரத்தில் அவன் குடும்பத்தை கவனித்து கொண்டால் போதும். அவன் செய்த தவறுகளை அந்த மனைவி பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பாக்கும். அதிலும் அந்த ஆண் பிறகு திருந்தினால் அந்த மனைவி அவனை ஏற்று கொள்வது மட்டும் இல்லாமல் அவன் திருந்தியதற்கு அவள் நன்றியுடன் இருக்க வேண்டும். அது மட்டும் இல்லை, அவன் குடும்பமும் அந்த பெண்ணின் குடும்பமும் அவனை மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வார்கள்.

அதுவே அந்த மனைவி தப்பு செய்தால். அவளுக்கு எப்போதுமே மன்னிப்பு கிடையாது. எங்கேயோ ஒரு சில குடும்பங்களில் இந்த மாதிரி சூழ்நிலையில் அந்த மனைவிக்கு மன்னிப்பு கிடைத்து இருக்கலாம். அனால் பெரும்பாலும் அது நடக்காது.

மானம் கெட்டவளே, வேசி என்று திட்டி அவளை வீட்டை விட்டு விரட்டிவிடுவார்கள். அவள் கணவன் வீட்டில் தான் அப்படி என்றல் அவள் பெற்றோர்களும் பெரும்பாலும் அவளை ஏற்று கொள்ளமாட்டார்கள்.
துரோகத்தால் அந்த ஆணுக்கு வரும் வலிக்கும் அவமானத்துக்கும் மதிப்பு கொடுக்கும் சமுதாயம் அந்த பெண் அனுபவிக்கும் வேதனைக்கும், அவமானத்துக்கும் எந்த மதிப்பும் கொடுப்பதில்லை.

இங்க எனக்கு யாரும் வாழ்க்கை கொடுக்க தேவையில்ல. என் வாழ்க்கை நல்லாதான் போகுது. முதல்ல அவங்கவங்க வாழ்க்கைய பார்த்துக்கோங்க" என்று கோபமாக பேசியவள் அவ்விடத்தை விட்டு எழுந்தவள் க்ரிஷ்ஷை மேலும் சங்கடமாக்க நினைத்தாள்.

" உன்னால முடிஞ்சா உங்க வீட்டுல இருக்குற பெரியவங்ககிட்ட என்ன பத்தின உண்மைய சொல்லி அவங்க முழு சம்மதத்தோட என்ன பொண்ணு கேட்டு வா. அப்புறமா இதபத்தி யோசிக்கலாம்" என்றவள் அவன் என்ன கூற வந்தான், ஏன் அப்படி கேட்டான் என்பதை கூற கொஞ்சம் கூட அவனுக்கு அவகாசம் தராமல் பொரிந்து தள்ளினாள். க்ரிஷ்ஷிற்கும் இன்றைய ரூபினியின் முகம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.

க்ரிஷ்ஷிடம் கோபமாக பேசியவள் பஸ் பிடித்து தன் ஹாஸ்டல் வரும் வழி நெடுகிலும் க்ரிஷ் மீது தான் ஏன் இவ்வளவு கோபமாக பேசினோம் என்று யோசித்து கொண்டே வந்தாள். திடீரென்று தன கைபேசி அழைக்க அழைப்பை ஏற்றவள்

" ஹலோ யாரு" என்று கேட்க மறுமுனையில்

" என்ன ரீட்டா எப்படியிருக்க? இன்னைக்கு ஃப்ரீயா? ஒரு பார்ட்டி இருக்கு" என்று மறுமுனையில் இருந்தவன் கூறினான்.

" இல்லை ஒரு மூனு நாளைக்கு முடியாது. எனக்கு இப்போ பீரியட்ஸ்" என்று பொய் கூறினாள்.
ரீட்டாவாகிய ரூபியால் இன்று இன்னொரு ஆணிடம் செல்ல முடியும் என்று தோன்றவில்லை. அதற்கான காரணத்தை அவள் அறியவும் முற்படவில்லை. காரணம் அறிய முற்பட்டால் அவள் மனதிலும் க்ரிஷ் இருப்பது தெரிய வந்துவிடும் என்ற பயம் அவளுக்கு.

------------
ஹாய் வட்டீஸ்,
ரூபினி பேசும் " சமுதாயத்தில் ஒரு ஆணும் பெண்ணும் செய்யும் தவறுக்கு வேறு வேறு எதிர்வினை இருக்கும்" என்று வரும் வாக்கியங்கள் இன்னுமொரு கதையில் இருந்து நான் சுட்டது.
அந்த எழுத்தாளர் யார் என்பது தெரியாது. வட்பெட்டில் அவர் இல்லை, அப்படி அவர் இதை படித்தால் மன்னிக்கவும். உங்களிடம் அனுமதி பெற என்னால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நன்றி..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro