33

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கணவனின் நிராகரிப்பு ஒரு மனைவியை தடுமாற செய்வது இயல்பு. நிராகரிக்கப்பட்ட மனைவியின் உள்ளம் ஆரம்பத்தில் ஏங்குவது அன்பிற்கு மட்டுமே. உள்ளத்தில் கள்ளம் உள்ளவன் அப்படியான பெண்களை மிக எளிதில் வீழ்த்திவிடுவான். கடைசியில் அது ஈருடல் சேர்க்கையில் முடிந்துவிடும். ஆனால் இங்குதான் முக்கியமான ஒரு விடயம் கவனித்து பார்க்க வேண்டும். கணவன் மனைவி இணைவின் பின் ஒரு ஆத்மார்த்த திருப்தி இருக்கும். தங்களின் கூடலின் பின் ஒருவர் மற்றவரின் மார்பில் தூங்குவது வழமை. இல்லை எனில் சம்பந்தமே இல்லாமல் ஏதாவது பேசிக்கொண்டிருப்பர். ஆனால் அதற்கு எதிரான உறவில் உடல் வேட்கையை தீர்க்கின்ற முயற்சியே இருக்கும். உடல் இணைவின் பின்னரான நேரத்தில் அவர்களுக்குள் எந்த ஒரு அன்னியோன்னியமும் இருக்காது. ஏன் இந்த தவறை செய்தோம் என்ற குற்ற உணர்ச்சியே மேலோங்கி இருக்கும். தவறான பந்தத்தில் இருக்கும் இரு உள்ளங்களும் ஆரம்பத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்தாலும் காலப்போக்கில் அது உடல் சார்ந்த தேவையுடன் நின்றுவிடும். ஒருவர் மற்றவரின் நல்ல விடயங்களை மட்டுமே பார்ப்பர். அடுத்தவர் மீதான எதிர்மறை விடயங்களை கவனிக்க மாட்டார்கள். இங்குதான் மிக முக்கியமான ஒரு விடயம் உண்டு. ஒருவருடன் நாம் உள்ளத்தால் நெருங்கும் போதுதான் மற்றவரின் எதிர்மறை பண்புகள் நமக்கு தெரிய வரும். ஆனால் தவறான உறவில் அவர்கள் அந்த அளவுக்கு செல்லமாட்டார்கள். காரணம் நாம் முன்கூட்டியே கூறிவிட்டோம். அப்படியும் அவர்கள் அந்த எதிர் மறை பண்புகளை பார்த்தால் கள்ளத்தனமான உறவுக்கும் மேலாக இன்னுமொரு தவறான உறவு இன்னொருவர் மீது உருவாக வாய்ப்புகள் உண்டு. சேற்றில் விழுந்தவன் மழையில் நனைவது தவறில்லை என்று அவர்கள் மனம் அதை இலகுவாக எடுத்துக்கொள்ளும்.

இந்த உலகத்தில் எப்போதுமே நியாயமாக கிடைக்க வேண்டிய ஒன்றைவிட கூடுதலாக இலவசமாக அல்லது போனஸாக ஏன் திருட்டுத்தனமாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள் மீது எல்லோருக்குமே ஒரு அதீத ஆர்வமும் சிலிர்ப்பும் இருக்கிறது.

இது உண்மையில் மிருக எச்சங்களின் ஒரு குணம். எந்த விலங்கும் தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பொருளுக்காக காத்திருப்பதில்லை. அடித்து பிடுங்கி விடுகிறது அல்லது தன் வலிமையை பராக்கிரமத்தைக் காட்டி அபகரித்துக் கொள்கிறது. உள்ளத்தில் நோய் உள்ளவன் இந்த மிருக எச்சம் போன்றவன் தான். இப்படியானவர்களிடம் இருந்து தங்கள் துணைகளை காத்துக்கொள்ள ஆண்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. திருமனம் முடித்து 90 நாட்கள் காட்டிய அன்பில் சிறிதேனும் அடுத்து வரும் நாட்களில் காட்டினாலே போதும்.

ரேஷ்மாவை எல்லோரும் ஆச்சரியமாக பார்க்க மீனாக்‌ஷி

"நான் தான் ரேஷ்மாவ வரச்சொன்னேன். முதல்ல நான் உங்க எல்லோரையும் ஏன் இங்க வரச்சொன்னேன்னு சொல்லிர்றேன். க்ரிஷ் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றுக்கும் இங்க இருக்குற ஒவ்வொருத்தரும் நேரடியாகவோ இல்லைன்னா மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருக்கோம். இன்னையோட இந்த குழப்பத்தையும் மனக்கசப்பையும் ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம்னு இருக்கேன்" என்று கூற ஷக்தி உடனே பேச ஆரம்பித்தான்.

" மீனாக்‌ஷி, இந்த பிரச்சினைக்கு முழு காரணமும் நான் தான். என்னாலதான் இது எல்லாமே ஆரம்பமாச்சு. என்னால என் தம்பியோட வாழ்க்கை பாழானது மட்டுமில்லாம உங்க காதலையும் நான் அழிச்சிட்டேன். எனக்கு அப்போ என்னோட காதல் ஜெயிக்கனும் என்ற வெறி மட்டுமே இருந்திச்சி. ஆனா கடந்த சில நாட்களாக யோசிச்சதுல என்னால ஒரு முடிவுக்கு வர முடிஞ்சது. நீ என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன். நீ யார்கூட உன்னோட மீதமிருக்கிற வாழ்க்கைய வாழனும்னு நினைக்கிறியோ அவங்க கூடவே நீ வாழலாம். சிவாவ நீ உன்கூட வெச்சிக்கனும்னு நினைச்சாலும் நான் அதுக்கு மறுப்பு தெரிவிக்க போறதில்ல" என்றவன் தன் கையில் இருந்த சில பத்திரங்களை அங்கிருந்த மேசையில் வைத்தான்.

" இது நான் கனடாவுக்கு போறதுக்கான பேப்பர்ஸ். இனிமே என்னால இந்த குற்ற உணர்ச்சியோட உங்க எல்லோரோட முகத்தையும் பார்த்துக்கிட்டு வாழ முடியாது. நான் இந்தியாவ விட்டே போக போறேன்" என்று கூறி மீனாக்‌ஷியை அவன் பார்க்க அவள் பார்வையாலேயே

' என்கிட்ட சொல்லாம முடிவெடுக்குற அளவுக்கு போயிட்டியா ஷக்தி' என கேட்டாள். இதை யார் கவனித்தாரோ இல்லையோ ரேஷ்மா கவனித்தாள். அவளுக்கு புரிந்தது இனி ஷக்தியின் வாழ்வில் தனக்கு இடமில்லை என்று.

" உங்க ஃபேமிலி விசயத்த பேசுற இடத்துல நான் எதுக்கு இருக்கேன்னு எனக்கு புரியல. ஒரு வேல மீனாக்‌ஷிக்கு சப்போர்ட்டா என்ன ஒரு ஃப்ரெண்டா அவ வரசொல்லிருக்கலாம். ஆனா இந்த இடத்துல நான் இருக்குறது சரியில்லைன்னு தோனுது. உங்க குடும்ப விசயத்த நீங்களே பேசி தீர்த்துக்கோங்க. நான் கிளம்புறேன். அப்புறம் எனக்கு இன்னும் மூனு மாசத்துல கல்யாணம். கண்டிப்பா எல்லோரும் வந்திடுங்க" என்ற ரேஷ்மா க்ரிஷ்ஷை பார்த்து

" சாரி க்ரிஷ். அன்னைக்கு நான் கொஞ்சம் நிதானமா யோசிச்சிருந்தா இப்படி ஒரு நிலமை உங்க யாருக்குமே வந்திருக்காது. அன்னைக்கு என் மனசுல ஒடினது எல்லாமே என் தோழி மீனாக்‌ஷி வாழ்க்கை இப்படி ஆகிடிச்சேன்னு மட்டும்தான். என்ன மன்னிச்சிடு" என்றவள் மீனாக்‌ஷியின் அருகில் வந்து அவளை அணைத்தவள் அவள் காதுகளில்

" நீ ஷக்திய பார்த்த பார்வையிலேயே புரிந்தது நீ அவன விட்டுக்கொடுக்க மாட்டேன்னு. நான் கிளம்புறேன் மீனாக்‌ஷி. இனிமே உங்க வாழ்க்கையில நான் வரமாட்டேன். அப்புறம் தயவு செய்து என் கல்யாணத்துக்கு நீயோ இல்லைன்னா ஷக்தியோ வந்திடாதீங்க" என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ரேஷ்மா சென்றதும் அங்கிருந்தவர்களுக்கு எங்கிருந்து எதை ஆரம்பிப்பது என்று புரியவில்லை. அங்கிருந்த மற்றவர்களை விட மீனாக்‌ஷிதான் மிக தெளிவாக இருந்தாள், இனி ஷக்திதான் தன் வாழ்க்கை என்பதில். இங்கு அவளுக்கு க்ரிஷ் கூட சேர்வதற்கு அவர்களின் குடும்ப உறவுகள் எந்த தடையும் சொல்ல போவதில்லை. ஆனால் நாளை எதிர்காலத்தில் அவளின் மகனுக்கும் அவளுக்கும் சமூகத்தால் கெட்ட பெயர் வந்துவிட கூடாது என்பதில் அவள் மிக கவனமாக இருந்தாள்.

ஒரு சில கணவன், மனைவிகள் இது போன்றதொரு சூழ்நிலையைச் சந்திருப்பார்கள்! ஓரளவேனும் குற்ற உணர்ச்சி உள்ள, நல்ல தன்மை கொண்ட, ஆணையோ, பெண்ணையோ, அவர்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ செய்து வருந்தும் ஒரு பெருந்தவறுக்காக, அவர்கள் வருந்தும் சமயத்தில், வழங்கப்படும் மன்னிப்பும், ஆறுதலும், அவர்கள் மனதிற்குள் தங்களது துணைக்கு ஒரு தனி உயர்ந்த இடத்தைக் கொடுத்து விடும்.

அது முதல், அவர்கள், தங்கள் துணை சொல்வதை தட்ட மாட்டார்கள். அவர்களது முதன்மை நோக்கம், தனது துணையின் மகிழ்ச்சியாக மாறிவிடும்! அப்படி ஒரு தருணத்தில், மிகச் சரியாக செயல்படும், ஆணும், பெண்ணும், மிகுந்த புத்திசாலிகள்!

சுய மரியாதை பேசி, நல்ல வாழ்க்கையை இழப்பதுதான் புத்திசாலித்தனம் என்றால், விட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் அடையும் முட்டாளாகவே இருந்து விட்டுப் போவதற்கு மீனாக்‌ஷி தயாராக இருந்தாள்.

அடுத்து யார் என்ன பேசுவது என்று தடுமாறிக்கொண்டிருக்க க்ரிஷ்ஷே ஆரம்பித்தான்.

" இன்னைக்கு நம்ம குடும்பத்துல இருக்குற பிரச்சினைய பேசி தீர்த்துக்கிறது நல்லதுன்னு எனக்கு தோனுது. என்ன பொறுத்தவரைக்கும் இந்த பிரச்சினையால என்னோட வாழ்க்கைதான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்குன்னு நினைச்சிருந்தேன். ஆனா என்ன விட மனசளவுல அண்ணிதான் ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாங்க" என்று கூற எல்லோரும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர்.

" என்ன நான் அண்ணினு யாரை சொல்ரேன்னு யோசிக்கிறீங்களா? ஷக்தி எனக்கு அண்ணன்னா அவன் பொண்டாட்டி எனக்கு அண்ணிதானே. அண்ணி மனசுல எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்பத எனக்கு உணர்த்தியது ஒருத்தி. அவதான் எனக்கு இப்போ எல்லாமுமா இருக்கிறா. அவ கூட ஆரம்பத்துல எதுக்காக போனேன்னு உங்க எல்லோருக்கும் தெரியும். கெட்டதுலயும் ஒரு நல்லதுன்னு சொல்வாங்கள்ள. அதுதான் அவ. அவதான் ரூபினி. எனக்கு இப்போலாம் அவள ரொம்ப பிடிக்குது. உங்க எல்லோரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே போல ரூபினியையும் உங்க எல்லோர மாதிரியும் இப்போ பிடிக்குது. அவ உடம்பையும் தாண்டி அவள என் வாழ்க்கையில உங்க எல்லோரும் போல ஒரு அங்கமா எடுத்துக்கனும்னு ஆசையா இருக்கு. ஆனா அவ ரொம்ப ரோசக்காரி. செல்ஃப் ரெஸ்பக்ட் அதிகம் பார்ப்பா. எனக்காக ஏதும் பண்ணனும்னு நீங்க எல்லோரும் நினைச்சீங்கன்னா அவள கல்யாணம் பண்ணிக்க நீங்க எல்லோரும் அவகிட்ட பேசனும். ஏன்னா நான் போய் அவகிட்ட பேசுறத விட எனக்குன்னு இருக்குற இந்த குடும்பம் போய் பேசினா அவ என்ன ஏத்துக்க வாய்ப்பு அதிகம் இருக்கு" என்று கூற அங்கு குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது. இந்த அமைதியை கலைக்கும் முகமாக சுரேஷ்

" நீ ஒன்னும் யோசிக்காத க்ரிஷ். நாங்க எல்லோரும் அவகிட்ட பேசுறோம்" என்று கூற மீனாக்‌ஷியும் ராதாவும் உச்சபட்ச அதிர்ச்சியில் சுரேஷை நோக்கினர். ஆனால் ராதாவின் மூளையில் க்ரிஷ் கூறியதில் ரூபினி 'செல்ஃப் ரெஸ்பக்ஸ்' அதிகம் எதிர்பார்ப்பவள் என்பது மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro