35

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஊடலின் பின் கூடல், கூடலின் பின் ஊடல் என்பதில் எது கலிப்பானது என்று அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். ஊடலின் பின் கூடல் என்பது, இருக்கும் அன்பை பலமடங்காக பெருகச் செய்து மனதில் இருக்கும் ரணங்களை காற்றில் அடித்து செல்லப்படும் தூசியை போல அந்த ரணம் இருக்கும் தடத்தை கூட அழித்துச் செல்லும் வல்லமை கொண்டது. உடல் தேவையை சமூகம் அங்கீகரித்த முறையில் பின்பற்றும் போது அதில் கிடைக்கும் மன திருப்தியே அலாதியானது. இருவர் உள்ளமும் இணையும் போதுதான் அந்த திருப்தி கிடைக்கும். மாறாக வழுக்கட்டாயமாக அல்லது கற்பழிப்பு மூலம் என்னதான் திருப்திகிடைக்கும் என்பது தெரியவில்லை. மிருகங்கள் கூட தன் துணையிடம் அதன் அனுமதி இல்லாமல் செல்வதில்லை. ஆனால் ஒரு சில கொடிய மனித (?) மிருகங்கள் ஆறு மாத குழந்தை முதல் அறுபது வயது பாட்டி வரை விட்டு வைப்பதில்லை. இத்தகைய மிருகங்கள் உருவாக யார் காரணம். கண்டிப்பாக இவர்கள் இப்படி உருவாக அவர்களின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய வகிபாகம் உண்டு.

சமூகத்தில் பாலியல் கல்வி பற்றி பேச எல்லோருக்கும் தயக்கம். ஆனால் நம் இந்தியாவில் இருக்கும் சனத்தொகையோ மொத்த மானுடத்தில் இருபத்தைந்து வீதம். பாலியல் கல்வி என்றால் என்ன என்பது தெரியாமலேயே நாம் வளர்க்கப்பட்டு விட்டோமா அல்லது அதை பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க தயக்கமா? இங்கு பலருக்கு பாலியல் கல்வி என்றால் என்ன என்பதே தெரியவில்லை. குறைந்தபட்சம் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள் மாதவிடாய் கால கஷ்டங்களை வீட்டில் வளரும் ஆண்களுக்கு சொல்லிக்கொடுத்தாலே போதும். அவன் மனதில் பெண்கள் பற்றிய நல்ல எண்ணம் உருவாக.

க்ரிஷ் ஒன்றும் படிக்காதவவோ அல்லது ராதா அவனுக்கு பெண்களின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்காமலோ இல்லை. அவள் பஸ்சில் செல்லும் போது, காய்கறி வாங்க கடைக்கு செல்லும் போது படும் அவஸ்த்தைகளை அவனுக்கு சொல்லியே வளர்த்தாள். அதிலும் குறிப்பாக அவளின் மாதவிடாய் காலங்களில் அவள் படும் கஷ்டங்களை அவன் அறியும் வகையில் நடந்துகொள்வாள். ஆனால் இப்படி பார்த்து பார்த்து தான் செதுக்கிய சிற்பம் திடீரென்று உடைந்து போனதை அவளால் ஏற்க முடியவில்லை. அதே நேரம் உடைந்து போன சிற்பம் தன் இஷ்டத்துக்கு ஒட்டிக்கொள்ளவும் அவள் விரும்பவில்லை. அவளே மீண்டும் சிற்பியாக இருந்து அந்த சிபத்தை செதுக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் உடைந்த சிற்பத்தை மீண்டும் ஒட்டி செதுக்கும் கலை எல்லா சிற்பிகளுக்கும் தெரியாது என்பது அவளுக்கு புரியவில்லை.

" ஏங்க நிஜமாவே நீங்க அந்த ரூபினி பொண்ண க்ரிஷ்ஷுக்கு கட்டி வைக்கலாம்னு சொல்ரீங்களா?" என்று சுரேஷை பார்த்து ராதா கேட்க அவன்

" ஏன்மா அவந்தான் ஆசைபடுறானே. கட்டி வெச்சா என்ன தப்பு. பாவம்டா, அவன் நம்மலால ரொம்ப கஷ்டபட்டுட்டான். அவன் வாழ்க்கை இனிமேலாச்சும் அவன் விரும்பிய மாதிரி சந்தோசமா இருக்கனும்" என்று கூற அவனை ஆழகாம பார்த்தாள்.

" இதோ என் வயித்துல இருக்குற குழந்தை ஒரு ஆணாக இருந்து அவனும் நாளைக்கு இதே மாதிரி ஒரு பொண்ண கட்டிக்க கேட்டா இப்படித்தான் நீங்க சொல்வீங்களா?" என்று நெற்றிப்பொட்டில் அடித்தால் போல கேட்க சுரேஷ் ஒரு கணம் தடுமாறிப்போனான். அவனால் பதில் கூற முடியவில்லை. அவனின் வாயில் இருந்து எந்த ஒரு வார்த்தையும் வரவில்லை.

" பதில் சொல்ல முடியலல்ல. ஏங்க உங்களுக்கு என் தம்பிய ஆரம்பத்துல இருந்தே பிடிக்காது. அது நீங்க என்மேல வெச்சிருந்த பொசசிவ்னஸ்னால என்று நினைச்சேன். ஆனால் இப்போ நீங்க பண்றத பார்த்தா இதுல வேற ஏதோ இருக்கும் போல இருக்கு. என்கிட்ட இருந்து ஏதும் மறைக்கிறீங்களா?" என்று கேட்க அவன் உடைந்தே போய்விட்டான். ராதவிடம் தான் க்ரிஷ்ஷிற்கு செய்ததை எப்படி அவனால் கூற முடியும்.

" இல்லம்மா அப்படி இல்ல. ஆரம்பத்துல உன் அன்பு  எனக்கு மட்டும்தான் கிடைக்கனும்னி நினைச்சேன். அது சராசரி ஆம்பளையா நான் எதிர்பார்த்தது. அதனால எனக்கு க்ரிஷ் மேல பொறாமை இருந்த்தது உண்மை. ஆனா இப்போ அவன் உடைஞ்சி போய் இருக்கான்மா. அவனுக்கு இப்போ எது பிடிக்குதோ அதுதான் அவனுக்கு ஆறுதல் கொடுக்கும். அவன் தண்ணியடிக்கல, வேற எந்த போதை பழக்கத்துக்கும் போகல்ல. அவன் போனது பொண்ணுகிட்ட. அதுவும் ஒரே ஒருத்திகிட்டதான். க்ரிஷ் ஒன்னும் முட்டாள் கிடையாது. கண்டவளையும் தன் பொண்டாட்டியா ஏத்துக்க. எனக்கு என்னமோ அந்த ரூபினி பொண்ணு நல்லவலாதான் இருக்கனும்னு தோனுது. ஏன்னா க்ரிஷ் உன் வளர்ப்பு. அந்த ரூபினிய கூப்பிட்டு பேசலாம். அவளோட பக்கத்தையும் கேட்கலாம். நம்ம குடும்பத்துக்கு அவ சரி வருவான்னா மேல என்ன பண்றதுன்னு யோசிக்கலாம். இல்லைன்னா விட்டுடலாம்" என்று கூற சுரேஷ் கூறியது சரி என்றே ராதாவுக்கு தோன்றியது.

" சரிங்க நீங்க சொல்ற மாதிரி பண்ணிடலாம். நீங்க க்ரிஷ்ஷிற்கு கால் பண்ணி அவள நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர சொல்லிடுங்க. நான் மீனாக்‌ஷிய வர சொல்றேன். ஏன்னா கூட மீனாக்‌ஷியும் இருந்தா நான் பெட்டர் ஆ ஃபீல் பண்ணுவேன்" என்று அவனும் சரி என்றான்.

" ஹலோ க்ரிஷ் நான் சுரேஷ் பேசுறேன்"
" சொல்லுங்க மாமா" என்று அவன் கூற அந்த மாமாவில் நிஜமான கரிசனை இருந்தது. நக்கலோ அல்லது குத்தல் பேச்சோ இல்லை. அதுவே சுரேஷை கொல்லாமல் கொன்றது.

" க்ரிஷ் நான் உன் அக்காகிட்ட பேசிட்டேன். ரூபினிய நாளைக்கு வீட்டுக்கு கூப்பிட சொல்லிருக்கா. ஆரம்பத்துல அவ ஏதேதோ பேசினா. நாந்தான் அவள சமாதானம் செய்து வெச்சிருக்கேன். அந்த ரூபினி பொண்ண நாளைக்கு வர சொல்லிடு. அப்புறம் முடியும்னா அந்த பொண்ணுகிட்ட உன் அக்கா சொல்றதுக்கு ஆமா போட சொல்லிடு. அப்படி சொன்னா கண்டிப்பா உன் அக்கா ஏத்துக்க சான்ஸ் இருக்கு. ஒரு வேலை அந்த பொண்ணுக்கும் உன் அக்காக்கும் ஒத்துப்போகலைன்னா என்னால இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாது" என்று கவலையாக கூறினான்.

" பரவாயில்லை மாமா. அவ நிஜமுகத்தோடயே அக்கா கூட பேசட்டும். மத்தது எல்லாம் கடவுள் விட்ட வழி. அப்புறம் வார்த்தைக்கு வார்த்த உன் அக்கா உன் அக்கானு சொல்றீங்க. அவ இப்போ உங்க ராதா. என் அக்கா என்பது அதுக்கு அப்புறமாத்தான்" என்று கூற மறுமுனையில் சுரேஷின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

" இல்லை க்ரிஷ், என்னைக்குமே அவ உன் அக்காதான். அதுக்கு அப்புறமாத்தான் என்னோட ராதா. இதை நான் ஆரம்பத்துல புரிஞ்சிருந்தாலே நிறைய ப்ராப்ளம்ஸ் வராம இருந்திருக்கும். என்ன மன்னிச்சிடு" என்று கூற மறுமுனையில்

" உங்கள மன்னிக்க எதுவுமே இல்ல. பாஸ்ட் இஸ் பாஸ்ட். நீங்க அப்படி பண்ணாம இருந்திருந்தா எனக்கு ரூபினி மாதிரி ஒரு ஜெம்மோட பழக எனக்குன் சந்தப்பம் கிடைச்சிருக்காது. கெட்டதுலயும் ஒரு நல்லதுன்னா இதுதான் போல" என்று கூறியவன்

" எனக்காக அக்காகிட்ட பேசினதுக்கு ரொம்ப நன்றி மாமா" என்று காலை கட் செய்தான்.

க்ரிஷ்ஷிற்க்கு சுரேஷை வென்ற ஒரு மனநிலை உருவானது. எப்போதும் தன்னுடைய ராதா என்றும் பேசுபவனை இப்போது க்ரிஷ் இலகுவாக உடைத்திருந்தான். அவன் வாயாலேயே " உன் அக்கா" என்று கூற வைத்துவிட்டான். என்னதான் சுரேஷிடம் அவன் தன்மையாக பேசினாலும் ஒரு சராசரி மனிதனாக அவனுக்கு சுரேஷை வென்ற கர்வம் வந்தது.

சுரேஷ் கால் கட் செய்ததும் ரூபினிக்கு கால் செய்த க்ரிஷ்

" ஹலோ ரூபினி" என்று கூற மறுமுனையில் அவள்

" சொல்லு க்ரிஷ்" என்றாள். அவளின் குரல் கேட்டதும் அவன் உள்ளத்தில் எங்கிருந்துதான் ஒரு உற்சாகம் வந்ததோ தெரியவில்லை.

" எங்க அக்கா உன்ன பார்த்து பேசனும்னு சொல்றாங்க. நாளைக்கு நீ ஃப்ரீயா?" என்று கேட்க மறுமுனையில் அவள் ஒரு கணம் தடுமாறினாள். ஏனென்றாள் ராதா அவளை கூப்பிட்டு பேசுவாள் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. முதல் சந்திப்பிலேயே ராதாவுக்கு அவளை பிடிக்கவில்லை என்று தெரிந்ததாலேயே க்ரிஷ்ஷை அவாய்ட் செய்ய அவள் அவனிடம் அவனின் குடும்பத்தாரை கூட்டி வந்து பேச சொல்லுமாறு கூறினாள். ஆனால் ராதா இப்படி மனம் மாறி அவளுடம் பேச தயாராகுவாள் என்று அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை. இதை இப்படியே விடக்கூடாது என நினைத்தவள் க்ரிஷ் மனதை காயப்படுத்தியாவது அவனை தன் பக்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தாள்.

" நாளைக்கா? இன்னைக்கு நைட் ஃபுல்லா ஒரு க்‌ஷ்டமர் கூட அப்பாய்ன்மண்ட் இருக்கு. நாளைக்கும் அதே போல இன்னொருத்தர் கூடவும் போகனும். டைமிங்க் எப்படி வசதி படும்னு தெரியல" என்று கூற முதன் முறையாக க்ரிஷ் உடைந்து போனான். தான் காதலிக்கும், தான் மணக்க தயாராகும் பெண் வேறொரு ஆணுடம் செல்வதை அவள் வாயாலேயே கேட்பது அவனுக்கு மிகவும் வேதனை அளித்தது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள அவனால் முடியவில்லை. அப்படி ஏதும் செய்தால் எங்கே அவள் அடுத்த கேள்வியால் அவனை மடக்கிவிடுவாள் என்ற பயம்.

" ஒரு முப்பது நிமிசம்தான் ரூபினி. காலையில எங்க அக்கா வீட்டுக்கு வந்திடு.ப்ளீஸ்" என்று கெஞ்ச அவளால் அந்த "ப்ளீஸை" மீறி எதுவும் யோசிக்க முடியவில்லை.

" சரி க்ரிஷ் நான் வந்திடுறேன். அட்றஸ வாட்ஸப் பண்ணிவிடு" என்று கூற அவனும் சரி என்றான்.

க்ரிஷ்ஷின் மனதில் இப்போது இருப்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். எப்படி சரி ரூபினியை இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து அவளை தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று. அவளை தன் அன்பு வலையத்துக்குள் கொண்டு வந்தாள் மீண்டும் அவள் இந்த பாழடைந்து தொழிலுக்கு செல்ல வேண்டியதில்லை என்பது அவனுக்கு தெரியும். ரூபினி ஒன்றும் உடல் சுகத்துக்காக இந்த தொழிலை செய்யவில்லை. அவளுக்கு தேவை அன்றாட வாழ்க்கையை நடத்த பணம். மும்பையில் இருந்து வந்த பின் நல்ல வழியில் வாழ அவள் முயற்சி செய்தாலும் சமூகம் அவளிடம் இருந்து எதிர்பார்த்தது என்னமோ அவளின் உடலையே.

இங்கு ரூபினியோ தான் இப்படி பேசியும் க்ரிஷ் அவன் முடிவில் உறுதியாக இருப்பது அவளுக்கு பயத்தை வரவழைத்தது. ஆனால் அதே நேரம் அவன் மீது கோபமும் வந்த்தது. ' நான் இன்னொருத்தன் கூட போறேன்னு சொல்ரேன். இவன் என்னடான்னா அப்படி போகாதன்னு என்கிட்ட கெஞ்சாம நீ என்ன வேணா பண்ணிக்கோ என்கிற மாதிரி இருக்கானே' என்று கோபப்பட்டாள். ஆம், ரூபினிக்கு க்ரிஷ் மீது காதல் வந்து பல நாள் ஆகிவிட்டது அல்லவா. எல்லா காதலிகள் போலவும் அவளுக்கும் அவனுடன் காதல் கதை பேசி, கொஞ்சி விளையாட ஆசைதான். ஆனா அவள் இருக்கும் நிலமை அவளை அப்படி செய்ய விடவில்லை.















































































































Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro