43

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலையில் க்ரிஷ்ஷுக்கு முன்பாகவே எழுந்த ரூபினி குளித்து பட்டு சேலை அணிந்து கிட்சனுக்குள் செல்ல அங்கு ராதா காலை உணவுக்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால்.

" ஹேய் புது பொண்ணு. என்ன மாப்பிள்ளை டயர்ட்டா தூங்கிறாரா?"என்று விளையாட்டாக கேட்க ரூபினி சட்டென்று ராதாவின் கால்களில் விழுந்தாள். " ஹேய் என்ன பண்ற ரூபினி எழுந்திரு" என்று கூற அவள் அழ ஆரம்பித்தாள்.

" அக்கா எனக்கு எல்லாம் கல்யாணம் நடக்கும் என்றே என் கனவுலயும் நினைச்சதில்ல. மிஞ்சி போனா என்ன யாராச்சும் நிரந்தரமா வெச்சுக்குவாங்கன்னு நினைச்சேன். ஆனா எனக்கும் ஒரு மனைவி என்ற அந்தஸ்த்த கொடுத்து என்னையும் உங்க குடும்பத்துல ஒருத்தியா ஏத்துக்கிட்டீங்க. யாருக்கு அக்கா இப்படி ஒரு நல்ல மனசு வரும். உங்க மனசு தெரியாத நான் அன்னைக்கு உங்க ரொம்ப மோசமா பேசிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க" என்றாள். ரூபினியின் கண்களை ஆழமாக நோக்கிய ராதா,

" நீ அன்னைக்கு அப்படி பேசினதுதான் எனக்கு ரூபினின்னா யாருன்னு புரிய வெச்சது. நான் வந்து கேட்டதும் இதுதான் சமயம்னு நீ க்ரிஷ்ஷ கட்டிக்க சம்மதிச்சிருந்தா ஒரு வேலை எனக்கு உன் மேல நல்ல அபிப்ராயம் வந்திருக்காதோ என்னமோ. ஆனா நீ உனக்கும் ஒரு மனசு இருக்கு, அதுலயும் காயங்கள் இருக்கு என்பத ரொம்ப தெளிவா பேசின. அப்புறம் உன்னோட சுயமரியாதைய விட்டுக்கொடுக்காம பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சது. நீ அன்னைக்கு அப்படி பேசினதாலதான் இன்னைக்கு எங்க குடும்பத்துல ஒருத்தியா இருக்க. அதனால பழையது எல்லாத்தையுமே மறந்திடு. உனக்குன்னு புருசன் இருக்கான். அவன் கூட சந்தோசமா வாழுடா" என்று கூற ரூபினி,

" எனக்கு ஒரு அக்காவும் இருக்காங்க இப்போ" என்று ராதாவை அணைத்துக்கொண்டாள்.

நாட்கள் பரபரப்பு ஏதுமில்லாமல் தளர்வாக நகர மீனாக்‌ஷியின் குடும்பம் கனடாவுக்கு சென்றிருந்தனர். அதே போல க்ரிஷ் ரூபினியும் துபாய் செல்லும் நாளும் வந்தது.எல்லோரிடமும் விடைபெற்று இருவரும் விமான நிலையம் சென்று போர்டிங்க் பாஸுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

" டேய் மச்சான், அது ரக்‌ஷிதா தானே.லாஸ்ட் இயர் புக் பண்ணியிருந்தேமேடா. எவனோ ஃபாரீனுக்கு கூட்டி போக போறான் போல.பெரிய பணக்காரனாத்தான் இருக்கனும். இல்லைன்னா இவள ஃபாரீன் கூட்டி போறதுக்கு அவனுக்கு எங்க பணம் கிடைக்க போகுது. இருந்தாலும் மச்சி முன்னையவிட இப்போ செம்மயா இருக்காடா. இரு அவ நெக்ஸ்ட் எப்போ இந்தியா வருவான்னு கேட்டுட்டு வரலாம்" என்று அந்த இரண்டு இளைஞர்களும் அவர்களை நோக்கி வர ரூபினிக்கு வியர்த்துக்கொட்டியது.

விமான நிலையம் வரும் வழியில் ரூபினி தனக்கு பசி என்று கூறியிருந்ததால் க்ரிஷ் அவளுக்கு காபீயும் டோனட்டும் வாங்க சென்றிருந்தான். அவன் அவளிடம் வந்து கையில் இருந்த உணவுப் பண்டங்களை கொடுத்தவன் திடீரென்று ரூபினியின் முகம் மாறுவதை கண்டான்.

" என்னாச்சூ ரூபினி. திடீரென்று ஏன் இப்படி வியர்க்குது. உடம்புக்கு ஏதும் செய்யுதாமா?" என்று கேட்க அவள் கையில் இருந்த காபீயை அப்படியே தவறவிட்டாள். அதற்குள் அந்த இளைஞர்கள் இவர்களை நெருங்கினர்.

" ஹாய் ரக்‌ஷிதா, எப்படி இருக்கீங்க" என்று ஒரு இளைஞன் கேட்க மற்றவன் க்ரிஷ்ஷை நோக்கி, " என்ன பாஸ் ஃபாரீன் டூரா. சூப்பரா எஞ்சாய் பண்ண போறீங்க போல" என்று கேட்க அந்த இடத்தில் ஒரு வெறுமை நிலவியது. க்ரிஷ் உடனே நிலமையை உணர்ந்தவன் தான் என்ன செய்ய வேண்டும் என்று மனதுக்குள் முடிவு செய்தான்.

" ரூபினி உன் டிறஸ் எல்லாம் காபீ பட்டிடிச்சி. வாஷ்ரூம் போய் கழுவிட்டு வா" என்று கூற அவள் அங்கிருந்து நகராமல் பயத்துடன் அவன் கைகளுடன் இவள் கைகளை கோர்த்து நின்றால். அவளின் கையை அவனது கரத்தில் இருந்து விலக்கியவன், " அப்படியே தாலிலையும் கொஞ்சம் கரைபட்டிருக்கு. அதையும் துடைச்சிக்கமா" என்று கூற அங்கு வந்த அந்த இரு இளைஞர்களுக்கும் நிலமை கொஞ்சம் சரி இல்லை என்பது புரிந்தது.

ரூபினி அங்கிருந்து வாஷ்ரூம் நகர க்ரிஷ் அந்த இளைஞர்களை நோக்கி
" அவங்க இப்போ என்னோட வைஃப் ப்ரோ. புரியும்னு நினைக்கிறேன்" என்று கூற உடனே அந்த இரண்டு இளைஞர்களும் " சாரி பாஸ், ரொம்ப சாரீ. எங்களுக்கு அது தெரியல. இப்பவும் அவ கார்ல்கேர்ல்... சாரி சாரி. இப்பவும் முன்ன மாதிரின்னு நினைச்சிதான் பேச வந்தோம். வேற ஏதுமில்ல. தப்பா நினைச்சிக்காதீங்க" என்று கூற க்ரிஷ்ஷுக்கு நிலமை இவ்வளவு சீக்கிரத்தில் இலகுவானது ஆச்சரியமாக இருந்தது. எங்கே அவள் தன் மனைவி என்று கூறினால் வந்தவர்கள் தன்னை இகழ்ச்சியாக பார்ப்பார்களோ என்று நினைத்தவனுக்கு இந்த இளைஞர்களின் செயல் அவனை நிம்மதிக்குள்ளாக்கியது.

" ப்ரோ நீங்க ரொம்ப க்ரேட். எங்களால எல்லாம் இப்படி பண்ண முடியுமான்னு தெரியல. என்ன லவ் மெரேஜ் ஆ?" என்று கேட்க அருகில் இருந்த மற்ற இளைஞன் " மச்சான் அந்த பொண்ணு வர்றதுக்குள்ள நம்ம போயிடலாம். எதுக்கு வீணா சங்கடம்" என்றவன் தன் நன்பனை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

வாஷ்ரூம் இருந்து வந்த ரூபினி க்ரிஷ் தனியாக நிற்பதைக்கண்டால். க்ரிஷ்ஷின் முகம் கூட எந்த ஒரு சஞ்சலனமும் இல்லாமல் அமைதியாக இருப்பதை கண்டவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

" ஏங்க"..

" ரூபினி நம்ம வீட்டுக்கு போகலாம். ஃபாரீன்லாம் வேணாம்"

" சரிங்க" என்று கூற அவர்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர். இவர்களை வழி அனுப்பிவிட்டு அங்கு நின்று கொண்டிருந்த ராதா,சுரேஷுக்கு இவர்கள் மறுபடி வருவது கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ரூபினியின் பயந்த முகமும் க்ரிஷ்ஷின் தெளிவான முகமும் அவர்களுக்கு உள்ளே ஏதோ ஒன்று நடந்துள்ளது என்பதை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டியது. வந்தவர்களிடம் ராதாவும் சுரேஷும் எதுவும் கேட்கவில்லை. வண்டியை வீட்டிற்கே செலுத்தினர். விமான நிலையத்துக்குள் என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துகொள்ள ராதாவுக்கும் சுரேஷுக்கும் ஆவலாக இருந்தது. ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. வீட்டிற்கு வந்ததும் ரூபினியை அறைக்குள் செல்லுமாறு க்ரிஷ் கூறினான். அவள் சென்றதும் ராதா க்ரிஷ்ஷுடம் வந்தால்.

" என்னடா ஆச்சு. ஏன் நீங்க துபாய் போகல்ல" என்று கேட்க க்ரிஷ் நடந்த எல்லாவற்றையும் கூறினான்.

" அக்கா இப்போ நாங்க ஃபாரீன் போனா மட்டும் அங்க ரூபினிய தெரியாதவங்க இருப்பாங்கன்னு எப்படி நினைக்கிறது. நான் ரூபிய முழுசா நம்புறேன்கா. ஆனா நான் வேலைக்கு போனதுக்கு அப்புறம் பக்கத்து வீட்டுக்காரன், இல்லைன்னா மலிகை கடை காரன் யாரும் வீட்டுக்கு வந்தாலும் நான் எந்த சந்தேகமும் பட மாட்டேன். ஆனா ரூபினி மனசு அப்படி இருக்குமா. நம்ம தனியா இருக்கோம். நான் இல்லாத நேரத்துல யாரும் ஆம்பள வீட்டுக்கு வந்தது எனக்கு தெரிஞ்சா நான் அவள சந்தேகப்படுவேனோன்னு ரொம்ப பயப்படுவாக்கா. ஏன்னா அந்த இரண்டு பசங்களும் அவ பக்கத்துல வந்ததும் அவ ரொம்ப பயந்துட்டா. என்னால ரூபினிக்கு இப்படி ஒரு பயத்தோட கூடிய வாழ்க்கைய கொடுக்க விருப்பமில்லக்கா. இங்க இருந்தா அட்லீஸ்ட் நீங்க எல்லாம் சப்போர்ட்டுக்கு இருக்கீங்க என்ற தைரியம் இருக்கும் அவளுக்கு. அதனாலதான் நாங்க போகாம திரும்பி வந்துட்டோம்" என்று கூற ராதா தன் தம்பியை அணைத்துகொண்டாள்.

" டேய் உன்ன நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா. உனக்கு என்ன தோனுதோ அதையே நீ செய் க்ரிஷ். நானும் மாமாவும் உன்கூட எப்போமே இருப்போம். முன்ன மாதிரி இல்லடா. இப்போலாம் சுரேஷுக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும். சரி நீ இரு. நான் போய் ரூபினிய சமாதானாம் பண்ணிட்டு வரேன்" என்றவள் ரூபினி இருந்த அறைக்குள் சென்றால்.

அறையில் ரூபினி இப்போதும் பயந்த முகத்துடனேயே இருப்பதை கண்டால் ராதா. " ஹ்ம்ம், என் கூட சரிக்கு சமமா சண்டை போட்ட ரூபினியா இது. இப்படி பயந்து போய் இருக்கா" என்றவள் அவள் அருகில் சென்று அவளின் தலையை வருடிக்கொடுத்தால்.

" ரூபினி இது உங்க வாழ்க்கையில வந்த முதல் கஷ்டம்னு நினைச்சிக்கோங்க. இது மாதிரி நிறைய வரும். அது எல்லாத்தையுமே நீங்க முகம் கொடுக்கனும். இப்படி பயந்துகிட்டு இருக்க கூடாது" என்றவள் அவள் நெற்றியில் முத்தமிட ரூபினி ராதாவை இறுக்க அணைத்துக்கொண்டு அழுதால்.

சிறிது நேரம் மனம்விட்டு அழுதவள் எதுவுமே பேசவில்லை. " அக்கா கொஞ்ச நாளைக்கு நம்ம எல்லோரும் ஒரே வீட்ல இருக்கலாமா. நான் உங்க வீட்டு ஒரு மூலையில இருந்துக்கிறேன்" என்று கூற அவளை முறைத்த ராதா,

" முதல்ல இப்படி உன்மேல நீயே கழிவிறக்கம் கொண்டு பேசுறது நிறுத்து. நீ எங்க வீட்டு வந்த இளவரசி. உனக்கு எங்க கூட இருக்கனுமா, அக்கா நான் உங்க கூடதான் இருக்க போறேன்னு சொல்லு. அத விட்டுட்டு இப்படி வீட்டு மூலையில இருக்க போறேன்னு அது இதுன்னு பேசின அப்புறம் செவுல்லயே ஒன்னு விடுவேன். வீட்டுக்கு வாழ வந்த பொண்ணத்தான் கொடுமை பண்ண கூடாது. ஆனா நீதான் என்ன அக்கான்னு சொல்லிட்டியே. தங்கச்சிய அக்கா அடிக்கலாம்" என்றுகூற ரூபினிக்கு சிரிப்பு வந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro