💖 5 💖

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மோகினிப்பேயை துரத்திவந்து, வெகுதூரம் வந்துவிட்டதால் இளைப்பாற நினைத்த வீட்டின் முதியவருடைய பேத்தியை கண் இமைக்காமல் பார்த்த ஜிஷ்ணு, முதியவர் ஏதோ சொல்வதைக் உணர்ந்து, அவரைத் திருப்பிப் பார்த்தான்.

அவரும் அவனையே பார்க்க,

"ஏதோ பேசினாரே? என் பதிலை எதிர்பார்த்து நான் என் முகத்தையே பார்க்கிறாரா?" என்று நினைத்தவன், அந்த முதியவர் பார்த்து "ஹி! ஹி! " இளித்து சமாளிக்க...

" சரிங்க தம்பி நீங்களும் என்னோட அறையில் தூங்கி, காலையில வீட்டுக்கு போங்க! " என்று எழுந்து அவர் அறையை நோக்கி நடக்க,

"இல்லைங்க! நான் இப்படியே ஹாலில் படுத்துக்கிறேன்." என்று கூறியதும்,

ஜிஷ்ணுவை அங்கே இருந்த ஊஞ்சலில் படுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துவிட்டு சென்றார்.

இடைப்பட்ட நேரத்தில் அவரின் பேத்தி ஜிஷ்ணு இருந்த கடந்தான் பக்கமே வரவில்லை...

எவ்வளவு கட்டுப்படுத்தினாலும், ஜிஷ்ணுவின் கண்கள் அவளைத் தேடுவதை தவிர்க்க முடியவில்லை.

இரவு பழக்கமில்லாத இடம் என்பதாலும், தூக்கம் வருவது போலிருக்கும் போதெல்லாம், அந்த பேத்தியின் முகம், கண்களுக்குள் வந்து வந்து நின்றதாலும். தூக்கம் சுத்தமாக வரவில்லை.

ஜிஷ்ணுவின் அம்மா அவ்வப்போது சொன்ன வார்த்தைகள் ஜிஷ்ணுவின் காதுகளில் எதிரில் நின்று பேசுவதுபோல கேட்டது.

"கண்ண உறுத்தாத அமைதியான அழகுதான்டா நதிபோல மனச அள்ளும்."

"அழகுல அது என்னம்மா அமைதியான அழகு? நிறைய கவிதைகள் படிக்கிறதால வர்ற பிரச்சனை இது." என்று சொல்லி நகர்ந்து விடுவான்.

ஆனால் அந்த பேத்தியின் முகத்தை பார்த்த பிறகு, அவன் அம்மா சொன்னது எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்று நினைத்தான்.

இத்தனைக்கும் ஜிஷ்ணுவை அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அதற்காக அவள் அலட்சியமாகவோ, தூக்கம் கெட்டுப் போன எரிச்சலும் இல்லை. யார் வந்திருக்கிறார்கள் என்று ஒரு குறு குறும்பு கூடவா இருக்காது. அவள் தாத்தா என்னை பற்றி சொல்லாமலா எழுப்பியிருப்பார்? ஒருவேளை 'நிமிர்ந்து பார்க்காதே!' என்று கறாராக கூறியிருப்பாரோ?

'நமக்கெல்லாம் 'பார்க்காதே!' ன்னு சொல்லும்போது தானே பார்க்கத் தோணும்?!!"என்று நினைத்தவன் சிரித்துக்கொண்டான்.

'அவ பேரு என்னவா இருக்கும்? அதுவும் அவளைப் போல அமைதியான பேரா தானிருக்கும். அவ பேரை எப்படித் தெரிஞ்சுக்கிறது?'

'ஜிஷ்ணு! என்னடா ஆச்சு உனக்கு? இதுவரை பொண்ணுங்களையே பார்க்காதவன் மாதிரி பண்ணிக்கிட்டிருக்க?'

பிறகு எப்படித்தூங்கினான் என்று தெரியவில்லை...

அதிகாலை அழகை ரசித்து பாடும் பறவைகளின் ஒலியும், எங்க குரலும் நல்லாத்தானிருக்கும்... என்று போட்டி போட்டு கத்தும் விலங்குகளின் ஒலியும். ஜிஷ்ணுவின் உறக்கத்தை கலைத்தது.

எழுந்து அமர்ந்தவன், அந்தப் பேத்தியை அல்லது முதியவரை எதிர்பார்த்து காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த பெரியவரிடம் கூறிக் கொண்டு விடைபெற்றான்.

வாசல்வரை வந்தவனுக்கு 'பேத்தியின் பெயரை எப்படி கேட்பது?' என்று நினைத்தவன், ஒரு மாதிரி தயாராகி

"பேர் என்னங்க?" என்று முதியவரிடம் கேட்க,

"சுப்பிரமணியன்!" என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

வீட்டிற்குள் வரும் போதே விஷ்ணுவின் குரல் வாசல்வரை கேட்டது.

வழக்கமாக, விஷ்ணு இவ்வளவு சப்தமாக பேசக்கூடியவர் இல்லை. அளவுக்கதிகமான கோபம் இருந்தால் மட்டுமே சப்தமாக பேசுவான்...

'விஷ்ணுவுக்கு என்ன ஆச்சு? ' என்று நினைத்தபடியே ஹால் க்கு வந்தவனை பார்த்து விட்டனர். விஷ்ணு, முத்து, கோதை.

"ராத்திரி பூராவும் எங்கடா போயிருந்த?" என்று அதட்டினார் விஷ்ணு, திரும்பி முத்துவை பார்க்க,

முத்துவும் கோதையும் உள்ளே சென்றனர். அவர்கள் செல்வதைப் பார்த்துவிட்டு,

"சும்மா வெளியே...." என்று இழுக்க,

"வெளிய வா? எப்ப போன?"

"மணியெல்லாம் பார்க்கல..."

"புதன்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் ராத்திரி வெளியே போகாத ன்னு சொன்னா இல்லையா?"

ஜிஷ்ணு எதுவும் பேசாமல் இருக்க வே,

"நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? செக்யூரிட்டிக்கு கூட தெரியாமல் எப்படி வெளியே போன?"

"அவர் என்னை கவனிக்கல விடேன்... நான்தான் வந்துட்டேன்ல?"

என்ற ஜிஷ்ணுவையே பார்த்த விஷ்ணு.

"தைரியம் அவசியம்தான் ஜிஷ்ணு, ஆனா எதிர்ல இருக்கிறவங்களை பலம் தெரியாம அடியெடுத்து வைக்கிறது ஆபத்துல முடியும்."

"இப்ப எதுக்கு இந்த வியாக்யானம்?"

"நீ எங்க போயிருப்ப ன்னு கூட தெரியாதவன் னு நினைக்கிறாயா? அம்மா அப்பா வை விட உன்னைப்பத்தி எனக்குதான் நல்லாதெரியும்."

"ரொம்ப கற்பனை பண்ணாத என்ன?... நான் சுப்பிரமணியம் னு ஒரு பெரியவர பார்க்க போனேன்."

"அவர உனக்கெப்படித் தெரியும்? அவர எதுக்கு போய் பார்த்த? "

"ம்ம்... அவரு, உங்க ஊர் மோகினியோட சொந்தக்காரராமே?"

"அப்போ அந்த மோகினியை தேடித்தான் போன?"

"நா என்ன சொல்றேன்... நீ என்ன கேட்கிற?"

"சரி!... எதுக்கு ஊருக்குள்ள போன?"

"சும்மா பேசிக்கிட்டே போயிட்டேன்."

"யார் கூட மோகினிப்பேய் கூடவா?"

"அண்ணா! நம்பலைடா போ!" என்று நடந்து மாடிபடிவரை சென்ற ஜிஷ்ணு திரும்பி வந்து,

"ஆமா... அந்த பெரியவர் சுப்பிரமணியம் வீட்டுக்கு வாராவாரம் ஓசியா பழம் அனுப்புறீங்களாமே ஏன்?"
என்று விஷ்ணுவிடம் கேட்டதும்.

'அப்போ! இவன் நிஜமாகவே சுப்பிரமணியம் வீட்டுக்குத்தான் போயிருக்கான் போல, நான் தான் தேவையில்லாமல் பயந்துட்டேன்' என்று நினைத்த விஷ்ணு,

"அது... அவர் நம்ம அப்பா இடம் வாங்க இங்கே வந்தபோது நிறைய உதவி செஞ்சிருக்கார். .. எப்படி
பட்ட இடம் வாங்கும். .. அதில் விளையும் பொருட்களை எப்படி விக்கிறது. .. போல நிறைய... அதோட, பேசி முடிக்கிறபோது ஒரு விலை சொன்ன, இந்த தோப்புக்காரர், பதிவு செய்யும் அலுவலகத்துக்கு போனதும் அதிகமா ரெண்டு லட்சம் கேட்டாராம்... அப்பாவுக்கு என்ன செய்றதுன்னு தெரியல... மறுபடியும் பணத்தை எடுத்துட்டு போறதுக்குள்ள விலை இன்னும் அதிகமா ஏத்திடமாட்டார்னு என்ன நிச்சயம்? அந்த நேரத்துல உள்ளூர் பெரியவர் சுப்பிரமணியம் அங்கே ஏதோ விஷயமா வந்தவர், பழைய தோப்புக்காரரிடம் பேசியும் ஒரு லெட்சம் அதிகமா வேணும்னு சொன்னதும், பெரியவர், ஏற்பாடு செய்து அவரோட பணத்தை கொடுத்திருக்கார்.

திருப்பிக் கொடுத்த போது, பணமா வேண்டாம்... உங்க தோப்புல விளையுறதுல நான் கொடுத்த பணத்துக்கு தகுந்த மாதிரி ஏதாவது கொடுங்க போதும். னு சொல்லியிருக்கார். .

அப்பாவும் ஒத்துக்கிட்டு அதுக்கொரு பத்திரமும் எழுதி கொடுத்தார். .. அதுனால நாம அவங்களுக்கு ஓசியா கொடுக்கல. .. அடுத்தவங்க சொல்றத கேட்டு நீயும் இப்படி பேசுறியே?" என்று விஷ்ணு சீரியஸாக கேட்டதும்...

"ஓகே...ஓகே.. எனக்கெப்படி இதெல்லாம் தெரியும்? ஆமா! அவருக்கு ஒரு பேத்தி இருக்கே தெரியுமா?"

"தெரியும்... நம்ம ஏற்றுமதி நிறுவனத்து அலுவலகத்துலதான் வேலை பார்த்தா. .. ஆனா கொஞ்ச நாள்ல யே வேலையை விட்டுட்டா... ஏன் அந்தப் பொண்ணு ஏதாவது சொன்னாளா?"

"அதெங்கே!... என்னைத்தான் நிமிர்ந்தே பார்க்கலையா!" என்று மிகவும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்ட ஜிஷ்ணுவை பார்த்த விஷ்ணுவிற்கு சிரிப்பு வந்துவிட்டது...

"இப்படியெல்லாம் முகத்தை வச்சுக்காத. .. உனக்கு ஒத்தே வரல..." என்று சிரித்த விஷ்ணுவிடம்,

"அந்தப் பொண்ணு பேர் என்னண்ணா?" என்று மிகவும் ஆர்வமாக கேட்ட ஜிஷ்ணுவின் காதைத் திறுகிய விஷ்ணு,

"டேய்! ராஸ்கல்.... உன் விளையாட்டை அந்தப் பெண்கிட்ட வச்சுக்காத.... உன்கிட்ட நடந்துக்கிட்ட விதத்தை பார்த்து, ஆம்பளைங்க நிமிர்ந்து கூட பாக்காத பொண்ணு னு தப்புக் கணக்கு போட்டுடாத. .. நம்ம அலுவலகத்துல அவகிட்ட 'கொட்டு' வாங்கினவங்களுக்கு ரெண்டு நாளைக்கு தலைசீவ முடியாது... பார்க்கத்தான் மென்மையான பொண்ணா தெரிவா... யம்மா! கொட்டுனா னா எதிர்ல இருக்கிறவனுக்கே தலை வின் ன்னு கேட்கும்..." என்று விஷ்ணு சொன்ன விதத்தில்,

'அச்சச்சோ! இவனும் 'கொட்டு' வாங்கிட்டான் போலயே!' என்று நினைத்தபடி, விஷ்ணுவின் தலையைப் பார்த்தான் ஜிஷ்ணு.

அவன் கண்ணும் முகமும் சொன்ன விஷயத்தை புரிந்து கொண்ட விஷ்ணு, தன்னுடைய நடு மண்டையில் கை வைத்தபடி,

"அடப்பாவி! நான் 'கொட்டு' வாங்கல டா! ஒருநாள் நம்ம அலுவலக எழுத்தரை கொட்டும் போது பார்த்தேன்..." என்றான்.

'பார்த்தவனே இப்படி அலறுறானா?' என்று ஜிஷ்ணு நினைக்கும் போதே,

"அவ வச்சுருக்கிறது கையே இல்லடா அது சுத்தியல்." என்ற விஷ்ணுவிடம்,

"இந்த ஊர்ல எல்லாமே உல்டாவா இருக்கே? பேய் அடிக்குதில்லை... அழகான பொண்ணு அடிக்கிறா. .. " என்று சிரித்த ஜிஷ்ணுவிடம்,

"சரி சரி போய் குளிச்சுட்டு வா... " என்று கூறி விட்டு தன் அறை நோக்கி நடந்தான் விஷ்ணு.

தன் அறைக்கு வந்த ஜிஷ்ணு வேகமாக ஒரு குளியலைப் போட்டுவிட்டு, ஐந்தரை மணிக்கெல்லாம் பால்கனி வழியாக தோப்பில் இறங்கி விட்டான்.

அந்த மோகினிப்பேய் இருந்த இடத்துக்கு வந்தவன்,

'ஏதேனும் தடயம் இருக்கிறதா? என்று பார்த்தான்...

ஆனால் 'கால்தடம் கூட இல்லையே? பலர் மிதித்தது போல தான் தடங்கள் ஒன்றன்மீது ஒன்றாக சிதைந்து இருக்கிறது... இதெல்லாம் தொழிலாளர்களின் தடமாக கூட இருக்கலாம்... ஒருவர் கால் நகத்தின் மேலேயே பலர் மிதித்துக் செல்வது சகஜம்தான்.... ஆனால் மோகினிப்பேய் நின்ற, நகர்ந்த இடங்களில் ஒரு மனிதனின் கால்தடம் தெளிவாக இருக்கவேண்டுமே? இதை பார்க்கத்தானே, தோப்புவ வேலைக்கு ஆள் வரும்முன்னாடி வந்துட்டேன்...' என்று குழம்பிப்மோனவன், மோகினிப்பேய் பாம்பு போல ஊர்ந்து சென்ற வழியில் நடக்கும் போது ஜிஷ்ணுவிற்கு ஒன்று தெளிவாக புரிந்தது... நிச்சயம் அது மனிதனாகத்தான் இருக்க வேண்டும்... ஏன்னா மனிதன் நடந்து செல்லக்கூடிய இடங்களில் மட்டுமே அந்த மோகினியும் சென்றிருக்கிறது... வரப்புகளைத்தாண்டி செடிகளுக்கு உள்ளே பெரும்பாலும் செல்லவில்லை... ஆனால் காலடித்தடம் இல்லாமல் எப்படி?' என்ற யோசனையிலேயே ஜிஷ்ணு நடந்தபோது, அவன் காலில் ஏதோ அழுத்தமாக கீறியது.

குனிந்து அது என்னவென்று எடுத்துப் பார்த்தான். அது ஒரு வெள்ளிக் கொலுசு... 'யாரோ விட்டுட்டு போயிருக்காங்க.' என்று நினைத்தவன் கொலுசு எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தோப்பின் மறுகரைவரை செல்வதற்குள்... வேலை செய்பவர்கள் வந்து விட்டனர்...

"அடடா இன்னைக்கு சின்னவர்தான் வேலை கொடுக்கப் போறாரா?" என்று ஒரு பெண் அருகிலிருப்பவளிடம் கிசுகிசுக்க.

"வாயை வச்சுக்கிட்டு சும்மா இருடி முண்டமே... எந்த வலையிலும் சிக்காத விலாங்கு மீன் பெரியவரு.... இவர் அவருக்கு மேல ன்னு எங்க அண்ணே சொல்லிச்சு." என்றாள் மற்றொருத்தி.

அதற்குள் விஷ்ணுவும் சூப்பர்வைசரும் வர, அனைவரும் அவர்கள் நின்ற பக்கம் சென்றனர்...

அவர்களுக்கு வேலை கொடுத்துக் திரும்பிய விஷ்ணுவிடம்,

"பெண்களை மட்டும் ஒரு நிமிஷம் நிக்கச்சொல்லு" என்ற ஜிஷ்ணு, வெள்ளி கொலுசை காட்டி,

"யாரோ தவறவிட்டுட்டாங்க அதான்." என்று கூறியதும் பெண்களை மட்டும் அழைத்தான் விஷ்ணு. பெண்கள் அனைவரும் வந்ததும்,

"யாரோ கொலுசை தவறவிட்டிருக்கீங்க... இதோட இன்னொரு கொலுசை கொண்டு வந்து காட்டிட்டு இந்த கொலுசை வாங்கிட்டுப் போங்க!" என்று கூற,

"வெள்ளிக்கொலுசு போடுற அளவுக்கு பணமிருந்தா நாங்க ஏன் காட்டுவேலைக்கு வரோம். காதுல போடக்கூட குந்துமணி தங்கம் கிடையாது... இதுல போங்க சின்னவரே!" என்று ஏகத்துக்கு குலைந்தாள் ஒருத்தி.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்த ஜிஷ்ணு,

"எதுக்கும், இன்னைக்கு வராதவங்க கிட்டயும் சொல்லிடுங்க"... என்றதும்.

"கொலுசு இருந்தாலுமே வேலைக்கு வரும்போது போட்டுக்க மாட்டோம் ங்க. .. சேத்துல சிக்கும். .. கொலுசுல சேறு ஒட்டிகிட்டு உறுத்தும்... அதனால நாங்க யாரும் பொடுறதில்லைங்க..."

"நீங்க போடாம எப்படி இது வரப்புல கிடக்கும்?"

"ஒருவேளை அந்த மோகினிப்பேய் போட்டதா இருக்குமோ?" என்று சில பெண்கள் கூற,

சிரித்து மறுத்துவிட்டு, வீட்டை நோக்கித்திரும்பினான் ஜிஷ்ணு.

அறைக்கு வந்து கொலுசை கழுவி பார்த்தான்.

புதிய கொலுசு கிடையாது... உபயோகப்படுத்தப்பட்ட கொலுசு தான் இது...

'அந்தப் பெண்கள் சொன்னது போல மோகினியோட தா இருக்குமோ?"' என்று நினைத்து, கொலுசைத் திருப்பி பார்த்தான். கொலுசு விற்ற கடையின் லோகோ இருக்கிறதா என்று. பெரும்பாலும் திண்டுக்கல் கடையாகத்தான் இருக்கும்.' என்று அந்தக் கொலுசை எடுத்துச் சென்று கடையில் விசாரிக்கலாம் என்று நினைத்து கொலுசை பத்திரப்படுத்தி னான்.

கொலுசு போடும் பெண் சரிஇஇஇ, ஒரு பெண் பதினைந்து அடி உயரமா? கைகள் ஆறேழு அடியா இருக்கும்? வரும் புதன்கிழமை பார்த்து விடவேண்டும். என்று முடிவெடுத்தார். .



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro