தீண்டல் 14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நாட்கள் நகர நகர 2 வாரம் எப்படி போனதென்றே தெரியவில்லை.நித்யா அருண் தன்னை கேவலமாக பேசியதின் தாக்கத்தில் இருந்து வெளிவந்திருந்த போதும் அவளால் பழையபடி சாதாரணமாக இருக்க முடியவில்லை.சரி ஒரு மாற்றத்திற்காக தன் தங்கையுடன் சாப்பிங்க் செல்லலாம் என் நினைத்தவள் வாசுகியை கூட்டிக்கொண்டு விண்டோ சாப்பிங்க் (அதாங்க எதுவுமே வாங்காம கண்ணாடி வழியா பார்த்துட்டு வாரது) சென்றால்.போன இடத்தில் வாசுகி

"அக்கா அங்க பாரு.அதிதி அக்கா அவங்க பேமிலி கூட வந்திருக்காங்க"என்ற போதுதான் கவனித்தாள் அவர்கள் எல்லோரும் புட் கோர்ட்டில் உணவருந்திக்கொண்டிருப்பதை.எதேர்ச்சையாக இவர்கள் பக்கம் திரும்பிய வருண்

"ஹேய்..பிரியானி"என்றான் சத்தமாக...என்னடா இவன் யாரையோ பார்த்து பிரியானி என்கின்றான் என்று எல்லோரும் திரும்பி பார்க்க அங்கிருந்த வாசுகியும் நித்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்துக்கொண்டிருந்தபோது இவர்களை அவர்கள் அழைக்க முன் அவ்விடத்தை விட்டு நகரலாம் என்று எண்ணியவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக பர்வதம் இவர்கள் இருவரையும் கை நீட்டி அங்கு வரும்படி அழைத்தார்.அவர் அழைத்ததும் என்ன செய்வது என்று புரியாமல் முழித்த நித்யாவை

"அக்கா,அங்க நம்ம இப்போ போகலைன்னா சரி இல்லக்கா.பெரியவங்க கூப்பிடும் போது நாம அவங்களுக்கு மரியாதை கொடுக்கனும்ல.போய் சும்மா ஒரு ஹாய் போட்டுட்டு வரலாம்"என்றவளை நித்யாவும் ஆமோதித்து சாப்பிட்டுக்குகொண்டிருந்த அவர்களிடம் சென்றனர்.

"என்னம்மா நித்யா எப்படி இருக்க.இது உன் தங்கச்சி தானே ?பேரு என்ன?"என்ற பர்வதத்தை

"வாசுகி ஆண்டி"என்றாள்.

"நாங்க இன்னைக்கு எங்க பெரிய பையன் ஒரு பொண்ண லவ் பண்றானாம்.அதான் அவள மீட் பண்ணிட்டு போகலாம்னு வந்தோம்.இன்னும் அந்த பொண்ணு வரல"என்று வாலண்டியராக வாயை கொடுத்த போது வருண் அதிர்ச்சியாக தன் தாயை பார்க்க அதிதி அவனின் கையை அழுத்தி அமைதியாக இருக்கும்படி சைகை செய்தாள்.மேலும் தொடர்ந்த பர்வதம் இவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக

"அது ஏதோ லிவ் இன் ரிலேசன்சிப்பாம்டா.இப்போ அந்த பொண்ணு கல்யாணத்துக்கு ஓக்கே சொல்லிட்டா"என்றவரை அதிதி தலையில் அடித்துக்கொண்டு

"அம்மா அவளுக்கு எல்லாம் தெரியும்மா"என்றவளை நித்யா உலர்ந்த ஒரு புன்னகையுடன்

"நீ எதுக்கு அதிதி சும்மா டென்சன் ஆகுற.அன்னைக்கு நீயும் உங்க அண்ணனும் சேர்ந்து ,ப்ராஸ்ட்டிட்யூட்டும் நானும் ஒரே மாதிரினு சொல்லிட்டீங்க.உங்க அம்மாவும் அவங்க பங்குக்கு ஏதோ சொல்ல வர்ராங்க.பரவாயில்லை விடு.அவங்க சொல்லட்டும்"எறு பர்வதத்தின் பக்கம் திரும்பியவள்

"நீங்க சொல்லுங்க ஆண்டி"என்று அந்த ஆண்டியை கொஞ்சம் அதிகமாக அழுத்தியே கூறினாள்.ஏனென்றாள் அவர்கள் வீட்டில் வைத்து ஆண்டி என்று பர்வதத்தை நித்யா அழைத்தபோது அதை விரும்பாதவர் அம்மா என்று அழைக்கும்படி கூறியதை அவருக்கு உணர்த்தவே அப்படி செய்தாள்.உடனே பதறிய பர்வதம்

"இல்லம்மா..என்ன தப்பா நினைச்சுடாத .நான் உன்ன காயப்படுத்தனும்னு சொல்லலமா. எல்லாம் உன் நன்மைக்காகத்தான்...."என்றவர் ஏதோ தோன்ற உடனே அருண் பக்கம் திரும்பி

"டேய் என்னடா சொல்ரா இந்த பொண்ணு.நீ இவகிட்ட அப்படி பேசினியா"என்று தன்னை மறந்து சத்தமிட அவனோ

"அம்மா கொஞ்சம் அமைதியா இரு.ஹேய் நீ எதுக்கு இங்க வந்த?"என்று நித்யாவை பார்த்து கேட்க வாசுகி

"எக்ஸ்கியூஸ்மி.இந்த சாப்பிங்க் மால் உங்களோடதா?இந்த சாப்பிங்க் மால நீங்க வாங்கினது எங்களுக்கு தெரியாது.அடுத்தது நாங்க ஒன்னும் உங்களை தேடி வரல்ல.சிவனேன்னு அங்க இருந்த எங்கள இதோ உங்க தம்பிதான் கூப்பிட்டாரு,அப்புறமா உங்க அருமை தாயார் அவங்கதான் எங்கள கூப்பிட்டு இங்க வர சொன்னாங்க.பெரியவங்க கூப்பிடுறாங்களே என்று து பார்த்தா வாயெல்லாம பொய்யி.இப்பதானே தெரியுது நீங்க எல்லாம் எப்படி வாய் கூசாம அன்னைக்கு அப்படி பேசினீங்க என்று..ச்ச்சே உங்களை எல்லாம்....."என்று பேசியவளை நித்யா பளார் என்று அறைந்தாள்.

உடனே அவ்விடத்தில் எல்லோரும் அதிர்ச்சியாக உடனே பர்வதம்

"என்னம்மா அவ சின்னப்பொண்ணு.அதுவுமில்லாம அவ சொன்னது உண்மைதானே.நான் உங்கிட்ட பொய்தானே சொல்ல பார்த்தேன்"என்றவரை இடைமறித்த வாசுகி

"ஆண்டி .இது என் அக்கா.நான் அவ தங்கச்சி.அவ என்னை என்ன வேணாலும் பண்ணலாம்.சோ நீங்க உங்க வேல எதுவோ அத மட்டும் பாருங்க"என்றவளை மீண்டும் நித்யா அறைய கை நீட்ட கோவத்தில் வருண் அவள் கையை பிடித்து தடுத்து
"என்ன பண்ற நித்யா.அவள எதுக்கு அடிக்குற. ஆமா இங்க என்ன நடக்குது?"
என்றவனை பர்வதம் கண் ஜாடையால் அமைதியாக இருக்கும் படி கூறினார்.

ஆனால் அருணோ கோபத்தில்

"என்நானும் பாத்துகிட்டு இருக்கேன்,சின்ன பொண்ண கை நீட்ற"என்று அவளிடம் கோபப்பட இங்கு என்ன நடக்கின்றது என்று புரியாமல் வருண் முழித்துக்கொண்டிருந்தவன் நிலமையை சுமுகமாக்கும் பொருட்டு

"நித்யா நீங்க உங்க தங்கச்சிய கூட்டிக்கிட்டு கிளம்புங்க "என்Tஉ கூறி அவர்களை வெளியில் அழைத்து வந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவைத்தான்.

உள்ளே வந்தவன் "என்ன நடக்குது இங்க.அவ ஏதோ ப்ராஸ்டிட்யூட் அப்படினு சொல்ரா..இவ என் கைய புடிச்சி அமைதியா இருக்க சொல்ரா.நீங்க பேசினத கேட்டு அதிதி தலைல அடிச்சிக்கிறா...என்னதான் நடக்குது"என்றவனை அவனின் தாய்

"வீட்ட போகலாம்.அங்க வெச்சி எல்லாத்தையும் சொல்ரேன்"என்றார்.

இங்கு ஆட்டோவில் வாசுகியும் நித்யாவும் ஒருவருக்கொருவர் வீடு வந்து சேரும் வரை எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.வீடு வந்ததும் தன் அறைக்குள் சென்ற வாசுகியை நித்யா

"சுகிம்மா சாரிடா.ப்ளீஸ்டா என்ன மன்னிச்சிடுடா.நீ அவங்கள அப்படி பேசவும் நான் என்னை அறியாமலேயே அடிச்சிட்டேண்டா"என்றவளை அவள் சிரித்துக்கொண்டு

"அடி லூசு அக்கா,நான் வேணும்னுதான் அப்படி பேசினேன்.அந்த நேரத்துல எல்லோரும் வாயடிச்சிப்போய் இருக்க யாரு உன்ன உரிமையா திட்டினா.யோசிடி என்ன செல்ல அக்காவே"என்ற போதுதான அவளுக்கு உரைத்தது அருண் அவளை உரிமையுடன் திட்டியது.உடனே வாசுகையை கட்டிக்கொண்டவள்

"சுகிமா எனக்கு இது அங்க வெச்சி புரியவே இல்லடா"என்றவளை

"அது சரி.தன் காதல் தேவனை கண்டா எப்படி மத்ததெல்லாம் ஞாபகம் இருக்கும் "என்று கலாய்த்த தன் தங்கையை பொய்யாக அடிக்க கையை ஓங்க வாசுகி "ஆ" என்று தன் தாடையை பிடிதுகொண்டவள்

"அக்கா நீ அடிச்சதுடல என்னோட உள் கன்னத்துல பல்லு கிழிச்சி வலிக்குதுக்கா"என்றவளை நித்யா கவலையாக

"சாரிடா .ரொம்ப வலிக்குதாடா"என்றவளை

"அவ்வளவுலாம் வலி இல்லக்கா,ஒரு மில்க் சேக் போட்டு கொடு.வலி போயிடும்"என்று கண்ணடித்து கூற

"அடிங்க .எங்க இருந்துதான நமக்குன்னு வந்து அமையுதுங்களோ .அன்னைக்கு அதிதி என்னடான்னா பிரியானி செஞ்சி கேட்குறா.இன்னைக்கு நீ மில்க் சேக் கேட்குற .உன்ன .... "என்று நித்யா துரத்த வாசுகி வீட்டின் முற்றத்திற்கு ஓடினாள்.உடனே நித்யா கிட்சன் நுழைந்தவள் தன் தங்கைக்காக அவளுக்கு விருப்பமாக சொக்கலேட் மில்க் சேக் தயார் செய்ய தொடங்கினால்.

கிட்சன் நுழைந்த வாசுகி

"என்ன தங்கச்சிக்காக மும்முரமா மில்க்சேக் பண்ற போல இருக்கு.தங்கச்சி மேல உள்ள பாசமா?இல்ல இன்னைக்கு தங்கச்சி பண்ண இண்டலிடஜண்ட் வேலைக்கா "என்றவளை

"இல்லடா.அவரு மனசில என்ன இருக்குதுன்னு தெரிய மாட்டேங்குது. ஒரு வேலை அவரு ப்ரெண்ட்லியா பேசினத நான் லவ் பண்றாருன்னு நினைச்சிட்டேனோ தெரிலடா.ஆனா ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் அவரு அன்னைக்கு அப்படி மோசமா பேசினாருன்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கு.ஆனா நீ இன்னைக்கு பண்ண கலாட்டால எனக்கு அங்க வெச்சு புரியலன்னாலும் வீட்ட வந்ததும் புரிய வெச்சியே...இப்பதான் எனக்கு கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கு.பார்க்கலாம் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்னு"என்று கூறி மில்க்சேக்கை 3 கிளாசில் ஊற்றியவள் ஒரு கிளாசை நித்யாவும் மற்றையதை வாசுக்கிக்கும் கொடுத்து இருவரும் குடித்தி முடிக்கும் தருனம் மூனாவது கிளாசை நித்யா வாசுகி தலையில் ஊற்ற

"அடியேய்..உன்ன என்ன பன்றேன் பாரு "என்று ப்ரிட்ஜில் இருந்த ஜூசை எடுத்து நித்யா மீது ற்றினால்.அந்த நேரம் பார்த்து அவர்கள் தாய் வீட்டிற்கு வந்தவர்

"என்னங்கடி பண்றிங்க லூசுக்கொரங்குங்களா"என்று இருவரையும் திட்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு

"அம்மா "என்று சத்தமிட்டு இருவரும் அமிர்தத்தை கட்டிப்பிடிக்க இப்போது அமிர்தம் ஜூசும் மில்க்சேக்கும் கலந்த கலவையில் காட்சி அளித்தார்.

ஆனால் அக்காவுக்கும் தங்கைக்கும் ஒரு விடயம் மறந்துவிட்டது. முதலில் கோபப்பட்டு நித்யாவின் கையை பிடித்தது வருண் என்பது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro