தீண்டல் 19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng




2 வருடத்தின் பின் .அதாவது 2014 ....

அருண் போலீஸில் சேர்ந்த பின் ஒரு நாள்

சாலையோர ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு பெண் மயக்கமாகி இருப்பதை கண்டு அருகில் சென்று பார்க்க அது தான் தேடி அலையும் மான்விழிக்கு சொந்தக்காரி என்பதை அறிந்தவன் அவளை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தான். ஹாஸ்பிடல் சென்று அவளை அட்மிட் செய்த போது டாக்டர் வந்து

"சார்.பொண்ணு கொஞ்சம் க்ரிடிகல் கண்டிசன்ல இருக்கா.அவங்க பேரு அவங்க உங்களுக்கு என்ன உறவு முறை வேணும்னு சொன்னீங்கன்னா வி கேன் ப்ரொசீட் "என்றவரை

"வெய்ட் எ மினிட்"என்று கூறிவிட்டு
இல்லாது கால் வருவதாக நடித்துக் கொண்டு அவளது ஹேண்ட்பேக்கை எடுத்தவன் அதில் செல்போன் உள்ளிட்ட ஒரு சில பொருட்களை தவிர அவளை அடையாளப்படுத்தும் எதுவுமே இல்லாமல் இருக்க விரக்தியில் இருந்தவனுக்கு பளிச்சென்று ஒரு ஐடியா தோன்ற அவளின் மொபைலை எடுத்து தனது மொபைலுக்கு கால் செய்தான்.உடனே அந்த நம்பர் யார் பெயரில் ரெஜிஸ்ட்டர் ஆகியுள்ளது என்பதை அறிய முற்பட்டவனுக்கு பதில் என்னமோ பூஜ்ஜியம்தான்.கடைசியாக தனது டிபார்ட்மண்டுக்கு கால் செய்து இவளுடைய நம்பரை கொடுத்து இந்த நம்பர் யூஸ் பண்ணவங்க லாஸ்ட் கால் ரெக்கோர்ட் எடுத்து கேட்கத்தொடங்கினான்.

"ஹலோ ,குட்மார்னிங்க் we are calling from PRIRAM interiors. நீங்க கேட்டிருந்த சேர்வர் அட்மின் ஜாப் இப்போ ப்ரீ ஆஹ் இருக்கு வசுந்த்ரா....."என்றவளை

"தாங்க்யூ சோ மச்.எப்போ நான் ஜாயின் பண்ணனும்"என்றவளை

"இன்னும் 10 டேய்ஸ்ல நீங்க ஜாயின் பண்ணிக்கலாம்.வெல்கம்டு PRIRAM interiors.ஏதும் ஹெல்ப் வேணும்னா ஜஸ்ட் கால் திஸ் நம்பர்"என்று கூறிவிட்டு கால் கட் ஆகி இருந்தது.

உடனே ஹாஸ்பிடல் ரிசப்சன் செனறு அவள் பெயரை பதிந்து விட்டு திரும்ப அவ்விடத்துக்கு பதட்டமாக வசுந்த்ராவை பரிசோதித்த டாக்டர் வர

"என்னாச்சு டாக்டர்,எனிதிங்க் சீரியஸ் "என்று கேட்க டாக்டரோ

"அவங்களுக்கு அபார்சன் ஆகிடுச்சி.ரொம்ப க்ரிடிகல்.உடனே ஆபரேசன் பண்ணி ஆகனும்.அவங்க உங்களுக்கு என்ன வேணும் "என்று மறுபடி டாக்டர் கேட்க ,வருவது வரட்டும் என்று கணவன் என்று சொல்லி ரெஜிஸ்ட்றேசன் பாமில் கையெழுதிட்டான்.

நேரம் நகர நகர தனக்கு என்ன செய்வதென்றே புரியாமல் அருண் தடுமாறிக்கொண்டிருந்தான்.காலையில் இருந்து எதுவுமே சாப்பிடாமல் இருக்க பசி அவனுக்கு வயிற்றைக்கிள்ளிய போது ஹாஸ்பிடல் காண்டீன் சென்று சாப்பிட்டவனுடைய போன் அலறியது.அதை எடுத்து பார்த்தவன் ஹாஸ்பிடலில் இருந்துதான் கால் வந்திருப்பதை அறிந்தவுடன் சாப்பாட்டில் வைத்த கையை அப்படியே நனைத்துவிட்டு டாக்டரை பார்க்க ஓடினான்.

"சார்.சீ ஈஸ் பைன்.அவங்க இப்போ சேப் ஆஹ் இருக்காங்க.இன்னும் இரண்டு நாள்ள அவங்கள டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்"என்ற போதுதான் அருணுக்கு போன உயிர் திரும்ப வந்தது போல இருக்க

"ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்"என்றான்.டாக்டரோ அவனை பார்த்து

"சார்.இவங்க உங்க வைப் இல்லைன்னு தெரியும்.ஆனா இவங்களுக்காக நீங்க பதறினத பார்த்ததும்தான் ஒன்னும் பேசாம நீங்க ஹஸ்பண்டு சைன் பண்ணதும் அக்சப்ட் பண்ணோம்.நாளைக்கே இவங்களோட உண்மையான ஹஸ்பண்டால ஏதும் எங்க ஹாஸ்பிடலுக்கு ப்ராப்ளம் வராம பார்த்துக்கோங்க சார்"என்றவரை அசடு வழிய

"கண்டிப்பா டாக்டர்.அகைன் தாங்க்ஸ் இப்படி ஒரு ஹெல்ப் பண்ணதுக்கு"என்று கூறிவிட்டு வசுந்த்ராவின் அறைக்குள் சென்றவன் கசங்கிய பூவாக தூங்கும் அவளைக் கான அவன் கண்கள் தானாகவே கண்ணீரை வெளியிட்டது. அதை யாரும் கானவில்லை என்பதை அறிந்தவன் அவள் அறையை விட்டு வெளியில் வந்து நர்சிடம்

"நர்ஸ்,கொஞ்சம் வெளில வேல இருக்கு நான் போயிட்டு உடனே வந்துடுறேன்"என்று கூறி விட்டு சென்றவன் சரியாக மூனு மணி நேரத்தில் மறுபடி மப்டியில் ஹாஸ்பிடல் வர புலியிடம் அகப்பட்ட மானை போல என்ன நடக்கின்றது என்று புரியாமல் அவள் முழிப்பதை கண்டவன்

"ஹாய் வசுந்த்ரா ,இப்போ எப்படி இருக்கு?"என்றவனை அந்த வலியிலும் அவள் ஆச்சரியமாக

"ஹாய் அருண்.நீங்க எப்படி இங்க?ஏதோ போலீஸ்காரர் என்ன அட்மிட் பண்ணதா சொன்னாங்க.அது நீங்கதானா?ஆமா என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்?"என்று அந்த வலியிலும் இப்படி ஒரு சந்தேகத்தை கேட்டவளை பார்த்து புன்கைத்து விட்டு

"ஏதோ நீங்க அன்னைக்கு பண்ண உதவியினால ஒரு மாதிரியா சைபர் க்றைம்ல போலீஸ் ப்ராசீஜர்ஸ் ஏதும் இல்லாம ஸ்பெசல் அப்பாய்ன்மெண்டில் ஜாப் கிடைச்சது.சோ இப்ப புரிஞ்சிருக்குமே உங்க பெயர எப்படி கண்டுபிடிச்சேன்னு"என்றவனை அவள் முறைத்து அவர்கள் முதலில் சந்தித்த  நாள் அவளுக்கு ஞாபகம் வர அமைதியானால். அதன் பின்

"அருண் சார்,எனக்கு இன்னைக்கே என்னோட அபார்ட்மன் போகனும் ப்ளீஸ்"என்றவளை

"வசுந்த்ரா ,இந்த சார் மோர்லாம் வேணாம்"என்றவளை

"அப்போ நான் உங்கள தம்பின்னே சொல்ரேன்.ரெஜிஸ்டர் பார்ம்ல உங்க டேட் ஆப் பேர்த் பார்த்தேன்.என்னைவிட 4 மாதம் சின்னவரு தானே"என்றவளை அவன் முறைக்க அவள் அதை கண்டு கொள்ளாமல்

"ஹல்லோ நீங்க நவம்பர் 7,நான் ஜூலை 7 அவ்லோதான்.இதுக்கு இப்படி முறைக்கிறீங்க"என்றவளை அவன் கொஞ்சம் இந்த தம்பி மேட்டர் பிடிக்காததால் பேச்சை சீரியசாக மாற்ற என்னி

"வசுந்த்ரா உங்களுக்கு அபார்சன் ஆகிடுச்சி தெரியுமா?"என்று லேசாக விடயத்தை ஆரம்பிக்க அவளோ இறுகிய முகத்துடன்

"தெரியும் அருண்.நான் அம்மாவாகிறது அந்த கடவுளுக்கே பொறுக்கல்ல போல.சரி அத நினைச்சி இப்போ என்ன செய்ய.எல்லாம் நன்மைக்கே எண்டு விடுவம்"என்றவளை அருண் கொஞ்சம் வித்தியாசமாக பார்த்தான்.

நாட்கள் செல்ல செல்ல இருவரும் நல்ல தோழ தோழியர் போல பழகினர்.இருந்தாலும் அருண் அவளின் சொந்த விடயங்கள் பற்றி எதுவுமே பேசாமல் அவளை அவள் போக்கிலேயே விட்டு எப்போது அவளுக்கு அதை பற்றி பேச தோனுகின்றதோ அப்பொழுது அவளாகவே கூறட்டும் என்று விட்டுவிட்டான்.

ஒரு நாள் வசுந்த்ராவை அவளது அபார்ட்மண்டில் டிராப் செய்து அவள் அவனை அழைக்காமலேயே அவளுடன் அவளது ப்ளாட்டுக்குள் செல்ல ஆயத்தமாக அவளோ அவனை என்ன என்பது போல விழிகளாலேயே கேட்டால்

"ஏன் மேடம் இவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்கேன்,உங்க ப்ளாட்டுக்கு கூப்பிட்டு ஒரு காபி கொடுக்கமாட்டீங்களா"என்றவனை அவள்

" நான் இருக்குற நிலமைக்கு நீங்கதான் எனக்கு காபி போடனும் "என்று கூற இவனோ

"சரி அப்படியே செஞ்சிடுவோம் "என்றான்.

இருவரும் உள்ளே சென்றதும்

"அருண் நீங்க உட்காருங்க நான் டீ போட்டு கொண்டு வரேன்"என்றவளை இவன் சரி என்று கூறிவிட்டு கதிரையில் அமர அவளின் செல்போன் ரிங்க் ஆனது.அவளது போன் சைலண்டில் இருந்ததால் மூன்று முறை ரிங்க ஆகியும் அது யாருக்குமே கேட்கவில்லை.அடுத்து காலிங் பெல் அடிக்க வசுந்த்ரா உள்ளே இருந்து வராததால அருண் கதவை திறந்ததும் வந்தது வசுந்த்ராவின் கணவன் என்பதை அறிந்தவன்

"ஹாய் சார்.எப்படி இருக்கீங்க"என்ற அருணை

"டேய் எவண்டா நீ?ஏன் பொண்டாட்டி கூட நான் இல்லாதப்போ தனியா இருக்குற?ஓஹ் நீ இருக்குறதாலதான் அவ 2 வாரமா என் போன ஆன்சர் பண்ணலயா?"

என்று சத்தமிட அரவம் கேட்டு கிட்சனில் இருந்து வந்தவள் தன் கணவனை கண்டு விக்கித்து நின்றால்.

"ஏண்டி மேனா மினுக்கு.எங்கடி போன இரண்டு வாரமா.மொபைல்ல கூப்பிட்டாலும் ஆன்சர் பண்ண மாட்டேங்குற.என்ன குளிர் விட்டு போச்சா.ஓஹ் டைவோர்ஸ்கு அப்ளை பண்ணதும் திமிர் அதிகமாகிடிச்சோ.உனக்கு அவ்வளவு சீக்கிரத்துல நான் டைவோர்ஸ் கொடுக்க மாட்டேண்டி. அடியே சிறுக்கி கண்டவன கூட்டி வந்து என்ன கூத்தடிக்கிறியா?மவளே மரியாதையா சொல்ரேன், டைவோர்ஸ்கு அப்ளை பண்ணத கேன்சல் பண்ணிட்டு மரியாதையா நான் சொன்ன மாதிரி கேளு.இல்ல உன்ன எப்படியெல்லாம் அவமானப்படுத்துவேன்னு தெரியும்தானே?"என்ற போது அவள்

"உங்க சகவாசம் வேணாம்னுதானே நான் பெங்களூர்ல இருந்து சென்னை வந்தேன்.இங்கயும் வந்து என்னை நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?"என்றவளை

"ஆமா நீ எதுக்கு சென்னை வந்தேன்னு எனக்கு தெரியும்டி.என் டார்ச்சர் இல்லாம ஜாலியா இருக்கதானே வந்த.நீயெல்லாம் ஒரு ஆளு த்த்தூ.4 வருசமா இல்லாத குழந்தை எப்படி உனக்கு திடீர்னு உண்டாச்சுனு யோசிச்சப்பவே எனக்கு விளங்கி இருக்கனும்"என்று இவர்கள் பேச்சு காரசாரமவதை உணர்ந்த அருண் இடையில் பேசுவதா வேணாம என்று ஒரு நொடி யோசித்தவன் உடனே முடிவெடுத்தவனாக

"டேய் மரியாதையா பேசு,இல்ல...."என்றவனை

"என்னடா மிரட்டுறியா,ஏண்டி நீ பெரிய மாயக்காரிடி.கண்டவை விட்டு கட்டின புருசன மிரட்டுறியா? "என்றவனை அவள் பொறுமை இழந்தவளாக

"நீயா கட்டின புருசன்.ஏதாச்சும் ஒரு ஆம்பள கூட பேசினா என்ன எப்படி எல்லாம் டார்ச்சர் செய்வ. கட்டின பொண்டாட்டி எண்டும் பார்க்காம என் உடம்புல சிகரட்டால சூடு வெச்சவந்தானேடா நீ"என்று பொறுமை இழந்த ஆத்திரத்தில் எல்லாவற்றையும் பேச அருணோ இங்கு என்ன செய்வது என்று புரியாமல் அவளின் நிலையை கண்டு மிகவும் வேதனைப்பட்டவன் உடனே அவளின் கணவனை நோக்கி

"டேய் இப்போ நீ இங்க இருந்து போகல்ல ,உன்ன செக்ஸ் டார்ச்சர் பண்ணேன்னு சொல்லி உள்ள தூக்கி வெச்சிடுவேன்.அப்புறம் உனக்கு இவங்களுக்கும் என்ன பிரச்சினைன்னு எனக்கு தெரியாது ?மரியாதையா அவங்க கேட்குற டைவோர்ச கொடுத்திட்டு போய்கிட்டே இரு.இல்ல நடக்குறதே வேற .முதல்ல நீ ,நான் யாரு என்கிறத தெரிஞ்சிக்க.போய் தமிழ்நாட்டு போலீஸ் வெப்சைட்டுல சைபர் க்றைம் டிபார்ட்மன்ட் ACP அருண் யாருன்னு பாரு"என்று கூறி தன்னிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து மேசையில் வைத்தான்.துப்பாக்கியை கண்டதும் அமைதி ஆனவன் எதுவும் பேசாமல் வசுந்த்ராவை முறைத்துக்கொண்டு

"நான் உன்ன என்ன பண்ணுறேன் பாரு"என்று வாய்க்குள் முனு முனுக்க அருணோ

"நீ ஏதாவது பண்ணு அப்புறமா நான் என்ன பண்றேன்னு உனக்கு புரியும் "என்றான் காட்டமாக

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro