தீண்டல் 23

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலையில் விடிந்ததும் நித்யா நேற்று நடந்தவைகளை நினைத்துப்பார்த்தால்.அவளுக்கு இனி அருணின் வாழ்க்கையில் இடம் கிடைப்பது என்பது முடியாத காரியம் என்பது புரிந்ததும் அவள் தன் மனதை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது ,எப்படி தோன்றியது என்பதை நினைத்து பார்த்தவளுக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் இதுக்கு பிறகு அவள் அருண் வாழ்க்கையில் குறுக்கிட்டால் அது தன் அம்மா தன்னை இவ்வளவு பொறுப்பாக வளர்த்ததற்கு பிரயோசனம் இல்லாமல் போய்விடும் என்று சரியாக உணர்ந்திருந்தால்.அன்று ரெஸ்டாரண்டில் வைத்து அதிதியிட்ம் கூறும் போது கூட தனக்கு ஆரம்பத்தில் அருண் மீது காதல் வந்ததாக கூறவில்லையே ( பகுதி 13) என்பதை நினைத்தவளுக்கு தன் ஒரு தலைக்காதலுக்கு முன் அருண், வசுந்ராவின் காதல் பெரியதாக தோன்றியது. அதை அப்படியே யோசித்துக்கொண்டு பாத்றூமிற்குள் நுழைந்தால்.

அருண் தன் அம்மாவிடம் சென்று

"அம்மா உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்மா"என்றவனை

"சொல்லுப்பா என்ன விசயம்"என்று கேட்ட பர்வதத்திடம் அருண்

"அம்மா நான் ஒரு பொண்ண விரும்புறேன்"என்று கூற அவரோ

"அவ்ளோதானா.நானும் வேற ஏதும் சொல்ல போறியோன்னு ரொம்ப பயந்துட்டேன்"என்று கலாய்த்தவர்

"அதான் நீ லவ் பண்றது ஊருக்கே தெரியுமே.இப்ப என்ன புதுசா"என்ற போது அருணுக்கு அப்போதுதான் புரிந்தது அம்மா நித்யாவை தான் விரும்புவதாக நினைத்துதான் பேசுகிறார் என்று.உடனே அவன்

"நான் நித்யாவ சொல்லலமா.நான் வேறொரு பொண்ண விரும்புறேன்.அத எப்படி உங்க கிட்ட சொல்ரதுன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்மா.அதற்கிடையில நித்யா அன்னைக்கு வந்து எல்லாத்தையும் குழப்பிட்டு போய்ட்டா"என்றவனை பர்வதம் கொஞ்சம் முறைத்து

"இத நீ ஏன் அன்னைக்கு சொல்லல?"என்று கேட்க

"அவ எங்க இருக்கான்னு எனக்கே தெரியாது"என்றவன் அவர்களின் கதை முழுவதையும் கூறிமுடித்த தருனம் பர்வதம் கணலை கக்கும் கண்களுடன்  கோவமாக

"ஓஹ் அப்போ இந்த வீட்டு மூத்த மருமக இன்னொருத்தனுக்கு பொண்டாட்டியா இருந்தவளா?இதுக்கு நான் சம்மதிப்பேன்னு நீ எப்படி நினைக்கலாம்.அதுவும் நான் நித்யாவுக்கு வாக்கு கொடுத்துட்டேன்.நீ கானாம போன அந்த பொண்ண மறந்துட்டு நித்யாவ கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழுற வழிய பாரு"என்று கூற அருணோ

"என்னம்மா சொல்ரீங்க.எனக்கு நித்யாவும் அதிதியும் ஒரே மாதிரிமா.அன்னைக்கு என்ன பேச விடாம என் வாய அடச்சிட்டீங்க.இன்னைக்குதான் உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லி புரியவைக்கலாம்னு வந்தா இப்படி பேசுறீங்கலேமா.சின்ன வயசுல இருந்து நீங்க சொன்ன ஏதாச்சும் ஒன்ன நான் கேட்காம இருந்திருக்கேனா.இது ஒன்ன மட்டும் என் விருப்பப்படி செய்ய பர்மிசன் கொடுங்கமா"என்றவனை

அருண் கூறுவது முற்றிலும் உண்மை.ஏனென்றால் சிறு வயதிலிருந்தே அவன் தன் தாய் கூறிய எதையும் தட்டியதில்லை.அதனால்தான் என்னமோ பர்வதம் எல்லா விடயத்திலும் அவர் கூறுவதை போலவே அருண் நடக்க வேண்டும் என்று ஆசை கொண்டார்.அவனும் தன் தாயின் ஆசைக்கு மாறு செய்யாது இன்று வரை அவர் கூறியவைகளை அப்படியே செய்து முடித்தான்.ஏன் அவன் போலீஸ் ஆனது கூட பர்வதத்தின் ஆசையால்தான்.அவருக்கு வீட்டில் சைரன் வைத்த வண்டி ஒன்று நிட்க வேண்டும்.வருண் கண்டிப்பா அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டான்.அருணோ அதையும் தட்டாமல் சைபர் க்றைமில் ஸ்பெசல் ஸ்கில் அப்பாய்ண்ட்மண்டில் சேர்ந்துவிட்டான். ஆனால் இன்று அவன் தனக்கென்று ஒன்றை கேட்கும் போது பர்வத்தத்தால் தாங்க முடியவில்லை.இதுவே வருணாக இருந்திருந்தால் இன்னேரம் தான் விரும்பு பென்ணை வீட்டிற்கே கூட்டி வந்து தன்னிடம் அறிமுகப்படுத்தி இருப்பான்.ஆனால் அருண் தன்னிடம் அனுமதி கேட்டு நிற்பதை என்னி பர்வதம் பெருமை கொண்டாலும் தன் மகன் ஏறகனவே மனமுடித்த பெண்ணை திருமனம் செய்ய அவர் மனம் இடம் கொடுக்கவில்லை.இந்த சந்தர்ப்பத்தில் பர்வதம் ஒரு சாதாரண தாயாகவே நடந்துகொண்டார்.தன் தாய் அமைதியாக இருப்பதை பார்த்த அருண் பொறுமை இழந்து

"அம்ம ப்ளீஸ் ஏதாச்சும் சொல்லுங்களேன்"என்றவனை பர்வதம்

"எனக்கு இதுல இஷ்டமில்ல"என்று கூறி தன்னறைக்குள் சென்றுவிட்டார்.

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அதிதி ,நித்யாவுக்கு கால் செய்து விசயத்தை கூற நித்யா உடனே அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.நித்யா வந்திருப்பதை அறிந்த பர்வதம் வெளியில் வர நித்யாவோ அவர் பேசும் முன்பே அவள் பேசத்தொடங்கியவள்

"ஆண்டி,,,,ஹ்ம்ம் சரி சரி முறைக்காதீங்க அம்மா.ஏன்னா அம்மாதான் இனிமே கரக்டு .அப்புறம் யாருக்கு யாருன்னு கடவுள் முன்னாடியே முடிவு செஞ்சிடுறாரு.இதுல நீங்க நான் எல்லாம் என்னம்மா பண்ண முடியும்.அருண் என்கிட்ட ப்ரெண்ட்லியா பேசினத நான் காதல்னு தப்பா நினைச்சி நானும் குழம்பி எல்லோரையும் குழப்பி விட்டுட்டேன்.அம்மா எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லம்மா.அவரு மனசுல அந்த பொண்ணுதான் இருக்கா.சோ அவளயே அருணுக்கு பார்க்கலாமே"என்றவளை பர்வதம் முறைத்து

"அப்போ உனக்கும் இந்த விசயம் தெரிஞ்சிருக்கு.ஹ்ம்ம்ம்.நீ வேனா அருண கல்யானம் பண்ணிக்காத.ஆனா ஏன் பையன ஏற்கனவே கல்யாணமான பொண்ணுக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன்"என்றவரை அருண் இடைமறித்து

"அம்மா எனக்கு நோய் இருக்குறது தெரிஞ்சுமா இப்படி எல்லாம் பேசுரீங்க.என்ன அந்த பொண்ணு கட்டிக்க சம்மதிச்சாலே பெரிய விசயம்.முதல்ல நீங்க பர்மிசன் தந்தாதான் நான் அவள தேடி கண்டுபிடிச்சி ..."என்றவனை

"அருண் போதும்.நீ அந்த நோய்க்கு டிரீட்மண்ட் பண்ணதால உன்னால அப்பா ஆக முடியாது.அவ்வளவுதானே.வேற ஏதும் இல்லேல்ல.சோ..."என்றவரை நித்யா

"அம்மா என்னம்மா சொல்ரீங்கங்க.நீங்க இப்படி பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல"என்றவளை

"நித்யா ப்ளீஸ் ஸ்டாப் இட்.ஸ்டே இன் யுவர் லிமிட்.உங்கம்மாகிட்ட பேசி அவங்கள மடக்கின மாதிரி என்கிட்டயும் பேசி என்னையும் மடக்கலாம்னு நினைக்காத.நானே பெரிய க்ரிமினல் லாயர்.ஓக்கே.கீப் இட் இன் யுவர் மைண்ட்"என்றவரை நித்யா கோவம் வர

"ஓஹ் அப்போ அன்னைக்கு ஒரு குழந்தைக்கு அப்பா ஆக முடியாத அருண...சாரி அருண் ப்ளீஸ் மன்னிசிடுங்க இத நான் பேசித்தான் ஆகனும்.அன்னைக்கு நான் கேட்டப்போ என்கிட்ட நீங்க ஒரு வார்த்தை இதைப்பத்தி சொல்லலயே.உங்க பையனுக்கு ஹெய்ரி செல் லூக்கேமியா இருக்குன்னு மட்டும்தானே நான் சொன்னேன்.நீங்களும் அதுக்கு தலைய தலைய ஆட்டினீங்க.சரி அப்போ அன்னைக்கு ஏன் நீங்க உங்க பையனால அப்பா ஆக முடியாதுன்னு சொல்லல?"என்று பர்வதத்தை மடக்கிய நித்யாவை பர்வதம்

"அது அது... நான் உனக்கு தெரியும்னு நினைச்சேன்"என்ற போது நித்யா

"ஹாஹ்ஹா போதும் ஆண்டி உங்களுக்கு சரியா பொய் சொல்ல கூட வரல்ல"என்று நக்கலடிக்க பர்வதம் தன்னையே இவள் மடக்கிவிட்டாளே என்று நினைத்தவருக்கு கோவம் தலைக்கு ஏற என்ன பேசுகிறோம் என்று புரியாமல்
"ஸ்டாப் இட் நித்யா.உனக்குத்தான் அருண கல்யாணம் பண்ணிக்குற எண்ணம் இல்லைதானே.சோ கெட் அவுட் ஆப் மை ஹவுஸ்.இனிமே இந்த வீட்டுக்கு பக்கம் வந்துடாத"என்று கூற இந்த தடவை அதிதி ,அருண் ,நித்யா என மூவரும் அதிர்ச்சி ஆகினர்.அருண்தான் கொஞ்சம் சுதாகரித்து

"அம்மா என்னம்மா பேசுரீங்க"என்றவனை

"நீ வாய மூடு .உன்னாலதான் எல்லாமே.இப்போ நான் சொல்ரத கேட்பியா மாட்டியா?இந்த வீட்டுக்கும் இவளும் வேணாம் அவளும் வேணாம்.நான் உனக்கு வேற நல்ல ஒரு பொண்ணா பார்க்கிறேன்"என்றவரை

"அம்மா ப்ளீஸ் இதுல என்ன கம்பல் பண்ணாதீங்கம்மா.என்னால வசுந்ராவ மறக்க முடியாதுமா"என்று கூற பர்வதமோ

"அப்படியா சொல்ர.சரி உனக்கு அவள மறக்க முடியலயலன்னா இந்த அம்மாவ மறந்துடு"என்று இந்த தடவை எல்லோரும் அதிர்ச்சியாகி சிலை என நின்றனர்.நிலமை இன்னும் இன்னும் இறுக்கமடைவதை உணர்ந்த அதிதி

"அம்மா இத அப்புறமா பேசலாம்"என்று அவரை சமாதானம் செய்ய முயல அவரோ

"இங்க பாரு அதிதி உனக்கும் சேர்த்துதான் சொல்ரேன்.நீயும் இவனுக்கு சப்போர்ட்னா நீயும் என்கூட பேசாத"என்ற போது அவளுக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை.இனியும் இங்கிருப்பது அழகில்லை என நினைத்த நித்யா

"அதிதி நான் போயிட்டு வரேன்"என்று கூற பர்வதமோ

"போறேன்னு சொல்லு.வரேன்னு சொல்லாத"என்று காட்டமாக சொன்னபோது நித்யா சிரித்துக்கொண்டு

"போயிட்டு வரேன்னு சொன்ன என்ன இனிமே இங்க வராத எண்டு சொல்லிட்டீங்க.ஆனா இன்னும் கொஞ்ச நாள்ள நீங்களே வந்து என்கிட்ட நித்யா வீட்டுக்கு வாம்மா எண்டு சொல்ல வெக்கல...நீங்க சொல்லுவீங்க ஆண்டி"என்று கூறிவிட்டு கடைசியாக

"இட்ஸ் எ சாலஞ்.நான் சாலஞ் பண்ணா அதுல எப்பயுமே தோற்கமாட்டேன்.வேணும்னா உங்க பொண்ணுகிட்ட கேளுங்க "என்று கூறிவிட்டு சென்றவளை பர்வதம்

"அதையும் பார்க்கலாம்"என்று உரத்து கூறினார்.
------
புது கதை
narznar புதுசா ஒரு கதை எழுதுறாங்க.. "என் வாழ்க்கை". ஒரு முஸ்லிம் குடும்பத்தில் நடப்பது போல மிகவும் அழகாக கொடுத்திருக்காங்க. முஸ்லிம்களுடைய வாழ்க்கை நடை முறைகளை காணனும்னு தோனினா கண்டிப்பா படிங்கப்பா.. உண்மைலயே நல்லா இருக்கு அவங்க ஸ்டோரி..

SaranyaS067 
"முள்ளும் மலரும்" ஸ்டோரியோட ஆதர்.. அவங்க முதல் படைப்பு.. ஆனா ஏதோ 10 நாவல் எழுதிட்டு 11 வது நாவல் எழுதுறமாதிரி ஈசியா எழுதுறாங்க.
முதலில் எழுத ஆரம்பிக்கும் போது விடும் தவறுகள் எதுவுமே இல்லை.. சூப்பரா இருக்கு.. எல்லோருக் கொஞ்சம்
படிச்சு பாருங்க.

daisyshaylynne
"என்னவளே அடி என்னவளே" ஒரு
புது ஸ்டோரி எழுதுறாங்க.ஒரு ஜாலியான கதை போல ஆரம்பித்திருக்கு . போக போகதான் தெரியும் கதை கரு என்னவென்று....

மேலே சொன்ன மூவருக்கும் முதல் ஸ்டோரி என்பதால சில சில தவறுகள் குறைகள் இருக்கும்.. நம்மதான் அவங்களுக்கு முழு ஆதரவும் கொடுத்து
அவங்கள இன்னும் ஊக்கப்படுத்தனும்.

அன்மையில் கிடைத்த பாராட்டுக்கள்..

priyadharshini12  priyagothandasamy ரெண்டு பேருக்குமே நான் நன்றி சொல்ல போறதில்ல.. சொன்னாலும் அவங்களுக்கு அது பிடிக்காது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro