தீண்டல் 34

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இரவு வருண் வீட்டிற்கு வந்ததும் நித்யாவிடம் எதுவுமே பேசவில்லை.நித்யாவுக்கே செம கடுப்பாக இருந்தது. 'சேலையை பிடித்து இழுத்தது அவன்..இவன் என்னமோ நாம அவனோட வேட்டிய பிடிச்சு இழுத்த மாதிரி இல்ல நடந்துக்கிறான்'

என்று நினைத்தவள் இன்று எப்படியும் அவன் தூங்கும் முன் தூங்குவதில்லை என முடிவெடுத்து பல நாட்களாக டவுன்லோட் செய்ய வேண்டும் என்று இருந்த வாட்பெட்டை டவுன்லோட் செய்து புதிதாக பப்ளிஷ் செய்யப்பட்டிருந்த

"ஆகாஷனா" ஸ்டோரியை படிக்க ஆரம்பித்தாள்.

வருணும் ,நித்யா இன்னும் கொஞ்சம் நேரத்தில் தூங்கிவிடுவாள் என்று நினைத்தவனுக்கு அவள் தூங்காமல் இருப்பதை கண்டவன் என்ன செய்வது என்று புரியாமல் இருக்க அவன் கைகள் நடுங்க தொடங்கியது.நேரம் இரவு நள்ளிரவை தாண்டியும் அவள் தூங்காமல் இருக்க கடுப்பானவன் உடனே தனது சிறிய பேக்கை திறந்து மருந்து பாட்டிலை எடுக்க அவன் அருகில் வந்த நித்யா ஊசியை அவனுக்கு எடுத்துகொடுத்தால்.உடனே கொஞ்சம் பதட்டமான வருண்

"நித்யா உனக்கு....."என்று தடுமாறியவனை

"எனக்கு எல்லாமே தெரியும் வருண்...ப்ளீஸ் வருண் இந்த பழக்கத்த விட்றுங்களேன்"என்றவளை அவன் எதுவும் பேசாமல் அவன் ஊசியில் மருந்தை ஏற்றுவதிலேயே மும்முரமாக இருந்தான்.திடீரென்று நித்யா அந்த பாட்டிலை பிடுங்க ஏற்கனவே ரொம்ப நேரமானதில் கோவத்தில் இருந்தவன் 

"ஏண்டி மனிசன நிம்மதியா இருக்கவே விட மாட்டியா..உன்ன மறக்கத்தானேடி இத நான் போட்டுக்குறேன்.இதுக்கும் என்ன விடமாட்டியா"என்று ஹிஸ்டீரியா வந்தவனை போல கத்த நித்யா ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றால்.

"என்ன வருண் சொல்ரீங்க என்னாலயா?"என்றவளை

"ஆமாண்டி உன்னாலதான்.உன்னால ஆரம்பிச்ச இந்த பழக்கம் கொஞ்ச நாளா இல்லாம இருந்திச்சி..ஆனா மறுபடியும் உன்னாலயே ஆரம்பிச்சிடிச்சி"என்று வருண் என்ன பேசுகின்றோம் என்று அறியாமல் சத்தமிட நித்யா அவளின் கையை அவனிடம் இருந்து விளக்கிய அந்த ஒரு நொடியில் அவன் தன் கையில் அந்த ஊசியை ஏற்றிக்கொண்டான்.

நித்யாவுக்கு வருண் ஏன் தன் மீது பழி போட்டான் என்பது விளங்கவே இல்லை.கொஞ்சம் நேரம் கழித்து வருண் முழு போதையில் இருக்க நித்யா மெதுவாக அவனிடம் சென்று

"வருண்.....வருண்...."என்று அவனை அழைக்க அவன் போதையில்

"ம்ம்ம்ம்"என்று முனங்கினான்.இவள் மெதுவாக

"சையனா யாரு?அவங்க இப்போ எங்க இருக்காங்க?"என்று கேட்க அவன் மெதுவாக

"சையனா ..சையனா "என்று குழறலாக முனங்கியவன் அப்படியே தூக்கத்துக்கு சென்றான்..

நித்யாவுக்கு என்ன செய்வது என்று புரியாமல் இருக்க மீண்டும் வருணின் நோட்புக் மற்றும் வேறு ஏதும் தகவல்கள் சையனாவை பற்றி கிடைக்கின்றதா என்று பார்த்தவளுக்கு எதுவுமே அகப்படவில்லை.மீண்டும் ஒரு தடவை நோட்புக்கை முதலில் இருந்து படிப்போம் என்று ஆரம்பித்தவளுக்கு முதன் முறை படித்தவள் 2015இல் ஒரு பக்கத்தை படிக்காமல் விட்டிருந்தது புரிய அதைப்படித்தவள்

"சையனாதான் நான் உனக்கு வெச்ச பெயர்..ஆனா உன்னோட உண்மையான பெயர் எனக்கு ரொம்ப பிடிச்ச காரக்டரோட பெயரா, what a coincident.எனக்கு சமந்தான்னா ரொம்ப பிடிக்கும்..ஹிஹி கோவிச்சிக்காத செல்லம்.ஆனா நீ எனக்கு சையனாதான்..இன்னைக்கு அந்த யெல்லோ சுடிதார்ல பார்த்தப்போ அப்படியே flat ஆகிட்டேன்..உன்கிட்ட ஓடி வந்து என் காதல சொல்லனும்னு நினைச்சேன்..ஆனா அதிதி எல்லாத்தையும் கெடுத்துட்டா..நீயும் அவளும் ஒரே காலேஜ்ல படிக்கிறீங்களா? ...என்ன செய்ய...ஹ்ம்ம் உன் படிப்பு முடியட்டும் அப்புறமா நீ எனக்கு மட்டும்தாண்டி சொந்தம் என் கடங்காரி..."

என்று அதிதியின் கிளாஸ் மேட்ஸ் எல்லோரும் சேர்ந்து எடுத்த போட்டோ இருந்தது.

இதை படித்தவளுக்கு சையனா என்ற பெண் அவளின் காலேஜில் தான் படித்தால் என்பதும் ,அதுவும் அவள் அவர்களுடைய க்ளாஸ் மேட்தான் என்பது இன்னும் வியப்பை கொடுத்தது.இவை எல்லாவற்றையும் செய்து முடிக்க அதிகாலை ஆகியதும் அதிதிக்கு வாட்சப் செய்ய அவள் மெசேஜ் பார்த்ததற்கு அடையாளமா ப்ளூ டிக் வரவும் உடனே கால் செய்தாள்..

"என்னடி காலங்காத்தால..சொல்லு"என்று அதிதியை

"சாரிடி..நீ ரொம்ப பிசியாவா இருக்க"என்றதற்கு

"வேணாம் நித்யா..அப்புறம் பஸ் ஏறி வந்து உன்ன கொன்னுடுவேன்.என்ன விசயம் அத சொல்லு.காலங்காத்தால கால் பண்ணிக்கிட்டு.எங்க அத்தையே என்ன 9 மணிக்கு முன்னாடி எழுப்ப மாட்டாங்க"என்றவளை

"சரி சரி,நம்ம பேட்ச்ல சையனன்னு யாரையும் தெரியுமா உனக்கு..இல்ல சையனா என்று யாருக்கும் nick name வெச்சிருக்கமா?"என்றவளை

"இல்லையேடி ,ஏன் கேட்குற?"என்ற அதிதியை

"அது ஒன்னுமில்லடி நான் அப்புறமா சொல்ரேன்.நீ முதல்ல இருந்து கண்டினியூ பண்ணு"என்ற நித்யாவை அதிதி தனக்கு தெரிந்த கெட்டவார்த்தைகளால் திட்டினால்.

அதிதி காலை கட் செய்ததும் நித்யா ரொம்பவும் குழம்பி சையனா என்று யாருமே இல்ல.யாருக்கும் அப்படி நிக் நேம் கூட வைக்கல.கண்டிப்பா சமந்தான்னு யாருமே இல்ல.என்று யோசித்த போது உடனே ஏதோ தோன்ற கூகுள் சென்று நடிகை சமந்தா நடித்த படங்களில் அவரின் காரக்டர் பெயர்களை தேடியதில் " பானா காத்தடி- ப்ரியா","கத்தி -அங்கிதா" ,"தங்க மகன் - யமுனா" ...இந்த மூண்று பெயர்கள்தான் அவளின் காலேஜ் வகுப்பில் படித்தவர்கள்.இந்த மூண்று பேருல ஒருத்திதான் என்று பிக்ஸ் பண்ணியவள் அதிலும் யமுனா நல்ல குண்டாக இருப்பால்.கண்டிப்பாக அவளாக இருக்கமுடியாது.அங்கிதா இல்லன்னா ப்ரியாதான் என முடிவெடுத்தவளுக்கு அதிலும் அந்த கேரள பெண் அங்கிதாவாக இருக்குமோ என்பது கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.ஏனென்றால் அவள் இந்த வருண் கூறிய மேட்ச்கு வந்திருந்தது நித்யாவுக்கு தெரியும்.அங்கிதா +2 படிக்கும் போது நித்யாவின் அம்மாவிடம்தான் க்ளாஸிற்கு வருவாள்.நித்யா அம்மாவின் காலேஜ் விளையாடிய அந்த கிரிக்கட் மேட்ச் பார்க்க அங்கிதாவும் வந்திருந்தால்.பார்ப்பதற்கு வேறு சினிமா நடிகை போல மிகவும் அழகாக இருப்பாள் என்று யோசித்த நித்யாவுக்கு தொடர்பு அற்று போய் இருந்த அங்கிதா மீது இனம் புரியாத பொறாமை வந்தது.

இவை எல்லாம் யோசித்து முடித்த நித்யாவுக்கு காலை 6 மணிக்கு தூக்கம் வர வருணின் படுக்கைக்கு அருகில் ஒரு நோட் எழுதி வைத்துவிட்டு தூங்கினால்.

காலையில் வருண் எழுந்ததும் அந்த நோட்ட படித்தவன்

"வருண்..எனக்கு உடம்பு சரியில்லை.ப்ளீஸ் கொஞ்சம் புளிப்பா ரசம் வெச்சி கொடுக்குறீங்களா?நான் எந்திரிச்சதும் குடிச்சிக்கிறேன்"என்று இருந்தது.இது நித்யா வருணை இன்று அவள் தூங்கி எந்திரிக்க முன வீட்டை விட்டு செல்லாமல் இருக்க செய்த சதி.அவனும் அவளுக்கு உடல் நிலை சரியில்லையோ என நினைத்து ரசம் வைக்க கிட்சன் சென்றான்.கொஞ்சம் லேட்டாக எழும்பிய நித்யா கிட்சன் செல்ல அங்கு வருண் லஞ்சும் சேர்த்து சமைத்து கொண்டிருப்பதை கண்டவள் இதழில் சிரிப்புடன்

"ஹ்ஹ்ஹ்ம்ம்க்க்க்ம்ம்"என்றால்.இவள் பக்கம் திரும்பிய வருண் நேற்று எதுவுமே நடக்காதது போல

"நித்யா இப்போ உடம்பு எப்படி இருக்கு,சாரி நைட் நான் கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன்"என்றவனை

"வருண் ,நான் ஒண்ணு சொல்ரேன் ப்ளீஸ் ஏத்துக்குவீங்களா?"என்றவளை

"சொல்லு என்றான்".

நித்யாவோ "வருண்..உங்க பேர்சனல் மேட்டர்ல நான் தலையிட மாட்டேன்.ஆனா ப்ளீஸ் என்கூட பேசாம மட்டும் இருக்க வேணாம்.எனக்கு ஒரு மாதிரி இருக்கு.அப்புறம் அன்னைக்கு நீங்க என் டிரஸ்ஸ இழுத்தது ஏதோ ஒரு குழப்பத்துல பன்ணிட்டீங்கண்ணு தெரியுது.சோ அத மறந்துட்டு மறுபடி ப்ரெண்ட்சா இருக்கலாமே"என்றவளை

"சாரி நித்யா அன்னைக்கு நான் உன்கிட்ட அப்படி நடந்துகிட்டதுக்கு ரொம்ப சாரி.உங்கிட்ட எப்படி அத பத்தி பேசுரதுன்னு தெரியாம டிப்ரசன்ல விட்டுத்தொலைக்கனும் என்றிருந்த சனியன மறுபடி கைல எடுக்க வேண்டியதா போச்சு,வெரி சாரி"

"அதவிடுங்க வருண்,இன்னைக்கு என்னோட காலேஜ் ப்ரெண்ட்ஸ் அங்கிதாவும்,ப்ரியாவும் வராங்க "என்றவளை இவன் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல்

"ஆஹ் அப்படியா வரட்டுமே.நான் ஏதும் வாங்கி வரவா"என்று முகத்தில் எந்த ஒரு ஆர்வமோ ,மாற்றமோ காட்டாமல் இருந்தவனை கண்டவளுக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

"வருண்,இப்போதான் சொன்னேன் உங்க பெர்சனல் மேட்டர்ஸ்ல மூக்கை நுழைக்க மாட்டேன்னு.ஆனா ......"என்று இழுத்தவளை

"இல்ல நித்யா,நீ என்ன கேட்க வர்றேன்னு தெரியுது.நான் அந்த கெட்ட பழக்கத்துல இருந்து வெளில வர இப்போ rehabilation centre(RC) போய்க்கிட்டு இருக்கேன்.உன்கிட்ட அன்னைக்கு ஏதோ ஞாபகத்துல அப்படி நடந்துகிட்டதுக்கு அப்புறமா என்னால மறுபடி டிப்ரசன் ஆகி அத யூஸ் பண்ண வேண்டியதா போச்சி"என்றவனை நித்யா

"ஹ்ப்ப்ப்பா..ஒரு மாதிரி அந்த பழக்கத்துல இருந்து விடுபடனும்னு நினைச்சிங்க பாருங்க ,அதுவே போதும் .நான் உங்களுக்கு முழு சப்போர்ட்டும் தர்றேன்"என்றவளை

"தாங்க்ஸ் நித்யா"என்றான்.அவளும் புன்னகைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றவள் 'கண்டிப்பா அந்த சையனா,அங்கிதாவும் இல்ல ப்ரியாவும் இல்ல .அப்போ வேற யாரு என்று குழம்பியவளுக்கு திடீரென்று ஒன்று ஞாபகம் வர

'ச்சேச்சே அப்படி இருக்காது 'என்று நினைத்தவள் மறுபடி முதலில் இருந்து அவனின் நோட்புக் மற்றும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்தவற்றை கோர்த்து பார்க்க அவளுக்கு எல்லாமே தெளிவாக புரிய ஆரம்பித்தது.

தன்னுடைய கைகளால் தலையை பிடித்தவள்

'கடவுளே,ஏன் எனக்கு மட்டும் இப்படி ' என்று புலம்பினால்.

--------
ravicare4u இன் ஸ்டோரி (இன்னும் நான் படிக்கவில்லை.. ஆனால் நன்றாக இருக்கின்றது என பலர் கூறினார்கள்)
https://my.w.tt/SD4drPW8LM

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro