தீண்டல் 4

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng






மூன்று நாட்களின் பின்,

"ஹேய் நித்ஸ், பசிக்குதுடி.எங்கயாச்சும் சாப்பிட போகலாம் வரியா"என்று கால் பன்னிய தன் தோழி அதிதிக்கு

"சரி சரி..வா.எனக்கு தெரியும் நீ இன்னைக்கு எப்படியும் கால் பன்னுவேன்னு.அம்மாவும் தங்கச்சியும் வீட்ல இல்லைன்னு தெரிஞ்சிதானே கால் பன்றே..மவளே என் கையாள உனக்கு ஒரு பிடி சாதம் கூட வெச்சி தரமாட்டேன்.நீ எங்கயாச்சும் வெளில சாப்ட போகலாம்னு கூப்பிடுவ.நான் அம்மா வீட்ல இல்ல ..வா ரெண்டு பேருமா சமைச்சு ஜாலியா இருக்கலாம்னு சொல்வேன்னு நினைச்சியா ..கொய்யால ,காலேஜ்ல பன்ன சாலன்ஞ் இன்னும் மறக்கல மேடம்.யாரு முதல்ல சாப்பாடு சமைச்சு மத்த ஆளுக்கு போடுற என்றது..பேபிமாக்கு பசிக்குதா..எனக்கும் பசிதான் வா ரெண்டு பேரும் பீஸ்ஸா ஹட் போகலாம்"என்ற தன் ஆருயிர் தோழியை

"ஏண்டி இவளே.எனக்குதான் சமைக்க தெரியாது.நீதான் நல்ல பிரியானி செய்வியே..ஹேய் நித்ஸ் ப்ளீஸ்டி நான் மட்டன்  வாங்கி வர்ரேன்.எனக்கு மட்டன் பிரியானி செஞ்சு கொடுடி"ஏன்றவளை

"சாலன்ஞ்னு வந்துட்டா இந்த நித்யா எதுக்கும் அசரமாட்டா..சும்மா இருந்த என்ன பசிக்குதுன்னு சொல்லி உசுப்பேத்தி விட்டுட்ட.இப்போ எனக்கும் பசிக்குது.அவசரமா வாடி.போகலாம்"என்றாள் நித்யா.

"ராட்சசி..உன்ன கட்டிக்க போறவன் ரொம்ப பாவம்.நீ எதுக்கெல்லாம் அவன்கிட்ட சாலன்ஞ் பன்னி ,அவன் எதுக்கெல்லாம் உங்கிட்ட கெஞ்சி அலையனுமோ"என்று சலித்துக்கொண்டவளை

"அடியே பக்கி.உடனே வாடி.இப்போ எனக்கு ரொம்ப பசிக்குது"என்று போனை கட் செய்தால்.

தோழிகள் இருவரும் பீஸ்ஸா ஹட் சென்று சாப்டுவிட்டு வீடு திரும்பும் போது இருவருடைய ஹேண்ட் பேக்கும் ஒரே மாதிரியானது என்பதால் இருவரும் மாற்றி எடுத்து வந்துவிட்டனர்.அதிதி வீடு செல்ல நித்யாவோ வாசுகியும் , அம்மாவும் பெங்களூருக்கு ஒரு வேலை விடயமாக சென்றிருப்பதால் வீட்டில் தனியாக தங்காமல் அவளின் சித்தி வீட்டிற்க சென்றாள்.

"ஹேய் நித்ஸ்.எப்படி இருக்க..உனக்கு அம்மா நித்யானு பேரு வெச்சதும்தான் வெச்சாங்க அதுக்கு அப்புறமா நினைவெல்லாம் நித்யா,நீதானே என் பொன்வசந்தம் நித்யானு உன் பேரு ஒரு கலக்கலாத்தான் போய்க்கிட்டு இருக்கு"என்று தன்னை வாரிய சித்தியை

"சித்தி போதும்.வந்த உடனே ஆரம்பிக்க வேனாம் .அப்புறம் நான் எங்க வீட்டில தனியாவே தங்கிக்கிறேன்னு போயிடுவேன்"என்று சும்மா விளையாட்டாக சலித்திக்கொண்டவளை

"அடியே டிராமா குயீன்.உன் நடிப்பெல்லாம் என்கிட்ட எடுபடாது.நீ வாயாலேயே வடை சுடுற ஆளுன்னு எனக்கு தெரியாதா.அதென்ன அன்னைக்கு பல்லு விளக்க முதல்லதான் காபி,டீ லாம் குடிக்கனும்னு சொன்ன்னியாம்..அது சரி ஆடு,மாடு எல்லாம் பல்லு விளக்கிட்டா குடிக்குது .அதான் நீ குடிச்சிருப்ப"என்ற தன் சித்தியை

"அடியே சங்கீதா.....ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"என்றாள் நித்யா.

"என்னடி பேரெல்லாம் சொல்லி கூப்பிடுற.உங்க அம்மா உன்ன ரொம்பத்தான் செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்கா"என்றவளை

'ஆமா,,எங்கம்மாவேயே நான் அமிர்தம்னுதான் கூப்பிடுவேன்.நீங்கள்ளாம் எம்மாத்திரம்.கொஞ்சமா கலாய்ச்சா பரவால்ல.இது என்னடான்னா வந்ததுல இருந்து என்னையே டார்கட் பன்னா நான் என்ன செய்ய.அதான் பேர சொல்லி ஒரு பிட்ட போட்டேன்"என்றவளின் தலையில் ஒரு குட்டு போட்டவள்

"சரி.வாலு போய்க்குளிச்சிட்டு வா.சித்தப்பு வார நேரம்தான்.எல்லோரும் ஒன்னாவே இன்னைக்கு டின்னர் சாப்பிடலாம்.நீ இன்னைக்கு நான் வெஜ் சாப்பிடுவ தானே"என்று கேட்ட தன் சித்தியை

"இன்னைக்கு என்ன .நான் என்னைக்குமே நான் வெஜ் சாப்பிடுவேன்.நான் வெஜ் இல்லாத சாப்பாடு என் உடம்புல ஒட்டாது"என்று சீரியசாக சொன்னவளை

"அது சரி.மாடுதான் புல்ல தின்னும் ,நீ ஏன் தின்ன போறே"என்று மறுபடியும் கலாய்த்த தன் சித்தியை முறைத்து விட்டு கெஸ்ட் ரூமிற்குள் தனது சிறிய பேக்கை எடுத்துக்கொண்டு சென்றாள்.

சங்கீதா,சுரேஷ் ,நித்யா என மூவரும் ஒன்றாக சாப்பிட்டு முடிக்க

நித்யாவோ தனக்கு தூக்கம் வருகிறது என அறைக்குள் சென்று கைபேசியில் உள்ள தன் மனம் கவர்ந்த கள்வனுடன் கற்பனையில் ,கவிதையுடன்,காதலுடன் உரையாட தன் கைபேசியை எடுக்க போனவளுக்கு அப்போதுதான் புரிந்தது அதிதியின் ஹேன்பேக்கை அவள் மாற்றி எடுத்து வந்தது..

"இன்னைக்கு நல்லா மாட்டினம்.ச்ச்சே எப்படி மிஸ் ஆச்சு.நம்ம போனோட பாஸ்வேர்ட் அவளுக்கு தெரியுமே.கலரிக்கு போனா எல்லாமே போச்சு.நம்ம மானம்,மரியாதை ,கெத்து......அய்யோ நித்தி இப்படி பன்னிட்டியேடி குரங்கே"என்று தன்னை தானே திட்டியவள் அதிதியின் போனை எடுத்து தன் மொபைலுக்கு கால் செய்ய நினைத்த போது unknow நம்பரில் இருந்து வாட்சப்பில் ஒரு வீடியோ வந்தது.அதைப்பார்த்தவள் அப்படியே ஷாக் ஆனால்.

ஒரு 5 நிமிடத்தின் பின் அதே நம்பரில் இருந்து ஒரு கால் வந்தது.

குரல் நடுங்க "ஹலோ"என்றாள்

அடுத்த முனை "ஹய் அதிதி.நாந்தான் மா உன் புது பாஸ்.உனக்கு அந்த வீடியோ பார்த்ததுமே புரிஞ்சிருக்கும் நீ அன்னைக்கு இண்டர்வியூ பன்னப்போ வாஷ்ரூம் போனியே அப்போ எடுத்ததுதான்.சூப்பரா இருக்கில்ல.இங்க பாரு நீ படிச்ச பொண்ணு.சோ ஒரே ஒரு நாள் நம்ம கெஸ்ட் ஹவுஸ் வந்தேன்னா ஒரு பிரச்சினையும் இல்லாம காதும் காதும் வெச்ச மாதிரி விசயத்த முடிச்சிடலாம்.நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா" என்றவனை

நித்யா என்ன செய்வது என்று குழம்பி "என்ன சொல்ரீங்க.உங்கள நல்லவங்க என்று நினைச்சமே.ஏன் இபப்டி பன்னீங்க"என்றவளை

"ஹேய் இங்க பாரு.நீ என்ன ஸ்கூல் போற பாப்பாவா.ஸ்கூல் போற பொண்னுக்கு சொன்னாலே இன்னேரம் என்ன மேட்டர்னு புரிஞ்சிருக்கும்.உன் ப்ரெண்டுக்கு வெச்ச பொறில தவறி நீ மாட்டிக்கிட்ட.சரி இப்போ நீ நாளைக்கு காலைல 10 மணிக்கு நான் மெசேஜ் பன்ற அட்றசுக்கு வரே.இல்லயா உன் வீடியோ வாட்சப்ல எங்கெங்கலாம் போகும்னு எனக்கே தெரியாது.அப்புறம் இன்னொரு விசயம் போலிஸ் கீலிஸ்னு போனே அவ்ளோதான்.மானம் கப்பலேறிடும்.கவனம் பார்த்து"என்று கூறிவிட்டு அவளின் பதிலுக்கு கூட காத்திராமல் காலை கட் செய்தான்.

இங்கு நித்யாவுக்கோ தலை சுற்றுவது போல இருந்தது
'அப்போ அதிதி மீது ஜூஸ் கொட்டுபட்டது ப்ளான் பன்னியா.அதுவும் எனக்கு பளான் பன்னதா சொல்ரானே.அவன் அதிதிகிட்ட பேசுறதா நினைச்சு இப்போ என்கிட்ட பேசி இருக்கான்.அவனுக்கு தேவை இப்போ எங்க ரெண்டு பேருல ஒருத்தி.என்ன மாதிரியான ஒரு ஜென்மம் இது.போலீஸ் கிட்டவும் போக முடியாது.நம்ம போலீஸ் கிட்ட போயி அந்த கோவத்துல அதிதியோட வீடியோவ அவன் ரிலீஸ் பன்னிட்டானா .....ஐய்யோ நினைக்கவே மனம் பதறுதே'என்று தனக்குதானே பேசிக்கொண்டவளுக்கு புத்தி செயற்படவில்லை.அவளின் மூளை ப்ளாக் அவுட் ஆகி இருந்தது.சரி என்ன ஆனாலும் பரவாயில்லை நாளைக்கு அவன் அனுப்பியிருக்குற அட்றசுக்கு போய் எப்படியாச்சும் அவன் காலை பிடிச்சு கெஞ்சி சரி அந்த வீடியோவ டிலிட் பன்ன சொல்லனும் என்று நினைத்தவளின் என்னத்தை கலைக்கும் முகமாக அதிதியின் கைபேசி மறுபடி அலறியது.இந்த தடவை அவளது நம்பரில் இருந்து அவளுக்கே கால் வந்தது.அதிதிதான் கால் பன்னினாள்.அவளால் இப்போது பேசக்கூடிய மனநிலை இல்லை என நினைத்தவள் காலை கட் செய்து போனை ஆப் செய்ய முன் அவன் அனுப்பியிருந்த அட்றசை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro