😘 சக்கர 1😘

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்றைக்கு மணி 10 ஐ கடந்திருக்கும் இன்னும் என் மனைவி வீடு வந்து சேரவில்லை என்ன தான் அவள் என்னிடம் அவள் வர தாமதமாகும் என கூறியிருந்தாலும் சற்று கலவரமாகவே அமர்ந்திருந்தேன்....(எப்போமே 6-7 குள்ள வீட்டுக்கு வந்துருவா...
இன்னிக்கு தா இவ்ளோ லேட்)

மணி 11 ஐ தொட்டது...
அவள் போனிற்கு அழைத்தேன்.... ரிங் போனது கடைசி ரிங்கில் அவள் குரல் கேட்டது.........

"ஹலோ"...

"சக்கர எங்க டா இருக்க....
முடுஞ்சதா நா வரவா உன்ன கூப்ட".... பதட்டமான குரல் அவனிடத்தில்.

"ஹலோ என்னங்க...
மீட்டிங் இன்னும் முடில முடிஞ்சதும் நானே கூப்ட்றேன்" ...
(ஹஸ்கி வாய்சில் பதில் தந்தாள்........)
நான் பதில் சொல்லும் முன் போன் கட்டானது....(புருசங்கார வீட்டுல தனியா இருப்பானே சீக்கிரமா கெலம்புவோம்னு அறிவிருக்கா...சரியான மக்கு மல்கோவா ....)

டீவி பார்த்தேன்.... போர் அடிச்சது..
எனக்கு பசிக்கும் என்று தெரிந்து அவள் சமைத்து வைத்திருந்த அந்த சாதம் அமிர்தமாய் தெரிந்தது..........ஆனால் அவள் இல்லாமல் அமிர்தம் கூட பாரமாய் தெரிந்தது என் தொண்டைக்கு.....

இன்னும் சிறிது நேரம் தான் 12 மணிக்கு... (இன்னும் கானோம்...
இனி வேலைக்கு போற பல்லாங்குழி ஆட்றனு கேப்பால்ல அப்போ இருக்கு.... )

அப்போது எங்கள் அறையில் அந்த பாடல்....

( நெஞ்சாத்தியே...
பொஞ்சாத்தியே.....
நீ தானடி...... என் வாழ்க்கையே... ஒ... ஓஒஒ.... நீ என்பதே நான் என்கிற நீயே..... )

என்னை மறந்து அந்த பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன்...

அப்போது தான் பார்த்தேன் அவளிடமிருந்து தான் அந்த அழைப்பு...

ஒரு நிமிடம் போனை காதில் வைத்து பேசும் முன் ஒரு மென்மையான கரங்கள் என் வயிற்றை சுற்றி வளைத்தது...

அவள் மூச்சுக்காற்றை என்னால் உணர முடிந்தது....

அவள் உயரம் எட்டவில்லை என்றாலும் என் காதிற்கு அருகில் கேட்டது அவள் மென்மையான குரல்....

அவள் : "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் புருசா"...

திருமணம் முடிந்து இதுவே முதல் அணைப்பு அவளிடமிருந்து...(முதல் முறையாய் பிறந்ததை போன்ற ஒரு உணர்வு)
அவளின் அந்த புருசா என்ற அழைப்பு அந்த வாழ்த்தையும் மீறி ஏதோ சுகமான கானம் காதில் பாடியதை போல் உணர்ந்தேன்.....(இன்னிக்கு தான் நான் பொறந்தேனாமா...
எனக்கு சுத்தமா நியாபகமே இல்ல....)
என் கனவை கலைத்தது மீண்டும் அவள் குரல்....

" என்னங்க.....
உங்க first wish ....
12 மணிக்கு கேக் வெட்டனும் எவ்ளோ ஆசபட்டீங்க இன்னிக்கு வெட்டிறலாம் ....
வாங்க....
(அவரு சின்ன பிள்ளையா இருக்கப்போ ரொம்ப ஆசையாம் ஆனா யாருமே நிறைவேத்தல சோ.... இப்போ கேக் வெட்டி கொண்டாடப்போற என்னோட என் ஆசை கனவனுக்கு....
எல்லாரும் விஷ் பண்ணிருங்க.... )

என்னை அந்த கருப்பு காட்டின் முன் நிறுத்தினாள்.....

"என்னங்க...... உங்க second wish... ரிங் மாத்தி கல்யாணம் பண்ணணும் ஆனா டூ லேட் பரவால... இந்த பெர்த்டே கேக் முன்னாடி நின்னு நாம என்ன கேட்டாலும் கெடைக்குமாம் சோ இதுக்கு முன்னாடி நாம ரிங் மாத்திகலாம் ஓகே வா புருசா"...

அவள் ஒவ்வொரு "என்னங்க " அழைப்பிலும் என்னை கொள்ளை கொண்டாள்....

(ஆனா அவளுக்கு எப்டி தெரியும் என்னோட ஆசையெல்லாம் நா இதுக்கு முன்னாடி சொன்னதில்லயே)

"என்னங்க....
என்னப்பா யோசிக்குறீங்க......
இந்தாங்க... எனக்கான ரிங் உங்க கிட்ட....
உங்களுக்கான ரிங் என்கிட்ட.... " அவள் ஆனந்த எல்லையில் குரல் இனித்திருந்தது.

இந்த கேக்குடன் கூடிய மெழுகுவர்த்தியின் வெளிச்சம்
என் முன் என் கையை பற்றியவாறு அவளின் அந்த சிரிப்பு.. இந்த அறிய நிகழ்வை பார்க்க என் கண்ணீரும் கூட ஆசைப்பட்டு வெளியே எட்டி பார்த்தது.....
இருவரும் எங்கள் மோதிரங்களை மாற்றிக்கொண்டோம்....

"எப்போமே உங்களுக்கு புடுச்சவங்க கூட சந்தோஷமா இருக்கனு சொல்லி வேண்டிகிட்டு இந்த கேக்க கட் பண்ணுங்க "......

அவ அப்டி சொன்னதும் ...
எனக்கு மனசில வந்து போனது என் சக்கர மட்டுந்தான்...
அவ கூட இந்த வாழ்க்கை முழுதுமே சந்தோஷமா எந்த சூழ்நிலையிலும் அவள கைவிட கூடாதுனு நெனச்சுட்டு அந்த கேக் கட் பண்ண.....

அவளுக்கு நான் ஊட்ட அவள் எனக்கு அதை திருப்பி ஊட்ட இந்த நாள் இத விட இனிமையா அமையாது என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஓடியது....(இன்னு இருக்கு பா இதுக்கேவா....... )

"சரிப்பா...
சீக்கிரமா வேற டிரஸ் மாத்திட்டு ...
ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வாங்க.... வெளிய போனும்..." அசராமல் அவளை அசர வைத்தாள்.

"ஓய்...
டைம் என்ன ஆச்சு பாத்தியா எங்க போற வந்து தூங்கு சக்கர காலைல பாத்துக்கலாம்..."அவளை ஒரு வினோத பார்வையில் முழுங்கியவன்.

"என்னப்பா....
நா தா கூட இருக்கல்ல எதுக்கு பயபட்ரீங்க..". (கண்ணடித்தவாறு)

"அடிங்கு...
கொய்யால.... "
அவளை பிடிக்க முயன்று தோற்றேன்.....

"சீக்கிரமா வாப்பா."....

என்ன இன்னிக்கு என்னமோ பண்ண போறா மட்டும் தெரிது...
பாக்கலாம் நடு ராத்திரி வெளிய போனோம்....

எனக்கு முன்னாடி கீழ போய் நின்னுட்டா....
நா வீட பூட்டிட்டு அவள பாக்க போன....

அங்க போனா எனக்கு முன்னாடி என் வண்டில ஹெல்மெட்ல போட்டு வண்டிய ஸ்டார் பண்ணி உகாந்திருந்தா என் கண்ணையே என்னால நம்ப முடில.....

அவள் : என்னங்க....
உங்க third wish உங்களுக்கு புடுச்ச பொண்ணு பைக் ஓட்ட பின்னாடி உக்காந்து போனும்னு ஆச பட்டீங்க இல்ல...
வாங்க போலாம்....

நான் : நெஜமா தா சொல்றியா சக்கர....
சைக்கிள் கூட தள்ள தெரியாதே டி உனக்கு.... நீ எப்டி பைக்கெல்லா....

அவள் : நமக்கு புடுச்சவங்களுக்காக எந்த எட்ஜ் வரைக்கும் கூட போலாம் ஆனா பைக் தான ஓட்ற வாங்க சார்... சீக்கிரமா.... உங்க பொண்டாட்டிய நம்பு பா......

என்னோட அரும பொண்டாட்டி எனக்காக என்னென்னமோ பண்றா....
அவளுக்காக நா என்ன பண்ண போற எனக்கே தெரில....

அவள புடிச்சுட்டு பைக்ல ஏறி உக்காந்த....

அவள் : நல்லா புடிச்சுக்கோ புருசா..... கீழ விழுந்துறாத.... அப்டினு நாக்க கடிச்சுட்டே சொன்னா....

அவள் இடுப்பை டைட்டா கட்டிக்கொண்டேன்.....

என் பல நாள் ஆசை...
ஆனா அவளுக்கு எப்படி தெரியும்.... ???

சில்லென தென்றல் காற்றை கிழித்துக்கொண்டு பறந்தாள் என் பாதியானவள்.....

அவள் : என்னங்க எப்டி ஓட்ற...
உங்க ரேன்ஜ்க்கு இல்லனாலு ஏதோ பறவால்ல இல்ல.....

நான் : அடியே என் அரும பொண்டாட்டி....
உனகெப்டி தெரியும் இதெல்லா எனக்கு புடிக்கும்னு....

அவள் : அது வந்து....
அப்றமா சொல்ற.....
இப்போ கொஞ்சம் கீழ இறங்குங்க....

நான் : பைக் சைடு லாக் பண்ணு சக்கர...
ஆமா இங்க எதுக்கு வந்துருக்கோம்....

அவள் : மாமா...
அங்க பாத்தியா....
உனக்கு புடுச்ச swift car ...
ஒரு ரைடு போலாமா....

நான் : ஏ... நம்ப கார்ரா...
அன்னைக்கு பாத்தோமே அதே கார்ரா...

அவள் : மாமா...
கூடிய சீக்கிரம் நம்ப கார்.. இப்போ போலாமா....

நான் : எனக்கு புடிச்ச கார்...
எனக்கு புடிச்ச இளையராஜா இசை...
பக்கதுல என் மல்கோவா ...
அதுவும் மழைல.....
இந்த மாறி பொண்டாட்டி கெடைக்க நா ஏதே புண்ணியம் பன்னிருக்க போல....

ரெண்டு பேருமே அவ்ளோ சந்தோஷமா ரொம்ப தூரம் போனோம்....

பொதுவா மனைவியோட ஆசைகள் என்னென்ன அப்டினு பாத்து பாத்து செய்வாங்க கணவன்மார்கள் எல்லாரும்...
ஆனா கணவனோட ஆசைகள் பல நேரத்துல வெறும் கணவா போய்டுது.... சில நேரம் அவங்களுக்கு என்ன ஆசனு தெரியாமலே போய்டுது

ஆனா இதெல்லாதையுமே என் சக்கர மாத்திட்டா.....

அவள் : என்னங்க.....
ஓய் புருசா.....
என்ன பகல் கனவா....
அப்டி ஓரமா வண்டிய நிறுத்துங்க.....

நான் : ஏ... பொண்டாட்டி ஆல் ரெடி நீ கொடுத்த ஷாக்ல இருந்து இன்னு வெளிய வரல இப்போ என்ன பண்ண போற.....

அவள் : உன்னோட fourth wish பாதி விடுஞ்சு விடியாம இருக்க நேரத்துல யாரும் இல்லாத ரோட்ல....
நம்ப ரெண்டு பேரும் மட்டும் தனியா....
அதுகூட அந்த "லெமன் டீ.. சக்கர ஜாஸ்தியா "....
போலாமா......

நான் : ஓய்... ஜிலேபி... உனகெப்டி டி தெரியும் சொல்லு.....
கல்யாணம் ஆனதுல இருந்து நீ இந்த ஒரு மாசமா தான் நல்லாவே பேசுற பின்ன எப்டி இதெல்லா.....

அவள் : உஷ்ஷ்ஷ்..... (அவன் உதட்டின் மீது விரலை வைத்து)
உன்னோட எல்லா கேள்விக்கும் இன்னிக்கு நைட் பதில் சொல்ற....
அதுவரைக்கும் என்ன ஒன்னு கேக்காத மாமா......

அவள் இவ்வளவு சொல்லி நான் எப்படி மறு கேள்வி கேட்பது....

அந்த பனி மூட்டமான காலநிலையில் , ரம்மியமான சூழ்நிலையில் , என் "ஒரு கைல என் சக்கர பொண்டாட்டி இன்னொரு கைல சக்கர தூக்கலா லெமன் டீ" wow சொர்கம் டா......

எனக்கு என்ன சொல்றதுனே
தெரியல....

அவள் : ஓகே மாம்ஸ்....
நெக்ஸ்ட் நம்ப வீட்டுக்கு....
போலாமா....

அவ என்ன எங்கயோ கூட்டிட்டு போனா எங்கனே தெரில...
அவள விட்டு என் கண்ண விலக்க மனசே இல்ல....
இவ்ளோ நாளா என் மனசுல இருந்த பாரம் முழுசா எங்க போச்சுனே தெரில....
ரொம்ப லேசா பறக்குறமாறி ஃபீல் பண்ற...

வீட்டுக்கு போனோம் அப்போ மணி 6 இருக்கும்....

அவள் : என்னங்க....
இதுல புது டிரஸ் இருக்கு குளிச்சுட்டு மாத்திட்டு வாங்க....
அதுக்குள்ள நா சமச்சு வைக்கிற......

நான் : நா மட்டு போய் குளிக்கிறதா...
கம்பெனி தரலாம்ல.....

அவள் : மாமா....
அது வந்து...
கொஞ்சம்.....
கொஞ்சம்........கூச்சமா இருக்குப்பா.... .
இன்னிக்கு கொஞ்சம் நெறைய வேல இருக்கு சோ.... முடிச்சுட்டு நம்ப ரொமேன்ச வெச்சுக்கலாமே மாமா.....

நான் : இப்டி வெக்கப்பட்டே மாமான கவுத்துட்ட டீ.....

அவள் ஒவ்வொரு முறை வெட்கப்படும் போதும் அவள் புதிதாய் பிறக்கிறாள் அந்த அழகில் நான் இறக்கிறேன்.....

அவள் எனக்காக வாங்கிய உடை கச்சிதமாக பொருந்தியது...

சொல்ல போன இது கூட என் ஆசையில் ஒன்றுதான்...
மனைவி எனக்கான ஆடையை தேர்ந்தெடுக்க அதை நான் அவளுக்காக உடுத்த வேண்டும் என்பது.....

நான் : செம்ம செலெக்ஷன்... கலர் என்னோட ஃபேவரெட்....
எனக்கு கடைசியா ஃபோர்த் படிக்குறப்போ அப்பா டிரஸ் எடுத்து கொடுத்தாறு...
அதுக்கு அப்றம் இப்போ நீ எடுத்து கொடுத்துருக்க......
என்ன நா பாட்டுக்கு பேசுட்டு இருக்க என்ன பன்ற....

அவள் : கேட்டே இருக்க மாமா...
இனி உங்களுக்கு அப்பா அம்மா எல்லாமே நா மட்டுந்தா

வாங்க உங்களோட fiveth wish...
உங்க மனைவி காலைல பொடவை கட்டி உங்களுக்கு புடுச்சத சமச்சு ஊட்டி விடனுல்ல....
சீக்கிரமா வாங்க....

இவ்ளோ நேரம் அவ பேசுன எதுமே எனக்கு கேக்கள....
ரொம்ப நாள் கழிச்சு புடவைல அவள பாக்குற....
சும்மா சொல்லா கூடாது அந்த தலையில இருக்க பூவும், நெத்தி வகுடுல அவ வெச்சுருக்க பொட்டும் அவ எனக்கானவன்ற கர்வம் தருது....

அவள் : என்னங்க....
கூப்டு இருக்கல்ல கேக்கலயா....
சீக்கிரமா வாங்க உங்களுக்கு புடுச்ச நெய் தோச...
கூட வெங்காய சட்னி...
சாம்டலாமா...

அவ எனக்காக என்னென்னமோ பண்றா...
அதெல்லாதையும் பாக்குறப்போ என் அம்மாவையே கண் முன்னாடி இருக்க மாறி ஃபீல் ஆது..... I feel so lucky

அவ பின்னாடியே போன...
என் மடில உங்காந்துட்டு அழகா குட்டி குட்டியா தோசைய பிச்சு ஊட்டி விட்டா.....

அவள் : மாமா...
தோச ஓகேவா இல்ல மோசமா இருக்கா....

நான் : சூப்பரா இருக்கு மல்கோவா....

(அவள நா அப்டி கூப்ட்றபோ அழக கண்ணத்துல குழி விழுகுறமாறி சிரிப்பா பாரு... அடடடடாாா....... )

அவள் :ஐ.... ஜாலி.....
சரி மாமா...
நெக்ஸ்ட் நம்ம ஒரு இடத்துக்கு போகனும் ...
போலாமா ??

................................................................

Next updatela pakkalam avanga enga ponanganu....

Yetho thonuchu ezuthuna paduchutu Nallah erukkanu sollunga.... 😊😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro