😘சக்கர - 16 😘

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தவின் கிலம்பி கிட்ட தட்ட நான்கு மணி நேரம் இருக்கும் கார்த்தியைக் காண ஹாஸ்பிடலுக்கு வந்தாள் அஞ்சலி.....

அஞ்சலி  : ஹாய் கார்த்தி ....

கார்த்தி : வாங்க அஞ்சலி வாங்க வாங்க நீங்க எப்டி இங்க ....

அஞ்சலி : என்ன உங்களுக்கு தெரியுமா ...???

கார்த்தி : தேவா சொல்லிருக்கா
அவளுக்கு பிரண்ட்ஸ் ரொம்ப கம்மி அவ அதிகமா பேசுனது உங்கள பத்திதான் ....

அஞ்சலி : அப்போ டெல்லில என்ன பாத்தீங்களா ...??

கார்த்தி :  டெல்லில பாத்தது உங்கள தானா ...
எங்கையோ பாத்த மாறியே இருக்கேனு நெனச்சேன் ...
நீங்களா இருக்காதுனு  விட்டேன் ...

அஞ்சலி : ஓ ...
நா உங்கள பாத்தேன் ...
ஆனா உங்களுக்கு என்ன தெரியாது நெனச்ச ...
அதான் தேவா இருக்கப்போ பாக்கலாம்னு விட்டேன் ....

கார்த்தி : சரி அஞ்சலி ...
நீங்க எப்டி இங்க ...

அஞ்சலி : கார்த்தி நா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் ...

கார்த்தி : சொல்லுங்க அஞ்சலி ...

அஞ்சலி : தேவா .. இப்போ ...

கார்த்தி : தேவா அவங்க அம்மா வீட்டுக்கு போய்றுக்கா அஞ்சலி ...
எனக்கு சின்ன ஆக்ஸிடென்ட்  இரண்டு நாளா அவ தா பாத்துக்கிட்டா அதான் ரெஸ்ட் எடுக்க வீட்டுக்கு போய்றுக்கா ....

அஞ்சலி : ( என்கிட்டயேவா ... )

கார்த்தி : என்ன யோசிக்கிறீங்க அஞ்சலி ....
ஆமா நீங்க எப்டி இங்க ... 

அஞ்சலி : அது வந்து ...
தவின் தான் அனுப்பி வெச்சாரு ....

கார்த்தி : தவினா ...
அவனுக்கு உங்கள எப்டி தெரியும் ????

அஞ்சலி : நானும் தவினும் லவ் பண்றோம் ...

கார்த்தி : வாட் ...

அஞ்சலி : இப்போ தான் ஒரு நாலு மாசமா ....

கார்த்தி : ஆனா அவ என்ட எதுமே சொல்லலயே ....(அவன தெரியுமா ??? அப்போ தேவா காணாம போனதும் இவளுக்கு தெரிஞ்சுருக்குமோ ...... )

அஞ்சலி : அது வந்து ...
எங்க வீட்டுல இன்னு நா பேசல அதான் யார்கிட்டயும் சொல்ல வேனானு சொல்லல கார்த்தி ...

கார்த்தி : ஓ..  ஓ...
அவன் வரட்டும் என்கிட்டயே மறச்சுடானா ....
ஆமா எங்க ஆளே காணோம் ... அவனோட போன் கூட நாட் ரீச்சபிள்ளா இருக்கு .....

அஞ்சலி : அப்டிலாம் இல்ல கார்த்தி ....
அவனுக்கு சின்ன வேல அதான் ரெண்டு நாளைக்கு மும்பை வரை போய்ருக்கான் ....

கார்த்தி : அவ்ளோ தூரமா ??
எப்டி என்கிட்ட சொல்லாம போக மாட்டானே ....என் கிட்ட சொல்லாம போகுற மாறி அப்டி என்ன வேல .....

அஞ்சலி : கார்த்தி அவன் வந்ததும் நீங்க அவன்டயே கேட்டுக்கோங்க ....
அதுவரைக்கும் நான் தான் உங்கள பாத்துக்க போறேன் ...
ஸ்டெய்ன் பண்ணிக்காதீங்க என்ன ஹெல்ப் வேனுமனாலும் கேளுங்க ...

கார்த்தி : பரவால அஞ்சலி.... அப்றம் தேவா .....

அஞ்சலி : எனக்கு எல்லாம் தெரியும் கார்த்தி ...
அவ என்னோட பிரண்ட் கண்டிப்பா திரும்பி வருவா ...
கவல படாதீங்க....
(அவ என்ன பண்ணாலும் உங்களுக்காக மட்டும் தான் ...)

கார்த்து : (எங்க டீ இருக்க தெனமும் சித்ரவத பண்ற.... )
அவளிடம் சிறு சிரிப்புடன் நிறுத்தி விட்டான் .....

அஞ்சலி அவனை பார்த்துக்கொண்டாலும் அவளிடம் சிறு சிறு உதவிகளை கேட்க தயக்கமாகவே இருந்தது ....
தேவாவின் அம்மா உடன் இருந்ததால் சமாளிக்க முடிந்தது ....

கார்த்தி : அஞ்சலி தவினுக்கு நீயாச்சும் போன் பண்ணி பாரு ....
எப்போ தான் வருவான் ....

அஞ்சலி : போன் ப்ராப்ளம் போல கார்த்தி நாளைக்கு வந்துருவாரு ....

இரண்டு நாட்கள் கடந்தது ....

கார்த்திக்கு காயங்கள் ஆறவில்லை இருந்தும் வீட்டிற்க்கு செல்ல வேண்டும் என்று அடம் செய்து வீட்டிற்க்கு சென்று விட்டான் .....

அன்றிரவு ...
தேவாவின் பெற்றோரை வீட்டிற்க்கு அனுப்பி வைத்து விட்டான் ..
அஞ்சலியையும் அனுப்பி வைத்து விட்டான் .....

இரவு ஒரு 9 மணி வாக்கில் கதவு தட்டப்பட்டது .....

கார்த்தியினால் எழுந்து நடக்க முடியவில்லை வீட்டில் வேலைக்கு வைக்கப்பட்டவர் கதவை திறக்க அங்கு தவின் சிரித்த முகத்துடன் காட்சியளித்தான் ...

அவர் : ஐயா...
உள்ள வாங்க...
எப்போ ஊர்ல இருந்து வந்தீங்க ...

தவின் : அட நீயா...
கார்த்தி கதவ தொறப்பானு எதிர்பாத்த ...
சரி உள்ள வா தேவா அவன் ரூம்ல தான் இருக்கான் போல .....

அவர் : அம்மா ....
தேவா மா...
வந்துடீங்களா .... நில்லுங்கம்மா ...

(என்று உள்ளே சென்றவன் வேகவேகமாக ஆரத்தி தட்டுடன் அவர்கள் முன் நின்று தேவாவிற்க்கு ஆலம் சுற்றினார்...  )

இந்த வீடு நீங்க இல்லாம வெருச்சோனு இருந்துச்சு மா.....
நீங்க இல்லாம ஐயா ஒடஞ்சு போய்டாரு மா ...
அவர போய் பாருங்கம்ம  ......

தேவா : சிறு சிரிப்பை உதிர்த்தவள் கார்த்தியை காண மாடிக்கு சென்றாள் ......

அங்கு கார்த்தி கண்களை மூடியபடி படுத்திருந்தான் ....

தேவா : மாமா .....

கார்த்தி : ஓ...  இன்னிக்கு சீக்கிரமாவே வந்துட்டியா ....
வா வா பக்கத்துல வந்து உக்காரு .....

தேவா : (என்னாச்சு மாமாக்கு .... )
அவளை தொடர்ந்து தவினும் உள்ளே வர கார்த்திக்கு அப்பொழுதான் விளங்கியது ...
நடப்பவை கணவல்ல அவன் தேவா நிஜமாகவே அவனிடம் வந்துவிட்டாள் என்று  ....

கார்த்தி : தே. தேவா.. தேவா ....
வந்துட்டியா ....
(அவன் உடைந்த காலையும் பொருட்படுத்தாமல் வேகமாக ஓடி வர முயற்சி செய்தான் ... )

தேவா : மாமா...
பாத்து ....
மாமா ...
வந்துட்ட மாமா உன் தேவா உன்கிட்டயே வந்துட்டேன் .....
என்ன மன்னிச்சுரு மாமா  ..
உன்ன இப்டி பாப்பேன்னு நெனைக்கல மாமா ....
(அவன் கைகளை கொண்டு முகத்தில் அடித்து அழுதாள் ..... )

கார்த்தி : (அவளை தடுத்தவன் சமாதானம் செய்யும் படலத்தில் இறங்கினான் .... )
சரி..  சரி அழாத டா ....
நா உன் கிட்ட ஒன்னுமே கேக்கல .
நீ வந்துட்டல அதுவ போதும் ....
அழாத டா ...
என்னால இத்தன வலிய கூட தாங்கிக்க முடியும் நீ அழுதா பாக்குற சக்தி எனக்கில்ல .. அழாத டா .....

தேவா : (தேம்பிக்கொண்டே ... )
இல்ல மாமா நா அழல ..பாரு உன்ன பாக்க முடியாம தெனமும் செத்து செத்து பொழச்ச மாமா ...
இனி உன்ன விட்டு எங்கேயும் போக மாட்ட ....
அழாத மாமா ...
உன்னோட தேவா இனி யார் என்ன சென்றாலும் கேக்க மாட்டா ....
மாமா .... உன்னோட இந்த நிலைக்கு நான் தான் காரணம் ...
மாமா....
உன்ன விட்டு போய்ருக்க கூடாது மாமா..  சாரி டா...
(அவன் முகம் முழுவதும் இதழ் ஒன்றி அவன் காயத்திற்கு மருந்தாகி போனாள் ... )

(ஒரு வருட பிரிவிற்க்கு பிறகு தன் கணவனை இப்படி ஒரு நிலையில் பார்த்தால் எந்த மனைவிக்குதான் வேதனை இல்லாமல் இருக்கும் .. )

கார்த்தி : சரி டா மகோவா ... அழாத டா ....
எனக்கு ஒன்னும் இல்ல பாரு ....
எந்திரி டா ...

(சிறிது நேரம் கழித்து தவின் அங்கு வர ....)

தவின் : க்க்ம்ம்ம்....

கார்த்தி : அழாத மல்கோவா ...
எங்க அத்தானோட முகத்த பாரு....

தவின் : க்க்க்க்க்க்ம்ம்ம்.... (லொக்கு லொக்கு ... என்று இரும்பினான் ... )

கார்த்தி : டேய் அதான் உன்ன யாரும் மதிக்கல இல்ல போய்ட்டு நாளைக்கு வா டா ....

தவின் : நல்லா வருவீங்க டா ...
(அவர்களின் நிலைமையை உணர்ந்தவன் சிரித்துக்கொண்டே அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகிவிட்டான் ... )

தேவாவை எதற்க்காக கார்த்தியிடமிருந்து பிரித்தனர் ..
நிருபமா யார் ???
அஞ்சலியின் காதலை தவின் ஏற்றுக்கொள்வானா ????

அடுத்து வரும் பகுதிகளில் காணலாம் 😊😊😊😊

.................................................................

Ennoda story ku support panra ellarukum romba romba thanks romba happy 😊😊😍😍

Eni update regular ah kudukka try panren once again thank u so much  😊😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro