😘 சக்கர - 19 😘

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அஞ்சலி : அன்னைக்கு நீங்க இருந்த போதைய பாத்தா நீங்க குடிச்சு மட்டையாய்டீங்கனு நெனச்சேன் ஆனா அந்த ரூம்ல எந்த ஸ்மெல்லும் இல்ல ...
ரெண்டுபேரும் நல்லா புலம்பிட்டு இருந்தீங்க ...
உங்கள பாத்து எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு ...
ஒரு வலியா உன்ன தூங்க வெச்சுட்டு நா கெலம்பிட்டேன் ....

தவின் : என்னது தூங்க வெச்சியா ... ??

அஞ்சலி : நடு நடுல கேள்வி கேட்டா நா மறந்து போய்டுவ பேசாம கேளுங்க ..

தவின் : சொல்லு சொல்லு

அஞ்சலி : தேவாகிட்ட அங்க நடந்தத சொல்லி அவளுக்கு எதாச்சும் தெரியுமானு கேட்ட ஆனா அவ ரொம்ப பதட்டமா என் கிட்ட எதையோ மறைக்க டிரை பண்ணா ...
கொஞ்சம் அதட்டி கேட்டேன் அப்றம் தான் சொன்னா ...

அன்னைக்கு உங்க ரூம்க்கு வந்தது நிரூபமா தான் ...
அவ வேற யாரும் இல்ல தேவாவோட தங்கச்சி தான்

தவின் : என்னது தேவா தங்கச்சியா ....
தேவா வீட்டுக்கு ஒரே பொண்ணு தானே ...

அஞ்சலி : தேவா அப்பாக்கு ரெண்டு வைஃப் ...
மொத வைஃப்க்கு பொறந்தவ தான் நிருபமா ...

தவின் : விஸ்வநாதன் அங்கிள்ளா (அஞ்சலி அப்பா) ...

அஞ்சலி : ஆமா....

(வாங்க ஒரு ஃபிளாஷ் பாத்துட்டு வருவோம் .... )

விஸ்வநாதன் - ரேவதி (தேவா அம்மா)...

விஸ்வநாதன் : ரேவதி நம்ம சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம் ...
என்னோட அத்த பொண்ணுக்கு வேற என்ன பேசி முடிச்சுருவாங்க போல இருக்கு...
அதனால சீக்கிரமே ஒரு கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம் ....

ரேவதி : வேணாங்க ....

விஸ்வநாதன் : என்ன ஆச்சு மா...
ஏ வேனா சொல்ற ....
யாராவது எதாச்சும் சொன்னாங்களா ...

ரேவதி : இல்லைங்க...
எனக்கு குழந்தை பொறக்குறதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மியா இருக்குங்க....
நீங்க உங்களுக்கு பாத்த பொண்ணயே கல்யாணம் பண்ணிக்கோங்க ...
நா வேற எங்கேயாச்சும் போய்க்கிற ....

விஸ்வநாதன் : என்ன சொல்ற ரேவதி ..
அப்டி சும்மால உன்ன விட்டு போக முடியாது....

(ரொம்ப பெரிய ஆர்கியுமெண்ட்க்கு அப்றம் ..... ,)

ரேவதி : சரிங்க ....
நம்ப கல்யாணம் பண்ணிட்டு அப்றம் யாராது எதாச்சும் சொன்னா அப்போவே என் உயிர விட்றுவேன் ... அதுக்கு தான் சொல்றேன் நா வேற ஊருக்கு போய்ட்றேன் ...
நீங்க மட்டும் அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலனா இப்போவே என்னோட உயிர மாய்ச்சுக்குவேன் ....

விஸ்வநாதன் : ரேவதி....
சரி ரேவதி.... சரி நா ஒத்துக்குறேன் இந்த கல்யாணத்துக்கு ....
ஆனா என்னோட மனசு உனக்கு மட்டுந்தான்.......
வர போறவளுக்கு துரோகம் பண்ணுமா நீயே முடிவு பண்ணிக்கோ ...

ரேவதி : இனி அந்த பொண்ணுக்கு மட்டும் உண்மையா இருங்க போதும் ....
இனி நா உங்களோட வாழ்க்கைல இல்ல...

விஸ்வநாதன் : குழந்தை இல்லனா என்ன வேற எங்கயாவது போய்டலாம் ஒரு குழந்தைய தத்தெடுத்து வளக்கலாம் ....

ரேவதி : (நா எப்டி உங்க கிட்ட உண்மைய சொல்வேன்... உங்க வீட்டுல இருக்கவங்க நம்பல சேந்து வாழ விட மாட்டாங்களே .... கடவுளே இவர் மனச எப்டியாச்சும் மாத்து.... )
நா கெம்புறேங்க ....

( ரேவதிக்கு எந்த பிரச்சினையும் இல்லைங்க விஸ்வநாதன் வீட்டுல சாதி மதம்னு வந்து ரேவதி குடும்பத்தையே மெரட்டுனதுனால தான் இப்டி பேசுறாங்க ... )

ரேவதி ஊரவிட்டு போய்ட்றாங்க ....
கால்வாசி கூட மனசில்லாம வசந்தி கழுத்துல தாலி கட்டினார் விஸ்வநாதன் ...

வசந்திக்கு அவர்கள் காதல் பற்றி எதுவும் தெரியாது ....
அதன் பின் அவர்கள் வாழ்க்கை அதன் போக்கில் நகர்ந்தது ....

விஸ்வநாதனுக்கு தான் வசந்திக்கு துரோகம் செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு இருந்துக்கொண்டே இருந்தது ....

போக போக வசந்தியின் அன்பு விஸ்வநாதனிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது .....
நமக்காகவே ஒரு ஜீவன் வாழும் பொழுது நாமும் அவர்களுக்காக வாழலாமே ....

ஒரு கட்டத்தில் விஸ்வநாதன் வசந்தியை ஏற்றுக்கொண்டார் ....
சிறிது மாதங்கள் கழித்து வசந்தி கற்பம் தறித்திருந்தாள் ...
அவளை நன்றாகவே பார்த்துக்கொண்டார் விஸ்வநாதன் ரேவதியை பற்றிய நினைவுகள் அடிக்கடி வந்த போதிலும் வசந்தியின் அன்பு அவரை முழுவதுமாய் மாற்றியிருந்தது ...

பத்து மாதத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது ...
அவளுக்கு நிருபமா என்று பெயர் வைத்தனர் ......

அவர்கள் மூவரின் வாழ்க்கையும் நன்றாக போய்கொண்டிருக்க நிருபமாவின் எதிர்காலத்திற்காக அவர்கள் ஊரை விட்டு வந்துவிட்டனர் ....

அங்கு வந்த சில வருடங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் ரேவதியை விஸ்வநாதன் பார்க்கும் படி நேர்ந்தது அதுவும் அவள் கையில் ஒரு பெண் குழந்தை ஒன்றும் இருந்தது பேருந்து நிருத்ததில் காத்திருந்தாள் ரேவதி .....

விஸ்வநாதன் : என்னால் நம்ப முடியவில்லை எப்படி அவளுக்கு திருமணம் நடந்து முடிந்ததா இல்லை அவள் என்னிடம் கூறியது அனைத்தும் பொய்யா ...
ரேவதி முன் சென்று நின்றார்..

ரேவதி : நீ... நீங்களா ... ??

விஸ்வநாதன் : கார்ல ஏறு ......

(ஒரு பார்க்கில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்)

விஸ்வநாதன் : எப்டி இருக்க ரேவதி...
உனக்கு கல்யாணம் முடிஞ்சதா ...
ஆனா குழந்தை எப்படி ...
குழந்தைய காரணம் காட்டி தானே இல்லாததா எல்லா சொல்லி என்ன விட்டு போன ....

ரேவதி : அது வந்து ....
(நடந்ததை சுருக்கமாக சொல்ல முடித்தாள்... )
இது உங்க குழந்த தான் ...
உங்கள விட்டு போன கொஞ்ச நாள் கழிச்சு தான் எனக்கு தெரிஞ்சது நம்ப காதலுக்கான அடையாளமும் பரிசும் என் வயித்துல குழந்தையா வளர்துனு ...
நம்ப பொண்ணு தேவானை ...
தேவா ...

விஸ்வநாதன் : இத அப்போவே சொல்லி இருக்கலாம்ல ...
எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா ....
ஏ இப்டி என் மனசயும் சாகடுச்சுட்டு உன்னையும் வருத்திகிட்டு எதுக்கு இந்த நாடகம் ...
இனி உன்ன விட்டு என்னால இருக்க முடியாது ...
இவ என்னோட புள்ள என்னோட ரத்தம் இனி நீங்க ரெண்டு பேரும் என்னோட பொருப்பு ....

ரேவதி : என்ன ஒளர்ரீங்க உங்களுக்குனு ஒரு குடும்பம் இருக்கு மறந்துடீங்களா ...

விஸ்வநாதன் : வசந்தி ....
நீ .... நீ .... எப்போ வந்த

வசந்தி : உங்கள மட்டு நம்பி வந்த என்ன இப்டி ஏமாத்திடீங்களே விஸ்வா ...
இனி அவ கூடவே போய்ருங்க இனி என்னை மறந்துருங்க ....
இனி நானு நம்ப பொண்ணு உங்க வாழ்க்கைல இல்ல ....

விஸ்வநாதன் : வசந்தி...
நில்லு மா ...

ரேவதி : ஏங்க அவர் எந்த தப்பும் பண்ணல அவர விட்டு போகாதீங்க ....

(வசந்தி தன் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று விட்டாள் ...
அவள் சென்று இரண்டு நாட்கள் முழுவதும் முடியவில்லை ஆனால் வீடு வந்து சேர்ந்த செய்தி அவள் இறந்துவிட்டாள் என்பதே .....
நிருபமாவிற்க்கு தன் தாய் இறந்து விட்டாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ...
அவள் அழுகை தான் அந்த அறை முழுவதும் நிறைந்திருந்தது ....
ரேவதியும் தேவாவும் கூட அங்கு வந்திருந்தனர் தேவாவிற்க்கு நடப்பது எதுவும் புரியவில்லை ...
ஏதோ பயம் தொற்றிக்கொள்ள தன் தாயின் கைகளிலே தஞ்சம் புகுந்தாள் .... )

அடுத்த சில மாதங்கள் நிருபமா அவள் பாட்டியிடமே வளர்ந்தாள் ...
அவள் பாட்டி ரேவதியும் தேவாவும் தான் வசந்தியின் மரணத்திற்கு காரணம் என்று அவள் மனதில் வன்மத்தை வளர்த்தார் ...
அன்றிலிருந்து தன் தந்தையிடமிருந்து விலகி செல்ல ஆரம்பித்தாள் ...

சிறிது நாட்கள் கழித்து ரேவதியை முறையாக திருமணம் செய்து கொண்டார் .....
(ஆனால் தடுக்க தடைகள் இருந்தாலும் நிருபமாவை காரணம் காட்டி திருமணம் நடந்தது .... )

நிருபமா தன் தந்தையிடம் அதற்கு பின் பேசுவதையே விட்டு விட்டாள்..
அவள் வளர வளர தனக்கான செலவுகள் அவளே பார்த்துக்கொண்டாள் ..
நன்றாக படித்து ஸ்காலர்ஷிப் மூலமாக மேற்படிப்பு படித்தாள் ...
நன் தந்தையை விட்டு முழுவதுமாக பிரிந்து விட்டாள் ...
அவரை பிரிந்தாலும் தேவாவை அவர்கள் பார்த்துக்கொள்ளும் விதம் அனைத்தும் அவள் மனதில் மேலும் வன்மத்தையே வளர்த்தது .... .....

ஆரம்பத்தில் ரேவதிக்கும் விஸ்வநாதனுக்கும் நிருபமா நினைத்து கவலையாகவே இருந்தது ...
அவள் முழுவதும் தன் தந்தையை வெறுத்து ஒதுக்கினாள். ரேவதி தன் வருகையினாலே இப்படி நடக்கிறதென்று தினமும் வருத்தம் கொண்டார் ....

தேவா வளர வளர அவளுக்கு எந்த குறையும் இன்றி பார்த்து பார்த்து வளர்த்தனர் ...

தேவாவிற்க்கு இப்படி ஒரு தங்கை இருக்கிறாள் என்றே தெரியவில்லை ....

நாட்கள் கடந்தது ...
ஒரு நிலையில் தேவாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டது ...
அப்போது தான் நிருபமாவிற்க்கும் திருமணம் செய்து வைப்பது தங்கள் கடமையென அவளை தேடினார்கள் ...
அவள் அவர்கள் கண்களில் படவே இல்லை ...
வேறு வழியின்றி அவள் இல்லாமல் தேவா திருமணம் முடுந்தது...
ரேவதி அதன் பின் விஸ்வநாதனிடம் நிருபமா பற்றி விசாரிக்க சொல்லி தினமும் கேட்க ஆரம்பித்தார் ஆனால் நிருபமாவின் எண்ணம் முழுவதும் தேவாவின் மகிழ்ச்சியை பறிக்க வேண்டும் என்பதே ...
தன் தாயின் மரணம் தந்தையின் ஒதுக்கம் என்று அனைத்து வருத்தமும் கேபமாய் மாறி தேவாவிடம் இறக்க நினைத்தாள்....
அவள் மனது முழுவதும் அவள் நிலையில் இல்லை தேவாவின் மகிழ்ச்சியை பறிக்க எண்ணிய மனது போக போக அவளை கொலை செய்யும் அளவிற்கு சென்றது ....
கார்த்தி உடன் மகிழ்ச்சியாக இருக்கும் அவளின் நிம்மதியை கெடுக்க நினைத்து அனைத்தையும் செய்தாள்........

பிளேஸ்ஷ் பேக் ஓவர் .....

.................................................................

Intha update rendu vaaram munnadiye type panniten ana update panna thonala intha concept ellaralium yethuka mudiuma therila ...
Nallah Ilana kandippa solunga ..... story mudikanume athan potten inum rendu updatela story mudunjurum .....

Intha update poda my Dr sweet heart Nandhutom avangathan romba help pannaga romba thittu vanginen avangata... 😘😘😘🍭🍫🍭

sandhiya_ishu character name choose panna help pannaga 😍😍😍😍

Karunya_Xavier evanga nalathan iniku update pannen ....
Enoda story evlo interest ah update poda solli kette erunthanga evanga mana thiriyathai paaratama eruka kudathu 😍😍😍😍
Romba thanks akka ma for ur support ☺☺☺

Next update naaliku varum kandippa 😍😍😍😍

Thank u all and ena marubadium periya manasu panni mannichurunga 😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro