வாழிய வாழிய
இறைபுகழ் வாழிய
அவனை போற்றியே
எதையும் தொடங்கும்
மொழியும் வாழிய
பாக்கள் பாடிய
பெருந்தகை போற்றிய
பைந்தமிழ் வாழிய.
வாழிய வாழிய
வன்தமிழ் வாழிய
தோன்றிய மொழியில்
தூய மொழியாம்
தாய்தமிழ் வாழிய
தேடிய மொழியில்
சீறிய மொழியாம்
செந்தமிழ் வாழிய
உயரிய மொழிகளில்
உயர்ந்த மொழியாம்
உயிர்தமிழ் வாழிய
வாழிய வாழிய
தேனே வாழிய
இசைத்தமிழ் வாழிய
வாழிய வாழிய
இயற்றமிழ் வாழிய
நாடக தமிழாம்
நற்கனி விருந்தாம்
நற்றமிழ் வாழிய
வாழிய வாழிய
பழந்தமிழ் வாழிய
கூடியே அதனுடன்
இளந்தமிழ் வாழிய
அன்றும் இன்றும்
என்றும் எங்கும்
வாழும் தாயாம்
தமிழே வாழிய
பிழைத்த மொழிகளில்
பிழையற்ற மொழியாம்
பைந்தமிழ் வாழிய
மாந்தர் பேசிய
மொழியில் சீறிய
மொழியே வாழிய
என்றும் வாழிய
நன்றாய் வாழிய
வாழிய வாழிய
தமிழே வாழிய
Hi sagos . Epdiyo maths exam mudinchu inimel konjam slowa update poda aramchure.
Ithu enoda spcl kavithai since enoda kana pogama iruntha kavithaila 50th count ulla kavithai ithu. PAdichutu palichunu vota thatitu pidichucha pidikalayanu dappa la thatitu ponga
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro