அத்தியாயம் (37)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வாழ்க்கை சில சமயங்களில் நம்மை நோக்கி நான்கு புறங்களிலும் இருந்து சரமாரியாய் அம்பு தொடுக்கும். அப்பொழுது நம்மால் தீர்க்கமாக யோசிக்க முடிவதில்லை. வாழ்க்கை மீது ஒரு அசுவாரசியம் ஏற்படும். வாழ்க்கையில் தோற்றுவிட்டது போல உணர எண்ணும். வீட்டை விட்டு வந்தது, பெற்றோர் தங்களை புரிந்து கொள்ளாதது, சரியான அங்கிகாரம் கிடைக்காத ஒரு திருமணம், அதிலும் சேர்ந்து வாழாதது, அம்மாவின் கை சமையல், அபீஸ் அறையிலேயே வேலை பார்த்து அங்கேயே தங்கி இருந்து நான்கு சுவற்றுக்குள் சிறை பட்டு இருப்பது என்று ஷக்திக்கு வாழ்க்கையே ஒரு நரகம் ஆகிப்போன உணர்வு அன்று ஏற்பட்டு இருந்தது. தனது அபீஸ் அறையை அவன் எவ்வளவு நேசித்தானோ அதை அவ்வளவு வெறுக்க ஆரம்பித்து இருந்தான். சஞ்சனா மீது அவனுக்கு கோபம் இல்லை. அவனது கோபம் எல்லாமே அவன் மீது தான். ஆனால் அந்த கோபம் என்றாவது சஞ்சனா மீது வெளிப்பட்டு விடுமோ என அவன் பயந்தான்.

இரவு சாப்பிட அழைத்தவளை காரணமே இல்லாமல் கடிந்து கொண்டதன் பின்னர் அவனுக்கு அந்த பயம் அதிகமானது. யோசனையால் தலை சுற்ற தன்னை மறந்து தூங்கிப் போனான் ஷக்தி. சஞ்சனாவுக்கு வருத்தமாக தான் இருந்தது ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் தனியாக அமர்ந்து சாப்பிட்டு முடித்து அவளும் அவனருகே எப்பொழுதும் போல படுத்து உறங்கினாள்.

காலை 6 மணிக்கு கண் முழித்துப் பார்த்தவள் தன் இடையைக் கட்டிக் கொண்டு படுத்து இருந்தவனைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டாள். சிறு புன்னகையோடு மெதுவாக அவன் கையை அகற்றி விட்டு குளியளறைக்குள் புகுந்து கொண்டாள் அவள். சஞ்சனா குளித்து முடித்து வெளியில் வரும் போது ஷக்தி விழித்துக் கொண்டு இருந்தான். சஞ்சனா வெளியில் வரவும் "குட் மார்னிங்" என்று விட்டு அவளது பதிலில் சுவாரஷியம் அற்றவன் போல குளியளறைக்குள் நுழைந்து கொண்டான். சஞ்சனா தலை முடியை Blow dryer ஆல் காய வைத்து விட்டு புடவை கட்டிக் கொண்டு இருக்கும் போது ஷக்தி குளித்து முடித்து வெளியே வந்தான். டவலை கட்டிக் கொண்டு வெளியே வந்தவன் கண்ணில் பாவாடை ஜாக்கெட் சகிதம் கொசுவத்தை சரி செய்து கொண்டிருந்த சஞ்சனா பட்டாள். சஞ்சனாவை நெருங்கி சென்றவன் அவள் அதை உணரும் முன் அவளை பின்னால் இருந்து கட்டி அனைத்தான்.

சஞ்சனாவுக்கு உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அதை அவனும் உணர்ந்தான். சஞ்சனா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை அப்படியே நின்றிருந்தாள். ஷக்தி அவளை பின்னால் இருந்து அனைத்தபடி அவளது ஈரக் கூந்தலுக்குள் தன் முகத்தை செலுத்தி அவளது காது மடல், கன்னம் என்று கழுத்தில் வந்து நின்றான். சஞ்சனாவுக்கு உடலுக்குள் உதரல் எடுத்தது. தன் எந்த அசைவும் அவனுக்கு இணக்கத்தையோ எதிர்ப்பயோ காட்டிவிடக் கூடாது என்பதை மனதுக்குள் ஜெபித்தவாறு வெறுமனே நின்றிருந்தாள் அவள். ஷக்தி அவளது உடை போர்த்தாத இடுப்பில் தன் கையை வைத்து அவளை தன் புறம் திருப்பினான். சஞ்சனாவும் அவன் இழுத்த இழுப்புக்கு திரும்பிக் கொண்டாள். அவள் கண்கள் மூடி இருந்தது. அவளைது மூடிய கண்களையே ஒரு சில வினாடிகள் பார்த்துக் கொண்டு இருந்தவன்,

"சஞ்சனா.... கண்ணை திறந்து என்னை பாரு..." என்றான் மெதுவாக.

அவளும் சாவி கொடுத்த பொம்மை போல கண் திறந்து மருண்ட விழிகளால் அவனை பார்த்தாள்.

"சஞ்சு... ஐ லவ் யூ..." என்றான் அவள் கண்களை பார்த்து.

அவள் கண் நிறைய காதலுடன் அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள் பதில் பேசவில்லை, அல்லது வரவில்லை, அல்லது அவள் சுய நினைவில் இல்லை!

அவனும் அவளிடம் இருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை போலும்,

"நான் உன்னை திட்டுவேன், முறைப்பேன், கோவிச்சிப்பேன், எனக்கு உரிமை இருக்கு. ஆனால் உன்னை விட்டுற மாட்டேண்டி.  எல்லா புருஷன் பொண்டாட்டிக்கும் இடைல நடக்கறது போல நமக்குள்ள எதுவும் நடக்கல தான். அதுக்காக எனக்கு உன்மேல காதலோ உரிமையோ இல்லைனு ஆகிறாது. உனக்கு புரியுதா சஞ்சனா? I just messed things up! நான் முட்டாள் தனமா எடுத்த முடிவுகளால இன்னைக்கு எத்தனை பேருக்கு கஷ்டம் பாரு. நான் பண்ண தப்புகளை நானே சரி பண்ணனும்னு நினைக்கிறேன். என் தலைக்குள்ள நிறைய விஷயம் ஓடிட்டு இருக்கு. எனக்கு இன்னும் கொஞ்சம் நாள் டைம் கொடு நான் இதை எல்லாம் சரி பண்ணிருவேன். உன் கழுத்துல தாலி கட்டியாச்சேன்னு உனக்கு சரியான ஒரு அங்கிகாரம் கொடுக்காமல் இந்த நாலு சுவத்துக்குள்ள வச்சு என்னால் உன் மேல பாஞ்சு ஆடு மாடு கோழி மாதிரி உன்கூட ஒன்னு சேர முடியாது சஞ்சனா. நீ நான் பார்த்து பார்த்து உருகி உருகி லவ் பண்ண பொண்ணுடி. I just can't have sex with you. I want to make love to you di. Will you wait for me?"
இருவருக்கும் இடையில் நூலளவு தான் இடைவெளி இருக்க நெஞ்சு நிறைய காதலோடு அவளிடம் மன்றாடினான் அவளது காதல் கணவன்.

அவன் கைகள் அவள் இடையை வளைத்திருக்க, அவன் மேலிருந்த ஈரம் அவள் மீதும் ஒட்டிக்கொள்ள, அவன் மீது இருந்து வந்த வாசனை வயிற்றுக்குள் எதையோ செய்ய அவன் சொன்னது எதுவும் கேட்கவில்லை அவளுக்கு. திரும்ப சொல்ல சொல்லி கேட்டால் பப்பி ஷேம் ஆகி விடும் என்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று மண்டையை இப்படியும் அப்படியுமாக மெதுவாக ஆட்டி வைத்தாள் அந்த காதல் கிறுக்கி!

அவள் இருந்த நிலை அறியாது எதையோ பேசி புரிய வைத்து விட்ட திருப்தி முகத்தில் தெரிய தொடர்ந்து பேசினான் ஷக்தி. இம்முறை அவன் பேசிக் கொண்டிருந்த ஒன்றுக்கும் உதவாத விஷயத்தை பயபக்தியாக கூர்ந்து கவனித்தால் அவள்.

"இன்னைக்கு நான் ஆபீஸ்ல இருக்க மாட்டேன். வேலை விஷயமா கொஞ்சம் வெளியில போக வேண்டி இருக்கு அதை முடிச்சிட்டு அப்படியே அஷோக்கையும் போய் பார்த்துட்டு நைட் தான் வருவேன். எவ்வளவு லேட் ஆனாலும் வந்துருவேன். எதுனாலும் கால் பண்ணு பயந்த்துறாத என்ன?" அவள் கன்னத்தில் கையை வைத்து சிறு பிள்ளைக்கு சொல்லும் அக்கறையோடு சொன்னான் ஷக்தி.

இரவு வர தாமதம் ஆகும் என்று சொன்னது மனதை பிசைந்தாலும் அவனுக்கு ஆருதலாக "பத்திரமாக போய்ட்டு முடிஞ்ச அளவு சீக்கிரமா வா" என்றாள் சின்னக் குரலில்.

டிரஸ் மாத்திட்டு வா உன்னை கொண்டு போய் க்ளினிக்ல விட்டுட்டு நான் போறேன்"

சரி என்பது போல தலையை ஆட்டிவிட்டு சென்றவள் வேகவேகமாக சேலைக்கு மாறினாள். அவனும் உடை மாற்றி வந்ததும் இருவரும் ஒன்றாக வெளியே கிளம்பினார்கள். எதுவுமே நடக்காதது போல ஷக்தி நேராக பார்த்தபடி வண்டியை ஓட்டினான். சற்று முன்பு என்ன நடந்தது? அந்த சம்பவம் நிஜத்தில் நடந்ததா இல்லை அவள் தான் கண்டதையும் கற்பனை செய்து கொள்கிறாளா என்று சஞ்சனாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மனது படபடப்பு இன்னும் நீங்கவில்லை அவளுக்கு. அதற்குள் க்ளினிக் வந்துவிட ஷக்தி வண்டியை நிறுத்தினான். சஞ்சனா இறங்கிக் கொள்ள முயற்சிக்க அவன் அவளது கையை பிடித்துக் கொண்டான். அவள் திரும்பி அவன் கண்ணை நேராக பார்த்தாள். அவனது பார்வையில் இருந்து எதையும் புரிந்து கொள்ள முடியாது இருக்க கண்களில் சிரிப்புடன் இறங்கிக் கொண்டாள் அவள். ஷக்தி வண்டியை ரிவர்ஸ் எடுக்க சஞ்சனா அவனை நோக்கி கை அசைக்க பதிலுக்கு கை அசைத்து விட்டு வண்டி வேகம் எடுத்தது.

சஞ்சனாவுக்கு தான் அன்று வேலையே ஓடவில்லை. எதற்கு க்ளினிக்கிற்கு வந்தோம் என்றிருந்தது. ஷக்தி போல தானும் லீவு போட்டு விட்டு ரூமுக்குள்ளேயே கிடந்து இருக்கலாம்! "காலங்காத்தால இப்படி பொலம்ப வச்சிட்டு போய்ட்டானே! எதுக்கு ஒரு நாளும் இல்லாமல் அறை குறை டிரஸ்சில் இருக்கும் போது வந்து கட்டிப்புடிச்சான்? ஒரு வேளை நம்மலை ஏதாவது பண்ண ட்றை பண்ணானோ நம்ம பிடி குடுக்காமல் ஸ்டெடியா நின்னதால விட்டுட்டு போயிருப்பானோ?? ஆனால் நடுவுல ஏதோ நிறைய பேசினானே... என்ன சொல்லி இருப்பான்?? சரி அவன் தான் வந்து கட்டிக்கிட்டான் நம்ம ஏன் அப்படி சகலமும் மறந்து போய் அவன் பேசுறது கூட காதுல வாங்காம அந்த நிமிஷத்தை மட்டுமே ரசிச்சிட்டு நின்னோம்?? நம்ம மனசளவுல தயார் ஆகல, உடலளவுல தயார் ஆகலனு பார்த்தா அவன் இழுத்த இழுப்புக்கு போய்ருவோம் போலல்ல இருக்கு.." சஞ்சனா டாக்டர் தான். தெளிவாக யோசனை செய்யக் கூடிய பெண் தான் ஆனால் காதல் யாரை விட்டது? அது தான் அதிபுத்திசாலியையும் கிறுக்கன் ஆக்குமே! சஞ்சனாவுக்கும் அது தான் நடந்து கொண்டு இருந்தது. ஊருக்கெல்லாம் உபதேசம் செய்பவள் தன் விஷயத்தில் கிறுக்காய் மாறி இருந்தாள்!

கதையின் ஒரு நாயகி காதலில் உளன்றுக் கொண்டிருக்க இன்னொரு நாயகியோ கண்ணீரில் உளன்றுக் கொண்டு இருந்தாள். அபிராமி! சிட்டுக்குருவியாய் சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தவள் சிறகொடிந்து மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். வீடு முன்பு போல் இல்லை. எல்லாம் தலை கீழாக மாறி இருந்த்தது. சுந்தரம் அவளது முகம் பார்ப்பதில்லை மாறாக அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதில் மும்முரமாய் இருந்தார். அவளது விருப்பம் பற்றி அவருக்கு என்றுமே கவலை இல்லை அவரது கவலை எல்லாமே அவரது கவுரவம் அவரது அந்தஸ்து தான். கனகாவும் அதே தான். சாவி கொடுத்த பொம்மை போல வீட்டை வளைய வருவாள். பேருக்கு ஒரு போய் சாப்பிடு, ஏன் இங்க உட்கார்ந்துட்டு இருக்க, நேரமாச்சி போய் படு. அவளுக்கு பார்த்து பார்த்து செய்யும் ஆச்சியையும் பறி கொடுத்தாயிற்று. தங்கை சிவகாமி யாரோடும் வாய் திறந்து பேசவே பயப்பட்டாள். ஷக்தி இல்லை என்றானது கூட இவ்வளவு வலிக்கவில்லை அவளுக்கு. ஆனால் இந்த வீட்டுக்குள் ஒவ்வொரு நாளையும் கடத்துவது பெரும் வேதனையை கொடுத்தது அவளுக்கு.

அன்று ஒரு வரன் வந்து இருந்தது. போட்டோவை கொண்டு வந்து மேஜை மேல் வைத்து விட்டு புதன் கிழமை சம்மந்தம் பேசி முடிக்க வாராங்களாம் என்று மொட்டையாக முடித்துக் கொண்டு போய் விட்டால் கனகா. மாப்பிள்ளை யார் ஏது எந்த தகவலும் அவளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போட்டோவில் இருந்த்தவன் கருப்பாக பெரிய உருவமாக நிறைய நகை அணிந்து இருந்தான். போட்டோவை பார்த்த அபி லேசாக சிரித்துக் கொண்டாள். "ஆச்சி, அம்மா, அப்பா எல்லாம் படிக்காதவங்க கேனத்தனமா நான் ஷக்தி மச்சானை கல்யாணம் கட்டிக்கிடனும்னு ஆசைப் பட்டாங்க. நான் ஆரம்பத்துலயே சுதாரிச்சு இருந்த்திருக்கணும். ஷக்தி மச்சான் எங்க நான் எங்க? எங்க இரண்டு பேருக்கும் ஏணி வச்சா கூட எட்டுமா? அவரு எம்புட்டு படிச்சிருக்காரு நான் பாத்தாம்ப்பு பெயிலு! சஞ்சனா அக்கா தான் ஷக்தி மச்சானுக்கு ஏத்த ஜோடி. நமக்கு இந்த மாதிரி ஒரு மைனரு தான் லாயக்கு. என்ன பண்றது இந்த உண்மை இப்ப தான் எங்க குடும்பத்துக்கே புரிஞ்சிருக்கு...." தனக்குத் தானே பச்சாதாபமாக பேசிக்கொண்டாள் அவள்.

அபி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப் பட்டு இருந்தாள். புதன் கிழமையன்று மட்டும் தன்னை பெண் பார்க்க வந்து விட்டார்கள் ஆனால் அந்த திருமணம் நடந்தே தீரும். அதன் பின்னர் தன் தாய்க்கு அமைந்தது போல ஒரு வாழ்க்கை. பணமும், நகையும், பட்டும், அவ்வப்போது உதையும் மிதியும். காலத்துக்கும் சமையலறையும் படுக்கையறையும்! தனக்கும் ஒரு மனது இருப்பது அதில் ஆசைகள் இருப்பது கடைசி வரை யாருக்கும் தெரியாமலேயே போகும். அப்படியான ஒரு வாழ்க்கை தேவையா? அதற்கு சாவதே மேல். எதையோ முடிவு செய்தவளாய் எழுந்து கதவை தாழ்ப்பாழிட்டுக் கொண்டாள் அவள்!

"உயிரே என் உறவே
உனை விட்டு போவதும் சாவதும் ஒன்றுதான்.

இரவே என் பகலே
இனி வரும் நாளெல்லாம் உன் விழி முன்புதான்.

பிரிவென்னும் துயர் தீண்டாமலே
துணை இருந்திடும் என் காதலே
இலக்கணம் ஏதும் பாராமலே
அடைக்கலம் நான் உன் மார்பிலே.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா"

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro