தீயாய் சுடும் என் நிலவு-14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


"அப்படியெல்லாம் எதுவுமே இல்லை அமுதா. என்னை முழுசா நம்பி நீ பொறுப்பை கொடுத்த. நான் நம்மளோட தொழில்னு முழுவீச்சா செஞ்சு முடிச்சேன். அவ்ளோ தான். " என்று சிரித்தாள் மிருதி.

"ஹ்ம்.. நீ ஈஸியா சொல்லிட்ட தி. ஆனா, உன் கை சமையலுக்கு  எவ்ளோ பேர்  அடிமையா இருக்காங்கன்னு உனக்கு தெரியாது. எவ்ளோ ஃபேர் சாப்பிட்டு உன்னை பாராட்டுராங்க தெரியுமா?" என்றான் அமுதன்.

"அப்டியா சொல்ற? எதுவும் நம்புற மாதிரியே இல்லையே?" என்றாள் மிருதி.

"அதுமட்டுமா? அதோட பிராஞ்சு தான் இது. அப்போ இங்கயும் நல்லா இருக்கும்னு எவ்ளோ கஸ்டமர்ஸ் வராங்க தெரியுமா?" என்றான் அமுதன்.

"சரி சரி சும்மா புகழறதை விட்டுட்டு வேற வேலையை பாரு போ" என்று விரட்டினாள் மிருதி.

"ஹிம்.. தி.. இன்னொரு ஹாப்பியான விஷயம். இங்க பக்கத்துலையே இன்னொரு ஷாப் நல்ல விலைக்கு வருது. வாங்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். நீ என்ன சொல்ற?" என்றான் அமுதன்.

"சூப்பர் நல்ல விஷயம் அமுதா. கங்கராட்ஸ்." என்றாள் மிருதி மனமகிழ்வோடு.

இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தவன்.

"உன்கிட்ட முக்கியமா பேசணும் தி." என்றான் அமுதன். ரெஸ்டாரன்ட்டில் புது உணவை எப்படி தயாரிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருந்தவளிடம்.

"ஹிம்.. இதோ முடிஞ்சது அமுதா. வரேன்" என்று வெளியில் வந்தவள்.

"என்ன சொல்லுப்பா?" என்றாள் கைகளை புடவையில் துடைத்தபடி.

"புதுசா ஷாப் சொன்னேன்ல.. அதை பத்தி தான்." என்று நிறுத்தினான் அமுதன்.

"ஏன் ஏதாவது பிரச்சனையா?" என்றாள் மிருதி.

"ஆமாம் சின்ன பிரச்சனை தான். ஆனா அதுக்கு ஒரு முடிவு பண்ணிருக்கேன்." என்றான் அமுதன்.

"என்ன முடிவு?" என்றாள்மிருதி புருவம் சுருக்கி.

"இல்ல.. ஏற்கனவே இருக்க ரெண்டும் ஷாப்பும் என் பேர்ல இருக்கு. நான் அஞ்சு ஆறு வருஷமா உழைக்கிறேன். ஆனா இந்த மூணு வருஷமும் நீ எடுதூக்கிட்டா சிரத்தைக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அதுக்கு உனக்கு நான் தர வெகுமதி. இந்த மூணாவது ஷாப் உன் பேர்ல தான் ரெஜிஸ்டர் பண்ண போறோம்" என்றான் மெதுவாய் மிருதியை பார்த்து.

"என்ன விளையாட்றியா அமுதா?" என்றாள் மிருதி.

"நான் சொல்றத முதல்ல முழுசா கேள்" என்றான் அமுதன்.

"அமுதா! நீ என்ன வேணா சொல்லு. இதுக்கு என்னால சம்மதிக்க முடியாது. நீ கஷ்ட்டபட்டு உழைச்சதை என் பேர்ல எதுக்கு வாங்கணும். முடியாது" என்றாள் மிருதி முடிவாக.

"இல்ல... நான் சொல்றதை இப்போ கேக்க போறியா இல்லையா?" என்றான் அமுதன் அதட்டலாய்.

எதுவும் பேசாமல் அமைதியாய் முறைத்தாள் மிருதி.

"அப்டி முறைக்காத." என்றவன்.

"இங்க பாரு. இதுக்கு இன்னொரு ரீசனும் இருக்கு. ஏற்கனவே ரெண்டு ஷாப் என் பேர்ல இருக்கிறதனால டாக்ஸ் பிரச்சனை பெருசா வரும். அதுவும் இல்லாம நான் ஒண்ணும் என் பணத்துல இந்த கடையை வாங்க போறதில்லை." என்றான் அமுதன்.

எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மிருதி.

"ரெண்டாவது ஷாப் வாங்க பணம் தேவை பாடுதுணு சொன்னப்பா வேணாம்னு சொல்லியும் கேக்காம உன் நகையை என்கிட்ட கொடுத்து வித்துக்க சொன்ன, ஞாபகம் இருக்கா? அதை நான் எதுவும் செய்யாமல் அப்படியே லாக்கர்ல வச்சிருந்தேன். இப்போ அதை வித்து தான் அட்வான்ஸே கொடுத்திருக்கேன்.

"அடப்பாவி." என்றாள் மிருதி.

"அதோட, மாசாமாசம் குறைஞ்ச பணத்தை எடுத்துகிட்டு முழு சம்பளமும் வாங்காம இருந்த. அந்த பணத்தை உனக்கு தெரியாம உன் பேர்ல ஒரு அக்கஔண்ட் ஓபன் பண்ணி போட்டு வந்திருந்தேன். ரெண்டு வருஷ சம்பளம் முழுசுமா இப்போ நிறைய இருக்கு. அதையும் சேர்த்தா இன்னும் கொஞ்சம் பணம் தான் மேற்கொண்டு தேவை படும். அதுக்கு நான் லோன் அரெஞ்ச் பண்றேன். நீ அடைசிக்க" என்றான் அமுதன்.

"எனக்கு என்ன சொல்றதுணு தெரியலை அமுதா" விழிகளில் கண்ணீரோடு.

"நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் சொல்றதை கேட்டா மட்டும் போதும். உனக்கு சேர வேண்டியதை தான் சேர்த்து வச்சிருக்கேன் தி. இப்போ நீ மட்டும் தனி ஆள் இல்ல. உனக்காக தேவதை மாதிரி ஒரு குழந்தை இருக்கா. இனி அவளுக்கும் சேர்த்து அவளோட எதிர்காலத்தை நோக்கி நீ ஓடனும். அதுக்கு இது ரொம்ப தேவை தி. நான் சொல்றதை கேளு. எதுவும் பேசாம நாளைக்கு என்கூட வா. உன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணி முடிச்சிடலாம்." என்றான் அமுதன்.

"ஸ்ரீகிட்ட பேசினியா? அவ என்ன நினைப்பா?" என்றாள் மிருதி.

"சொல்ல போனா, 'உன் பேர்லயே எல்லாம் ரெஜிஸ்டர் பண்றியே இதை அக்கா பேர்ல பண்ணலாம். அவங்களும் ஒரு பிடிப்பு கிடைக்கும்' ன்னு இந்த ஐடியாவை கொடுத்தௌ உன் தொங்கச்சி தான்" என்றான் அமுதன்.

"நீங்க ரெண்டு பெரும் கிடைக்க நான் ரொம்ப கொடுது வாசிறுகனும் அமுதா" என்றாள் அழுதபடி.

"போதும் அழுதது. நாளைக்கு ரெடி ஆகிடு" என்றான் அமுதன்.

"சரி சரி.. நீ கிளம்பு எனக்கு வேலை இருக்கு" என்றாள் மிருதி.

"ஹிம்.. போறேன். அதுக்கு முன்னாடி என் டார்லிங் எங்க? ஒரு முறை பார்த்துட்டு போறேன்" என்றான் அமுதன்.

"பேபி" என்று மழலை மொழியில் தேவதையின் குரல் கேட்க பின்னால் திரும்பினான் அமுதன்.

"டார்லிங் " என்று குழந்தையை தூக்கி தட்டாமாலை சுற்றினான் அமுதன்.

கன்னங்களில் மாறி மாறி மூத்த மழை பொழிந்தது அந்த பிஞ்சு இதழ்கள்.

"ஏன்... எத்..தை பா..ர்ர்...க்க பர..லை.." என்றது மழலை மொழியில் பாவமாக.

"சாரி! என் இளவரசிக்கு கோபமா?" என்றான் இவனும் பாவமாய்.

'ஆமாம்' என்றது சிறுகுழந்தை தலையை ஆட்டி.

"சரி.. நாம ஸ்ரீகிட்ட வீட்டுக்கு போலாமா?" என்றான் அமுதன் கொஞ்சலாய்.

"ஒஹ்! போ...தாம்ம்.. ஹை.. திதி ..கித்த போதாம்" என்றது குழந்தை கைகளை தட்டி.

இவர்களின் உரையாடலை பார்த்துக்கொண்டிருந்த மிருதி புன்னகைத்து தலையில் அடித்து கொண்டாள்.

"போய் திருட்டு தனமா ஐஸ்க்ரீம் தின்றதுக்கு இவ்ளோ அலப்பறை.. திருடுங்க... டேய்.. வீட்டுக்கு போயி ஸ்ரீயை டிஸ்டர்ப் பண்ணிங்க தொலைச்சிருவேன். அவ நைட் ஷிப்ட் போய்ட்டு வந்து டைர்யடா தூங்கிடு இருப்பா" என்றாள் மிருதி இருவரிடமும் ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரிக்கும் தொனியில்..

"நாங்க கூட தான் நைட் ஷிப்ட் பகல் ஷிப்ட் னு கடையை பார்த்துக்குறோம். எங்களை எங்க தூங்க விடுறாங்க" என்று முணுமுணுத்தான் அமுதன்.

"என்ன முணுமுணுப்பு?" என்றாள் மிருதி முறைத்து.

"ஹிம்.. ஒண்ணுமில்லை உன் தங்கைக்கு வாழ்க்கை. எங்களை சொல்லு" என்றான் அமுதன்.

அவன் பேசி கொண்டிருக்கும் பொழுதே மிருதி வயிற்றை பிடித்து கொண்டே சுருண்டு விழுந்து துடித்தாள் மிருதி.

"என்னாச்சு தி?" என்று வேகமாக ஓடி வந்தான் அமுதன்.

அனைவரும் ஓடி வர, மிருதியை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தான் அமுதன்.

தனது தாய் வலியில் துடித்தது சீருக்குழன்க்டையின் மனதில் பதிந்துவிட,

"அம்மா ஏன் அது..தா" என்றது குழந்தை விழிகளில் மிரட்சியுடன்.

"இல்ல ஒண்ணுமில்லடா? அம்மாக்கு ஜுரம். டாக்டர் பார்க்குறாங்க. எல்லாம் சரியாகிடும்" என்று அணைத்துகொண்டான்.

"அம்மா வேணும்" என்றது குழந்தை பாவமாய்.

"ஒண்ணுமில்லைடா. அம்மாக்கு கொஞ்சம் டையர்ட்டா இருக்குனு உள்ள தூங்கிட்டு இருக்காங்க. சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்" என்று சமாதானம் படுத்திக்கொண்டு இருக்கும் போதே, ஸ்ரீ வேகமாக உளே வந்தாள்.

"என்னப்பா ஆச்சு? அக்காக்கு எப்படி இருக்கு?" என்றாள் பதட்டமாய்.

"திதி.." என்று அவளிடம் தாவிக்கொண்டது குழந்தை.

"ஒண்ணுமில்லை டா. சித்தி இருக்கேன்ல. நீ என் மேல சாஞ்சு தூங்கு" என்றாள் ஸ்ரீ குழந்தையை லேசாக முதுகில் தடவி.

அவளின் பேச்சுக்கு கட்டுபட்டது போல் ஸ்ரீயின் தோளில் சாய்ந்து உறங்க தொடங்கியது.

"தாங்க் காட். நீ வந்த ஸ்ரீ. இல்லன்னா பாப்பாவை சமாளிக்கிறது ரோம்ப் கஷ்டமாகிருக்கும்" என்றான் அமுதன்.

"டாக்டர்ஸ் செக் பண்ணிட்டு இருக்காங்க. என்னன்னு தெரியலை நல்லா தான் பேசிட்டு இருந்தா. திடீர்னு ரொம்ப ஆழ ஆரம்பிச்சிட்டா" என்றான் அமுதன்.

"அமுதன். அக்காக்கு எதுவும் ஆகாது. நாம இருக்கோம்ல பார்த்துக்கலாம்" என்றாள் ஸ்ரீ.

"நம்மளை நம்பி வந்துருக்கா. அவங்க அப்பாவும் அம்மாவும் நம்மளை நம்பி இங்க விட்டுடு போய்ருக்காங்க. திக்கு எதுவும் ஆகக்கூடாது. பாவம் ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டு இப்போ தான் கொஞ்சம் சரியானா அதுகுல்லா.." என்றான் அமுதன் நா தழுதழுக்க.

"ஒண்ணும் ஆகாதுன்னு சொல்றேன்ல" என்றாள் ஸ்ரீ.                                                                            

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro