தீயாய் சுடும் என் நிலவு 27

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மெல்ல சிரித்தவன், "பரவால்ல. இதே நல்லாருக்கு" என்றான் தீரன்.

"நீங்க சீக்கிரமா போங்க. அந்த நேரம் நான் அவளுக்கு போன் பண்றேன். உள்ள போகாம கவனிங்க. அப்போ தெரியும் உங்க மிருதி யார்னு?" என்று சிரித்தான்.

"அப்படியா சொல்றிங்க?" என்றான் தீரன்.

"என் மேல சத்தியமா. உன்னை திகூட சேர்த்து வைக்கிறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிரும் போல இருக்கே" என்றான் நெற்றியில் அடித்து கொண்டு.

வாய் விட்டு சிரித்த தீரன், "ஓகே! ஓகே! நான் போறேன். அதுக்கு முன்னாடி வீ ஆர் ப்ரெண்ட்ஸ்" என்று கரம் நீட்டினான்.

தீரனின் முகத்தையும் கரத்தையும் மாறிமாறி பார்த்த அமுதன்.

"போச்சு.இ துக்கே இப்போ தான் வரியா? நான் உன்னை ஃப்ரெண்டாக்கி பல நாள் ஆச்சு. ஆள் வளர்ந்துருக்க அப்படியே கொஞ்சம் மேல காலியா இருக்க உன்னோட ஃப்ரைனையும் வளர்ந்துருக்க" என்றவனை தீரன் முறைத்தான்.

"ஓகே! கோவிச்சிக்காத என் ஃப்ரெண்ட்கிட்ட இப்படி தான் பேசுவேன்." என்றான் மெதுவாய் அமுதன்.

கலகலவென சிரித்த தீரன்.

"எனக்கு உண்மையாவே உன்னை ரொம்ப பிடிச்சிருக்குடா" என்று கட்டிக்கொண்டான்.

"சரி. நான் சொன்ன மாதிரி சரியா செய் பா." என்று தீரனை அனுப்பி வைத்தான்.

அமுதனின் போன் அடிக்க, போக இருந்த தீரனை நிறுத்தினான்.

"எப்பா நில்லு? ஏழரை கூப்பிடுது... நான் மட்டும் ஏன் வாங்கணும். நீயும் வா சேர்ந்தே அர்ச்சனை வாங்குவோம்." என்றான் அமுதன்.

"என்னடா சொல்ற?" என்று ஒன்றும் புரியாமல் அருகில் வந்து நின்றான் தீரன்.

"ம்ம். என் வருங்கால பொண்டாட்டி கூப்பிடறான்னு சொல்றேன்" என்றான் அமுதன் நக்கலாய்.

"யாரு ஸ்ரீஷாவா? நீ பேசு. அதுக்கு ஏன் என்னை கூப்பிடற?" என்றான் தீரன்.

"எது? எதுக்கு உன்னை கூப்பிடறேனா? எல்லா பொண்ணுங்களும் வருங்கால புருஷன்கிட்ட பேசினா என்ன கேப்பாங்க? ஆனா, இவ என்ன கேட்பா தெரியுமா? இரு நீயே கேளு" என்று அட்டெண்ட் செய்து, "ஹலோ! ஸ்ரீமா எப்படி டா இருக்க?" என்றான்.

"ஹிம் நல்லா இருக்கேன். அக்கா எப்படி இருக்காங்க? அக்காவும் மாமாவும் பேசிட்டாங்களா? நீ ஏதாவது ஹெல்ப் பண்றியா இல்லையா? டேய் நான் வரதுக்குள்ள அவங்க சேர்ந்து வாழ முடிவு செயலை அவ்ளோ தான் உனக்கும் எனக்கும் கல்யாணம் தேதி சொல்லாம தள்ளி போட்ருவேன் ஜாக்கிரதை" என்றதை கேட்டவுடன் அமுதன் முகம் அதிர்ச்சியில் அஷ்டகோணலாக, தீரனோ வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

'இருடா என்னை பார்த்தா சிரிக்கிற? இப்போ நீ மாட்டின' என்று யோசித்த அமுதன்.

"ஸ்ரீ டார்லிங்! அப்படில்லாம் சொல்லக்கூடாது. நா எவ்வளவோ தீரன் சார் அதாவ்து உங்க அக்கா வீட்டுக்காரர்கிட்ட சொல்லிக்கிட்டே தான் இருக்கேன். ஆனா, அவர் தான் நான் சொல்றதை காது கொடுத்தே கேட்க மாட்றார். இப்போகூட இங்க தான் இருக்கார்" என்றதும் தீரன் சிரிப்பை நிறுத்தி பேயறைந்ததை போல் அமுதனை பார்க்க. அவனோ கொக்கரித்து சிரித்தான்.

"என்னது மாமா கேட்க மாட்டேன்னு சொல்றாரா? அட எருமை அப்போ நீ ஒழுங்கா அவருக்கு புரியற மாதிரி சொல்ல வேண்டியது தான?" என்றதும் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான் தீரன்.

"அடியே! இதெல்லாம் ரொம்ப ஓவரு சொல்லிட்டேன். உன் மாமன் கேட்கலைன்னா நான் என்ன செய்ய அதுக்கு போய் என்னை தீட்ற? இந்தா நீயே சொல்லு அப்பவாவது அந்த மர மண்டைக்கு கேட்குதான்னு பார்க்கலாம்" என்று அவனுக்கு நையாண்டி காட்டிவிட்டு, "தீரன் இந்தாங்க ஸ்ரீஷா உங்ககிட்ட பேசனுமாம்" என்றான் பதுசாய்.

'அடப்பாவி நம்மளை மாட்டிவிட்டுட்டானே?' என்று யோசித்த தீரன் வாங்கி "ஹலோ!" என்றான்.

"ஹலோ மாமா! எப்படி இருக்கீங்க?" என்றாள் ஸ்ரீஷா.

'அடிப்பாவி உன் ஆருயிர் காதலன் இங்க இருக்கேன் என்னை ஒரு வார்த்தை நல்லா இருக்கியான்னு கேட்டியா? இப்போ இந்த நொன்னையை மட்டும் நல்லா இருக்கியான்னு கேக்குறியே?' என்று தீரனை முறைத்தான்.

அவன் முறைப்பத்திற்கான அர்த்தம் புரிந்து லேசாக புன்னகைத்து, "நான் நல்லா இருக்கேன் ஸ்ரீஷா. நீங்க எப்படி இருக்கீங்க?" என்றான் தீரன்.

"நல்லா இருக்கேன். அக்கா பாப்பா எப்படி இருக்காங்க?" என்றாள்

"ஹ்ம் ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்காங்க." என்று சிரித்தான்.

"சரி மாமா. அக்காகிட்ட ஏன் இன்னும் பேசலை? நீங்க ரெண்டு பேரும் உங்க பிரச்சனையை பேசி தீர்க்கணும்னு தானே நான் வெளிய வந்தேன். இன்னும் நீங்க பேசாம் இருந்தா எப்படி?" என்றாள் ஸ்ரீஷா.

"இல்ல ஸ்ரீஷா. அதுவந்து உங்க அக்கா என்னை கண்டாலே வேப்பங்காயை பார்த்தா மாதிரி பார்க்கிறா? அதான் என்ன பன்றதுன்னு தெரியாம அமுதங்கிட்ட பேசிட்டு இருக்கேன்." என்றான் தீரன்.

"மாமா! வேப்பங்காய் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு அவளுக்கு தெரியும் இருந்தும் ஏத்துக்க மாட்டா. ஏன்னா அக்கா பட்ட கஷ்டம் அது மாதிரி. ஆனா, அதுக்காக நாம அப்டியே விடமுடியாது. இதுல உங்க ரெண்டு பேரோட லைஃப் மட்டும் இல்ல. திஷா குட்டியோப்ட வாழ்க்கையும் இருக்கு. சோ அக்காக்கு புரியவைங்க. பேசுங்க. கெஞ்சுங்க. மன்னிப்பு கேளுங்க. கொஞ்சுங்க. என்னவோ ஒண்ணு பண்ணுங்க. அக்கா சரி ஆகணும்." என்றாள் ஸ்ரீஷா.

"சரிம்மா" என்று தலையாட்டினான் தீரன்.

"மாமா! ஏற்கனவே நான் ரெண்டு நாள் முன்னாடியே வந்துட்டேன். ஃப்ரெண்ட் வீட்டுல தங்கிருக்கேன். அக்காக்கு மட்டும் இது தெரிஞ்சுது அவ்ளோ தான் என்னை தொலைச்சிருவாங்க" என்றாள் ஸ்ரீஷா.

"என்ன ஸ்ரீஷா சொல்றிங்க?" என்றான் தீரன்.

"ஆமா. எனக்கு மூணு நாள் தான் டூர். சரி உங்க ரெண்டு பேருக்கும் பிரைவசி வேணும்னு தான் நான் வெளில தங்கிருக்கேன்." என்றாள் ஸ்ரீஷா.

"இன்னைக்கு கண்டிப்பா பேசிடுவேன். எப்படி இருந்தாலும் நீங்க நாளைக்கு வீட்டுக்கு வந்துடுங்க. நான் நாளை மறுநாள் ஊருக்கு போறேன்." என்றான் தீரன்.

"ஏன்?" என்றாள் ஸ்ரீ.

"எனக்கு இங்க வேலை முடிஞ்சுதும்மா. ஒபனிங்க்கு கொஞ்ச வேலை அங்க போய் பண்ணனும்" என்றான் தீரன்.

"அப்போ சரி. இன்னைக்கு கண்டிப்பா பேசிடுங்க. அமுதங்கிட்ட போனை கொடுங்க மாமா" என்றாள் ஸ்ரீ.

"சரி" தீரன்.

"டேய் அமுதா!" என்றதும் திடுக்கிட்டு பார்த்தான் அமுதன்.

"அடிப்பாவி கட்டிக்க போறவனை இப்படி கூப்பிடலாமா?" என்றான் அமுதன்.

"கட்டிக்கபோறவனை தான் அப்படி கூப்பிட முடியும்" என்றதும் போனை ஸ்பீக்கரில் இருந்து ஆப் செய்து காதுக்கு வைத்தான் அமுதன்.

"அமுதன் செல்லம். நீ என் டார்லிங். அதனால உன்கிட்ட நான் எப்படி வேணா பேசலாம் அதுக்கு லிமிட்டே கிடையாது" என்று ஸ்ரீஷா கூறியதும் விழிகள் விரித்து கேட்டு கொண்டிருந்தான் அமுதன்.

"ஹிம்" என்று ஒற்றை வார்த்தையில் சரி என்று கூற, "சரி நான் நாளைக்கு வந்துடுவேன். வந்தப்புறம் வருங்கால புருஷனுக்கு தர வேண்டிய மரியாதைய தரேன்" என்றதும் முகம் மலர்ந்தது அமுதனுக்கு.

"வச்சிட்றேன் பை" என்று வைத்துவிட்டாள்.

"சரி. நான் கிளம்புறேன் அமுதா" என்று தீரனும் கிளம்பினான்.

"சரி. நான் சொன்ன மாதிரி செய்." என்று அனுப்பி வைத்தான் அமுதன்.

மாலை எழு மணி மிருதியின் வீட்டு வாசலில்,

'ஹ்ம் இவன் பேச்சை கேட்டு வந்துட்டோம். வீட்ல மிரு இருப்பாளா? எப்படி பேச போறோம்? எதுவும் புரியலை?' என்று புலம்பியபடி வீட்டின் வாசலில் செருப்பை கழட்டினான்.

வீட்டினுள் நுழையாமல் வாசலில் கரங்களை கட்டிக்கொண்டு நின்றான்.

"நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

ஆயுள் காலம் யாவும்
அன்பே நீயே போதும்
இமைகள் நான்கும் போர்த்தி

இதமாய் நாம் தூங்கலாம்

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி

என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி"

என்ற பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தாள் மிருதி.

"ஹ்ம் என் பொண்டாட்டிக்கு குரல் இவ்ளோ அழகா இருக்கு அதை கூட தெரிஞ்சுக்காத மொக்கை பையனா இருந்திருக்கேன். சாரி மிரு. ஆனா இனி உன்னோட ஒவ்வொரு விருப்பத்தையும் ஏன் உன் அசைவையும் கூட ரசிச்சு விரும்ப போறேன். தெரிஞ்சுக்க போறேன்." என்று தனக்குள் கரைந்தவனின் கவனம் மிருதியின் குரலில் கலைந்தது.

"இவனை... எப்போ பாரு என்னை இம்சை பண்றதே வேலை. பக்கி எனக்கு பிரென்ட் ஆகிட்டானே என்ன பண்றது?" என்று தலையில் அடித்துக்கொண்டு அவளின் போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டாள்.

"ஹலோ!" என்றாள்.

"ஹலோ! என் தி செல்லம் என்ன பண்றாங்க?" என்றான் அமுதன் ஏதுமறியா குரலில்.

"டேய் பிராடு. குரல் ரொம்ப குழையுது?. என்னடா எருமை எதுக்கு போன் பண்ண?" என்றாள் மிரு.

பக்கென்று சிரித்துவிட்டான் தீரன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro