தீயாய் சுடும் என் நிலவு 3

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கூறிய நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்து விட்டிருந்தாள் மிருதி.

மனது ஏனோ படபடவென அடித்து கொண்டது. ஓராயிரம் முறை தனக்குள் இது சரி வருமா என்று கேட்டுக்கொண்டாள்.

'வேறவழி இல்ல.' என்று மனது உறுதி செய்ய சிலையாக அமர்ந்திருந்தாள்.

கைகடிகாரத்தை நோக்க மணி 3.00 என்றது.

வருடங்கள் மூன்றாய் கடந்து சென்றிருக்க, அவனின் வருகையை எண்ணி பரபரத்து உயிர் சிலிர்த்தெழுந்தது.

'எதுக்கு இப்போ ஓவரா எக்ஸைட் ஆகற? என்ன பேசனுமோ அதை மட்டும் பேசிட்டு கிளம்பிட்டே இரு.' என்றது மூளை.

அவளின் எண்ணங்களை கலைக்கும் விதமாக போன் அடிக்க எடுத்தாள்.

"ஹெலோ" என்றாள்.

"ஹலோ" என்ற மென்மையான குரலை கேட்டவுடன் உள்ளுக்குள் ஒரு உணர்வு தோன்ற, ஒரு நிமிடம் தடுமாறி அமைதியானாள்.

"ஹலோ. மிரு லைன்ல தான இருக்க?" என்றான் மீண்டும் மென்மையாய் தீரன்.

"ஹ்ம்ம்.. இருக்கேன் சொல்லுங்க" என்றாள் குரலில் எந்த உணர்வுகளையும் வெளி காட்டாமல்.

"சாரி மிரு" என்றான் மிருதுவான குரலில்.

இந்த அக்கறை நிறைந்த பாசமான விசாரிப்புகளுக்காக ஏங்கி ஒரு காலத்தில் தவம் கிடந்தது போய் இன்று பாறையாய் இருக்கும் மனதுக்குள் வேரிட நினைக்கும் செடியை முளையிலேயே கிள்ள நினைத்தாள்.

"எக்ஸ்கியூஸ் மீ. மிஸ்டர்.தீரன் என்னோட பேரு மிஸ்.மிருதி. சோ கால் மீ மிருதி. தட்ஸ் இட். எனக்கு நெருக்கமானவங்க தான் என்னை பெட் நேம்ல கூப்பிட முடியும்" என்றாள் காட்டமாய்.

"சாரி மிருதி. என்னை மன்னிக்கவே மாட்டியா? இந்த ரெண்டு வருஷமா உன்னோட மன்னிப்புக்காக காத்திட்டு இருக்கேன்." என்றான் உடைந்த குரலில்.

'என் உயிர் இருக்கிற வரைக்கும் உங்களை காதலிச்சிட்டே தான் இருப்பேன். ஆனா, நீங்க எனக்கு ஏற்படுத்தின காயத்துக்கு மருந்தே கிடையாது. மன்னிப்பும் கிடையாது' என்று நினைத்தவள்.

"நான் இறந்தப்புறமும் என் ஆத்மாகூட உங்களை மன்னிக்காது." என்றாள் மிருதி.

"மிருதி" என்றான் அவனுக்கே கேட்காத குரலில்.

"போதும் நிறுத்துங்க தீரன். இப்போ எதுக்கு போன் பண்ணிங்க? அதை சொல்லுங்க. எனக்கு வேலை இருக்கு." என்றாள் சுற்றி முற்றி காலியாக இருந்த அந்த காப்பி ஷாப்பை பார்த்துக்கொண்டு.

"அது வந்து மிருதி. நம்ம ஷாப் இங்க பெங்களூர்ல புதுசா ஒண்ணு ஓபன் பண்ண போறோம்." என்றான் தீரன்.

"ஹலோ! உங்க ஷாப். உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல." என்றாள் மிருதி வெடுக்கென்று.

உள்ளுக்குள் தீராமல் இருந்த ரணம் அவளின் வார்த்தைகளில் மேலும் கிழிந்து குருதி கொப்பளித்து கொட்டுவது போல் இருந்தது தீரனுக்கு.

"மிருதி. எதுக்கு இப்படி பேசுற? என் மேல அவ்ளோ வெறுப்பா?" என்றான் வலிகளை மறக்காமல்.

"அதுக்கும் மேல சொல்ல வார்த்தைகள் இல்லன்னு நினைக்கிறேன்." என்றாள் மிருதி வழிந்த கண்ணீரை துடைக்க கூட மனமில்லாமல்.

"ஷாப் ஓபன் பண்றத்துக்காக ஒரு முக்கியமான மீட்டிங்" என்றான் தீரன்.

"ஓஹ் ஓகே! அப்போ நாம இன்னொரு நாள் பார்க்கலாம்" என்றாள் மிருதி.

'எதையும் முழுசா கூட கேட்க மாட்றா. முந்திரிக்கொட்டை.' என்று மனதுக்குள் திட்டியவன்.

"இல்ல... முடிஞ்சுது. வந்துட்டு இருக்கேன். இன்னும் 40 மினிட்ஸ் ஆகும். அதை சொல்ல தான் கூப்பிட்டேன்." என்றான் தீரன்.

"ஹிம்.. பரவால்ல வாங்க. எனக்கும் இங்க பக்கத்துல ஒரு வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்" என்றாள் மிருதி.

"சரி" என்றான் தீரன்.

போனை கட் செய்தவள்.

'ஆயிரம் தான் அவன் மேல கோபமிருந்தாலும் மூணு வருசத்துக்கு அப்புறம் பார்க்க போறதால நீ அரை மணி நேரம் முன்னாடியே வந்துட்ட. ஆனா, அவன் வர இன்னும் நிறைய நேரம் இருக்கு என்ன பண்ணலாம்.?' என்று மனது கேட்க.

போனில் அடித்த பெயரை பார்த்தவுடன் முகம் மலர்ந்தது மிருதிக்கு.

சிரித்துகொண்டே போனை எடுத்தவள்.

"என்ன அம்மு உன் டார்லிய சாமாளிக்க முடியலையா?" என்றாள் குறும்பு மின்ன.

"யார் சொன்னது? நானும் என் டார்லியும் செம பெட். நாங்க பயங்கரமா எஞ்சாய் பண்றோம். நீ தான் இல்லை." என்று சிரித்தான் அவளின் உயிர் தோழன் அம்மு என்கிற அமுதன்.

"சொன்னாங்க. அங்க வீட்டு வாசல் முன்னாடி பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் வந்து நிக்கறாங்களா பாருங்க. உதைக்க" என்று சிரித்தாள் மிருதி.

"அப்படியெல்லாம் யாரும் இல்ல. எங்களை வீடு. நீ உங்க அவரை பார்த்துட்டியா?" என்றான் கிண்டலாக.

"போதும் நிறுத்துறியா?" என்றாள் விழிகளை சிரிப்புடன் உருட்டியபடி.

"போதும் உன் முட்டை கண்ணை உருட்டாத. என் டார்லி பயபட்றா பாரு. நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் அதானே உண்மை. அவரை பார்க்க தான அரைமணி நேரம் முன்னாடியே போயி யாரும் இல்லாத காபி ஷாப்ல உக்கார்ந்துருக்க?" என்றான் நக்கல் கலந்த கிண்டலுடன்.

"யாரு சொன்னா? இந்த மாச அக்கௌண்ட்ஸ் பார்க்கவே இல்ல. சரி அதையும் ஒரேடியா பார்த்துடலாம்னு தான் வந்தேன்." என்றாள் மிருதி.

"உனக்கு பொய் சொல்ல வராது தி" என்றான் அமுதன் கலகலவென சிரித்து.

"போதும் டா. என்னை ஒட்றதுக்கு தான் போன் பண்ணியா? மரியாதையா வை." என்றாள் மிருதி.

"ஏய் இல்லம்மா. இப்போ பேச போற விஷயதோட உன்னை பத்தியும் அவர்கிட்ட சொல்ல முடிவு பண்ணிருக்கியா இல்லையா?" என்றான் அமுதன் விளையாட்டுதன்மான பேச்சை நிறுத்தி அக்கறையுடன்.

"இல்ல அமு. இப்போதைக்கு இல்ல எப்பவுமே சொல்ல போறதில்லை." என்றாள் மிருதி முடிவாய்.

"தி நல்லா யோசிடி. அவர் செஞ்ச தப்புக்கு மூணு வருஷ தண்டனை போதும் டி. பாவம்." என்றான் அமுதன்.

"அதான் நானும் சொல்ட்றேன் அமு. அவருக்கு இந்த மூணு வருஷம் போதும். இனியும் என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு?" என்றாள் குரல் கம்ம.

"சரி. நான் அப்புறம் பேசுறேன் அம்மு. பை" என்று வைத்தவள் மனது லேசாகும் வரை அழுது தீர்த்தாள்.

என்றோ ஒரு நாள் அவனிடம் இருந்து எதிர்பார்த்து ஏங்கிய அதே புன்னகையுடன் அழகுடனும் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தான் தீரன்.

'மிரு உஷாரு. மாமா லேசு பட்ட ஆள் இல்ல. உன் வாழ்க்கைல மட்டும் இல்ல உன் மனசுலயும் முதல்ல இருந்து எப்பவுமே இருந்தவன் இருக்கபோறவன் இவன் தான். அதனால உன் மனசுல இருக்கறதை வெளிய காட்டாம பொறுமையா பேசு. வந்த காரியம் மட்டும் முடிஞ்சா போதும். வேற எதுவும் வேணாம்.' என்று நினைத்தவள் அவனிடமிருந்து விழிகளை பிரித்து வேறெங்கோ செலுத்தினாள்.

அவளின் முன் வந்து நின்றவன், கன்னத்தில் குழிவிழ சிரித்து "ஹாய் மிருதி" என்று கை குலுக்க கரம் நீட்டினான்.

கரம் நீட்டாமல் தனக்குள்ளேயே மனபோராட்டம் நடக்க, 'கை குலுக்குடி. முடியாது. அவன் ஸ்பரிசம் என்னை இன்னும் வீக் ஆக்கிடும்' என்று நினைத்தவள்.

இறுதியில் கரம் குலுக்காமல் கரம் கூப்பினாள் மிருதி.

மனது வலித்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் அமர்ந்தான் தீரன்.

"சொல்லு மிருதி." என்றான்.

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்தவள் விழிகளை மூடி உள் சுவாசம் இழுத்து விட்ட பின், தான் வர கூறியதின் காரணம் கூறினாள்.

அதை கேட்டபின் அதிர்ச்சி என்பதைவிட பேரதிர்ச்சியில் இருந்தான் தீரன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro