முன்னுரை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

" அனைவருக்கும் வணக்கம்
சிறந்த  சூழல் மனதியல் மேம்பாட்டாளர் விருதை எனக்கு அளித்த அறம் ஊடகக் குழுமத்திற்கு மிக்க நன்றி..
என் கல்லூரி நாட்களில் இருந்து மனதியல் சார்ந்து என்னால் இயன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்..

இந்த விருதைப்பார்க்கும்போது சீர்திருத்தப்பட்ட சிறை சிறார்களின் வாழ்க்கையும் , சிறையடைந்த  பெண்களுக்குக் கிடைத்த சிறகும் என் கண் முன்னே விரிகிறது ,  இன்னும்  பண்படுத்தப்படவேண்டிய புண்பட்ட மனங்களும் அநேகம் என்ற பொறுப்பும் புத்திக்கு உரைக்கிறது , இந்த விருது என் சூழலியல் பயணத்தில் நான்  தயங்கி நிற்கும்போது தூண்டுகோலாகவும்...  சோர்ந்து நிற்கும் போது ஒரு ஊன்றுக்கோலாகவும் இருக்கும். மேலும் இந்த  விருதை பிரேம் சார் மற்றும் அவர் மகன் துருவ் ப்ரேம் கைகளில் இருந்து பெறுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி...நன்றி..
விருதை வாங்கிய மித்ரா தனது பேச்சை முடிக்க..

தொகுப்பாளினி  " சமுதாயத்தின் குற்றங்களுக்கான மனம் சார்ந்த சூழலியல் பற்றிய உங்கள் கருத்து "  என மித்ராவின் முகம் பார்க்க..

மித்ரா " எந்த குற்றவாளியும் திடீரென்று வானத்தில் இருந்து  குதிப்பதில்லை , இதே சமுதாயதில்தான் அவர்களும் பிறந்து வளர்கிறார்கள். ஆனால் குழந்தைப் பருவத்தில் இருந்து அவர்கள் பார்க்கிற கேட்கிற நிகழ்வுகள் மற்றும் அவர்கள் எதிர் கொள்கிற சூழ்நிலைகள்தான் அவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கிறது ..
அதனால்தான் நம் குழந்தைகளுடைய சூழலை அகமும் புறமும் நேர்மையானதாகவும் , ஆரோக்கியமானதாகவும், வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது... " அதோடு எந்த தவறான சூழலிலும் மனதைச் சரியாக நிலைப்படுத்தும் தன்மையையும் மற்றும் தவறான சூழலை சரியானதாக மாற்றும் திண்மையையும் குழந்தைகளிடம்  நாம் உருவாக்க வேண்டும்  ... " என்று முடித்த மித்ராவிற்கு நன்றி கூறிய தொகுப்பாளினி ,

" துருவ் நீங்க சமீபதில் இயக்கி வெளிவந்த நெறி குறும்படம் குழந்தைகளின் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.. படத்தின் முடிவில் வன்முறையின் தீர்வை மக்களிடமான ஒரு கேள்வியா எழுப்பி இருக்கீங்க.. மக்களில் ஒருவனா உங்களோட கருத்து என்ன துருவ்.... "

" குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கான சட்டங்கள் மட்டும் அல்ல , இது வரை அளித்த தீர்ப்புகள் கூட திருத்தப் பட வேண்டும்... குற்றங்களை முழுதும் அழித்துவிடும்  ஆற்றல் கொண்ட தண்டனைகளைச் சட்டமாக்க வேண்டும்..
வன்முறை என்பது ஆற்றாமை ஏந்தும் ஆயுதம் .. வீரம் என்பது அறிவு தாங்கும் ஆயுதம், வன்முறைகும் வீரத்திற்குமான வேறுபாட்டை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.. மித்ரா மேடம் கூறியது போல எந்த சூழலையும் கையாளும் ஆளுமையுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும் "

துருவ் பேசியதை தொடர்ந்து தொகுப்பாளினி " ப்ரேம் சார்  உங்க மகனும் நீங்களும் ஒரே மேடையில் இருக்கீங்க... தரமான படைப்புகளை தயாரித்தும் மேலும் சிறப்பாய் நடித்தும் வரும் ஒரு  ஆழ்ந்த திரை ஆளுமை நீங்க , துருவ் இயக்கிய குறும்படம் பற்றியும் அதோடு மித்ரா அவர்கள் பெற்ற விருதைப் பற்றியும் சில வார்த்தைகள்... "  என்று பிரேமின் முகம் பார்க்க..

பிரேம் பேச ஆரம்பிதார் " மித்ரா வாங்கிய விருத்தாகட்டும் ,  துருவ் எடுத்த குறும்படமாகாட்டும் இரண்டின் மையப்புள்ளியும் ஒன்றுதான். ஆனா இதில் மித்ராவின் அனுபவம் என்பது  பாதிக்கப்பட்டவர்களுடனான நேரடி அனுபவம் அதோடு அவர்களுடன்  பயணித்த உழைப்பும் பெரிது , மித்ரா கூறியது போல்.. நாம் வாழும் சூழல் தான் நம் மனதைக் கட்டமைக்கிறது, அதனால் எதிர் கால தலைமுறைகான சூழலை நன்முறையில் அமைத்து கொடுப்பது நம் கடமை .. என்றவர் ,

" மித்ரா உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் " உன்னுடைய  கரியர் , குடும்பம் , இந்த சமூகத்திற்கான செயல்பாடுன்னு .. பன்முகத்தோடு பயணிக்கிறது எளிதல்ல " என்று கூறி சில நொடி இடைவெளியில் மீண்டும் தொடர்ந்தார்..

" அடுத்து துருவ் ... துருவ் ' காலேஜ் ப்ராஜெக்ட் காக ஷார்ட் பிலிம் பண்ணிருக்கேன் பா ' ன்னு சொன்னான், சின்ன பையன்தானே..  சிறு சிறு குறைகள்  இருக்கும்னு நினச்சுத்தான் பார்க்க ஆரம்பிச்சேன் ஆனா பார்க்க ஆரம்பிச்ச இரண்டாவது நிமிடத்தில் அந்த படம் என்னைக் கதைகுள்  மூழ்க வச்சு முடியும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருச்சு. துருவோட இருபது வயசுல இவ்வளவு புரிதலுடன் ஒருகுறும்படம் எடுத்தது எனக்கு பெரிய மகிழ்ச்சி "
என்றவர் அடுத்து மித்ராவிடம் தொடர்ந்தார்..

" உன்னை பார்த்ததும் ஏற்கனவே எங்கேயோ பார்த்தது போல் ஒரு நினைவு  , ஒருவேளை என்னோட படத்தில் ஒர்க் பண்ண  ஹீரோயின் யாருமோனு நினச்சேன்... இதைப் பிரேம் கூறிகொண்டிருக்கும் வேளையில்.. துருவ் ப்ரேமை சற்றே இடித்து.. " பா உன்னோட படத்துல எங்க பா இவ்ளோ அழகான ஹீரோயின்லாம் நடிச்சாங்க..
என ரகசியமாய் சிரிக்க  ... பிரேமும் முறைத்து சிரித்து சமாளித்து பின் மித்ராவிடம் ,
" நீங்க ஒரு நாலு அஞ்சு வருசத்துக்கு முன்னாடி என்னோட ' நீலன் ஆலா ' படத்துக்கு ஃபஸ்ட் லுக் போஸ்டர் ரெடி பண்ணீங்க நினைவிருக்கா மா.." என்று கேட்க
மித்ரா "ஆமாம்" என்பதாய் தலையசைத்தவுடன்..
பார்வையாளர்களைப் பார்த்துப்  பேச ஆரம்பிதார்...

" அப்போ மித்ராவை பார்த்த போது சின்ன பொண்ணா இருந்தாங்க
ஃபஸ்ட் லுக் போஸ்டர் ரெடி பண்ற  அளவுக்கு அனுபவம்  இருக்குமான்னு சந்தேகம்  இருந்தது .. ஆன  இவங்க  ஒர்க் பார்த்ததும் திருப்தியா இருந்தது... இப்பவும் 'நீலன் ஆலா ' இமேஜ்தான் என்னோட மோஸ்ட் ஃபேவரிட் " என்று கூறவும்

மித்ரா குறும் புன்னகையுடன் " நன்றி ண்ணா " எனக்கூறி
துருவிடம்  " தம்பி உங்க இயல் குறும்படம் பார்த்தேன்.. தவிற்கவே கூடாத சிறந்த படைப்பு... மேலும் மிக நுற்பமாவும் தரமானதாகவும் இயக்கியதற்கு .. வாழ்த்துக்கள் " எனக்கூற..

ப்ரேமோ வரையறுக்கப்பட்டது போன்ற சூழலை சற்றே இயல்பாகவும் இனிமையாகவும் மாற்றும் நோக்கில், மிதிராவிடம்  " அதென்னமா.. நான் உனக்கு அண்ணா என் மகன்  தம்பியா..
அதெப்படி.. " என அதிமுக்கிய கேள்வியை எழுப்பும் பாவனையில் கேட்க... அதை  எதிர்பாராத மித்ரா குறுநகையும் குழப்பமுமாக விழித்த இடைவெளியில் ,

துருவிடம் " மித்ரா எனக்கு தங்கச்சினா உனக்கு அத்தைதான.. " என சிரத்தையான தொனியில் குறும்பாய் கேட்க ..

துருவோ  ப்ரேமிடம் ரகசியக் குரலில்  "ஆனாலும் நீ ரொம்ப பண்ற பா... உன்னை அண்ணானு சொல்லிட்டாங்கன்னு காண்டுல என்னைக் கோர்த்து விடுறியா.. " என்று கேலியாய் கேட்டுவிட்டு சற்றே குரல் உயர்த்தி ,

" அத்தையா ?  இது போங்கு ..  நான் அத்தையா ஏத்துக்கமாட்டேன்
எனக்கு அத்தையா இருக்கனும்னா அவங்களுக்கு கண்டிப்பா பொண்ணு இருக்கனும் " என்று கன்னம் செறிந்த மெல்லிய சிரிப்பில் பரிகசிக்க ..

தொகுப்பாளினியோ " துருவ்.. மித்ரா மேடம்கு பொண்ணு இருந்தா அத்தைனு கூப்பிடுறேன்னு சொல்லிருக்கீங்க.. பேச்சு மாறக்கூடாது "  எனப் புதிர்போட .. இதை எதிர் பார்க்காத துருவ் விழிசுருக்க.. அதை அடுத்து தொகுப்பாளனோ...
மித்ராவின் அனுமதியோடு மித்ராவின் மகள் தூரிகா வை மேடைக்கு அழைத்து வர...

பட்டுத் தூரிகை ஒன்று காற்றில் மிதந்து வருவது போல் எட்டு வயதை தொட்ட தூரிகா.. எட்டு வைத்து நடந்து வந்து மேடை ஏறிய தருணம் அங்கே பனிக்காற்று சூழ்ந்தது போல் சிறு பரவசம் தோன்றி துருவ் உற்பட அனைவர் முகத்திலும் புன்னகையைப் பூசியது ..

தூரிகாவை பார்த்த துருவ்  " போங்கப்பா இதுவும் போங்கு.. இது பொண்ணு இல்ல பாப்பா.. இந்த  பாப்பா பெரிய பொண்ணாகறதுக்குள்ள எனக்கு வயசாகிடும் " என வம்பளக்க..

தொகுப்பாளனோ.. " ப்ரோ பெரிய பொண்ணுங்களுக்கு எல்லாம் அப்புறம் ப்ரப்போஸ் பண்ணலாம்.. முதல்ல  இந்த  பாப்பாவுக்கு உங்கள பிடிக்குதான்னு கேளுங்க.... " எனக்கூற

தூரிகவை பார்த்த துருவ்..
தூரிகாவின் உயரத்திற்கு  தகுந்தாற்போல்  தானும் தரையில் 
ஒருகால் மடக்கி ஒருகால் ஊன்றி அமர்ந்தவாறு " பாப்பா நீங்க ரொம்ப க்யூட்டா இருக்கீங்க... " எனக்கூற..

தூரிகாவும் " தேங்க்ஸ்.. நீங்களும் க்யூட்டா இருக்கீங்க... "  என கற்கண்டுக் குரலில் பதில் கூற...

துருவ் அந்த க்யூட் என்ற வார்த்தை தந்த பெருமிதத்தில் காலரை தூக்கிவிட்டு " தேங்க்ஸ் பாப்பா... என்னை உனக்கு புடிக்கும் தான .. " எனக்கேட்க..

தூரிகாவோ தன் கருந்திராட்சை  கண்மணிகள் மின்னி முறைக்க..  " ம்ஹூம் ... பிடிக்காது என  தலையை  இருபுறமும் அசைக்க..

துருவ் உற்பட அனைவரும் துணுக்குற்று தூரிகவைப் பார்க்க..

தூரிகாவோ தொகுபாளைனை ஒரு பார்வை பார்த்து "  அதோ அந்த அங்கிள் கூட  சேர்ந்துகிட்டு நீங்க கேலி பண்றீங்க " அதான் உங்களைப் பிடிக்கலன்னு சொன்னேன் எனக்கூற ...

துருவ்.. தொகுபாளைனை கண்கள் இடுக்கி முறைத்து  " இதுக்குத்தான் நான் யாரிடமும் ப்ரபோஸ் பண்ணறதே இல்ல.. ஆனா இன்னைக்கு இந்த பாப்பாட்ட பல்ப் வாங்க வச்சிட்டீங்களே ப்ரோ " என்று கூற

தொகுப்பாளினியோ " துருவ் நிஜமாவே இதுதான் ஃபஸ்ட் ப்ரப்போசலா " எனக்கேட்க..

துருவோ "அம்மா சாத்தியமா இதுதாங்க முதல் ப்ரப்போசல் " எனக்கூற

ப்ரேமோ  அதை நம்பாத தொனியில் " கடவுளே என் ஒய்ஃப நீதான் காப்பாத்தனும் " என மேலே பார்த்து இரு கைகளையும் விரிக்க ..

" அப்பா உன்ன ..... " என்று செல்லக்கோபத்தோடு நெருங்க ...
ப்ரேம் சிரித்துக் கொண்டே விலகி..

" இந்த பாப்பாவுக்கே உன்னை புடிக்கலையே ..
உனக்கெல்லாம் எந்த பொண்ணு வாழ்க்கை கொடுக்கப்போகுதுன்னு தெரியலையே.. " என வம்பிலுக்க..

" அப்பா சும்மாஇறேன் பா... ஏம்பா நீ.. " சற்றே கெஞ்சலுடன் துருவ் தன் தந்தையின் தோளை பற்ற...

இந்த தந்தை மகனுக்குள் நடக்கும் இயல்புகளைக் கண்டு மித்ரா சிரித்துக் கொண்டிருக்க ...
மேடையிலும் சிரிப்பலைகள் மிதந்தது..

ஆனால் ... தூரிகா துருவை பிடிக்கவில்லை என மறுத்துத் தலை அசைத்ததால் இவர்களின் முகங்களில் எழுந்த  சிரிப்பலைகள்
எதிர் காலத்தில் பருவம்  கொண்ட தூரிகா
துருவை  பிடிக்கும் என காதலால் நெருங்கினால்... இப்போது மேடையில் சிரித்துக்கொண்டிருக்கும் துருவ் உற்பட , மித்ரா மற்றும் ப்ரேமின் சிரித்த முகங்கள் எப்படி மாறும் ...

இந்த சிரிப்பிற்கும்... எதிர் காலத்தில் ஏற்படப் போகும் அவர்களின் முகமாற்றத்திற்கும் இடையே நிகழும் நிகழ்வுகளும்.. அதன் பிறகு ஏற்படும் திருப்பங்களும்தான் இந்தக் கதை ....

இருபதிற்கும் எட்டிற்கும் இடயே உள்ள பனிரெண்டு ஆண்டு இடைவெளியை
எதிர் காலத்தின் காதல் அடைக்குமா?

நாட் காட்டி இதழ்
கூறும் தினத்தில்
கடிகார  முட்கள்
நகரும் கணத்தில்
கால இடைவெளி
நெருடும் மனத்தில்
விடை அறியா
இடைவெளியை
காதலெனும்
அடைமழை
அடைத்திடுமோ..?

- வாணிகா நவின்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro