10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அடுத்த நாள் கலை விழாவிற்காக அனைவரும் பாரம்பரிய உடையில் வர வேண்டும் என்று கூறியதால் ஒரு இளஞ்சிவப்பு சட்டையும் வேஷ்டியும் அணிந்தவன் தன் கை காப்பை சரி செய்தவாறே கிழிறங்க அவன் வருவதை பார்த்த லட்சுமி அம்மா அவனிற்கு திருஷ்டி கழித்தவர் "அப்டியே ராசாவாட்டம் இருக்க தம்பி .பத்திரமா போயிட்டு வாயா"என்றவர் அவனுக்கு வழிவிட ஒருமுறை அவன் எண்ணம் இன்ற சைந்தவி சேலை கட்டி இருப்பாளோ என்று எண்ணமிட்டது .

பின் என்றும் அவன் உள்ளே வந்ததும் செல்லும் அறைக்கு சென்றவன் ஒரு 10 நிமிடம் கழித்து மீண்டும் வெளியே வந்து தன் வாகனத்தை கிளப்பியவன் வேகமாகவே கல்லூரிக்கு வந்திறங்கினான்.வந்து வண்டியை விட்டு இறங்கியவனின் கண்களிற்கு முதலில் கிடைத்த தரிசனமே சைந்தவியுடையது தான் .

நடுவில் மட்டும் கிளிப் குத்தப்பட்டு விரித்து விட பட்ட கருங்கூந்தலும்,சற்று பூசினாற்போன்ற அவள் தேகத்திற்கு பாந்தமாய் பொருந்தியிருந்த அவன் அணிந்திருந்த அதே வண்ணத்தில் பட்டு சேலையும்,மையிட்ட கண்களும் ,புருவத்திற்கு மத்தியில் ஒற்றை கல் பொட்டும் அதற்கு மேல் மெல்லிய கீற்றாய் சந்தனமும் ,அவள் அசைவிற்கு அசையும் காதணிகளும்,முன்பின் சேலை கட்டாததால் அவ்வப்போது அவள் தடுக்கி பின் சீர்செய்து கொண்டு வரும் நடையும் அவனை சிலை ஆக்க அவன் அருகில் வந்தவள் கோபமாக முறைத்து கொண்டு நின்றாள்.

அவள் முறைப்பதை கூட கவனிக்காதவன் அவளை பார்வையால் பருகி கொண்டிருக்க அதை கவனிக்காத அவள் அவன் தலையில் நட்டென்ன்று தட்டி அவனை நிகழ்விற்கு கொண்டு வந்தால் .

அவள் அடித்ததில் சுய நினைவிற்கு வந்தவன் அவள் முறைப்பதை பார்த்து "அய்யயோ நாம பச்சயா சைட் அடிச்சுட்டோமே அதுக்கு தான் மொறைக்கிறாளோ "என்று பார்க்க

அவளோ"நீ இப்டி பண்ணுவேன்னு நெனச்சு கூட பார்க்களடா,ஏன்டா இப்டி பண்ண ?"என்று வினவ

அவனோ "செத்தோம் "என்று மனதில் நினைத்து கொண்டவன் "என் .....என்னாச்சு நா என்ன பண்ணேன் ?"என்க

அவளோ "ஏன் உனக்கு தெரியாதா நீ பண்ண வேலை ?"என்க

அவனோ "ஹே சத்தியமா எதை பத்தி பேசுறேன்னு தேரிலேடி என்னனு சொல்லு "என்க

அவளோ "ஏன்டா பாட்டு போட்டில என் பேர குடுத்து வச்சுருக்க ??இப்போ ஸ்டேஜ்க்கு கூப்பிடுறானுங்க பயமா இருக்குடா " என்க

அவனோ மெருமூச்சு விட்டவன் அவள் உதட்டை பிதுக்கி கொண்டு நிற்பதை பார்த்து முறுவலித்தவன் அவள் அருகில் சென்று அவள் தோளில் கை போட்டு கொண்டே அவளுடன் நடந்தவன் "இதோ பாரு சது அன்னைக்கு என் phonelah கை தவறி வாய்ஸ் ரெக்கார்டர் on ஆயிருச்சு அப்போ உன் வாய்ஸ் அதுல ரெகார்ட் ஆயிருந்துச்சு எவ்ளோ மெல்டின்காஹ் இருந்துச்சு தெரியுமா உன் வாய்ஸ்" என்றவன் குரலும் அவன் அனுபவித்த அந்த ரம்மியமான மாலையின் நினைவில் மென்மையாக ஒலிக்க

அதை நம்பாதவள் "நெஜம்மா என் வாய்ஸ் நல்லா இருக்கா??ஜெயிப்பேனா பாடுனா ??"என்க

அவளை தன் முன் நிற்க வைத்தவன் "ஜெய்குறோமோ தோக்குறோமோ எப்பவுமே முயற்சி பண்ணனும் .முயற்சியே பண்ணாம எனக்கு கெடைக்காது வராதுன்னு நெனச்சுட்டு இருந்தா ஒன்னும் கெடைக்காது .நீ நல்லா பாடுற உன் திறமைய இவ்ளோ நாளா நீயே வீணாக்கிருக்க "என்று பேசி கொண்டிருக்க அடுத்து அவள் பாடுவதற்கான முறை வந்ததால் அவள் பெயர் ஒலிபெருக்கியில் கூற பட்டது.

அதில் அவள் கையில் நடுக்கம் படர அவள் கையை பற்றியவன் "நான் இருக்கேல உன்னால முடியும் போ போய் தைரியமா பாடு "என்க அவன் கண்ணில் தெரிந்த உறுதி அவளையும் தொற்றி கொள்ள மேடை ஏறி சென்றால் .

அவள் பாட்டு போட்டியில் கலந்து கொள்வதை பார்த்த வினீஷாவும் ,பூஜாவும் "டேய்ய் அவ பாடுவாளடா ?"என்க

வித்யுத் "கேளு தெரியும் "என்று அவளுக்கு thumbs up காட்டினான் .ஒரு முறை கண்களை மூடித்திறந்தவள் தனக்கு பிடித்த பாரதியார் பாடலில் ஒன்றான நின்னை சரணடைந்தேன் பாட்டை பாடினால் .

"நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்

என்னை கவலைகள் தின்ன தகாதென..

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்

குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு

நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்

துன்பம் இனி இல்லை, சோர்வில்லை

சோர்வில்லை, தோற்பில்லை

நல்லது தீயது நாமறியோம்

நாமறியோம் நாமறியோம்

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்"

என்று அவள் பாடி முடிக்க அவள் குரலில் அந்த மொத்த அரங்கமும் திளைத்திருக்க சாயவா வேண்டாமா என்று சுவற்றின் மேல் பூனையாய் இருந்த வித்யுத்தின் மனது அவள் பாடிய பாட்டில் அவளை சரணடைந்து விட்டது .

பின் அரங்கமே அதிரும் வண்ணம்கரதோஷம் எழ அதில் உயிர்ப்பு பெற்றவனின் கண்ணில் தெரிந்த அவளை பார்த்தவன் மனதில் "ஐ realised இட் சது ஐ லவ் யு "

என்று நினைத்து கொண்டவன் அவள் இறங்கி வர நூலிடைவெளியும் அவளை விட்டு பார்வையை நகர்த்தாதவன் அவள் அருகில் வந்ததும் அவள் கைகளை பற்றி தன் கையுடன் கோர்த்து கொண்டான் .

அவள் இருந்த பதட்டமான நிலைக்கு அவளுக்கும் அது ஆதரவாய் இருக்க அவளும் அவன் கரங்களை பற்றி கொண்டால் .அவர்கள் கையை பார்த்த நண்பர்கள் தங்களுக்குள் பார்வை பரிமாற்றம் நடத்திக்கொள்ள சரணோ"மாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே "என்று பாட அவன் குரலில் பின்னே

திரும்பியவள் "என்னடா மாட்டிக்கிச்சு"என்று வினவ

அவன் "அதுவா சையு ......"என்று அவன் கூறுமுன் அவன் எதை கூற வருகிறான் என்று யூகித்தவன் ஓடி சென்று தன் கையால் அவன் வாயை பொத்தியவன்

அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் "மச்சி இன்னைக்கு நானே சொல்லுரேன்டா please ஒளராதடா "என்று கூறியவன் நிமிர

சைந்தவியோ இவர்களை வினோதமான பார்த்து கொண்டிருந்தவள் "என்னடா நடக்குதிங்க ?"என்று வினவ தன் 32 பல்லையும் காட்டி சிரித்த

வித்யுத் "அது வந்து வந்து சது bikela சாவி மாட்டிக்கிச்சாம் அதான் இப்போ தான் கவனிச்சானாம் போய் எடுக்க போறேன்னு சொல்றான் "என்னடா மச்சான் என்க அவனும் மண்டையை மண்டையை ஆட்டினான் .

வித்யுத்திடம் திரும்பியவள் "நீ இன்னைக்கு ஒரு மார்கமாவே தான்டா இருக்க என்னனு கண்டுபுடிக்குறேன் "என்றவள் திரும்ப அங்கே பிற போட்டிகளுக்கான அழைப்புகள் விடுக்கப்பட மற்ற நண்பர்கள் களைந்து சென்றனர் .

வித்யுத் இன்று அவளுடன் இருக்கும் நிமிடங்களை புதியதாய் உணர்ந்தான் .அவள் பேசுகையில் அவள் கொடுக்கும் ஒவ்வொரு முகபாவனைகளையும் ஆராய்ந்து நோக்கினான் .அவனுக்கு அவனே புதியதாய் தெரிந்தான்

"அன்பே நீ என்

விழிகளில் விழுந்தாய்

என் மொழிகளில் கலந்தாய்

சிரிப்பினை தொலைத்திருந்தேன்

மௌனமெனும் சிறையினிலே அடைந்திருந்தேன்

மெல்லிசையாய் நீ வந்தாய்

மெல்ல என்னை ஆக்ரமித்தாய்

ஓய்ந்து கரையில் நானிருக்க

ஓயா நதியாய் நீ இருக்க

கரைந்து விட்டேனடி

கர்வத்தை களைந்து விட்டேனடி

புதியதாய் பிறந்துவிட்டேனடி

காதலை உணர்ந்துவிட்டேனடி கண்மணியே "

என்று நினைத்தவன் எனக்கெல்லாம் கவிதை வருதே மொத்தமா மாத்திட்டா ராட்சசி என்று அவளை பார்க்க அவளோ ரசித்து ருசித்து ஐஸ் கிரீமை சாப்பிட்டு கொண்டிருந்தாள் .

பின் மாலை நேரம் வர அனைத்து போட்டிகளின் முடிவுகளும் வெளியிட பட்டது ஆடல் போட்டியில் சரண் ஷ்ரவன் ஜோடியாய் இணைந்து ஆடி முதல் பரிசு பெற்றிருந்தனர்.ஓவிய போட்டியில் பூஜா முதல் இடத்தையும் வினீஷா இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தனர் .

அடுத்து பாட்டு போட்டிக்கான முடிவுகள் வரவிருக்க சைந்தவி வித்யுத்தின் கரத்தை இறுக பற்றி கொண்டால் .கடைசி இரு நிலையும் 3 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணிற்கும் 2 ஆம் ஆண்டில் ஒரு பையனிற்கும் செல்ல முதல் பரிசை அறிவிக்குமுன் count down ஆரம்பித்தது கண்களை இறுக மூடி கொண்டால் சைந்தவி 10 ,9 ,8 ,7 ,6 ,5 ,4 ,3 ,2 ,1 and the winner is 4th year student சைந்தவி

என்க வித்யுத்தும் இவளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு கத்தி விட்டனர் .பின் மேடைக்கு சென்றவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியுடன் பரிசை வாங்கி கொள்ள அவளது அந்த மகிழ்வான முகத்தை அவளே அறியாவண்ணம் தன் போனில் புகை படமும் தன் மனதில் அழியா படமும் எடுத்து கொண்டான் .

பின் அனைவரும் வீட்டிற்கு செல்ல கிளம்ப அவனுடன் scootyயை எடுத்து கொண்டு வந்தவள் அவனோடு உருட்டி கொண்டே அதை வெளியில் எடுத்து வர அவள்"டேய்ய் நா பரிசு வாங்குவேன்னு நினைக்கவே இல்லடா .அவுங்க 1st prizeனு சொன்னதும் சும்மா ஜிவ்வுனு இருந்துச்சு தெரியுமா இது வரைக்கும் படிப்பை தவிர்த்து எதுக்குமே நா பரிசு வாங்குனதில்லடா இது தான் first time அண்ட் இதுக்கு முழுக்க முழுக்க காரணம் நீ தான்" .என்று அவள் பேசிக்கொண்டே இருக்க மழையும் தூர ஆரம்பித்தது .

மழையை கண்டு மேலும் குதூகலமானவள் "இன்னைக்கு என் lifelaye மறக்கவே மாட்டேன்டா friendsku தேங்க்ஸ் சொல்ல கூடாது ஆனா நா இன்னைக்கு உனக்கு சொல்லியே ஆகணும் thank you "என்று அவள் அவன் கண் பார்த்து கூற

அவனோ "ஐ லவ் யு சது"என்றான் .பேசி கொண்டே இருந்தவள் அவன் கூறியதை கேட்டதும் அமைதியாகிவிட மழை பேரிரைச்சலுடன் வெளுத்து வாங்க துவங்கியது . 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro