26

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அதிதிக்கு அவன் கையின் வருடல் பழக்க பட்டதை போல் இருக்க அன்று அவன் குரலும் பழக்க பட்டதை போல் இருந்ததை அவள் எங்கே என்று யோசிக்கும் போது அவள் நெற்றியில் ஒரு மழைத்துளி விழ தன் நெற்றியை வருடியவளுக்கு அன்று அவளுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தவனின் ஞாபகம் வர அது இவன் தான் என்று இன்று அறிந்து
கொண்டால் .அவளுக்கு கோபம் வரவில்லை காரணமின்றி உதட்டில் ஏனோ புன்னகை விரிந்தது .

அவனோ அவள் புன்னகையின் அர்த்தத்தை உணராது அவள் தோளை தொட்டவன் "ஹே அதி என்ன சிரிக்குற ?"என்க

அவளோ மனதில் "மவனே kiss பண்ணிட்டு எதுவும் தெரியாத மாறி இவ்ளோ நாலா இருந்துருக்கு நீ உன்ன..... ஆஹான் இப்போ காமிச்சுக்க கூடாது உன்ன கவனிக்க வேண்டிய நேரத்துல கவனிச்சுக்குறேன் பிராடு "என்று

நினைத்தவள் அவனிடம் "ஒன்னும் இல்லடா மழை வருதுல அதான் குஷி ஆயிட்டேன் "என்க

அவனோ "நா தான் அப்போவே சொன்னேன்ல ஐஸ் கிரீம் வேண்டாம்னு இப்போ பாரு மழை வந்துருச்சு நாளைக்கு ஏதாச்சும் காச்சல் அடிக்குது தல வலிக்குதுன்னு சொல்லு அப்டியே உன்ன "என்று அவள் கழுத்திற்கு கையை கொண்டு செல்ல

அவளோ "ஹலோ அதெல்லாம் நா ஸ்ட்ரோங் பாடி ஒன்னும் ஆகாது "என்று கையை மடக்கி இல்லாத அர்ம்ஸை காட்ட அடுத்த நிமிடம் "ஹச்சு" என்று அவள் தும்ம

அவனோ "ஆங் ட்ரைலர் ஸ்டார்ட் ஆயிருச்சு இனி nightuh மெயின் picture தெருஞ்சுரும் "என்க அவள் "ஈஈ" என்று பல்லை காட்டி இளிக்க மழையும் வெளுத்து வாங்க ஆரம்பித்ததை பார்த்தவன் இனி என்ன செய்வது என்று யோசிக்க அவனிடமோ ஒரு ஜெர்கின் இருந்தது.

அவள் அடுத்தடுத்து தும்முவதை பார்த்தவன் சடாலென்று அவள் கையை பிடித்து அருகிழுத்தவன் அவள் "ஹே ஹரி என்ன...."என்க அவனோ அவளை பார்த்து "ஷ்ஷ்ஷ் "என்று அவள் இதழில் தன் விரலை வைத்து "அதி மழை செமயா பெய்யுது உனக்கு தும்ம வேற செய்யுது எனக்கும் மழை ஒத்துக்காது சோ இந்த ஜெர்கின தலைக்கு மேல போட்டுக்கலாம் ரெண்டு பேரும் தள்ளிட்டு போயிரலாம் cycleah கொஞ்சம் தூரம் தான "என்க அவளுக்கு அவன் பேசிய எதுவும் காதில் விழவில்லை அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் .

அவள் அவனையே பார்ப்பதை உணர்ந்தவன் தானும் சற்று நேரம் அவள் கண்ணை பார்க்க இடி இடித்ததில் சுய உணர்வை பெற்றவர்கள் எதுவும் பேசாது நடக்க ஆரம்பித்தனர் .

வீட்டிற்கு வந்ததும் அவள் உள்ளே செல்ல இவன் தனது வீட்டிற்குள் செல்ல போக அவளை "அதி "என்று அவன் அழைக்க திரும்பியவளிடம் "போய் ஒழுங்கா தலையை தொவட்டு அண்ட் சுடு தண்ணி குடுச்சுரு கோல்ட் வராது "என்க அவளும் மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டு உள்ளே செல்ல எத்தனித்தாள்.

அவள் உள்ளே சென்றதும் தலையை சிலுப்பியவன் உள்ளே சிரித்து கொண்டே செல்ல அங்கே இவர்கள் இருவரையும் இரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டிருந்ததை இருவரும் கவனிக்க வில்லை .

அங்கே அவர் கூறுவதை கேட்ட சைந்தவி "நீங்க ரம்யாட்ட இருந்தும் அவன்ட இருந்தும் தப்பிக்குறதுக்கு என்ட ஒரு ஐடியா இருக்கு ஆனா அது எவ்ளோ சரினு தெரில என்றவள் சற்று மௌனித்துவிட்டு "நா வித்யுதஹ் இங்க கூப்பிடுறேன் அங்கிள் "என்க

அவரோ "அவன் எதுக்குமா அவன் கண்டிப்பா நம்ப மாடான்மா "என்க

அவளோ "கண்டிப்பா அவன் நம்ப மாட்டான் தான் ஆனா அவனை நம்ப வைக்க எனக்கு தெரியும் அங்கிள் அது மட்டுமில்லாம அவன்ட மறைச்சு எந்த விஷயத்தையும் நா செய்ய விரும்பல."என்க அவருக்கும் அது சரியென பட சற்று மழை தூர ஆரம்பிக்க பூஜாவிற்கு கால் செய்தவள் அவளை கிளம்ப கூறிவிட்டு வித்யுதிற்கு கால் செய்தால்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வித்யுதிற்கு போன் வர அதை எடுத்தவன் சைந்தவியின் எண்ணை பார்த்ததும் "என்ன குல்பி நமக்கு கால் பண்ரா?"என்று நினைத்தவன் எடுத்து "ஆங் சொல்லுடா சது என்ன என்ன பாக்காம இருக்க முடிலயா அவ வீட்டுல ?"என்று குறும்புடன் கேட்க

அவளோ "விது be சீரியஸ் ஒடனே நம்ம காலேஜ்க்கு ஆப்போஸிட்ல இருக்குற பார்க்குக்கு வா அங்க endla shadeoda சில பென்சஸ் இருக்கும் அந்த இடத்துக்கு வந்துரு "என்க

அவள் குரலில் ஏதோ விபரீதத்தை உணர்ந்தவன் "என்ன சது நீ பூஜாவோட வீட்டுக்கு தான போறேன்னு சொன்ன இப்போ ஏன் பார்க்குக்கு வர சொல்ற ?"என்க

அவளோ "விது ப்ளீஸ் நீ இங்க வா நா தெளிவா எல்லாத்தையும் சொல்றேன் இப்போதய்க்கு அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும் "என்க

அவனும் "சரி சது 5 மினுட்ஸ்ல அங்க இருப்பேன்"என்றுவிட்டு phoneai வைத்தவன் அடுத்த 5 நிமிடத்தில் அங்கே இருந்தான்.

அவள் சொன்ன இடத்திற்கு வந்தவன் அவளை பின்னிருந்து பார்த்து "இவ இங்க என்ன பண்ரா?" என்று நினைத்து கொண்டே அங்கே அவள் பின் வர அங்கே விஷ்வாவை பார்த்தவனுக்கு ஜிவு ஜிவுவென்று கோபம் வந்தது .

அவரிடம் திரும்பியவன் "உங்கள யாரு இங்க வர சொன்னா என்ன இவட்ட என்ன சொல்லிட்டு இருக்கீங்க நீங்க நல்லவன் வல்லவன்னு சொல்லிட்டு இருந்தீர்களா ?"என்றவன்

அடுத்து அவளிடம் பொறிந்தான்"பூஜா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு இவரை பார்க்க தான் வந்தியா என்டயே பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டல்ல ஏண்டி நா தான் இவரை பத்தி படுச்சு படுச்சு சொல்லிருக்கேன்ல அதையும் மீறி என்ன ஏமாத்தீட்டு வந்து இவரை பாக்க என்ன அவசியம் உனக்கு ?" என்று கத்த

அங்கிருந்தவர்கள் இவர்களை பார்ப்பதை உணர்ந்தவள் அவன் கையை பிடித்து "விது பப்ளிக் place behave .என்று அடி குரலில் கூறியவள் அவனை உக்காரு சொல்றேன்" என்க

அவனோ சீற்றம் குறையாமல் "என்ன என்னத்த உக்காந்து பேசணும்ங்குற என்ன இவரு சொல்ற பொய்ய எல்லாம் நம்ப சொல்றியா நா ஒன்னும் சாரு இல்ல இவரு சொல்றத எல்லாம் நம்பிட்டு தலையை ஆட்ட"என்க

அவளோ நிதானமாய்"உனக்கு என்மேல நம்பிக்கை இருக்குல்ல ?"என்க

அவனோ "என்ன கேள்வி டி இது என்ன விட அதிகமா உன்ன தான் நம்புறேன் "என்க

அவளோ "அப்போ நா சொல்றத கேட்க ஒரு 5 நிமிஷம் உக்காரு "

என்க அவனும் உட்கார்ந்தான் .

பின் விஷ்வாவிடம் திரும்பியவன் "என்ன சொல்லணும் நீங்க சொல்லுங்க ?"என்று வேண்டா வெறுப்பாய் கூற விஸ்வாவோ அதிதிக்கு நேர இருக்கும் ஆபத்தை பற்றி கூற அதை கேட்டு முடித்த வித்யுத் தலையை இடப்புறமாய் திரும்பியவன் ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்தான் .

பின் "அப்பறோம் கத ரொம்ப நல்லா இருக்கு எவன் அவன் ஆங் விக்ரம் அப்டினு ஒருத்தன் இருக்கானாம் இவருக்கு கால் பன்னானாம் என் தங்கச்சிய கட்டி குடுக்க சொன்னானாம் இவரு சட்டையை புடுச்சாராம் அவரு மெரட்டுனாராம் இவரு செர்தான் போடானுட்டு வந்தாராம் அவன் என் தங்கச்சிய carah வச்சு அடுச்சு தூக்குனானாம் அவ கோமாகு போனாளாம் அதுனால அவளை மெரட்டலுக்கு பயந்துட்டு இப்டி ஒரு caseah போட்டு எங்க ரெண்டு பேரையும் கூப்டுட்டு வந்தாராம் ."என்று இது வரை இளக்காரமா தொனியில் கூறியவன் அடுத்த நிமிடமே மொத்த கோவத்தோடு "என்ன என்ன முட்டாள்னு நேனைசீங்களா ?எவ்ளோ பொய் எவ்ளோ பொய்யு வாய தொறந்தாலே பொய்யு என் இந்த நாடகம் அதான் உங்களுக்கு சேர வேண்டிய ஓத எல்லாம் என் அம்மா அப்போவே குடுத்துட்டாங்கல்ல உங்களுக்கு பொறந்த பாவத்தை தவிர்த்து எதுவுமே நாங்க பண்ணலையே அப்பறோம் ஏன் எங்க நிம்மதிய கெடுக்குறதுலயே குறியா இருக்கீங்க ?"என்க

சைந்தவி "இல்ல விது இவரு சொல்றதுலாம் உண்....."என்று அவள் கூற வர

அவளை இடை வெட்டியவன் "shut up சைந்தவி தேவை இல்லாம என் விஷயத்துல தலை இடாத .ஸ்டே இன் யுவர் லிமிட் "என்க

அவளுக்கோ அவன் கூறிய "ஸ்டே இன் யுவர் லிமிட் "என்ற வார்த்தையே சவுக்கடி போல் வலித்தது கண்களில் நீர் சேர அவனை பார்த்தால் அந்த பார்வையில் "உன் மேல எனக்கு உரிமை இல்லையா ?"என்ற கேள்வி இருந்தது

அவளின் பார்வையை பார்த்தவனுக்கு அப்போது தான் தன் வார்த்தையின் வீரியம் புரிய கோவம் கானல் நீராய் மறைய "ஐயோ ச.... சது நா அப்டி mean பண்ணல டா அது இவரு "என்று அவன் தடுமாற

கண்ணீரை துடைத்தவள் "ஓகே வித்....யுத் நா சொல்றத நம்ப நீங்க தயாரா இல்ல ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரு வருவாங்க அவுங்க சொன்னாலாச்சும் நம்புறீங்களானு பார்ப்போம் "என்றவள் அடுத்து அவன் "அது சது ....."என்று அவள் கையை பிடிக்க அவள் கையை படக்கென்று உறுவிக்கொள்ள அவனோ பெருமூச்சை வெளியிட்டு அவள் கூறிய இரு நபர்களுக்காக காத்திருந்தான்.

30 நிமிடங்கள் கழித்து இருவர் அவ்விடத்திற்கு வந்தனர்.பார்க்க 25 வயது போல மிகவும் ஸ்மார்ட்டாக இருந்தனர் அதில் ஒருவன் "ஹாய் சையு குட்டி எப்பிடிடா இருக்க ?"என்று அமர

இன்னொருவனோ போனில் "ஹே நா தான் சொல்றேன்ல இல்லனு அப்ரோமும் அதையே கேட்டேனா என்ன அர்த்தம் மித்து சரி சரி நா வந்து சண்டையை continue பண்றேன் வை .என்றவன் அடுத்து அங்கு ஏதோ சொல்ல உடனே புன்னகை புரிந்தவன் லவ் யு பிசாசு "என்று விட்டு phoneai வைக்க

சைந்தவி "நல்லா இருக்கேன் அர்ஜுன் அண்ணா .என்றவள் கார்த்திக்கிடம் திரும்பி ஏன் அண்ணா இன்னுமா நீங்களும் மித்ரா அண்ணியும் சண்டை போட்றத விடல ?"என்க

அர்ஜுன் "நீ ஏன்டா கேக்குற அதை வேற இதுங்க ரெண்டும் இருக்குங்களே எதுக்குன்னே தெரியாம சண்டை போடும் நாம பிரிச்சு விடலாம்னு போனா இதுங்க ரெண்டும் கூட்டு சேந்துட்டு நம்மள லூசாக்கி இதுங்க சேந்துக்குதுங்க .இதுங்கள பாத்து பாத்து நா பெத்த செல்வம் இருக்கே அர்வினுஹ் அதுவும் அஸ்வதியும் சேந்துட்டு எல்லாத்துக்கும் சண்டை போட்டுட்டு அதுங்களே சேந்துக்குதுங்க"என்க

சைந்தவி "ஐயோ பாவம் அண்ணா நீங்க என்றவள் அடுத்தவரை அங்கு இருந்த பெண்கள் பார்த்து கொண்டிருக்க இவனும் அவர்களுக்கு கை அசைக்க

அதை பார்த்த சைந்தவி "கார்த்தி அண்ணா இன்னும் மாறவே இல்லன்னா நீங்க அன்னிட்ட போட்டு கொடுக்கவா ?"என்க

அவனோ "ம்கூம் ஏன்டா நா நல்லா இருக்குறது புடிக்கலயா ஏன்டா பிசாசுட்ட போட்டு விட்றேங்குற ."என்க

அவளோ "கை எல்லாம் ஆடுன மாறி இருக்கு ?"என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க

அவனோ "அது கை வலிடா அதான் லைட்டா exercise பண்ணேன் "என்க

இவர்கள் சம்பாஷணைகள் புரியாத வித்யுத் "சது இது யாரு ?"என்க

அவளோ பொதுவாய் விஸ்வனாத்திற்கும் வித்யுத்திற்கும் "இது கார்த்திக் அண்ணா இது அர்ஜுன் அண்ணா இவுங்க ரெண்டு பேரும் நாங்க 3 வருஷம் முன்னாடி வரைக்கும் அபார்ட்மெண்ட்ல இருந்தப்போ பக்கத்து வீட்ல இருந்தாங்க .சொந்த அண்ணனுங்க மாறி எனக்கு .ரெண்டு பேரும் போலீசாக இருக்காங்க .அர்ஜுன் அண்ணா DSP ஆஹ் இருக்காரு கார்த்திக் அண்ணா ACP ஆஹ் இருக்காரு .(என்னோட மந்திர தேசம் ஸ்டோரி படிச்சவுங்களுக்கு தெருஞ்சுருக்கும் இவுங்க யாருனு தெரியாதவுங்களுக்காக தான் இந்த இன்றோடுக்ஷன் டைம் இருந்தா அந்த ஸ்டோரி படிச்சு பாருங்க )"என்க

இவர்கள் இருவரும் தங்களை அறிமுக படுத்தி கொண்டனர் .பின் அர்ஜுன் "ஓகே உங்க விஷயத்துக்கு வருவோம் சையு போன் பண்ணி சொன்னா நாங்களும் விசாரிச்சு பார்த்தோம் ."என்றவன் வித்யுதிடம் "வித்யுத் உங்க தங்கச்சிய அடுச்சு தூக்குனது இந்த caraahnu பாருங்க"என்று அவனிடம் ஒரு காரின் படத்தை நம்பருடன் காட்ட அவன் அன்று complain கொடுத்த போது கார் நம்பரை பார்த்த ஞாபகம் இருந்ததால் "ஆமா இதே கார் தான் "

என்க

கார்த்திக் "இந்த கார் ரோஹித் சர்மா அப்டின்றவருக்கு சொந்தமானது .ரோஹித் சர்மா டெல்லில சின்ன சின்ன ஆக்சிடேன்ட்ஸ் இந்த மாறி crimesah கூலி வாங்கிட்டு பண்ணி தர்றவன் .அவனுக்கு ஒரு பாஸ் இருக்கான் .இந்த மாறி நெறய crimeஸஹ் அவன் ஓர்கனைஸ் பண்ணி தர்றவன் இப்போ தான் அவனை ஒரு தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலதிபரோட murder casela புடுச்சோம் .அவன் இது வரைக்கும் செஞ்சு குடுத்த crimesah விசாரிகேள உங்க தங்கச்சியோட accidentum ஒண்ணுனு தெரிய வந்துச்சு."என்க

அர்ஜுன் "அது செய்ய சொல்லி ஆர்டர் குடுத்தது விக்ரம் அப்படின்ற echinos குரூப் ஆப் கொம்பனிஸோட owner பையன் தான் அப்டினும் எங்களுக்கு தெரியும்."என்க

வித்யுத் "அவனுக்கு எதிரா கேஸ் போடலாமே நா கொடுக்குறேன் ராஸ்கல் என்ன தைரியம் இருந்தா என் தங்கச்சிய கார் வச்சு தூக்கிருப்பான் "என்க

கார்த்திக் "கேஸ் போட்டு அவனுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லனு காசு குடுத்து வெளிய வந்துட்டான் வித்யுத்.நம்ம நாட்டுல நியாயத்துக்கு நீதி குடுத்து பல வருஷம் ஆச்சு பணக்காரனாக இருக்கறவன் தப்பே பண்ணாலும் பணத்தை குடுத்து வெளிய வந்துறுறான் ."என்க

அர்ஜுன் "10000 கோடி கடன் வாங்கிட்டு foreignku ஓடி போன ஒரு கிரிமினல்லஹ் இந்தியாக்கு கொண்டு வர புதுசா எல்லா வசதியும் வச்சு சிறை காட்றாங்க அதே 10000 ரூவா கடன் வாங்குற விவசாயிங்க திருப்பி தரலேனா அவுங்க விளைச்சல் பண்ற நிலத்தை புடுங்குறாங்க .பணம் பணம் பணம் என்ன பண்றது கம்பீரமா மரியாதை குடுத்து அடிக்க வேண்டிய saluteah கொலை பண்ணிட்டு கொள்ள அடிச்சுட்டு இருக்குறவனுங்களுக்கு அடிக்குற நெலமைல இருக்குற நாங்க எதுவும் பண்ண முடியாத நெலமைல தான் இருக்குறோம் "என்றான்.

பின் வித்யுத் "அப்போ என் தங்கச்சிய இதுல இருந்து வெளிய கொண்டு வர என்ன தான் வழி சார் ?"என்க

அர்ஜுனோஹ் "நேர்வழியில் முடியாது குறுக்கு வழியில தான் முடியும் .அதுக்கு உங்க உதவியும் வேணும் ."என்று விஷ்வாவை நோக்கி கூற

விஷ்வா "என் பொண்ணு நல்லா இருக்குறதுக்காக நா என்ன வேணாலும் செய்வேன் பா என்ன செய்யணும்னு சொல்லு "

என்க

கார்த்திக் "அதுக்கு கொஞ்சம் முன்னேற்பாடுலாம் செய்ய வேண்டி இருக்கு சார் .நீங்க உங்க போன் நம்பர் குடுங்க அண்ட் வித்யுத் நீயும் எங்களுக்கு ஹெல்ப் பண்ணனும் .அதிதிய கொஞ்ச நாளைக்கு ரொம்ப carefullaah பாத்துக்கோ " என்க

வித்யுதும் சைந்தவியும் ஒரே குரலில் "நாங்க பாத்துக்குறோம் "என்று கூறி ஒருவரை ஒருவர் பார்க்க வித்யுத் சாரி என்று கண்களால் கேட்க சைந்தவியோ போடா என்று கண்களாலேயே கூறி விட்டு திரும்பி கொண்டால் .

இதை கவனித்த கார்த்திக் "என்ன சையு எப்போ கல்யாணம் ?"என்க

அவளோ பெக்க பெக்க முழிக்க அவள் கூறுமுன் முந்திய வித்யுத் "படிப்பு முடுச்சதும் அண்ணா இன்னும் 4 yearsla "என்க அவளோ அவனை முறைக்க வித்யுதோ அவளை பார்த்து கண்ணடித்தவன் அர்ஜுனிடம் "அண்ணனு கூப்பிடலாம்ல ?"என்க

அவர்களோ "தாராளமா. வீட்டுக்கு ஒரு நாள் வந்துட்டு போங்கடா ரெண்டு பேரும் .உன் அண்ணின்களும் குட்டீஸும் தான் உன்னயும் ஹரியையும் கேட்டுட்டே இருந்தானுங்க "என்றனர் .

பின் இருவரும் கிளம்பி செல்ல சைந்தவி வித்யுத்தை முறைக்க வித்யுதோ "அய்யயோ முறைக்குறாளே முறைக்குறாளே எப்படி சமாதானம் பண்றது நா ஒருத்தன் கோவம் வந்தா கண்ணு மண்ணு தெரியாம பேசிருறேன்.சரி சமாளிப்போம் "என்று நினைத்தவன் "சது குட்டி "என்க

அவளோ விறு விறு வென எழுந்தவள் விஷ்வாவிடம் "போய்ட்டு வரேன் அங்கிள் உடம்ப பாத்துக்கோங்க "என்று விட்டு சென்று விட்டால்

இவன் "சது சது "என்று அழைத்தும் பயனில்லை .

பின் விஷ்வா எழுந்து செல்ல போக முதல் முறையாய் வித்யுத் "எப்படி வந்தீங்க போயிருவீங்களா மழை பெய்யுது "என்க

விஸ்வவிற்கோ அவன் பேசிய அந்த ஒருசில அக்கறை உள்ள வார்த்தைகளே பெரும் ஆனந்தத்தை தர அவனோ "போயிருவேன்பா.போயிருவேன் "என்றவன் அவனை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு அந்த பூங்காவை விட்டு வெளியேறினான்.

பின் வித்யுத்தும் வீட்டிற்கு செல்ல .அங்கோ அதிதி இல்லை .வீட்டில் அவன் இல்லாததால் சைந்தவியின் வீட்டிற்கு சென்றிருப்பாள் என்று எண்ணியவன் அங்கே செல்ல அவன் நினைத்ததை போல் அதிதி ஹரியின் அறையில் அவனுடன் படித்து கொண்டிருந்தாள்.

உள்ளே சென்றவன் அதிதியின் தலையை வருட அவளோ "அண்ணா எங்கடா போன ?ஏன் இவ்ளோ நேரம் ?அண்ணியும் லேட்டா தான் வந்தாங்க "என்க

அவனோ "அது ஒண்ணுமில்லடா கொஞ்சம் வர வழில வேலை இருந்துச்சு அதான் "என்க

அதிதி "என்ட எதுவும் நீ சொல்லலையே ?"என்க

ஹரியோ "அது அதி ரெஃபெரென்ஸ் புக் வாங்கணும்னு அக்கா சொல்லிட்டு இருந்தா அதான் போயிருப்பாங்க போல .என்றவன் வித்யுதிற்கு மட்டும் கேட்கும் குரலில் என்ன மாமா dateaah என்ஜோய் என்ஜோய் "

என்க

வித்யுதோஹ் மனதில் "dateaah ஹூம்ம் இங்க பேசவே வழில இல்லலாமா இருக்கேன் நீ வேற ஏண்டா "என்று நினைத்தவன் வெளியில் இளித்து வைத்தான் .

பின் அதிதியிடம் திரும்பியவன் "அதிதி "என்க

அவள் "என்ன அண்ணா ?"என்க

அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவள் தலையை கோதி

"ஒன்னும் இல்லடா படிங்க "என்று விட்டு வெளியே சென்றான்

உள்ளே வந்த வித்யுத்தை பார்த்த சைந்தவியின் அம்மா ராஜி "அடடா வாங்க மாப்ள அதிதியை தேடி வந்தீங்களா நீங்க இல்லேனு இங்க வந்துட்டா எதுவும் சாப்பிடுறீங்களா ??"என்க

அவனோ "இல்ல வேண்டாம் அத்த என்றவன் சற்று தயங்கிவிட்டு அத்த சது எங்கே?"என்க

அவரோ "அதை ஏன் கேக்குறீங்க வர்றேலயே தங்கு தங்குனு வந்தா என்னடி என்னாச்சுன்னு கேட்டா ஒண்ணுமில்லம்மானு சொல்லிட்டு ரூம்குள்ள போய்ட்டா .உங்களுக்குள்ள எதுவும் சண்டையா ?"என்று வினவ

அவனோ "அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்த நா அவளை போய் பார்க்கவா?"என்க

அவரோ "தாராளமா "என்க அவனும் சென்றான் அவள் அறை கதவை திறந்து உள்ளே செல்ல அவளோ அவள் அறையில் இருக்கும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கொண்டிருந்தாள் அமைதியாய் .

வித்யுத் மனதில் "ஆஹா இவ வேற அமைதியா இருக்காளே புயலுக்கு முன் அமைதியோ சரி சமாளிப்போம் "என்று நினைத்தவன் அவள் பின்னே சென்று அணைக்க

அவன் தொட்டதும் அவனை விட்டு விலகியவள் "யார்டா நீ எதுக்கு என்ன டச் பண்ற ?"என்க

அவனோ "ஹே சது sorryda sorryda ஏதோ கோவத்துல "என்க

அவன் சட்டையை கொத்தாக பிடித்து அருகில் இழுத்தவள் "கோவத்துலயா கோவத்துல என்ன வேணா சொல்லுவியா எப்படி எப்படி சைந்தவி ஸ்டே இன் யுவர் லிமிட் அப்டி தான என்றவள் அவனை விட்டு விலகி என் லிமிட்ல நா நின்னுக்குறேன் "என்க

அவனோ "ஐயோ இல்லடா இல்லடா ஏதோ வாய்ல வந்ததை அந்த timela என்ன சொல்றேன்னு தெரியாம சொல்லிட்டேன்டா sorryda ."என்க

அவளோ "நீ ஏன் சாரி சொல்ற நா தான் சொல்லணும் .உன்ன என் பெட்டெர் halfnu நெனச்சேன்ல என் தப்பு தான் ,உன்னோட சந்தோஷம் துக்கம் எல்லாம் எனக்கும் சந்தோஷம் துக்கம் தான்னு நெனச்சது என் தப்பு தான் .உன் விஷயத்துல தலையிட்டது என் தப்பு தான்.எல்லாமே என் தப்பு தான் "என்றவள் கோவத்தில் துடங்கி அழுகையில் முடிக்க

அவளை இழுத்து அணைத்தவன் "sorryda sorryda இனிமே பண்ண மாட்டேன்டா இனிமே இவ்ளோ கோவப்பட மாட்டேன்டா "என்க

அவளோ அவன் நெஞ்சிலேயே குத்தி கொண்டிருந்தாள் "போடா".என்று

பின் அவன் "தோப்புக்கரணம் கூட போடுறேண்டி "என்க

அவளோ அவனை விட்டு விலகியவள் சற்று எட்டி நின்று "போடுடா "என்க

அவனோ "ஹே ஏதோ பேச்சுக்கு சொன்னேண்டி நா பாவம்டி "என்க

அவளோ "100 தோப்புக்கரணம் போடு பேசுறேன் "என்க அவனும் முனங்கிகொண்டே போட ஆரம்பித்தான் .

20 தோப்புக்கரணம் போடும்போதே அவளுக்கு சிரிப்பு வந்து விட சிரித்தவள் அவனிடம் சென்று அவனை அணைத்து கொள்ள அவனோ "ஹப்பா சமாதானம் ஆய்டியா அடியேய் போன ஜென்மத்துல டீச்சராக இருந்தியாடி தோப்புக்கரணம் போட சொல்ற ஆனாலும் குல்பி உனக்கு கோவம் கூட ஒழுங்கா பட தெரிலடி."என்று அவள் மூக்கோடு மூக்குரசியவன் அவள் நெற்றியில் முத்தமிட

அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டே இருந்தவள் "அதான் எனக்கும் சேத்து நீ கோவ படுறியே "என்க

அவனோ "sorrydi செல்லம் இனிமே கோவமே பட மாட்டேண்டி "என்க

அவளோ "அய்யய்ய எனக்கு அந்த வித்யுதயே புடிக்காது .எனக்கு இந்த சட்டுனு கோவப்பட்டு,முரட்டுத்தனமா இருக்குற வித்யுத் தான் புடிக்கும் ."என்க

அவனோ "அப்பறோம் ஏண்டி தோப்புக்கரணம் போட வச்ச ?"என்க

அவளோ "அப்டி தான் பண்ணுவேன் ஆனா நீ கோவ பட்டா தாண்டா எனக்கு புடிக்கும்.நீ எனக்காக எதையும் மாத்திக்காத எனக்கு நீ எப்படி இருக்கியோ அப்டி தான் புடிக்கும் "என்க

அவனோ சிரித்து கொண்டே "லவ் யு டி"என்க

 அவளும் "லவ் யு டூடா angry bird "என்க அவனும் சிரித்து கொண்டே அவளை மேலும் இறுக்கி கொண்டான்

பின் அவனின் நெஞ்சில் இருந்து நிமிர்ந்த சைந்தவி "விது இப்போ என்னடா அடுத்து பண்ணலாம் ?அதிதி சின்ன பொண்ணுடா அவளை போய் இப்டி செய் அவனை நெனச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு."என்க அவனுக்கோ சொல்லவே தேவை இல்லை கண்கள் கோவத்தில் சிவந்த விட்டது

கை முஷ்டிகளை மடக்கியவன் "அவன....முன்னாடி மட்டும் இருந்தான் கழுத்தை நெருச்சே கொன்றுவேன் ராஸ்கல் என்ன தைரியம் இருந்தா என் தங்கச்சி மேல கார் எடுத்து அடுச்சுருப்பான்."என்க

சைந்தவி அவனை மேலும் இறுக்கியவள் அவன் முதுகை ஆதரவாய் வருடி விட்டுக்கொண்டே "ஹே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் டா "என்க

அவனோ "இல்லடி அவளுக்கு அடி பட்டாலும் அவ அழுகேல நா அவ முன்னாடி எதுவும் காமிச்சுக்க மாட்டேன் .அவ தைரியமா இருக்கணும்னு ஆனா அவ தூங்குனதுகப்ரோம் அவ பக்கத்துலயே உக்காந்து அவ காயத்தை வருடி விட்டு அழுவேன் தெரியுமா ?என்னோட தங்கச்சியா அவளை பாத்ததை விட என்னோட கொழந்தையா தாண்டி அவளை பாத்துருக்கேன்.அவளுக்கு ஒன்னுனா என்னால ....."என்று அவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் போனது பின் சற்று நேரம் யோசித்தவன் அவளை விளக்கி "சது மொதல்ல அவனை அவளுக்கு தெரியுமான்னு கேட்போம் நா வேண்டாம் நீ கேளு ஏதாச்சும் அவ lifela பசங்க கிராஸ் ஆனான்கலானு .அவன் எப்படி அவ lifeகுள்ள வந்தானு மொதல்ல தெரியணும் அப்பறோம் இப்போ ஹரியை கூப்டுட்டு வா "என்க

அவளோ "அவன் எதுக்குடா ?"என்க

அவனோ "அடியேய் அவளுக்கு துணையா நா போக முடியாது ஸ்கூலுக்கு அவளுக்கு துணையா அவன் தான போறான் அவன்ட தான் அவளை பத்தி சொல்லணும் "என்க

அவளோ "ஆமாடா அவன்ட சொல்லி ஒழுங்கா பாத்துக்க சொல்லணும்.சொன்னா அதெல்லாம் நல்லா பாத்துப்பான்"என்க

வித்யுதோ மனதில் "சொல்லலேன்னாலே உன் தம்பி என் தங்கச்சிய ரொம்ப நல்லா தான் பாத்துப்பான் ."என்று நினைத்தவன் அவளை அனுப்பி வைத்தான் .

ஹரியின் அறைக்குள் சென்ற சைந்தவிபடித்து கொண்டிருந்த அதிதியையும் ஹரியையும் தான் .மனதில் "இப்போ இவன மட்டும் கூப்பிட அவ என்னனு கேப்பா எப்படி கூப்டுறது ?"என்று நினைத்தவள் பின் ஏதோ ஞாபகம் வந்தவளாய் "ஹரி "என்று அழைத்தாள்

ஹரி "என்னடி ??என்ன திடீர்னு வந்துருக்க படிக்கலயா?"என்க

அவளோ "படுச்சுட்டு தான்டா இருந்தேன் அப்பா காலைல ஏதோ அட்ரஸ் வெரிஃபிகேஷன்க்கு உன் ஆதார் கார்டும் என் ஆதார் கார்டும் கேட்டாரு அதோட உன் சைனும் வேணும் என் ரூம்ல தான் பபெர்ஸ் இருக்கு வந்து sign பண்ணிட்டு போ "என்று வாயில் வந்த காரணத்தை அடித்து விட

ஹரியோ "எதுக்கு அட்ரஸ் வெரிஃபிகேஷன் நாம இங்க வந்து 3 வருஷம் ஆச்சுல்ல அப்பறோம் என்ன?"என்க

அவளோ மனதில் "ஏன்டா உன் புத்திசாலித்தனத்தை காட்ட வேற நேரமில்லையாடா வெங்காயம்"என்று மனதில் அவனை கருவியவள் வெளியில் "இல்லடா ஏதோ ப்ரொபேர்ட்டி இப்போ புதுசா வாங்க போறாராம் அதுக்கு ஏதோ sign பண்ணனும்னு சொன்னாரு வாயேன் என்று அவன் ஏதும் பேச வாயை திறக்குமுன் அவன் கையை பிடித்து தர தரவென இழுக்காத குறையாய் தள்ளி கொண்டு போனால் .வாசலில் நின்று "அதிதி நீ படுச்சுட்டு இருடா ஒரு 10 மினிட்ஸ் வந்துருவான் "என்க

அவளும் "ஓகே அண்ணி "என்று பாடத்தில் ஒன்றி போனால்.அவர்கள் சென்றதும் பக்கத்தில் இருந்த ஹரியின் drawing நோட் அவள் கருத்தை கவர அவன் இல்லாததை உறுதி செய்து கொண்டவள் அன்னைக்கு என்னத்த எந்த இருந்து மறைக்க நெனச்சுருப்பான் ?என்று அவன் drawing புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாய் புரட்ட ஒரு பக்கத்தை திறந்தவளுக்கு கண்கள் அதிலேயே நிலைத்து விட்டது இரு கண்களும் பெரிதாய் விரிய அந்த பக்கத்தை அவள் கைகள் தன்னிச்சையாய் வருடியது.

அந்த பக்கத்தில் சிரித்தபடி அந்த கதக் சுடியில் அதிதி ஆடியபடி இருக்க அவளை கையை கட்டி ரசித்தபடி ஹரி நிற்க கீழே

உன்னை அறிய நினைத்தே

நான் எங்கோ தொலைந்து போனேன்

யாரடி நீ

என் ராங்கி

என்று எழுதி இருந்தது.

மேலே வந்த ஹரி "ஹே விடுடி விடுடி ஏண்டி இப்டி தள்ளிக்கிட்டு வர எங்க சைன் பண்ணனும் குடு பண்ணிட்டு போறேன் ."என்றவன் அப்போது தான் அங்கிருந்த வித்யுத்தை கவனித்தான் "மாமா என்ன நீங்களும் இங்க தான் இருக்கீங்களா ?"என்க

அவனோ "ஹரி உன்ட கொஞ்சம் பேசணும்டா "என்க

ஹரியோ "பேசணுமா அக்கா ஏதோ சைன் பண்ணனும்னு சொன்னா "என்க

அவளோ "அதிதி பத்தின விஷயம்டா அதான் அவளுக்கு தெரியக்கூடாதுனு அப்டி கூப்பிட்டேன் "என்க

அதிதியின் விஷயம் என்றதும் கலவரமானவன் "என் .....என்னாச்சு மாமா எதுவும் பிரச்னையா ?"என்க அவன் முகத்தில் அப்பட்டமாய் அவன் மனதின் கலவரம் தெரிந்தது.

வித்யுத் அனைத்தையும் கூறி முடிக்க அவன் கண்கள் ரத்த சிவப்பாக கைகளும் உடலும் கோவத்தில் இறுகியது .இப்போது வரை தன் தம்பியை இத்தனை கோபமாய் பார்த்திராத சைந்தவிக்கு அவனின் தற்போதய தோற்றம் அச்சமூட்டுவதாய் இருந்தது

மெல்ல அவன் தோளை தொட்டவள் "ஹரி இப்போதைக்கு இது அவளுக்கு தெரியவேண்டாம்டா .அவளை பத்திரமா பாத்துக்கோ போகேலையும் வரேலையும் ."என்க

அவனோ "scoundral என்ன தைரியம் இருந்த என் அதிதியை கொல்ல ட்ரை பண்ணிருப்பான் .நா இருக்கேல அவளை அவன் நெருங்கிருவானா கொன்றுவேன் .என்னோடவ அவ "என்று அவன் பேசி கொண்டே போக வித்யுதிற்கு ஏற்கனவே அவனின் மனது புரிந்திருக்க அவனின் வார்த்தைகள் அவனுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனில் சைந்தவிக்கு இது பெரும் அதிர்ச்சியாய் இருந்தது .அவனை ஏதோ சொல்ல வந்தவளின் கையை பற்றிய வித்யுத் கண்களாலேயே அமைதியாய் இருக்க கூறினான் .

ஹரி தான் உதிர்த்த வார்த்தைகளை எண்ணி இடம் பொருள் உரைக்க மனதை வெளிப்படுத்தி விட்டதை தாமதமாய் உணர்ந்தவன் வித்யுத்தின் முகத்தை பயத்தோடு ஏறிட்டு "ம ...மாமா ....அது வந்து "என்று திக்க

அவனோ சிரிப்போடு அவனின் வார்த்தைகளையே மீண்டும் உதிர்த்தான் "அதான் உன்ட சொல்றேன் கவனமா பாத்துக்கோ உன் அதிதியை "என்று கூற ஹரிக்கோ பேரதிர்ச்சி .முகத்தில் பொலிவு குடியேற "நா பாத்துக்குறேன் மாமா அவனை அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கீங்க ?"என்க

சைந்தவியோ "அர்ஜுன் அண்ணாட்டயும் கார்த்திக் அண்ணாட்டயும் சொல்லிருக்கேன்டா அவுங்க ஏதோ பிளான் பண்ணிட்டு சொல்றேன்னு சொன்னாங்க வீட்டுக்கு வந்துட்டு போக சொன்னாங்க "என்க

ஹரியோ "ஆமாடி அக்கா அண்ணா அந்நிலம் பாத்து ரொம்ப நாள் ஆச்சுல்ல குட்டியசையும் பாக்கணும்னு நெனச்சேன் மறந்துட்டேன் .ஹே இந்த சண்டே அர்ஜுன் அண்ணா பசங்களுக்கு 8th பர்த்டே வருதுல்ல போய்ட்டு வருவோமா ?"என்க

வித்யுதும் "சரிடா போய்ட்டு வருவோம்.என்றவன் கேலியாய் ஒருமுறை ஹரியை பார்த்துவிட்டு அதிதியையும் கூட்டிட்டு போவோம் என்ன மச்சான் ஓகேவா ?"என்க

ஹரியோ "போங்க மாமா நா படிக்க போறேன் "என்று விட்டு ஓட சைந்தவியின் முகத்திலோ கவலை ரேகைகள் .

அவன் சென்றதும் சைந்தவியிடம் திரும்பியவன் "என்னாச்சுடி என்ன இவ்ளோ கொளப்பமா இருக்க ?"என்க

அவளோ "இல்லடா ஹரி இந்த வயசுல கொஞ்ச நாள் தான் ஆவுது அவுங்க பழக ஆரம்பிச்சு இப்டி போய் அதிதியை ப்ச் சின்ன பொண்ணு டா அவ "என்க

அவனோ அவள் தொழில் காய் போட்டவன் "இதோ பாரு சது இந்த வயசுல வந்தா தான் அது காதல் இந்த வயசுல வந்தா இனக்கவர்ச்சினு இல்ல .அவனை நல்லாவே நா கவனிச்சுட்டு தான் வரேன் இந்த 1 மாசமா அவன் அதிதி கூட இருக்கேல அவளை என்ன விட நல்லா பாத்துக்குறான்."என்க

அவளோ சொல்லவே இல்ல என்றவாறு ஓர் பார்வை பார்த்தால்.

அவன் "உன்ட சொல்லாம இருக்கணும்னு இல்லடா உன்ட சொல்லிருந்தா நீ ஒடனே அவனை கண்டிக்கிறேன் பேர்வழின்னு அவனை முழுசா குழப்பி விற்றுப்ப.அவன் அவன் முடிவுல தெளிவா இருக்கேல நாம என் அவனை கொளப்பனும் ."என்க

அவளோ "என்ன இருந்தாலும் இது படிக்கிற வயசு டா அவன் எதுவும் படிப்பை கெடுத்துகிட்டான்னா ?"என்க

எனக்கு "ஹரி மேல முழு நம்பிக்கை இருக்கு .இந்த பேச்சை இதோட விட்ரலாம் அவன் மார்க்ஸ் கொறஞ்சா அதுகப்புறோம் என்ன பண்ணனும்னு பாத்துக்குவோம் ஆனா 100 சதவீதம் நம்பிக்கையோட சொல்றேன் அவன் மார்க்ஸ் இனிமே எற தான் செய்யும் ."என்க

அவளோ அவனை பெருமையாய் பார்த்தவள் "எப்பிடிடா என் குடும்பத்தையே உன் குடும்பமா காதலிக்கிற நா ரொம்ப லக்கி டா "என்க

அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன் "அனாதையா வாழ்ந்தவனுக்கு குடும்பத்தை குடுத்தவளே நீ தாண்டி நீ யில்லாத லைப் சத்தியமா யோசிக்க முடில "என்று அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு அதிதியை கூட்டி கொண்டு சென்றான்.

இங்கே ஒரு அறையில் சுற்றிலும் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு ஆங்காங்கே தொங்கிய சிறு சிறு விளக்குகளால் மெருகேற்றப்பட்டு பணத்தை மொத்தமாக இழைத்து ஒவ்வொரு அங்குலத்திலும் பணத்தின் ஆளுமை தெரிய அதனை அழகாய் இருந்த அவ்வறையின் ஓர் பகுதியில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான் விக்ரம்.அவன் முன்னே ஒருவன் இருக்க அவனிடம் "என்ன நா சொன்ன காரியம் என்னாச்சு என்க?"

அவனோ "நீங்க சொன்ன மாறி அதிதியை நா டெய்லி வாட்ச் பண்ணிட்டு தான் சார் இருக்கேன் அவுங்க ஸ்கூலுக்கு போனாங்க வராங்க"என்க

விக்ரம் "பிரிஎண்ட்ஸ் அந்த மாறி எதுவும் ??"

என்க அவனோ "friends இருக்காங்க கிளோஸ் friends யாரும் இல்ல சார் ஆனா ...."என இழுக்க

கண்களை கூர்மையாக்கி ஒற்றை புருவத்தை உயர்த்தியவன்"ஆனா ?"என்க

எதிரில் இருந்தவனுக்கோ உதறல் எடுத்தது "ஆ ....ஆனா அவுங்க அன்னான் லவ் பண்ற பொண்ணோட தம்பியும் அதிதி mamum ரொம்ப கிளோஸ்ஆஹ் இருக்காங்க சார்.friendsah விட கிளோஸ்ஆஹ் "என்று இன்று அவன் ஐஸ்கிரீம் கடையில் இருந்து வீடு வரை எடுத்த புகைப்படங்களை காண்பிக்க "அதை வாங்கி பார்த்தவன் கோரமாய் சிரித்தான் .பின் அவனை வெளியே செல்ல சொல்லி கையால் சைகை செய்தவன் அந்த புகைப்படத்தை பார்த்தான் அதில் அதிதியின் கையை பற்றி ஹரி இழுத்து அருகே நிற்கவைத்து இருப்பது போன்றிருக்க அதிதியின் பிம்பத்தை கையால் வருடியவன் அருகே இருந்த லைட்டரை எடுத்து ஹரியின் பிம்பத்தை எரித்தான்.எரித்தவன் "என் அதிதி பக்கத்துல நெருங்க நெனைக்குற எவனையும் நா விட்டு வைக்க மாட்டேன்டா உன்ன கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சுக்குறேன் என்றவன் அந்த புகைப்படத்தில் அதிதியின் பிம்பத்தை மட்டும் எடுத்து வைத்து விட்டு சென்றான் .

அடுத்த நாள் அதிதி முழிக்கையில் அடுத்த காம்பௌண்டான சைந்தவியின் வீட்டின் முன் ஒரு புது புல்லட் பைக் நிற்பதையும் அதை சுற்றி வித்யுதும் சைந்தவியும் அவனின் அம்மா அப்பாவும் நிற்பதை பார்த்தால்.

அதிதி "நேத்து கூட என்ட எதுவும் சொல்லலையே இவன் பைக் வாங்கப்போறான்னு இப்போ என்ன காலைல வந்து நிக்குது ?சரி குளிச்சுட்டு போய் பாப்போம் "என்று குளித்து விட்டு வெளியே வர அவள் கண்களில் நேற்று அவன் drawing noteiலிருந்து கிழித்த ஒரு பக்கம் அவள் கண்ணில் பட அதை பார்த்தவள் புன்னகையுடன் இன்னைக்கே கேட்டுற வேண்டி தான் .என்று நினைத்துக் கொண்டு யூனிபோர்மை போட்டு கொண்டு கீழே சென்றால்.

சைந்தவியிடம் சென்றவள் "எல்லாருக்கும் குட் மோர்னிங் என்ன புது bikelaam நிக்குது சொல்லவே இல்ல அண்ணி என்ட"என்றவள் பேச்சு சைந்தவியிடமும் பார்வை ஹரியிடமும் இருந்தது .

அதை கவனித்த சைந்தவி மனதில் "அடிப்பாவி நீயுமா அது சரி "என்று நினைத்துவிட்டு

வெளியே அவளிடம் "அது ஒண்ணுமில்லடா ஹரிக்குஅவன்சம்பாதிக்கிறபணத்துலஅவனோடதேவைகளைசெஞ்சுக்கணும்னுஆசை .அப்பா வாங்கி தரேன்னு சொன்னாலும் வேணாம்னு சொல்லுவான் .அவனோட பாக்கெட் money எல்லாமே அவன் தான் பாத்துக்குவான் drawings sale பண்ணி architectsta ஒர்க்பண்ணி .இப்போதான்பைக்வாங்குறஅளவுக்குசேத்துவச்சான்அதான்வாங்கியாச்சு "என்க

அதிதியோ மனதில் "அப்போ அவன் தனியா தான் போவானா நா தனியா போகணுமா "என்று நினைக்கும் போதே அவளுக்கு முகம் சுருங்கிவிட

அதை பார்த்த வித்யுத் "நீயும் இனி அவனோட பைக்லயே போய்ட்டு வந்துருடா அவ்ளோ தூரம் நா தனியா அனுப்ப விரும்பல "என்க உடனே அவள் முகம் 1000 வாட்ஸ் பொலிவுடன் மின்ன "சரிண்ணா" என்றவள் அடுத்து ஹரியை பார்க்க அவன் பார்வையில் ஏதோ ஒரு வித்யாசம் இன்று இருப்பதை அவள் உணர்ந்தாள் .

பின் வித்யுதும் சைந்தவியும் கிளம்ப தன் bikeai எடுத்து கொண்டு வந்தவள் அவன் பின் ஏறி அமர்ந்து அவன் தோளில் கை போட்டு அமர்ந்ததும் புதியதொரு பரவசத்தை உணர்ந்தாள் .அவள் முக பாவனைகளை கண்ணாடி வழியாக பார்த்துவிட்ட ஹரி தனக்குள்ளே சிரித்து கொண்டு "இந்த சிரிப்பை என்னைக்கும் உன் முகத்துல இருந்து இழக்க விட மாட்டேன்டா அதி "என்று மனதில் உறுதி எடுத்து கொண்டவன் அவளுடன் பள்ளிக்கு சென்றான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro