தொலைந்த விதை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஹலோ! நான் தான் சுட்டி! என் வீட்டோடு இளவரசி. எனக்கு இப்போ ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு வயசு! நீங்க என்ன நினைக்குறிங்கனு தெரியும். நான் எவளோ பெரிய மனுஷி ஆகிட்டேனு நினைக்குறிங்க. அதனால் தான், எனக்கு பிடிக்காத கீரையை அம்மா கொடுக்கும் பொது, நான் சாப்பிடுவேன்.

ஐ! அங்க பாருங்க, நம்ம நிலவை தாண்டி போறோம்! என் ராக்கெட் எவ்ளோ வேகமாக இருக்குனு பார்த்திங்களா? அதுக்குள்ளே நிலவை தாண்டி போய்ட்டோம்! எவ்ளோ அழகாக இருக்கு இந்த நிலா? ஆனால் நிலவை விட அழகாக ஒன்று காமிக்கவா? வாங்க! இதோ காமிக்கிறேன்! ஒரு ரைட்டு ஒரு லேப்ட்டு, அப்புறம் ஸ்ட்ரெயிட்ட போன நாம வந்துட்டோம்! இருங்க, என் ராக்கெட்டை பார்க் பண்ணிட்டு வரேன்.

நிலவை விட அழகாக ஒன்று இருக்குனு, சொன்னேன் ஞாபகம் இருக்கா? அது வேறு யாரும் இல்லை, என் அம்மா தான்! இவங்க தான் இந்த வீட்டோடு ராணி. என் அம்மா எவ்ளோ பிடிக்கும் தெரியுமா? மேலே எவ்ளோ ஸ்டார்ஸ் இருக்கோ, அவ்ளோ பிடிக்கும். எனக்கு பிடிச்ச பொம்மைலாம் வாங்கி தருவாங்க. அப்புறம் தினமும் என் கூட விளையாடுவாங்க. ஆனால் கொஞ்ச நாளாக அவங்க ரொம்ப கவலையாக இருக்குறாங்க.

அதுக்கு காரணம் எனக்கு தெரியும்! அப்பா ரெண்டு நாளுக்கு முன்னாடி யாருக்கோ ஹெல்ப் பண்ணனும்னு பக்கத்து ஊருக்கு போனாரு. அவரை மிஸ் பண்றது நாலா தான் அம்மா கவலையாக இருக்குறாங்க. ரெண்டு பேருக்கும் அவ்ளோ லவ் இருக்கு. பின்ன, அவரு எங்கே வீட்டு ராஜா இல்லையா? ராணி ராஜாவை மிஸ் பண்ண மாட்டாங்க? எனக்கும் என் அம்மாவுக்கும் பிடிச்ச எல்லாமே என் அப்பா செஞ்சு தருவார். அவரு எவ்ளோ பெரிய செஃப் தெரியுமா? நானும் ஒரு பெரிய செஃப் தான், ஆனால் ரொம்ப பிஸி.

எனக்கும் என் அப்பா மாதிரி ஒரு இளவரசன் தான் வேணும்! இருங்க! நான் வரைஞ்சு வெச்சுருக்கேன் என் இளவரசன் எப்படி இருக்கணும்னு. காமிக்குறேன்! இதோ, இந்த நோட்புக் ல தான் இருக்கு. என் இளவரசன் என்னை நிறைய லவ் பண்ணனும். என் கூட தினமும் விளையாடனும். அப்புறம் எனக்கு பிடிச்ச எல்லாமே செய்து தரணும். நானும் அவனை அதே அளவுக்கு பாத்துப்பேன். எனக்கு இப்பவே அவனை பார்க்கணும், ஆனால் அம்மா நான் இன்னும் பெருசா ஆனதுக்கு அப்புறம் தாணு சொல்லிட்டாங்க. அதுக்கு நான் அஞ்சு வயசு ஆகணும்.

"சுட்டி! பஸ் வர போகுது! சீக்கிரம் சாப்பிட வா!" என்று சுட்டியின் அம்மா கூப்பிட்டார்கள்.

உங்க கிட்ட பேசிட்டு இருந்ததுனால, ஸ்கூல் பத்தி மறந்து போச்சு. பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. என் நொடேபூக்கில் வேறு என்ன இருக்குனு காமிக்குறேன்!

பஸ் மட்டும் மிஸ் பண்ணிருந்தா, அம்மா என்னைய நல்ல திட்டிருப்பாங்க. தப்பிச்சேன். ஆமா எது பத்தி பேசிட்டு இருந்தோம்? ஆ! என் நோட்புக்! இதுலை என்னைய பத்தி எல்லாமே இருக்கு. அப்பொ தானே என்னைய பத்தி எழுதவோ, இல்லை படம் எடுக்கவோ ஈஸியாக இருக்கும்.

இங்க பாருங்க, என் ராக்கெட் பத்தி இருக்கு இங்க. போன வாரம் டீ.வியில் ஒரு ராக்கெட் பார்த்தேன். எவ்ளோ வேகமாக போச்சு தெரியுமா? என்னோடு ராக்கெட் அதை விட வேகமாக இருக்கும். பத்து நிமிஷத்துல ப்ளுட்டோக்கு போய், "கவலை படாதே. எனக்கு பொறுத்த வரிக்கும் நீ ஒரு பிளானட் தான்" னு சொன்னேன்.

நான் ஒரு செஃப் னு சொன்னேன், ஞாபகம் இருக்கா? இங்க பாருங்க, அது கூட என் நோட்புக் ல இருக்கு. ஒரு நாள், நானே கடலுக்கு போய் ஒரு பெரிய மீன் பிடிச்ச, தக்காளி, வெங்காயம், அப்புறம் கடற்பாசி போட்டு ஒரு ருசியான மீன் குழம்பு செய்தேன். கேக்கும் போதே சாப்பிடனும்னு தோணுதா? நாளைக்கு செஞ்சு தரேன்!

இன்னும் நிறைய இருக்கு என் நோட்புக் ல! ஒரு நாள் நான் தனியாக ஹிமாலயாவை ஏறினேன்! மேலே போனதுக்கு அப்புறம், "சுட்டி" னு அங்க எழுத்து வெச்சேன். அப்பொ தானே நான் இங்க வந்தேன்னு தெரியும். இதே மாதிரி ஒரு பெரிய அட்வென்சர் போகலாம்னு அம்மா சொன்னாங்க. ஒரு புது நாடு பார்க்க போகலாம்னு சொன்னாங்க. அப்பா வந்த உடனே போறோம்னு நினைக்குறேன்.

ஆமா, எல்லாரும் கேட்கிற கேள்வி நீங்க கேட்கவே இல்லையே? நான் படிச்சு முடிச்சு உடனே என்ன ஆகுவேன்? அது கூட என் நோட்புக் ல இருக்கு. நிறைய ஐடியா இருக்கு. ஒரு பெரிய டாக்டர் ஆகி நிறைய பேரை காப்பாத்தணும். அப்புறம் ஒரு பெரிய கம்பெனி ஓட சி.ஈ.ஓ ஆகணும். எனக்கு பாட கூட பிடிக்கும், அதுனால சிங்கர் ஆகலாம். ஆனால் எதுக்கு வெறும் சிங்கர் ஆகணும். அப்படியே ஒரு பெரிய அக்ட்ரேஸ் ஆகுவேன். என்ன பாக்குறீங்க? இதுலை எல்லாமே நான் ஆகுவேன். என் பேர் உலகத்தில் இருக்க எல்லாருக்கும் தெரியும் பாருங்க-

அந்த நேரம், வெளியில் இருந்து, "டமால்" என்று ஒரு பெரிய வெடி வெடிக்க சத்தம் கேட்டது. மக்களின் சத்தம் பரபரப்பாக ஆனது. எல்லோரும், அங்கும் இங்கும் தடுமாறி கொண்டு ஓடினார்கள். மக்கள் கூட்டத்தினால், பேருந்தால் சாலையில் இதற்கு மேல் போக முடியவில்லை. உடனே பேருந்து ஓட்டுனர், உள்ளே இருக்கும் அத்தனை குழந்தைகளும் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு கூடிட்டு செல்ல தொடங்கினார். அவரு மனதில், "சூழ்நிலை இப்படி மோசமாக இவ்ளோ சீக்கிரம் ஆகும்னு எதிர்பார்க்கவில்லை" என்று பதட்டமாக நினைத்தார்.

சுட்டிக்கு என்ன நடப்பது என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் குழந்தைகளுக்கு ஏதோ நடப்பது மட்டும் தெரிந்தது. அதனால், எப்பொழுதும் உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், ஓட்டுனர் பேச்சை கேட்டுக்கொண்டு வேகமாக அவரை பின்பற்றினார்கள். சின்ன பிள்ளைகள் நடப்பது கூட கவனிக்காமல், மக்கள் எல்லோரும் அவர்களை இடித்து இடித்து ஓடினார்கள். அப்படி ஒருத்தர் சுட்டியை இடிக்கும்போது, அவள் கையில் இருக்கும் நோட்புக் கீழை விழுந்தது.

ஒவ்வொரு முறையும் நொடேபூக்கை அவள் கையில் பிடிக்க முயலும்போது அது தவறிவிட்டே போனது. ஒரு வழியாக சுட்டியின் பிடியில் அந்த நோட்புக் வந்தது. ஆனால் இப்போ ஒரு தெரியாத இடத்தில், தனியாக கூட்டத்தில் மாட்டி கொண்டாள். குழந்தைகளை கூட்டிட்டு பத்திரமாக தப்பிக்கவும் அவசரத்தில், சுட்டி நோட்புக் பின்னாடி பொன்னத்தை அந்த ஓட்டுனர் கவனிக்கவில்லை.

அய்யயோ! தெரியாம என் ப்ரண்ட்ஸ் விட்டு தனியாக வந்துட்டேனே. அம்மா அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சா திட்டுவாங்க. இப்போ எப்படி திரும்பி போகிறது? யாரு இப்போ வெடி வெடிக்கிறது? தீபாவளி கூட இல்லை இப்போ. பயமாக இருக்கு எனக்கு. திட்டினாலும் பரவாயில்லை, எனக்கு இப்போ அம்மா அப்பா வேணும்.

ஆஆ! என்ன வீச்சுனு ஒரு சத்தம் கேட்குது? அது என்ன, மேலிருந்து ஏதோ என் பக்கம் வருது?

மீண்டும் ஒரு வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது. சுட்டி கண்ணை திறக்கும் பொது, அவளை சுற்றி எல்லாம் புகையாகவும் நெருப்பாகவும் இருந்தது. ஒரு அடி தூரத்தில், ஒரு சிறுமி சாலையில் கீழை கிடைந்தால். அவள் கை பக்கம் சுட்டியின் நொடேபூக்கில் இருக்கும் பக்கங்கள் சிதறிக் கொண்டுயிருந்தன. பக்கங்களை பிடிக்கலாம் என்று சுட்டி முயலும்போது, அவள் கையை விட்டு காற்றில் பறந்து போனன்ன. சுட்டியின் கனவுகளும் ஆசைகளும் நிறைந்த காகிதங்கள் கண் காணாத தூரத்துக்கு மறைந்தன.

உலகம் முழுவதும் சுட்டி போன்ற விதைகள், தன் கனவுகளை காணாமல் தொலைந்து போகின்றன. என்ன இருந்தாலும் சரி, இந்த இழப்பை நம்மால் நியாயம் படுத்த முடியுமா? எதிர்க்கு இறந்தோம் என்று சுட்டிக்கும் புரியவில்லை, எனக்கும் புரியவில்லை. உங்களுக்கு?

இது தான், நான் முதல் முறையாக தமிழில் ஒரு கதை எழுதுவது. soulful_scribbler க்கும் instagram ல் @livelydhi க்கும் நன்றி, என் கதையை படித்து எல்லாம் சரியாக இருக்கு என்று சொல்லி என்னக்கு ஒரு நம்பிக்கை கொடுத்ததும். என் கதை பிடித்தால், மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro