1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பங்குனி மாதம் துவங்கி கிழக்கில் சூரியன் தன் வரவை உலகிற்கு உணர்த்தி மேகமெனும் தேரினிலே பவனி வந்துகொண்டிருந்தான்.

அந்த ஏகாந்த காலை வேளையின் இனிமையோடு கோயம்பத்தூரில் பீளமேடு பகுதியில் அமைந்திருந்த அந்த இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டில் வரவேற்ப்பறையில் இளையராஜாவின் மெல்லிய கானங்கள் மேலும் இனிமை சேர்க்க அதன் முன்னே இசையின் இன்பத்தில் அமிழ்ந்தவாறு பேப்பர் படித்துக்கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவர் சேகரன் .

அவரின் மனைவி பார்வதி கொண்டு வந்து கொடுத்த காபீயை வாங்கியவர் மணியை பார்க்க அதுவோ எட்டு என்று காட்டியது .அவரிடம் coffeeயை வாங்கியபடி அவரை பார்த்தவர் "பாரு இன்னும் பசங்க எந்திரிக்கலயா ?"என்க

அவரோ "லேது பாவா (இல்லங்க ).என்னனு போய் பாக்குறேன் "என்று கூறியவர் அந்த வீட்டின் வரவேற்பறையை ஒட்டியுள்ள படிக்கட்டில் ஏறி இடதுபக்கம் இருந்த கதவில் கை வைக்க அதுவோ தானாய் திறந்து கொண்டது .

உள்ளே தலையில் ஈரம் சொட்ட சொட்ட track பாண்ட் shirtல் ஒடிசலான தேகத்துடன் மாநிறத்தில் ஆறடி உயரத்தில் நின்றுகொண்டிருந்தவனை பார்த்து புன்னகைத்த பார்வதி "சின்னு சீக்ரம் எந்திருச்சுட்டியா?"என்க

அவனோ "அவுனு ம்மா ஈ ரோஜு நேனு group studies கி எள்துநானம்மா(ஆமா அம்மா இன்னிக்கு நா group studiesku போறேன்) அதான் சீக்ரம் எந்திருச்சேன்"என்க

அவரோ அவனை பார்த்து புன்னகைத்தவர் "டேபில்லோ காபி உந்தி எடுத்துக்கோ "என்றவர் அடுத்த அறைக்கதவை திறக்க தலை முதல் கால் வரை முழுவதும் போர்த்திய நிலையில் படுத்திருந்தது ஒரு உருவம் .

அதன் அருகில் நெருங்கியவர் அவளின் தோளை தொட்டு உசுப்பியவர் "கண்ணா எந்திரி டைம் ஆச்சு "என்க அவர் அழைக்க அழைக்க அந்த உருவமோ புரண்டு புரண்டு படுத்தாதே ஒழிய எந்திரிக்க வில்லை .

சோர்ந்தவர் கடைசி ஆயுதமாய் தெலுங்கை கையில் எடுத்தார் "நுவ்வு எப்புடு நா மாட்டா வினதம் லேது "(நீ எப்பொழுதும் எனது பேச்சை கேட்பதே இல்லை )என்று துவங்க

அவளோ காதை பொத்திக்கொண்டு எழுந்தமர்ந்தாள் "தெலுங்குல பேசாதம்மா "என்ற கூவலுடன் .

எண்ணையற்ற தோள் வரை புரண்டிருந்த தலை முடி ஆங்காங்கே பறந்திருக்க மையிடாது காந்தமென கவர்ந்திழுக்கும் கண்களை விரித்து தன் அன்னையை முறைத்துக்கொண்டிருந்தவளின் சந்தன நிற மேனியில் பட்டு தெறித்த சூரிய கதிர்கள் அவளின் மேனியை மேலும் தங்கமென காட்டியது .அவள் ஜான்வி இருபத்தி ஓரு வயதான சமீபத்தில் கணிணி பொறியியல் முடித்திருந்த பட்டதாரி .

வேலைக்காக காத்திருக்கிறாள் .தன் அன்னையை முறைத்தவள் "எத்தனை தடவ சொல்லிருக்கேன் தெலுங்குல என் கிட்ட பேசாதனு "என்க

அவரோ அவளை தலையிலேயே கொட்டியவர்" நா தமிழ்ல காட்டு கத்து கத்துக்கிட்டு இருந்தப்போ இழுத்து பொத்திகிட்டு தூங்குனேல அதான் தெலுங்குல கூப்பிட்டேன் "என்க

அவளோ எழுந்து தன் அன்னையின் முன் நின்று ஓரு விரலை காட்டியவள் "அம்மா நா மறுக்க மறுக்கா சொல்றேன் நீ என் கிட்ட தெலுங்குல பேசாத ஏன்னா.......என்று நிறுத்தியவள் எனக்கு அது தெரியாது "என்றவள் அவரிடம் "பெட் coffeelaam இல்லையா பாரு "என்க

அவரோ மேலும் ஓரு கொட்டு தலையில் வைத்து விட்டு சென்றுவிட்டார் "போய் குளி டி குட்டச்சி " என்ற வாக்கியத்துடன் .

பாவமாய் முகத்தை வைத்தபடி தன் தலையை தடவியவள்"நீ கொட்டி கொட்டி தான் நா வளரவே இல்ல போல "என்று கூறியபடி அவளின் அறையிலிருந்த முழு நீள கண்ணாடியை பார்க்க அதுவோ அவளின் ஐந்தடி குள்ள உயரத்தை வஞ்சனை இன்றி மேலும் குள்ளமாய் காட்டியது .தன்னை தானே பார்த்துக்கொண்டவள் "நோ நோ நா குள்ளம் இல்ல cute "என்று தனக்கு தானே கூறியவாறு குளியலறைக்குள் சென்றாள்.

பின் குளியலறைக்குள் அவள் சென்று குளித்து விட்டு கீழே வந்தவள் தன் தம்பியிடம் "குட் மார்னிங் டா பனை மரம் "என்க

அவனோ "குட் மார்னிங் மினியன் "என்று கூறியவாறு அவளிடம் coffeeyai கொடுத்தான் .

தனது கோப்பையை வாங்கிக்கொண்டவள் சென்று அங்கிருந்த ஒற்றை ஆள் அமரும் சோபியாவில் தன் இரு கால்களையும் எடுத்து மேலே வைத்துக்கொண்டு மெத்தையில் சாய்வதை போல் சாய்ந்து அமர்ந்தபடி தொலைக்காட்சியை வாயை பிளந்தபடி பார்க்க அவளின் தலையிலேயே ரெண்டு கொட்டு விழும் உணர்விலேயே நிஜ உலகிற்கு வந்து மேலே பார்த்தாள் .

அங்கே நின்றிருந்தனர் அவளின் இரு ஆருயிர் நண்பர்கள் .சிறு வயதிலிருந்தே ஜான்விக்கு இருக்கும் இரண்டே நண்பர்கள் இவர்கள் தான் ஒருவன் பிரவீன் இன்னொருவளோ ஜீவிதா.

சிறு வயது முதலே ஒன்றாக இருந்தவர்கள் கல்லூரியில் எடுத்த பிரிவும் ஒன்று தான் .தற்பொழுது மூவரும் ஒன்றாகவே காக்னிசன்ட்டில் நேர்முகத்தேர்வு ஓரு வாரத்திற்கு முன் அட்டென்ட் செய்திருந்தனர் .அதன் முடிவுகளுக்காக மூவரும் காத்திருக்க திடீரென்று இரு நண்பர்களும் காலை வேளையில் தன் வீட்டில் பார்த்தவள் sofaavil எழுந்து நின்று இருவரையும் அணைத்துக்கொண்டாள் .

தானும் அவளை அணைத்தவர்கள் பின் அவளை பிரித்து நிறுத்தினர் .ஜீவிதா "ஹே அரை அடி ஓரு குட் நியூஸ் டி "என்க

அவளோ "குட் நியூஸா என்ன ?"என்க

இருவருமோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள் ஒரே நேரத்தில் "ஜாப் கெடச்சுருச்சு டி நம்ம மூணு பேருக்கும் "என்க

அவளோ கண்களை அகல விரித்து ஆனந்தத்தில் குதித்தவள் "வாவ் எங்கே டி?"என்று குதித்துக்கொண்டே கேட்க

ப்ரவீனோ தன் கையை வைத்து அவள் மண்டையை பிடித்தவன் "ஓரு எடத்துல நில்லு முதல்ல .போஸ்டிங் எங்கன்னு தெரில ஆனா ட்ரைனிங் மூணு மாசம் பெங்களூர்ல "என்க

ஜான்வியோ கனவில் மிதக்க துவங்கினாள் .அவர்கள் மூவருக்குமே bangalore days படம் பார்த்ததிலிருந்து பெங்களூரின் மேல் ஓரு காதல் .சிறிது காலமாவது அங்கே பணியாற்ற வேண்டும் என்று நினைத்திருந்த நண்பர்களுக்கு ட்ரைனிங் period அங்கேயே அமைந்துவிட இதற்கு மேல் அவர்கள் லூட்டியை சொல்லவா வேண்டும் .

ஜான்வியோ எகிறி குதித்தவள் "சூப்பர் நா மெயில் செக் பண்ணல இன்னும் அதான் தெரில எனக்கு .எப்போ கெளம்பனும் ?"என்க

ஜீவிதாவோ "இன்னும் ஓரு வாரத்துல. அங்க என் அண்ணா இருக்காங்க சோ ஹாஸ்டெல்ல தங்குறதுக்கான ஏற்பாடு நா பாத்துக்குறேன் "என்று கூறி விட அதன் பின் அந்த இரண்டு நண்பர்களும் ஜான்வியின் பெற்றோரிடம் விஷயத்தை கூற அவர்களோ பெங்களூரில் தனியாக தங்க வேண்டும் என்றதும் யோசிக்க ஜான்வியின் தம்பியோ முடியவே முடியாதென்று ஒற்றைக்காலில் நின்றான்.

ஜான்வியின் தம்பியான ஆதிசேஷன் ஜான்விக்கு தம்பி என்பதை விட அண்ணன் என்று சொல்லலாம் .அவளின் நலனின் மேல் மிகவும் அக்கறை எடுத்துக்கொள்வான் சென்னையில் இன்டெர்ன்ஷிப் period செல்லும் பொழுதே அவர்களின் அம்மா அப்பாவை சமாளிப்பதை விட அவனை சமாளிப்பதே பெரும் தலை வலியாய் இருந்தது . இவர்கள் இருவரும் எப்படியோ பேசி பேசி அவர்களை சம்மதிக்க வைக்க இன்னும் ஒரு வாரத்தில் பெங்களூர் செல்ல பற்பல கனவுகளுடன் தயாராகினர் நண்பர்கள் மூவரும் .

இங்கே சென்னையில் ஆதம்பாக்கம் பகுதி ஜன நெரிசலிற்கு சற்றும் குறைவில்லாமல் எப்பொழுதும் போல் வாகன நெரிசலில் சிக்கி தவிக்க அங்கிருந்த ஓரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது அறையில் லாப்டாப்பில் தீவிரமாக எதையோ பார்த்துக்கொண்டிருந்தான் ஒருவன் .

ஆறடிக்கும் மேலான உயரம் ,மாநிறத்திற்கும் வெள்ளைக்கும் இடைப்பட்ட நிறத்தில் இருந்தவனின் கண்களோ வேல் போல் கூர்மையாய் இருக்க,புஜங்கள் இரண்டும் உடற்பயிற்சி செய்வதன் அடையாளமாய் இறுகி இருந்தது .கூர்மையான நாசிக்கு கீழ் இறுகி அடைத்திருந்த இரண்டு உதடுகளுக்கும் மேல் தன் கட்டை விரலை வைத்தவாறு ஓரு கையால் லாப்டோப்பில் எதையோ தட்டிக்கொண்டிருந்தான் அவன் .

உற்றுப்பார்க்க ஏதோ சைட் பிளான் போல் இருந்தது .தன் வேலையில் மூழ்கி இறந்தவனின் கவனத்தை அருகில் இருந்த தொலைபேசி திசைத்திருப்ப அதில் வந்திருந்த மேனேஜர் என்ற நம்பரை பார்த்து அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தான் .வைத்தவன் "சார் பிளான் ..."என்று ஏதோ கூற வர அவர் அப்புறம் என்ன கூறினாரோ

இவனோ "6 மந்த்ஸ் projectaah ."என்றவன்

சற்று நிதானித்துவிட்டு "எங்க சார் ?"என்க அப்புறம் கூறப்பட்ட பெயரை இவனும் உச்சரித்தான் "பெங்களூர்...ஓகே சார் ஐ will செக் தி மெயில் "என்றவாறு போனினை வைத்தவன் முகத்தில் சற்று சந்தோஷம் குடியேற யாரிற்கோ கால் செய்தான் அப்புறம்

எடுக்கப்பட்டதும் குதூகலமான குரலிற்கு மாறியவன் "ஹலோ நா இன்னும் ஓரு வாரத்துல பெங்களூர் வரேன் .

....

"transfer இல்ல ஒரு 6 மந்த்ஸ் ப்ராஜெக்ட்"

......

"ஓகே lets ஹவ் fun "என்று அழைப்பை cut செய்து விட்டு வைத்தவன் கெளதம் என்ற தன் தந்தையின் குரலில் பின்னே திரும்பினான்.

கெளதம் ஓரு சிவில் என்ஜினீயர் .ஓராண்டிற்கு முன் கல்லூரி படிப்பை முடித்தவன் தற்பொழுது ஓரு கட்டுமான நிறுவனத்தில் structural இஞ்சினீராக பணியாற்றுகிறான் .அவனிற்கு ஒரு அக்கா உள்ளார் .தற்பொழுது திருமணம் முடிந்து விட்டது .தன் தந்தையின் அருகில் சென்று அவரை அணைத்துக் கொண்டவன் தனது ப்ராஜெக்ட் விஷயத்தை சொல்ல

அவரோ "எது பெங்களூராஹ் மகனே அப்பாவையும் கூட்டிட்டு போடா உன் அம்மா முகத்தையே பாத்து பாத்து போர் அடிக்குது நானும் கொஞ்சம் colorfullaa பாத்துட்டு வரேன் "என்க

அவனோ "உனக்கு ஆனாலும் குசும்பு ஜாஸ்திப்பா.அப்பறோம் நீயே இதை உன் wife கிட்ட சொல்லிரு .எனக்குலாம் அவங்க கேக்குற சில்லி தனமான கேள்விக்கு பதில் சொல்ல பொறுமை இல்ல "என்க அவரோ சிரித்துக்கொண்டார்.

அனைத்து ஆண் பிள்ளைகளும் அன்னையிடம் அதிகம் ஓட்டுதல் பெற்றிருப்பர் எனில் கௌதமோ தலை கீழ் .தந்தையிடம் நண்பனை போல் பழகுபவன் அன்னையிடம் அளந்து அளந்து தான் பேசுவான் .அவரின் பாரபட்ச குணமும் அதற்கொரு காரணம் .மகளிற்கு அனைத்தையும் பார்த்து பார்த்து செய்பவர் கௌதமிற்கு ஏனோ கடமைக்கென்றே செய்வார் .

அது ஏனென்று அவர் மட்டுமே அறிவார்.

கௌதமின் தந்தை "எப்போடா கெளம்பனும் ?"என்க

அவனோ "இன்னும் ஒரு வாரத்துல பா"என்க

அவரோ "சரிடா பத்தரமா போயிட்டு வா "என்று கூறியவர் அவ்வறையை விட்டு வெளியேற விதியோ இரு வேறு துருவங்களை இணைப்பதற்கான காலத்தை எதிர் நோக்கி காத்திருந்தது .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro