10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அலுவலகம் முடித்து ஜீவிதாவுடன் ஜான்வி அவளின் அறைக்கு வந்திருந்தால் .வரும் வழி நெடுகிலும் காலையில் கௌதமை பார்த்த பொழுது நடந்த சம்பவங்களை தான் கூறியபடி வந்துகொண்டிருந்தாள் .அவர்கள் இருவரும் ஒரு சிரிப்புடன் அவள் விவரித்து கூறும் அழகை பார்த்தபடி வந்தனர் .

பின் அறைக்கு வந்ததும் ஜீவிதா குளிக்க செல்ல ஜான்வி அமர்ந்து ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள் அப்பொழுது அவளின் போனிற்கு அழைப்பு வந்தது .யாரென்று பார்க்க அவளின் அன்னை தான் அழைத்திருந்தாள். எப்பொழுதும் காலையில் ஒரு முறை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அரை மணி நேரம் பேசி விடுவாள் அதன் பின் அவர்களும் அழைக்க மாட்டார்கள் .

இன்று என்ன புதியதாய் என்று நினைத்தவள் அழைப்பை ஆர்வமுடன் எடுத்து காதில் வைத்து "அம்மா என்னம்மா இப்போ கால் பண்ணிருக்க ?"என்று கேட்க

பார்வதியோ "அது கண்ணா உன் அத்த வந்துருந்தாங்கம்மா இன்னைக்கு காலைல "என்க

ஜான்விக்கு கொஞ்சம் அவள் அத்தையின் மேல் அத்தனை ஒட்டுதல் இல்லாத காரணத்தால் சற்று குரலில் இருந்த துள்ளல் குறைய "ஓஹ் சரிமா என்ன விஷயமா வந்தாங்க ? "என்க

அவரோ "அது...அவங்க பையனுக்கு உன்ன பொண்ணு கேட்டாங்கடா .அப்பா உன் விருப்பத்தை கேக்க சொன்னாரு "என்க ஜாங்விக்கோ இந்த உலகமே ஒரு நிமிடம் நின்றுவிட்டதை போல் இருந்தது .ஏனோ அனுமதி இல்லாமல் கௌதமின் உருவம் கண் முன் வந்துபோக அவளின் அன்னை மூன்று முறை போனில் அவள் பெயரை உரக்க கத்திய பின்னே தனது சிந்தனையில் இருந்து வெளி வந்தாள் .

பார்வதி "என்ன டா என்ன சொல்றது உனக்கு ஓகேவா ?"என்க

ஜான்வியோ "அது அம்மா எனக்கு இப்போ தான் படிப்பு முடுஞ்சுருக்கு இப்போ கல்யாணம் வேணாம் அம்மா "என்க

அவரோ சிறிது நேரம் அமைதியாய் இருந்தவர் "அப்போ ஒரு வருஷம் அபி காத்திருக்க தயார்னா உனக்கு சம்மதமா கண்ணா ?"என்க

அவள் என்ன கூறுவாள் இது வரை திருமணம் என்பதை பற்றி சிறிதும் யோசிக்காமல் இருந்தவள் இப்பொழுது மன சஞ்சலத்தில் வேறு இருக்க என்ன கூறுவதென்று தெரியாமல் இருந்தாள்.

ஜான்வி "அவங்கள நா அப்டி நெனைச்சதில்லம்மா எனக்கு டைம் வேணும் .இதெல்லாம் நா யோசிச்சதில்ல .அண்ட் எனக்கு அபி மேல அப்டி எண்ணம் எதுவும் வந்ததில்லம்மா இனியும் வராதுன்னு தான் நினைக்குறேன் நீங்க வேணாம்னு சொல்லுறீங்களா ப்ளீஸ் ?"என்க

பார்வதிக்கோ சிறிது வருத்தம் தான் தனது மகளின் முடிவில் எனினும் திருமண விஷயத்தில் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நினைத்தவர் "ம்ம் சரி கண்ணா உடம்ப பாத்துக்கோ இன்னும் எவ்ளோ நாள் ட்ரைனிங் ?"என்க

அவளோ "இன்னும் ஒரு மாசம் ட்ரைனிங் இருக்கும்மா "என்க

அவரும் "சரிடா கண்ணா நாங்களும் அவங்க கேட்டதும் நல்ல யோசனையாச்சேன்னு நெனச்சோம் ஆனா உனக்கு விருப்பம் இல்லேங்கலை எதுவும் பண்ண முடியாது .நாங்க சொல்லுறோம் டா "என்க

அவளும் தன்னை புரிந்து கொண்ட அன்னையின் அன்பை நினைத்து சிரித்தவள் "சரிமா நா வைக்குறேன் "என்று கூறி அழைப்பை துண்டித்தாள் .

தாமதமின்றி ஜான்வியின் முடிவை பார்வதியும் சேகரும் அழைத்து கூறி விட ரேவதிக்கோ கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது அதை தன தமயனிடம் காட்டவும் செய்தார் "இதுக்கு தான் நா அவ கிட்ட கேக்க வேணாம் நாமளே முடிவு பண்ணுவோம்னு சொன்னேன் கேட்டிங்களா ?உலகத்துல இல்லாத பொண்ண பெத்துடீங்க அவ விருப்பத்தை கேட்டு செய்றதுக்கு "என்று கத்த

ஜான்வியின் தம்பிக்கோ கோபம் வந்து விட்டது போனினை வாங்கியவன் "அத்த கல்யாண விஷயத்துல என் அக்கா விருப்பம் தான் எங்க விருப்பமும் .உலகத்துல இல்லாத பொண்ணா இருக்க பொய் தான் அவளை பொண்ணு கேட்டு வீட்டுக்கு வந்தீங்க நீங்க தேவை இல்லாம அப்பாவை மரியாதை குறைவா பேசாதீங்க "என்க

ரேவதிக்கு சற்று குரல் மட்டுப்பட்டு விட்டது "அதுக்கில்லடா சின்னு .."என்று அவர் ஏதோ கூற வர

அவனோ "ஒன்னும் சொல்ல வேணாம் அத்த முடிவு தெருஞ்சுருச்சுல்ல அபி மாமாக்கு வேற எடத்துல பொண்ணு பாருங்க "என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டான் .

ரேவதிக்கு ஜான்வியின் தம்பி என்றால் கொஞ்சம் பயம் அதிகம் .அவன் பெயர் ஆதிசேஷன் பெயரிற்கு ஏற்றார் போல் அந்த ஆதிசேஷனை போலவே கோபம் சட்டு சட்டென்று வந்துவிடும் .யார் என்ன என்றெல்லாம் பார்க்க மாட்டான் தவறென்றாள் பட்டு பட்டென்று வார்த்தையால் குத்திக்கிழித்துவிடுவான் .அவரின் புதல்வி ராகவிக்கு அவனை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது ரேவதியின் விருப்பம் ஆதலால் அவனை எதிர்த்து பேசாமல் வைத்துவிட்டார் .

அவர் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க அபிஷேக் பனி முடிந்து வீட்டிற்குள் வந்தான் .ரேவதி ஏதோ தீவிரமான சிந்தையில் இருப்பதை கண்டவன் அருகில் சென்று "அம்மா "என்று தோளை தொட

அவரோ "அபி அந்த ஜான்வி வேணாம்னு சொல்லிடலாம் டா என்ன திமிரு பாரேன் "என்க

அபியோ சிரித்தவன் "அம்மா இதுல திமிரு எங்கிருந்து வந்தது என் விருப்பத்தை நா சொன்னேன் அவ விருப்பத்தை அவ சொன்னா "என்க

ரேவதியோ "அதில்லடா "என்க

அவனோ "அம்மா ஒன்னும் சொல்லாத ஏற்கனவே சின்னு என்கிட்டே போன் பண்ணி பேசிட்டான். கொஞ்சம் வருத்தமா தான் இருந்துச்சு ஆனா நல்லது தான் புடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டா வீனா போறது ரெண்டு பேரோட வாழ்க்கையும் .தான் அதுனால இதை இப்டியே விட்று "என்று கூற

ரேவதியோ பெயரிற்கு மண்டையை ஆட்டியவர் விட்டு பிடிக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.

வாரங்களும் கடந்தது மாதமும் உருண்டோடிட திங்கள் கிழமை மட்டும் ஜீவிதாவை கழற்றி விட்டுவிட்டு கௌதமை காண சென்று விடுவாள் ஜான்வி .

அவனிடம் பேசியபடி நடப்பவள் அந்த ஐந்து நிமிட பேச்சிற்காக அன்று தனது தூக்கத்தை தொலைத்து ஓடோடி வருவாள் .அது என்ன மாதிரியான உணர்வு என்று ஜான்விக்கு புரியவில்லை எனில் அவளின் செய்கைகளில் இருந்த வித்தியாசத்தை பார்த்த ஜீவிதாவிற்கும் பிரவீனிற்கும் தெள்ள தெளிவாய் புரிந்தது கொஞ்சம் கொஞ்சமாய் அவள் அவனை தனது மனதில் நிறைக்க துவங்குகிறாள் என்று .

அதை தடுக்கவும் முடியவில்லை இருவராலும் .இன்னும் ஒரு வாரத்தில் அவர்களின் ட்ரைனிங் period முடிவுறுவதாய் இருந்தது .அன்றும் திங்கள் கிழமை ஒன்பதரைக்கு சரியாய் அந்த எஸ்கேலார்டோரிற்கு சென்றவள் அவன் வந்துவிட்டானா என்று தேட அவன் வந்ததற்கான சுவடே இல்லை .

escalatoril ஏறி சென்றவள் அங்கு ஒரு அரைமணி நேரம் நின்றிருப்பாள் எனில் கௌதம் வரவே இல்லை .எங்கு சென்றான் என்று நினைத்தவள் மனம் சோர்ந்தபடி அலுவலகத்திற்கு வர என்றும் ஒரு புத்துணர்ச்சியோடு முகத்தில் உறைந்த புன்னகையோடு வலய வரும் ஜான்வியின் இந்த சோகம் நிறைந்த முகம் அலுவலகத்தில் அவளுடன் வேலை பார்க்கும் அனைவருக்கும் வித்யாசமாக தெரிந்தது .

மனம் எங்கோ இருக்க கைகள் மட்டும் வேலையே பார்த்துக்கொண்டிருந்தது .அதன் பின் திவ்யா அவளை அவளின் கேபினிற்கு அழைக்க அங்கே உயிர்ப்பின்றி சிந்தனையை எங்கோ வைத்தபடி சென்று நின்றாள் ஜான்வி .

திவ்யா"ஜான்வி என்னாச்சு எப்போவும் தப்பே பண்ண மாட்ட codingla இன்னைக்கு என்ன இவ்ளோ மிஸ்டேக்ஸ் "என்று ஏதோ கூற ஜாங்வியோ அவள் பேசுவது எதையும் காதில் வாங்காமல் நின்றிருந்தாள் .அவள் தான் பேசுவதை காதில் வாங்கவில்லை என்று உணர்ந்த திவ்யா அவளை ஏறிட்டு பார்க்க அவளோ ஏதோ ஒரு சிந்தனையிலேயே நின்றிருந்தாள்

அவளின் அருகில் வந்த திவ்யா "ஹே என்னாச்சு ஜான்வி ?"என்

க அவளோ சிந்தனையில் இருந்து வெளிவந்தவள் "அது ஒண்ணுமில்ல திவ்யா சாரி .நான் சரி பண்ணிருறேன் "என்று வெளியேறி விட்டாள்.

அன்று ஜீவிதா பிரவீனிடமும் ஒழுங்காக பேசவில்லை அடுத்த நாளும் சென்று நின்றாள் ஆனால் அன்றும் அவன் வரவில்லை .ஒரு வாரம் கடந்திருந்தது அவர்களின் ட்ரைனிங் periodடும் அன்றோடு முடிய இருந்தது .இன்று மூவருக்கும் கடைசி நாள் அன்று திங்கள் கிழமை ஆதலால் ஒன்பதரைக்கு வழக்கம் போல் கிளம்பி சென்றிருந்தாள் இன்றும் அவன் வரவில்லை.

அன்று ஏமாற்றத்துடன் அலுவலகத்திற்குள் வந்தவள் ஏனோ தானோ என்று வேலை பார்த்து உணவு வேளையில் சாப்பாட்டை உண்ணாமல் அலைந்துகொண்டிருக்க ஜீவிதாவும் ப்ரவீனுமோ ஒரு புறம் அவளை கண்டு பாவமாக உணர்ந்தாலும் மறுபுறம் அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது .

ஜீவிதா "என்னடி அரை அடி ஒரு வாரத்துல அரை இன்ச் உடம்பு குறைஞ்சுட்ட "என்க

ஜான்வியோ "அதெல்லாம் ஒன்னும் இல்லடி "என்க

ப்ரவீனோ "எப்படி இல்லாமல் போகும் ஒரு வாரமா ப்ரோவை பாக்களேல அதான் மேடம் பசலை நோய் வந்த தலைவியாட்டம் இருக்காங்க "என்க

ஜான்வியோ அவனை முறைத்தாள்

பிரவீன் "அம்மாடியோ முட்டைக்கண்ண வச்சு மொறச்சா மட்டும் இல்லனு ஆயிடுமா .ஆனாலும் சும்மா சொல்ல கூடாது செம லவ் ஸ்டோரி தான் "என்க

ஜான்வியோ எரிச்சலானவள் "உங்களுக்கு வேற பொழப்பே இல்லையாடா ?எப்போ பாரு லவ் பண்றேன் பன்றேன்னு சொல்லிக்கிட்டு "என்க

ஜீவிதாவோ "அப்போ இல்லன்னா ஏன் இப்டி இருக்க? ரெண்டு வாரமா என்னவோ என்னத்தையோ இழந்த மாதிரி?ஒழுங்கா சாப்பிடுறது இல்ல தூங்குறது இல்ல யாரோடயும் பேசுறது இல்லை என் இப்டி இருக்க "என்று கேட்க

ஜான்வியோ பதிலின்றி தவித்தாள் அவளே அறியாத கேள்விக்கு அவள் எப்படி பதில் சொல்வாள் .அவளின் மௌனத்தையே சம்மதமாய் எடுத்துக்கொண்ட இருவரும் அவளை போட்டு ஓட்டு ஓட்டென்று ஓட்டி தள்ளினர்.

அன்றைய நாளும் முடிவிற்கு வர மூவருக்கும் போஸ்டிங் கோயம்பத்தூரிலேயே போட்டு கொடுத்தனர் .நாளை அறையை காலி செய்ய வேண்டும் ஆதலால் அறைக்கு வந்தவர்கள் தங்களது உடமைகளை எடுத்து வைக்க ஜான்வியோ இலக்கில்லாமல் சிந்தனையிலேயே உழன்றுகொண்டிருந்தாள் என்னவோ மிகவும் நெருக்கமான ஒன்றை இங்கு விட்டு செல்வது போல் அவள் மனதில் வலி எடுத்துக்கொண்டிருந்தது .

அவளை பார்த்து ஜீவிதாவிற்கே பரிதாபமாக போய் விட்டது .அவள் மடித்து வைத்து முடித்ததும் அவளின் பையை எடுத்து ஓரமாய் வைத்த ஜீவிதா அவளின் கையை பற்றியவள் "என்னாச்சுடி ?"என்க

ஜான்வியோ ஒரு பெருமூச்சை விட்டவள் "தெரியலடி என்னவோ ஒன்னு மிஸ்ஸிங்.... .ஏதோ எதையோ மிஸ் பண்ற மாறியே இருக்கு ஆனா எதனு தெரில "என்று கூற

ஜீவிதாவிற்கோ தெளிவாய் புரிந்தது தனது தோழியின் மனநிலை அவளின் கையை பற்றியவள் அவள் கேளாமல் "திவ்யா கிட்ட காலைல கேட்டேன் கௌதம் ப்ரோ சென்னைக்கே போய்ட்டாராம் ப்ராஜெக்ட் முடுஞ்சதால "என்க

ஜான்வியோ "போய்ட்டானா ??என்கிட்டே சொல்லவே இல்ல "என்க

ஜீவிதாவோ நிதர்சனத்தை புரியவைக்க நினைத்தவள் "சொல்ல தோணிருக்காது டி .ரொம்ப சீரியசா எடுத்துக்காத he is just நம்ம traineroda friend நாலு தடவ பாத்தோம் ரெண்டு தடவ பேசினோம் அவ்ளோ தான் .அவங்க நம்ம கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு அவசியம் இல்ல "என்க

ஜான்விக்குமே அது அப்பொழுது தான் புரிந்தது "ஆமால்ல அவசியம் இல்லேல "என்று கூறியவள் குரல் ஏனோ அவள் அறியாமலேயே உடைந்தது .அதன் பின் தன்னை சமன் செய்துகொண்டவள் ஜீவிதாவிடம் திரும்பி "ஒண்ணுமில்லடி சரி ஆயிடும் நீ தூங்கு "என்று கூற

தோழியின் தலையை ஆறுதலாய் வருடியவள் உறங்க சென்றாள்.ஜான்விக்கு ஏனோ மனம் கனக்க உறக்கத்திற்கு செல்லும்முன் நினைவில் இருந்தது அவனின் முகமே .

இங்கு இவள் இப்படி என்றால் கௌதமோ தனது அறையில் தான் கொண்டு வந்த உடமைகளை இதோடு நூற்றி எண்பதாவது முறையாய் தேடி விட்டான் வந்த இரண்டு வாரத்தில் .

மனதில் "எதையோ மிஸ் பண்ணிட்டு வந்த மாறியே இருக்கு ஆனா எல்லாம் இருக்கே "என்று நினைத்தவன் தனது ஹங்கேரில் அதிக நாட்களாய் துவைக்கப்படாத ஒரு jeansai தூக்கி துவைக்க போடுவதற்காக எடுத்து உதற அதிலிருந்து வெளியில் வந்து விழுந்தது ஜான்வியின் கைக்குட்டை .அதை கீழிருந்து எடுத்தவன் அந்த கைக்குட்டையை வருட உதடுகள் அவனையுமறியாமல் மிஸ் யு ஜானு என்று உச்சரித்தது .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro