16

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

scootyயில் கிளம்பியவள் நேராய் போகும் வழியில் ஜீவிதாவின் வீட்டில் அந்த scootyai வைத்தவள் அவளை இன்று அலுவலகத்திற்கு அந்த scootyil வர சொல்லி விட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து மாலிற்கு வந்து விட்டாள் .

வந்து இறங்கி வாசலின் முன்னே நின்று கௌதமிற்கு அழைப்பு விடுக்க அவள் புறமண்டையிலேயே ஒரு அடி விழுந்தது "யார்டா அது" என்று திரும்பி பார்க்க கௌதம் ஒரு கருப்பு நிற டீ ஷர்டில் அவனின் மந்தகாசப் புன்னகையோடு நின்றிருக்க ஜான்வியோ வழக்கம் போல் அவனின் கண்களில் தன்னிலை மறந்து உறைந்து நின்றாள் .

கௌதம் "எப்போ வர சொன்னா எப்போ வர ஜானு ?வா உள்ள போலாம் "என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க அதன் பின்னே தெளிந்தவள் அவன் பின் நடந்தாள் .

நடந்தபடி "நேத்து கேக்க மறந்துட்டேன் .மீட்டிங் எப்படி டா முடுஞ்சுது ?"என்க

அவனோ "வழக்கம் போல தான் நல்ல முடுஞ்சுச்சு சாப்டியா காலைல ?"என்க

அவளோ அவன் கண்களை கவனமாய் தவிர்த்தபடி "இல்லடா மறந்துட்டேன் கிளம்புற அவசரத்துல "என்க

அவனோ "நெனச்சேன் வா போய் சாப்பிடலாம் "என்று ஒரு உணவகத்தினுள் நுழைத்தனர். அங்கே .அங்கு வட்ட வடிவிலும் சதுர வடிவிலும் மாறி மாறி மேசைகள் போடப்பட்டிருக்க ஒரு நான்கு பேர் அமரும் சதுர வடிவ மேசையும் ஒரு இரண்டு பேர் அமரும் வட்ட வடிவ மேசையும் மட்டுமே மீதம் இருந்தது .

கௌதம் "ஜானு எங்க உக்காரலாம் ?"என்க

அவளோ அந்த இருவர் அமரும் மேசையை காட்டி "அங்க போகலாம் கௌதம் "என்றாள் .

பின் அங்கு செல்ல கௌதம் அவளிற்கு எதிரே அமர்ந்தான் .ஜான்வி அவனை ஏனோ நிமிர்ந்து பார்க்கவே தயங்கினாள் மனதில் "டெய்லி பேசுறேன் ஆனா ஏன் இப்டி அவன் முன்னாடி நேர்ல வந்தா மட்டும் இப்படி அவனை பாக்கவே முடியாம தடுமாறுறேனோ தெரிலயே. எதிர்ல வேற உக்காந்துருக்கான் "என்று மனதில் புலம்ப அவனோ அவளை அப்பொழுது தான் முழுதாய் கவனித்தான்.

இளநீல நிறத்தில் அந்த டி ஷர்ட் அவளிற்கு அழகாக பொருந்தி இருந்தது .அவளின் குட்டையான உடல் வாகும் ,சுருட்டை முடியும்,முட்டை கண்ணும் சேர்ந்து பொம்மை போல் இருந்தாள் பார்ப்பதற்கு .அதை வாய் விட்டும் கூறிவிட்டான் கௌதம் "நீ இந்த மாறி dressla cuteaah இருக்க ஜானு இந்த மாறியே போடலாமே "என்க

அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களை ஒரு நொடிக்கும் குறைவாய் சந்தித்துவிட்டு மீண்டும் கீழே குனிந்துகொண்டாள் "அது.... வீட்ல போட விடமாட்டாங்க கௌதம் "என்க

அவனோ புருவம் சுருக்கியவன் "ஏன் நல்லா தான இருக்கு ?உனக்கு புடிக்குமா இப்டி போட"என்க

அவளோ "எனக்கு புடிக்கும் இது comforable ஆஹ் இருக்கும் ஆனா வீட்ல விட மாட்டாங்க சோ போட மாட்டேன் "என்க

அவன் அப்பொழுதே கவனித்தான் அவள் கை லேசாய் நடுங்குவதையும் அவள் தன பார்வையை தவிற்பதையும் .அவர்கள் முதல் சந்திப்பிலிருந்து இன்று வரை அப்படி தான் நேரில் இருக்கும்பொழுது அவன் கண்களை பார்க்கவே மாட்டாள் லேசாய் புன்னகை அரும்ப அவள் முகத்திற்கு நேராய் குனிந்தவன் "ஜானு "என்க

அவள் குனிந்தபடி "என்ன "என்றாள்

அவனோ நடுங்கும் அவள் கையை பற்றியவன் "நானும் எப்பவும் நோட் பண்றேன் ஏன் என்னோட கண்ணை பார்க்கவே மாட்டேங்குற நேர்ல இருந்தா ?"என்க

அவளோ கண்டுகொண்டான் என்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்

அவன் புன்னகைத்தபடி ஒற்றை புருவம் தூக்கியவன் "என்னடி ?"என்க

அவளோ கைகள் அவன் கைகளுக்குள் இருக்க கண்கள் அவன் கண்களை நேராய் சந்திக்க உடலில் வேர்வை துளிர்க்க படபடப்பாக உணர்ந்தவள் "அது அது கௌதம் நாம அந்த சீட்கு போயிறலாமா ?"என்று அந்த நான்குபேர் அமர கூடிய இருக்கையை காண்பித்தாள் .

அதை பார்த்தவன் "ஏன் இதுக்கு என்ன ?"என்க

அவளோ "ப்ளீஸ் அங்க போலாம் "என்று கூற

குழப்பமாய் அவளை பார்த்தவன்"சரி"என்று எழுந்து அந்த மேஜைக்கு சென்றவன் மீண்டும் அவள் எதிரே அமர போக அவளோ பதறி தடுத்தவள் "அது அங்க உக்காராத நீ பக்கத்துல உக்காரு "என்க

அவனோ சிரித்துவிட்டான் "என்ன தான் டி உன் பிரச்னை அங்க உக்காராத இங்க உக்காராதான்னு? "என்க

அவளோ "அதெல்லாம் எனக்கு தெரியாது எதிர்ல உக்காராத "என்று இருக்கையையும் ஆட்டி கூற

அவனோ "சரி சரி உக்காரள நீ உடனே கதகளி ஆட ஆரம்பிக்காத"என்று அவள் அருகில் அமர்ந்தான் இருவர் தோளும் உரச அதுவும் ஒரு வகையில் அவஸ்தையாக இருந்தது ஜான்விக்கு .

மனதில் "ஐயோ கடவுளே என்ன தான் ஆகுது எனக்கு இவன் பக்கத்துல வந்தாலே என்னவோ பண்ணுது "என்று புலம்ப

அவனோ சலனமே இன்றி மெனு கார்டை பார்த்தவன் "என்ன வேணும் ஜானு உனக்கு ?"என்க

அவளோ"உனக்கு என்ன ஆர்டர் பண்றியோ அதையே பண்ணு"என்க

அவனோ அவளை பார்த்தவன் "ஒரு மார்க்கமா இருக்கடி இன்னைக்கு என்னனு தெரில கவனிச்சுரக்குறேன் "என்று கூறியவன் இருவருக்கும் பூரி செட் ஆர்டர் செய்தான். இருவரும் சாப்பிட்டு முடிக்க பில்லும் வந்தது .

ஜான்வி கொடுக்க போக அதற்குள் கௌதமே இருவருக்குமான பணத்தை கொடுத்திருந்தான் .

ஜான்வி "ஏன்டா நா குடுத்துருப்பேன்ல "என்க

அவனோ "நா குடுத்தா என்ன நீ குடுத்தா என்னடி ரெண்டும் ஒன்னு தான "என்று சாதாரணமாய் கூறிவிட்டு தனது பர்ஸை உள்ளே வைத்துக்கொண்டான் .அவன் என்ன நினைத்து கூறினானோ அவளிற்கு அவன் கூறியவை மனதில் புதிய புரியாத தாக்கத்தை ஏற்படுத்த இதழ் புன்னகையை சூடிக்கொண்டது .

பின் கௌதம் "கெளம்பலாமா ?"என்க

ஜான்வியோ இப்பொழுதே தான் வாங்கி வந்ததை கொடுத்துவிடும் எண்ணம் தோன்ற "கௌதம் "என்றாள் எழுந்தவன் அவள் அழைத்ததில் மீண்டும் அவள் அருகில் அமர அவளோ அந்த keychain னை எடுத்து அவன் முன் வைத்தாள்.

அதை எடுத்தவன் அதில் இருந்த வார்த்தைகளை பார்த்து புன்னகைத்தபடி அவளை பார்க்க அவளோ அவன் இடது கையில் இருந்த gripbandai வருடியவள் "இனி ஸ்லோவாவே போடா ப்ளீஸ் "என்க

அவள் கண்களில் இருந்த ஏதோ ஒன்று அவன் தலையை அவன் அனுமதியின்றி சரி என்று ஆட வைத்தது.அவன் புறம் ஒரு புன்னகையை வீசியவள்" குட் பாய் வா போலாம் "என்று அவனை வெளியே இழுத்து சென்றாள்.அதன் பின் அந்த மாலிலேயே சுற்றினர் இருவரும் .

சில கடைகளுக்கு சென்றனர் பல பொருட்களை வேடிக்கை பார்த்தனர் ஒரு மணி நேரத்திற்கு பின் மணியை பார்க்க அது பதினொன்று முப்பது என்று காட்டியது ."ஜானு ஒரு மணிக்கு பஸ் டி இங்க இருந்து போறதுக்கு ஒரு மணி நேரம் ஆகும் கெளம்பலாமா ?"என்று கேட்க

அவளிற்கு உற்சாகம் அனைத்தும் விடிந்துவிட்டது "அதுக்குள்ளயா "என்று பாவமாக முகத்தை வைத்து கேட்க

அவனோ ஒரு கால் வந்துவிட "ஆமா ஜானு "என்று கூறியபடி அதை அட்டென்ட் செய்தவன் பேசியபடி நடந்தான் .escalatorirku வந்தவறார்கள் அதில் நிற்க கீழே ஒரு ஆடவர் கூட்டம் சற்று நின்றபடி ஜான்வியையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தனர் .அவள் அவர்களை கவனியாமல் escalatoril இருந்து நடந்து அந்த கும்பலை நோக்கி வர அவனும் காலில் பிஸியாக இருந்தான் .

அவர்களை நெருங்கும் சமயம் அந்த கும்பலில் இருந்து ஒருவன் ஜான்வியை நோக்கி வர ஜான்வி எதிர்பாரா விதமாய் அவளின் கையை பிடித்து இழுத்த கௌதம் அவளை தோளோடு அணைத்தவன் அந்த கும்பலை ஒரு முறை முறைத்தான் கைகள் அவள் தோள்களில் இறுக்கமாய் பதிய அவளோ பேந்த பேந்த முழித்தாள் திடீரென்று நிகழ்ந்துவிட்ட இந்த நிகழ்வில் .

அவளிற்கு ஒரு ஆணின் ஸ்பரிசம் ஒன்றும் புதிதில்லை .பிரவீன் எத்தனையோ முறை அவள் தோளில் கை போட்டிருக்கிறான் இவளும் அவ்விதமே எனில் இன்று ஏனோ புதியதாய் இருந்தது .அவள் உடல் முழுதும் அவனின் ஒருபக்க உடலோடு ஒட்டி இருக்க அவளின் தலை அவனின் மார்பில் ஒட்டி இருந்தது .உடலில் மின்சாரம் தாக்கியதை போன்றொரு உணர்வு எழ உடல் அவனின் ஸ்பரிசத்தில் ஆட்டம் காண துவங்கியது .

அவனோ எதையும் கண்டுகொள்ளாமல் அவளை தன் கைஅணைவில் வைத்தவாரே அவர்களை தீயாய் முறைத்தவன் கவனமாய் வெளியே அழைத்துவந்து அவளை வாசலிற்கு வந்த பின் தான் விடுவித்தான் .அவளின் மனமோ விசித்திரமாய் இன்னும் கொஞ்ச நேரம் அப்படி இருந்திருக்க கூடாதா என்று ஏங்கியது அவளே அறியாமல் .

அவன் அவளுடன் ஆட்டோவை அழைக்க அதற்குள் அவளோ "கவுதம் ஆட்டோ வேணாமே "என்க அவன் குழப்பமாய் பார்க்க அவளோ "அது நானும் உன் கூட வரேன் அங்க இருந்து ஆபீஸ் பக்கம் தான் "என்று கூற

அவனோ "அது ஓகே டி ஆட்டோ வேணம்னா எதுல போறது ?"என்க

அவளோ எதிரிலிருந்த பேருந்து நிறுத்தத்தை காட்டியவள் "பஸ்ல போலாம் "என்க அவனும் சரி என்று நடந்தான் .

அந்த சாலையை கடக்கும்முன் அவள் கையை இறுக்கமாய் பற்றியவன் பத்திரமாய் அப்புறம் அழைத்து சென்றான் .அந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பின்னும் இருவர் கையும் விலகிக்கொள்ளவும் இல்லை விலக்கிக்கொள்ளும் எண்ணமும் இருவருக்கும் இல்லை .அடுத்து பேருந்து வர கூட்டமாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டவன் அதன் பின் அவளை முன்னாள் ஏற்றிவிட்டு பின்னால் தான் ஏறினான் .அவளை ஜன்னல் புறம் அமர சொன்னவன் அவள் அருகில் அமர இன்னொருவர் நடுவில் அமரும் அளவிற்கு இடம் பாக்கி இருந்தது அந்த இருக்கையில் .

அதை பார்த்து சிரித்தவன் "எத்தூனூண்டு இருக்க பாரு டி நடுவுல இன்னொருத்தர் உக்காருற அளவுக்கு இடம் இருக்கு "என்க

ஜான்விக்கு எங்கிருந்து ரோஷம் வந்ததோ அவனை ஒட்டி அமர்ந்தவள் "இப்போ இல்லையே "என்று கூறி நாக்கை துருத்தி காட்டி அவன் தலை முடியை களைத்துவிட முதன் முதலாய் அவள் நெருக்கத்தில் தடுமாறினான் கௌதம் .

அவளை கை அணைவில் வைத்திருந்த பொழுதோ அவளை கை பிடித்து பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்து வந்தபொழுதோ இல்லாத ஒருவித தாக்கம் மூச்சுக்காற்று மோதிக்கொள்ளும் தூரத்தில் தன் தலை முடியை அவள் கை கொண்டு களைத்து விடும்பொழுது நாசியில் நுழைந்த அவளின் வாசத்தில் சிறிது தடுமாறினான் கௌதம்.அவள் அமைதியாகி ஜன்னலப்புறம் பார்வையை பதித்து அமர்ந்துவிட அவர்கள் இறங்கும் வழிக்கு முன்னாள் அமைந்திருந்த இருக்கையில் அமர்ந்திருந்ததால் foot போர்டில் தொங்குபவர்கள் அவள் மேல் விழுந்துவிடாமல் இருக்க தன் கையை அவள் அமர்ந்திருக்கும் இருக்கையின் பின் கம்பியின் மேல் வைத்தவன் அவளை பாதி அணைத்தவாறு அமர்ந்து கொண்டான் மனதில் புரியாத உணர்வுகளின் தாக்கத்துடன்.அவரவர் அவரவர் சிந்தனையில் இருக்க பேருந்து சீரான வேகத்தில் சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே என்ற பாடலை கசியவிட்டபடி நகர்ந்தது .

இருவரின் மனதின் சின்னஞ்சிறு ரகசியங்கள் என்று வெளிப்படுமோ ?

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro