நினைவுகள்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நானும் இங்கே வலியிலே

நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
து நியாயமா மனம் தாங்குமா
ன் ஆசைகள் அது பாவமா


அனிருத்தின் ரம்மியமான இசையிலும்,குரலிலும் அந்த அறையில் ஒரு ஏகாந்தம் பரவியிருக்க, ஏனோ அந்த இசை காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல் தோன்ற கடுப்பாகி "ஸ்டாப் இட்" என்று கத்தினாள் ஆரதி.

மீன் விழிகளில் இடப்பட்ட ஐ லைனர் அந்த கண்களில் தெரிந்த வலியை மறைக்க, உதட்டுச் சாயமோ பட்டைப் போல் தீட்டப்பட்டு உதட்டளவில் புன்னகையை ஒட்ட வைத்திருந்தது.
கருப்பு நிற லாங் கவுனில் காற்றில் அசைந்தாடும் முடியை க்ளிப் போடாமல் அதன் போக்கிலே விட்டிருந்தாள்.

"ஆரு " என்ற தோழியின் உலுக்கலில் நிமிர்ந்தவள் "ஆனாலும் மாசா குடிச்சுட்டு குடிகாரி மாதிரி சீன் போடுறியே டி...ப்ரேக்கப் ஆகிடுச்சுனு பீலிங் கா? எதுக்கு பாட்டை நிறுத்துன? " என்ற தோழியின் கேள்வியில் சத்தமாக சிரித்தவள் "ப்ரேக்கப் ஆகிட்டா அழுகணுமா? குடிக்கணுமா?நோ நெவர்...நான் என்ஜாய் பண்ணுவேன், அவனை மறப்பேன்.
மாசா தான் எனக்கு குவாட்டர்...அவன் பாட்டுங்கிற பேருல சோக கீதம் வாசிக்கிறான் அதுனால தான் ஸ்டாப் பண்ண சொன்னேன்" என்று கத்தியவள் எழுந்து சென்றாள்.

மாடியில் சுற்றிலும் ரோஜா செடிகள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு , கடற்கரை காற்றில் எழில் கொஞ்சும் அழகுடன் கட்டப்பட்ட உணவகம் அது.

கடற்கரையைப் பார்த்தவாறு நின்றிருந்தவளின் மனம் கனத்து போனது.
அவனை மறப்பேன் இதோடு அவள் உதடுகள் ஆயிரத்து ஏழாவது முறையாக உச்சரித்து விட்டது.
ஒவ்வொரு முறையும் இந்த வார்த்தையை மட்டும் கத்தி உரைத்துத் தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்ள முயல்கிறாள்.

அவளால் அவனை மறக்க முடியுமா? அவள்தான் மறக்க முயலவே இல்லையே!!!
ஒவ்வொரு முறை அவனை மறக்க முயற்சி செய்யும் போதும் அவனை நினைத்துக் கொண்டே தான் இருக்கிறாள்! பிறகு எப்படி மறக்க?

"நாலு பக்கமும் அடைச்சு மூச்சு விட முடியாத அளவு இருக்கு ஆரதி,புரிஞ்சுக்கோ நீ எனக்கு வேணாம்...லெட்ஸ் ப்ரேக்கப்" என்று உதறி தள்ளியவனை ஏன் தான் இந்த பாழாய்ப் போன மனது நினைத்துக் கொண்டிருக்கிறதோ???


ஹேப்பி மார்னிங் என்று ஆரம்பிக்கும் அந்த நாள் ஏனோ அவன் வார்த்தை போலவே மகிழ்ச்சியாகவும், "குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்" என்ற அவனின் இரவு குறுஞ்செய்தியில் உல்லாசமாக உறக்கத்திற்கு செல்லும் நான்
அலாரம் போல் என்னை உறங்க வைக்கவும், உறக்கத்திலிருந்தும் எழுப்பவும் அவன் குறுஞ்செய்திகளை மட்டுமே சார்ந்து இல்லாமலிருந்திருந்தால்!
ஒருவேளை அவனை மறந்திருப்பேன்!

கண்களை மூடும் நொடிகளெல்லாம் அவன் முகமே கண்முன்வர
இமைகளை கூட,மூடாது கண்களில் கண்ணீர் வரும் வரை விழித்திருந்த பொழுது கூட ,வெளியே உருண்டோடும் கண்ணீரைக் கண்டால் அதை துடைக்க அவன் நெருங்கும் நேரங்கள் மனக் கண்ணில் உருண்டோடுகிறதே!!
கண்ணீரைத் துடைக்க கூட அவன் கரங்களை சாராமல் இருந்திருந்தால் ஒருவேளை அவனை மறந்திருப்பேன்!

எதிர்பாராமல் வாழ்வில் நுழைந்து ஆனந்த கடலில் மூழ்கடித்து திணற திணற காதலைப் புகட்டி இன்று அவன் மட்டுமே வேண்டும் என்ற நிலைக்கு வந்த என்னை, இப்பொழுது எதிர்பாராத நேரத்தில் தவிக்க விட்டு சென்றானே!
இதழ்களில் எட்டிப் பார்க்கும் புன்னகை கூட அவனை சார்ந்து இல்லாமல் இருந்திருந்தால்...

ஒருவேளை அவனை மறந்திருப்பேன்!!

என்னைத் தீண்ட வந்த மூச்சுக்காற்றைக் கூட தள்ளி வைத்து அவனின் அருகாமையில் அவனின் மூச்சுக் காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்ந்த என்னை இப்பொழுது மூச்சு விடும் பொழுது எல்லாம் நினைக்க வைக்கும் அவனை நான் சாராமல் இருந்திருந்தால் ஒருவேளை மறந்திருப்பேன்!!!

நான் கேட்டு ரசித்த பாடல்களை எல்லாம் நீக்கி அவனுக்கு பிடித்த பாடலை மட்டுமே என் கைபேசியில்
சேகரித்து வைத்து அதை என்னை கேட்க வைக்க அவன் செய்யும் குட்டி குட்டி சேட்டைகளின் நினைவுகளெல்லாம் இப்பொழுதும் நான் பாடல் கேட்க நினைக்கும் பொழுதெல்லாம் என்னைத் தீண்டி செல்கிறதே!!!
அந்த அழகிய நினைவுகளை இன்றும் நினைத்து ரசிக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை அவனை மறந்திருப்பேனோ என்னவோ?

திடீரென்று கழுத்தில் ஏதாவது ஊறினால் அவனின் குறும்பு மீசை தான் தீண்டுகிறதோ என அவன் தீண்டிய நாட்களையெல்லாம் நினைத்து என் முகம் நாணம் கொள்கிறதே!
ஒருவேளை அந்த தீண்டல்கள் அலைபோல அவ்வப்போது மூளையை தொடாமல் இருந்திருந்தால் அவனை மறந்திருப்பேன்!

அவன் சண்டையிடும் சமயங்களில் சூரியனை பிரிந்து வாடும் சூரியகாந்தியாய் நான் துவண்டு ஷவருக்கடியில் நனைந்து கண்ணீராய் கரைத்த நொடிகள் , இன்றும் ஷவரருகே வரும்பொழுதெல்லாம் மேலெழுந்து மனதை ரணமாக்கி கண்ணீர் கடலென திரண்டு சுனாமியாய் கன்னத்தை நனைத்து கண்ணீரும் அவன் நினைவை தூண்டி எனக்கு துரோகம் செய்கிறதே!
இப்படி பட்ட துரோகம் நடவாமல் இருந்திருந்தால் ....
ஒருவேளை அவனை மறந்திருப்பேன்!

என் பிறந்தநாளையே மறந்து அவன் உலா வரும் நிமிடங்களில் "இன்று யாருக்கோ பிறந்தநாளாம் வாழ்த்து சொல்லியாச்சா ?" என்று மறைமுகமாக உணர்த்தி வாழ்த்தை கெஞ்சி பெறும் நொடிகளெல்லாம்,
இன்றும் பிறந்தநாள் வாழ்த்து என்று எந்த போஸ்ட் பார்த்தாலும் நினைவிற்கு வந்து மனதை அறுக்கிறதே!
ஒருவேளை அவனிடம் தன்மானத்தை விட்டு வாழ்த்துக்காக கெஞ்சிய நொடிகள் நினைவிற்கு வராமல் இருந்திருந்தால் அவனை மறந்திருப்பேன்!!!!

பேனாவை பிடித்தாலே அவன் பெயரை மட்டுமே கிறுக்கும் என் பேனா இன்றும் என் பேச்சைக் கேட்காமல் அவன் பெயரைக் கிறுக்கி என்னை கொல்லாமல் கொல்கிறதே!!
எழுதுவதையே நிறுத்தியிருந்தால்
ஒருவேளை அவனை மறந்திருப்பேனோ என்னவோ?

அவன் நினைவுகளின்றி நான் வாழ பழகிக் கொள்ள முயற்சி எடுக்கும் ஒவ்வொரு நாழிகையும் அவனைப் பற்றியே நினைக்க தலைவலி வந்து வலியில் நான் துடிக்கும் நொடி கூட, அவன் எனக்காக விட்டு தந்த வலிகள் மனதோரம் ஊற்றெடுக்கிறதே!
வலிகளோடு வாழ பழகியிருந்தால் ஒருவேளை அவனை மறந்திருப்பேன்!

யாரேனும் அவன் பெயர் கூறி அழைத்தாலோ, அவனைப் பற்றி கேட்டாலோ எங்களுக்குள் நடந்த நிகழ்வுகளை மறுபடியும் மூளை அசை போடுகிறதே!
அவனை மறந்துவிட்டேன், அவனைப் பற்றி பேசாதீர்கள் என கத்த முடிந்திருந்தால் அன்றே அவனை மறந்திருப்பேனோ என்னவோ!

அவன் சட்டை போல் யாராவது அணிந்திருந்தால் இது அவனுக்கு மட்டும் தான் அழகா இருக்கும் என நினைக்கும் இந்த வெட்கம் கெட்ட இதயம் இன்றும் அதே போல் அந்த நிற ஆடையைப் பார்க்கும் சமயங்களில் அவனுக்காக வக்காலத்து வாங்காமல் இருந்திருந்தால் அவனை மறந்திருப்பேன்!

அர்ச்சனை என்றாலே அவன் பெயரை மட்டுமே மொழிந்த உதடுகளும், வேண்டுதல் என்றாலே அவன் நன்றாக இருக்கணும் என்ற நினைத்த மனதும் இன்றும் அதை தொடர்ந்து செய்ய அவன் மட்டும் என்னைப் பிரிந்து ஒவ்வொரு நொடியும் நரக வேதனை கொடுக்கிறானே!
அவனின் நலனுக்காக மட்டுமே யோசிக்காமல் எனக்காக யோசித்திருந்தால் அவனை மறந்திருப்பேனோ என்னவோ!

இதோ இன்று அவனுக்குப் பிடிக்காத நிறத்தில் உடை அணிந்து,மேக்கப் செய்து அவனை வெறுப்பேற்ற போவதாக என்னை நானே ஏமாற்றிக் கொண்டு பிடித்த உடை அணிந்தும் ஏனோ அது பிடிக்காமல் கசக்கி ,கிழித்து எறிய வேண்டும் என தோன்றுகிறதே!
அதீத காதலால் அவனுக்காக என்னை மாற்றிக் கொள்ளாமல் இருந்திருந்தால்
ஒருவேளை அவனை மறந்திருப்பேனோ என்னவோ!

அவனில்லாத வாழ்க்கை எனக்கு ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிகிறதே!
அவன் வேண்டாம் என மனம் நினைக்கும் பொழுதெல்லாம் இதயத்தை யாரோ கத்தியால் குத்துவது போல் தோன்றுகிறதே!
பெற்றோர்களை மட்டுமே காதலித்த மனது இன்று அவர்களைக் காட்டிலும் அவனைக் காதலித்தது தவறா?
அவனை மட்டுமே நம்பியது தவறா?
இறுதி வரை அவனோடு தான் என் பயணம் என நினைத்தது தவறா?
நிஜத்தோடு இல்லாமல் நிழலோடு என்னால் வாழ முடியுமா?
அவனில்லாத என் வாழ்க்கை முழுமை அடையுமா?
ஏன் அவன் என்னை புரிந்துக் கொள்ளாமல் சென்று விட்டான்.

நான் சரியாக காதலிக்கவில்லையோ?
மூச்சு விட முடியாதளவு இருக்கு ஆரதி என்றானே!! ஆரதி என்ற அவனின் அந்நிய அழைப்பில் அன்றே என் உயிர் பிரிந்திருக்கலாம்...
ரதி என்ற அவன் காந்த குரலில் மட்டுமே மயங்கிய நான் அவனின் ஆரதி என்ற அழைப்பில் கொஞ்சம் தெளிவடைந்திருக்கலாம்.
ஆனால் இல்லையே?
இதோ இந்த நொடி வரை அவன் வருவான் என பைத்தியகாரி போல் அவனுக்குப் பிடித்த இந்த உணவகத்தில் தினமும் காத்துக் கிடக்கிறேனே!

என் காதல் தவறோ?
மறுநொடி அந்த உணவகத்தின் மாடியில் இருந்து நிலப்பரப்பைப் பார்த்தாள்.
கண்டிப்பாக கீழே விழுந்தால் கை மற்றும் கால்கள் உடைவது உறுதி...
அப்படி உடைந்தாலாவது அவன் வருவானா?
மனம் ஏங்கி அதை செய்ய முடிவெடுக்க கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாய் கொட்டியது.

கண்களை இறுக்கி மூடிக் கொண்டவளுக்கு அவனுடனான காதல் பயணங்கள் கண்முன் ஓட
குதிக்க தயாரானாள்.

ரதி கண்ணா என்ற அழைப்பில் சிலை போல் நின்றவள் அப்போது தான் தெளிந்தாள்.
என்ன காரியம் செய்ய துணிந்து விட்டேன் ?
என்னை பாதியில் விட்டு சென்றவனுக்காகவா ,எனக்காகவே வாழும் பெற்றோர்களை விட்டு செல்ல துணிந்தேன்?

எனக்கு பிடித்ததை, என்னை மட்டுமே அவர்களின் வாழ்க்கையாய் நினைத்தவர்களுக்கா ,இப்படி ஒரு தண்டனை கொடுக்க நினைத்தேன்.

உயிர் துறக்க எண்ணி கீழே குதித்தால் உயிர் போகாவிடினும் கை, காலேனும் கண்டிப்பாக
செயலிழக்கக்கூடும்.

எத்தனை கனவுகள் என்னுள்?
அத்தனையும் அவன் மேல் நான் கொண்ட காதலுக்காகவா இழக்க நினைத்தேன்?

என் காதல் தவறில்லை...
நான் காதலித்தவன் தான் தவறு...
காதலுக்கு அர்த்தமே தெரியாதவனுக்காக நான் ஏங்குவது தான் தவறு...

பொன் கிடைத்ததும்
விரும்பிய
பெண்ணை மறந்தானே
அவனுக்காக ஏங்குவது தவறு...

என் அளவுக் கடந்த அன்பைக் கண்டு மூச்சு முட்டுகிறது என்றானே
எல்லாம் பொய் என்று தெரியாமல்
அவனுக்காக ஏங்கியது தான் ஆகப்பெரும் தவறு...

இப்படி ஒரு பெண்ணை இழந்துவிட்டேனே என்று அவன் தான் வருந்த வேண்டும்...

சட்டென அப்படி நினைத்த மனது வேண்டாம் அவன் ஆனந்தமாக இருக்க வேண்டும்...
என்னை விட அவனை நன்றாக பார்த்துக் கொள்ளும் பெண் கிடைக்கவேண்டும் என இப்போதும் மனம் அவனுக்காக சண்டித்தனம் செய்ய தன்னைத் தானே கொட்டிக்கொண்டாள்..
பாவம் இவள் காதல் பொய்யில்லை...

திரும்பி தன் நண்பர்களைப் பார்த்தாள்.

உணவருந்திக் கொண்டிருந்தாலும் இவள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டுதான் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்...
இப்படிப் பட்ட நண்பர்கள் இருந்துமா என்னால் அவனை மறக்க முடியாது?

என் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் அவனை மட்டுமே நினைத்திருந்த என் மனது ஒரே ஒரு முறை பெற்றோர்களுடன் இருந்த நிகழ்வை நினைத்திருந்தால் கண்டிப்பாக அவனை மறந்திருக்கலாம்...

ஆம் அவனை மறப்பேன்...
அவன் தந்த வலிகளை மறப்பேன்...
அவன் தந்த காதலை மறப்பேன்...
ஆனால் அவன் தந்த குட்டிக் குட்டி நினைவுகளை பொக்கிஷமாய் என் மனப் பெட்டகத்தில் சேகரித்துக் கொள்வேன்...
அவனைத் தான் மறப்பேனே தவிர அவன் தந்த நினைவுகளை அல்ல...

இனி என் பகலும் இரவும்
அவன் சுவாசக்காற்று கலந்த இயற்கையோடு கழியும்,

கண்மூடும் போது அவன் வந்தால் அவன் தந்த மறக்கமுடியாத நினைவுகளை நினைத்துக் கொள்வேன்,

இதுவரை பத்திரப்படுத்திய
காதலை உள்ளங்கைக்குள் புதைத்துவிட்டு

இதழோடு புன்னகையை நிறுத்திக் கொள்ளாமல் கண்களும் சிரிக்குமளவு புன்னகைப்பேன் ,
அவன் என் காதலை உணர்ந்ததும்
அவன் நினைவுகளைத் துறப்பேன்...

அதுவரை
என் கனவுகளை காதலிப்பேன் , பெற்றோர்களை காதலிப்பேன் அவன் கூறினானே மூச்சு முட்டுகிறது என்று!!!
அந்தளவு காதலிப்பேன்...
அவன் நினைவுகளோடு வாழ பழகிக் கொள்வேன்.

அவனை மறக்க முடியாமல் சாக நினைத்த நான் என் பெற்றோர்களுக்காக வாழ நினைப்பேன்.
அவனை மறந்து அவன் நினைவுகளுடன் வாழ்வேன்...
நினைவுகள் போதும் என்னை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு!!
அவனின் நீங்கா நினைவுகளுடன்
என் கனவுகளை நோக்கி நான்!!!

ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro