11

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இரவு ஆட்டம் பாட்டம் முடிந்து தூங்கிய அனைவரும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் கணபதி ஹோமம் நடக்க அங்கு கூடியிருந்தனர்.

குணசேகரன், மணிமேகலை தம்பதிகள் ஹோமத்தில் பட்டாடையும் மாலை அணிந்து அமர்ந்திருந்தனர்... இனியா அழகான சிவப்பு நிற (சாப்ட் சில்க்) சேலையில் அளவான ஆபரணங்கள் ஒப்பனை என்று இருந்தாள். அன்பு, இசை வெண்மை நிற உடையில் இருந்தனர். எழில் இளஞ்சிவப்பு (சாப்ட் சில்க்) அணிந்து தனது நீளமான கூந்தலை பிண்ணலிட்டு அதில் மல்லிகையை அணிந்து இருந்தாள்...

ஹோமம் முடியும் நேரத்தில் வீட்டில் யாரேனும் ஏழு பேர் சேர்ந்து ஒன்றாக அவல் மற்றும் அர்ச்சதையை ஹோமத்தில் இடுவது வழக்கம்... அதற்கு இனியாவின் வீட்டில் நான்கு பேர் இருக்க மீதம் மூன்று பேர் தேவைப்பட,, பெரியவர்கள் பெரும் பட்டாளமே உள்ளது ஒருவரை விடுத்து இன்னொருவரை அழைத்தால் சங்கடம் ஏற்படும் எனவே குணசேகரன் " ஏம்மா எழில் இங்க வா டா ... அப்றம் இசை வா பா..... அப்றம் ரவி வா பா ( இருவர்னு சொன்னன்ல அதுல ஒருத்தன்) " என்று அழைக்க மூவரும் சென்றனர்...

( ரவி பத்தி ஒருசில விஷயம்.... குணசேகரனின் ஒரே ஒரு தங்கை மேனகா,, அவரின் ஒரே ஒரு புதல்வன் ரவிசங்கர் .. இவனும் கணனி அறிவியல் துறை சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பபை முடித்துவிட்டு அன்புவைப்போலவே சுயமாக ஒரு நிறுவனம் வைத்து நடத்திவருகிறான். இனியாவை திருமணம் செய்து அவளை வைத்து அன்புவின் நிறுவனத்தில் பங்கு கேட்க திட்டமிட்டு உள்ளான்...

அது தவிர இனியாவின் மீது அனைவருக்கும் மிகுந்த பாசம் உள்ளதால் அவளை ஏவிவிட்டு குணசேகரனின் முழு சொத்தையும் தான் அடைய வேண்டும் என்றும், அன்புவை கைக்குள் போட்டுக்கொண்டு அவன் திறமைகளை பயன்படுத்தி பணம் சம்பாரிக்க வேண்டும் என்பதுவும் இவனது வாழ்நாள் குறிக்கோள் என்றே சொல்லலாம்...

இரவு பேசிய இருவர் மேனகா மற்றும் ரவிசங்கர் தான்.... ரவியின் அப்பா மூன்று வருடத்திற்கு முன்  காலமாகிவிட்டார்...)

ஏழு பேரும் ஒன்றாக நின்று ஹோமத்தில் ஐயர் தரும் பொருட்களை போட்டுக்கொண்டு இருந்தனர்... அப்பொழுது புகையின் காரணமாக கண்களை மூடியபடி ஏழுபேரும் பொருட்களை போட... இனியா நகர்ந்து இசைக்கும் தன் தந்தைக்கும் இடையில் நிற்க அதை கவனித்த ரவி நகர்ந்து வந்து இனியாவிடம் நின்றான்... இனியா இசைக்கும் ரவிக்கும் இடையில் நின்று கொண்டு இருந்தாள்...

எழில் தன் அத்தைக்கும் மாமாவிற்கும் இடையில் இருக்க இனியா இடம் மாறிய குழப்பத்தில் அவளுக்கே தெறியாமல் அன்புவிடம் நின்றாள் (இசைக்கு பழிச்சொல் வரும் என்று அறிந்திருந்தால் நின்றிருக்க மாட்டாள் பாவம்).......

ஹோமம் முடியும் நோடிகளில் அங்கு இருந்த அனைத்து சொந்தங்களின் முன்னிலையில் மணிமேகலை, குணசேகரன் ஜோடியாகவும் அவரின் ஒரு பக்கம் அன்பு, எழில் ஜோடியாகவும்.... மருபக்கம் இனியா இசை, ரவிக்கு இடையிலும் நின்று இருக்குமாரு இருந்தது...

கூட்டத்தில் ஒருவர் " என்ன குணா இப்பவே பையனுக்கும், பொன்னுக்கும் வரன் அமஞ்சுருச்சு போல " என்க...

இன்னொருவர் " அன்புக்கும் எழிலுக்கும் ஜோடிப்பொருத்தம் பிரமாதம் பா,, ஆனா நம்ம இனியாக்கு தான் யாரு ஜோடினு தெறியல??" என்றார்...

உடனே முதலில் சுதாரித்த மேனகா " இதுல என்ன சந்தேகம் ராஜா மாதிரி என் பையன் இருக்கானே அவன் தான் மாப்பிள " என்று கூறிவிட்டு குணசேகரனை பார்த்து " என்னண்ணே சரி தானு" என்க...

அதற்கு குணசேகரன் " மொதல்ல பாப்பா படிக்கட்டும் அப்றம் யாரு மாப்பளனு முடிவு எடுக்கலாம்" என பேச்சை அதோடு நிறுத்தினார்..

மேனகாவிற்கு முகம் சுருங்கிப்போனது,, அனைவரும் கூறியதைக்கேட்ட அன்பு நகர்ந்து தன் தங்கையிடம் நிற்க... இசை நகர்ந்து எழிலிடம் நின்று கொண்டான்...

ஹோமம் நிறைவு பெற்றபின்,, வீட்டிற்கு செல்பவர்களுக்கு பூ கொடுத்து அனுப்ப வேண்டும்.... என்பதற்காக அன்பு, இசை பூக்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து பெரியவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கும் இங்கும் அழைந்து கொண்டு இருந்தனர்... அப்பொழுது இனியாவை தனியாக அழைத்த இசை "இந்தா டி ரெட் ரோஸ்... உன் ட்ரஸ்க்கு மேட்சா இருக்கும்... இப்போ பூ வாங்க போனன்ல அப்போ வாங்குன" என்று அவளிடம் நீட்ட

இனியா " ஓஓ ட்ரஸ்க்கு மேட்ச்சா இருக்கும்னு தா ரெட் ரோஸ் வாங்குனயா??" என்று குரும்பு சிரிப்புடன் கேட்க...

அதற்கு இசை சுற்றியும் பார்த்துவிட்டு,, முட்டிபோட்டு அவளிடம் அந்த ஒற்றை ரோஜாவை நீட்டி " ஐ லவ் யூ இனியா" என்க...

இனியாவிற்கு அவன் செயல் சிரிப்பைத்தந்தது... " சரி டா சரி எந்திரி யாராவ்து பாத்தா அவ்லோ தான்... " என்க...

இசை " லவ் யூ டூ சொல்லு" என்க...

இனியா " ஐ லவ் யூ டா லூசூ மாமா" என்று கூறிவிட்டு பூவை வாங்கி தலையில் வைத்துக்கொள்ள அது சற்றுகோணலாக இருந்தது..

அதற்கு இசை " என்ன டி பூ வெக்கற... கோணையா இருக்கு... பொரு நா வெச்சுவிட்ற" என்று அவன் அதை சரியாக வைத்துவிட்டு பின் " இன்னைக்கு என் பொண்டாட்டி எவ்லோ அழகா இருக்கா... என்கண்ணே பட்டுரும்" என்க..

அதற்கு இனியா " சரி டா கூட்டம் அதிகம் மாட்டிக்க போறோம்... நம்ம அப்றம் கொஞ்சிக்கலா" என்க இசையின் முகம் சோகமாக மாறியது..

அதை உணர்ந்த இனியா அவன் அருகில் சென்று அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் கன்னத்தில் முத்தமிட்டு " புருஞ்சுக்கோ லூசூ.. சிரி இப்டி மூஞ்சிய தொங்கபோட்டு இருக்காத பாக்க முடியல" என்க..

அதற்கு அவனோ " ஹேய் என்ன இது... கன்னத்துல குடுத்தா பத்தாது.. சரி பரவால இப்போ நா தர " என்று குனிய... அவனை தடுத்தவள்

" கல்யாணத்துக்கு அப்றம்..... இப்போ நோ" என்று கூறிவிட்டு ஓடி சென்றாள்.

இவை அனைத்தையும் அன்பு, ரவி, மேனகா மூவரும் பார்த்து கொண்டு இருந்தனர்... அன்பு தனியாகவும் அந்த இருவர் தனியாகவும் பார்க்க... அன்புவிற்கு இசையின் மீது கோவம் வந்தது..

இசையிடம் நகர்ந்து சென்றவன்... இவன் நண்பன் என்பதை மறந்து அண்ணன் என்னும் உணர்வு மேலோங்க,,, இசையை பளார் என ஒரு அறைவிட்டான்... அன்பு " டேய் என்ன டா இது... நல்லவனு நம்பி பழகவிட்ட.. இப்டி பொன்னு மனச கெடுத்து வெச்சுருக்க... எவ்லோ நாளா நடக்குது ??" என்க..

அதற்கு இசை " டேய் தப்பா நெனைக்காத மச்சா... உன் தங்கச்சிய நா ரொம்ப லவ் பண்ற கண்டிப்பா அவள நல்லா பாத்துக்குவன்டா கோவப்படாத டா ப்ளீஸ்.." என்க

அதற்கு அன்பு " சின்ன பொன்னுகிட்ட போயி பொண்டாட்டி அது இதுனு பேசற அறிவு இல்ல உனக்கு... வீட்ல இத்தன பேரு இருக்கும் போதே இப்டினா உன்னையெல்லா ச்சே.." என்க..

இசைக்கு கோவம் வந்து " என்ன டா விட்டா ஓவரா பேசீட்டே போற.. உன் தங்கச்சி ஒன்னும் கொழந்த இல்ல... 21 வயசு ஆச்சூ அவளுக்கு.. நாங்க லவ் பண்றோ இதுல என்ன தப்பு... நா என்ன படிக்காதவனா... இல்ல சம்பாதிக்காதவனா இப்டி கத்தற.. அப்றம் உன் தங்கச்சிய நா ஒன்னும் இப்போவே கல்யாணம் பண்ண சொல்லலையே அவ படுச்சு முடுச்சு வேலைக்கு போகட்டும் அப்றம் குடும்பத்தோட வந்து மொறப்படி பொன்னு கேட்டு கல்யாணம் பண்ணலாம்னு இருக்க... இதுல என்ன தப்பு??" என்க..

அன்பு " ம்ம்ம்ம் சாரி டா... நீ சொல்லறதும் கரெக்ட் தான்... நா ஏதோ கோவத்துல.... டேய் மச்சா சாரி டா" என்க..

அதற்கு இசை " இல்ல டா நீ அடுச்சதுல எந்த தப்பும் இல்ல... ஒரு அண்ணன் அவனோட தங்கச்சிகிட்ட யாராவ்து இப்டி பேசுனா கோவப்பட்றது நியாயம் தான் டா" என்று சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்ள இவை அனைத்தையும் ரவி, மேனகா பார்த்துக்கொண்டு இருந்தனர்..

பின் அன்பு " மச்சா லவ் பண்றத நா தப்புனு சொல்லல... லவ் பண்ணா அந்த பொன்ன கைவிடாம கல்யாணம் பண்ணிக்கனும் டா.. அப்டி கல்யாணம் பண்ற ஐடியா இல்லையா லவ்வே பண்ணகூடாது... இப்போவே சொல்லிட்ட வீட்ல வந்து பேசி இனியாவ கல்யாணம் பண்ணு இல்லனா அப்றம் காலத்துக்கும் உன் மொகத்துலையே முழிக்க மாட்ட " என்று எச்சரித்தான்...

இசை சிரித்துக்கொண்டே " சரி டா மச்சா.. கண்டிப்பா இனியாவ நா கஷ்ட படுத்த மாட்ட" என்று கூறிவிட்டு இருவரும் சென்றனர்...

இரவு பொழுது வர அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.. எழில், இனியா தேர்வு காரணமாக மாலையிலேயே கோவை சென்றனர்.. அன்பு, இசை இருவரும் மருநாள் காலை சென்னை செல்ல திட்டமிட்டு ஒன்றாகவே தங்கினர்... மேனகா மற்றும் ரவிசங்கர் தவிர அனைவரும் சென்றிருந்தனர்...

தன் அறையில் இருந்த மேனகா மற்றும் ரவி ,, இசை நடக்கும் போது அவனை பார்த்து " ஏன் பா இசை எனக்கு கொஞ்சம் தண்ணி கொண்டு வா பா" என ஏவினார்...

இசையும் தண்ணீர் எடுத்து மேனகாவிடம் குடுக்க அவரின் அறைக்குள் செல்ல.. அங்கே இருந்த ரவி அறையின் கதவை சாத்திவிட்டு " அண்ணா உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்,,, இப்போ ப்ரியா நீங்க... பேசலாமா?? " என்க..

அதற்கு இசை " ம்ம்ம்ம் சொல்லு பா... என்ன??" என்க..

அதற்கு மேனகா " உட்காரு பா கொஞ்ச நேரம் பேசீட்டு போலாம் " என வலையை விரித்தார்..

அதை அறியாத இசையோ " ம்ம்ம்ம் சரி மா.."என்று அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தான்...

மேனகா சிரித்துக்கொண்டே " ஏன் பா உங்க குடும்பத்துல எப்டி எல்லாரும் ஒரே மாதிரி இருக்கீங்க... ஒரே மாதிரி யோசிக்கறீங்க..." என்க..

அதற்கு இசை " தாத்தா வளர்ப்பு அப்படி மா.... எங்க தாத்தா தான் எங்க எல்லாருக்கும் நல்லது கெட்டது எல்லா தெளிவா எடுத்து சொல்லுவாரு... அவரு சொல்லறத தான் நாங்க எல்லாரும் கேப்போம்" என்க..

அதற்கு மேனகா "ஓஓஓ அந்த பெரிய மனுசன்தா உன் தங்கச்சிக்கு எல்லா சொல்லிகுடுக்கறானா??" என்று முதலில் எழிலை பேச்சில் இழுத்தார்.. இசைக்கு எதுவும் புரியவில்லை...

அதைத்தொடர்ந்து மேனகா "உன் தங்கச்சிக்கு சொல்லி குடுத்து இனியாகூடவே இருக்க சொன்னானா... அப்றம் அது என்ன உன் தங்கச்சி ஹோமம் பண்ணும்போது எங்க அன்புகிட்ட நிக்கறா... ஓஓஓ இப்டியெல்லா பண்ணி எங்க அன்பு மனச கெடுக்க சொல்லிகுடுத்தாங்கலா... இனியாகூடவே ஒட்டிகிட்டு இருந்து இனியா மூலமா அன்புவ கவுக்க சொல்லிகுடுத்தானா அந்த பெரிய மனுசன்" என்று வார்த்தைகளைவிடத் தொடங்கிவிட்டார்...

Next part la pakkala bye 👋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro