17

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஓடியவர்களை முறைத்தபடி இருவரும் நடந்து வந்தனர்.... நடந்தவர்கள் சாலையை அடைந்தனர்.... அங்கு ஒரு சிறிய டீ கடையில் பழபஜ்ஜி (அந்த ஊரு ஸ்பெஷல்) வாங்கி உண்டுவிட்டு காரில் ஏறவர...... அன்பு வண்டியை எடுக்க இனியா பின்புறம் அமர்வதைப் பார்த்த இசை அவனும் பின்புறம் ஏறிக்கொண்டான்.... எழில் இசையை முறைத்துக்கொண்டே காரின் முன்பக்கம் ஏறவர...

அங்கு ஒரு இரு சக்கர வாகனம், அவளை இடிப்பதைப்போல் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்து நூலிலை இடைவெளியில் நின்றது... எழில் பயந்தேவிட்டாள்... வார்த்தை வரவில்லை பயத்தில் கண்களை மூடிக்கொண்டு " அம்மா" என்று கத்த... மூவரும் அவளைப்பார்க்க .... இசை கீழே இறங்கி ....

வண்டியில் வந்தவனிடம் " ஹேய் என்ன கண்ணு தெரியாதா???.... " என்று கோவத்தில் அடிக்கச்செல்ல...

அவனைத்தடுத்த எழில் " அண்ணா விடு...... வேண்டா.... நான்தா நடு ரோட்ல நின்னுட்டு இருக்க... தப்பு என்மேல தான்...." என்க....

தலைக்கவசம், கை மற்றும் கால்களுக்கு உறை என்று முழுவதும் தன்னை மறைத்திருந்த அந்த உருவம் இசையிடம் "சாரி சார்.... சாரி.... " என்று கூறிவிட்டு எழிலைப்பார்த்து " சாரிங்க... நான் தான் வேகமா வந்துட்ட... சாரி.... " என்று தலைக்கவசத்துடன் கூற....

அவனிடம் எழில் " பரவால.... ஆனா அடுத்து 1கி.மீ தூரத்துல ஸ்கூல் இருக்கு... நெரையா கொழந்தைங்க அடிக்கடி ரோட்டுபக்கம் வருவாங்க.... சோ ஸ்லோவா போங்க.... " என்று கூறிவிட்டு காரினுள் ஏறிக்கொண்டாள்....

அவனை முறைத்துக்கொண்டே இசையும் காரினுள் ஏறிக்கொண்டான்... அன்பு காரை செலுத்த அவர்கள் வீட்டை அடைந்தனர்...

அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவன் அங்கு இருந்த மரத்தின் அடியில் நின்றுகொண்டு தலைக்கவசத்தை கழற்றி வைத்துவிட்டு தனியாக பேசிக்கொண்டு இருந்தான்... " வாவ்..... எவ்லோ அழகான பொன்னு..... அந்த கண்ணுதான் சேன்ஸ்ஸே இல்ல.... இந்த அருவியவிட அழகழகா இருக்க முடி.... எவ்லோ நல்ல பொன்னுல.... எஸ் நா என் ட்ரீம் கேர்ள பாத்துட்ட.... உன்ன பாத்ததும் உன்குரல கேட்டதும் உன்ன ரொம்ப புடுச்சுருச்சு... ஆனா உன்ன எங்கனு தேடுறது... எனக்கான பொன்னு நீதான்னா மறுபடியும் உன்ன நான் பாப்ப... " என்று அவள் மணமானவள் என்பதை அறியாமல் பேசிக்கொண்டு இருந்தான்..... ( இன்னும் இரண்டே வாரத்தில் இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்யப்போகிறார்கள் - ஐயோ என்ன ஆகுமோ )

அங்கு வீட்டிற்கு சென்றவர்கள் அவரவர் அறைக்குச் செல்ல... அன்பு எழிலிடம் " பாத்து வரமாட்டயா... அந்த பைக்காரன் இடுச்சுருந்தா என்ன ஆகறது...." என்க....

எழில் "ஹலோ நா பாத்துதா வந்த அவன்தா வேகமா வந்தான்.... அப்றம் வீணா சண்டவேண்டாம்னு தான் சாரி கேட்ட... ஆமா உனக்கு என்ன என்மேல அக்கற??? " என்க....

அன்பு " ம்ம்ம்ம் எங்க மாமாக்கு ஒரே பொன்னு..... 3 மாமாக்கும் செல்லம்... உனக்கு எதாவது ஆச்சுனா குடும்பமே பதறிப்போகும் அதான் கொஞ்சம் அக்கற...." என்க...

எழில் " ம்ம்ம்ம் ஓகே " என்க....

அதற்கு அன்பு " அப்றம் இந்த லட்டுக்கு அடிபட்டா இப்போ நான்தா பொருப்பு..... ஏன்னா..." என்க...

ஏன்னா என்று அவள் கேள்வி எழுப்ப அவனோ " ஏன்னா..... இல்ல ஒன்னு இல்ல.... " என்று வெளியேறினான்....

அங்கு இசையோ கோவத்தில் " இந்த எழில் பாத்து வரமாட்டாலா... அடிபட்டா என்ன ஆகறது..... லூசூ லூசூ.... " என்று புலம்ப...

இனியா நடிப்பை மறந்து " விடு அதான் ஒன்னும் ஆகாம கடவுள் காப்பாத்தீட்டாருல... நீ டென்ஷன் ஆகாத.... " என்க....

அவனோ " எங்க மூனு அம்மா, அப்பாக்கும் ஒரே பொன்னு.... எனக்கு இருக்க ஒரே தங்கச்சி... அவளுக்கு ஒன்னுனா நா தாங்கமாட்ட என்தங்கச்சினா எனக்கு உசுரு...." என்க...

அவளோ " அதான் தெரியுமே... உன் தங்கச்சிக்காக நீ எதவேணாலும் விட்டுகுடுப்பனு... " என்று கூற....

அவளை அணைத்தவன் " ஆமா... விட்டுகுடுப்ப.... என்தங்கச்சி எனக்கு உசுரு.... ஆனா நானே நீ தான்.... நீ நான் தான்... நம்ம ரெண்டு பேரும் வேற வேற இல்ல..... உனக்கும் எழில எவ்லோ புடிக்கும்னு எனக்கு தெரியும்..." என்க....

அவளோ " ஆமா.... ரொம்ப புடிக்கும்... " என்று பேச அப்பொழுது தான் அவன் அவளை அணைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்து " ஹேய் விடு... நா உன்மேல கோவம்... உன்கூட பேசமாட்டேன்.... " என்க....

அவனோ இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு " சரி பேசாத,,, கோவமா இருந்துக்கோ.... " என்க....

அவளோ " ப்ப்ச்ச் விடு.... உன்மேல கோவமா இருக்கன் .. " என்க...

அவனோ பாடல் ஒன்றைப் பாடினான்
" நானும் இங்கு நீயாகா....
  வாழ நீயும் வந்தாயே....
  நீயும் இங்கு நானாக.....
  வரம் வேண்டுமே.....

  நீயே........ வலி தருவதும்
  நீயே........ வழி விடுவதும் நீயே
  முரன்பாடு ஏன்......

  காதல் உயிர்வலி வரும் தேடல்....
  இடையினில் இந்த ஊடல்....
  நலம் காணவா...."
அவளோ அவன் பாடிமுடிப்பதற்குள் ஓடிவிட்டாள்...

மதிய உணவாக அன்பு, இசை பிரியாணி சமைக்க எழில், இனியா சாப்பிட வரும் போது இசை எழிலிடம் " ஆமா உங்க ரெண்டு பேருக்கும் சுத்தமா ஒன்னுமே சமைக்க தெரியாதா???" என்க....

எழில் " நாங்க நூடுல்ஸ் நல்ல சமைப்போம் ஏன் டி... " என்க....

இனியா " ஆமா டி.... நூடுல்ஸ் நல்லா சமைப்போம்...." என்க...

அன்பு இனியாவிடம் " இனிமேல் சமச்சு பழகு ஓகே" என்று கூறிவிட்டு உணவு உண்டுவிட்டு தூங்கி எழுந்து..

மாலை அங்கு மலை கிராமத்தில் பஞ்சாயத்து நடப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு, அடுத்த நாள் முழுவதும் சிலபல போட்டோக்களை எடுத்துவிட்டு ஊருக்கு சென்றனர்....

ஊருக்கு சென்று ஒரு வாரம் ஆக இன்னமும் இனியாவின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது....  நான்கு பேரும் சென்னைக்கு செல்லும் நாள் வந்தது... அனைவரிடமும் கூறிவிட்டு சென்னைக்குச் சென்ற அவர்களுக்கு குடும்பத்தின் சார்பாக திருமணப் பரிசாக அழகிய அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் எதிரெதிர் வீடு "ப்ளாட்" வழங்கப்பட்டது.....

சென்றதும் அடுத்த நாளே அன்பு, இசை இருவரும் தங்கள் அன்றாட வேலைகளைப் பார்க்க... இனியாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்களின் நிறுவனத்திற்குச் சென்றாள்....  எழில் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்தாள்.... அவளிற்க்கும் வேலைக்கு ( டெவலப்பர் ) செல்ல வேண்டும் என்று தோன்ற 5 நிறுவனங்களில் விண்ணப்பித்து இருந்தாள்....

இரவு உணவை மட்டும் எல்லாரும் ஒன்றாக உண்பர்.... அப்போது எழில் " ஹேய் நா 5 கம்பெனில ஜாப்க்கு அப்ளே பண்ணீருக்க " என்க...

இனியா " செம டி.... எம்.என்.சி யா டி எல்லாமே....." என்க...

எழில் " ஆமா டி.... ஆனா ஒரு கம்பெனி மட்டும் எம்.என்.சி இல்ல..... " என்க....

இசை " நீ ஏன் மா வேலைக்கு போயி கஷ்டப்படனும்....... ஜாலியா வீட்ல இரு" என்க....

அன்பு " விடு டா இவளுக்கு எந்த கம்பெனிலயும் வேல கெடைக்காது....  சரியான வில்லேஜ் மேங்கோ டா.... கண்டிப்பா வேல கெடைக்காது " என்று ஓட்ட.....

எழிலிற்கு கோவம் வர அன்புவிடம் " வேலைக்கு போயி காட்ற..... வில்லேஜ் மேங்கோ வா..... இனி உன்கூட பேசவே மாட்ட..." என்க..

அன்புவோ " ஹா ஹா பேசாத ரொம்ப ஹேப்பி.......  நானும் பாக்கற உனக்கு யாரு வேல குடுக்கறானு " என்க...

எழில் முறைக்க அன்பு இசையுடன் " டேய் மச்சா இவளுக்கு வேல குடுக்கறவன் கண்டிப்பா இழுச்சவாயனா தான் இருப்பான் " என்று ஓட்ட...

இனியா " அன்புண்ணா போதும் ரொம்ப ஓட்டாத..... எழில்க்கு செம டேலன்ட் இருக்கு.... அவகூடவே படுச்ச எனக்கு தெரியும்..... நீ தேவை இல்லாம அவள ஓட்டாத...." என்க....

அன்பு " ஓஓஓ எல்லாரும் இவளுக்கு தான் சப்போர்ட்டா " என்க...

இசை " அப்டி இல்ல மச்சா.... அவள ஓவரா ஓட்டுற நீ.... " என்க....

அன்பு " நா எங்க ஓட்டுன... உண்மைய சொன்ன...... " என்று முடிப்பதற்க்குள்

எழில் " போதும் வாயமூடு.... வேலைக்கு போயி என் டேலன்ட்ட உனக்கு ப்ரூஃப் பண்ணல என் பேரு எழில் இல்ல..... இனி உன்கூட பேசமாட்ட " என்று கோவமாக சென்றுவிட்டாள்....

அதன்பின்பு இனியா " ஏன் அன்புண்ணா இப்படி ஓட்ற.... அவளுக்கு கோவம் வந்தா பேசவே மாட்டா..... இப்ப பாரு.... " என்க....

அன்புவோ திமிராக " நா என்ன தப்பா சொல்லீட்ட.... உண்மையா அவளுக்கு வேல கெடைக்காது.... " என்க..

இனியா " அண்ணா அவ காலேஜ் டாப்பர்..... கண்டிப்பா கெடைக்கும்.... நீ பேசுனது தப்பு போயி சாரி சொல்லு " என்க....

அன்புவோ " நோ சொல்லமாட்ட.... " என்று எழுந்து சென்றான்....

இசையும், இனியாவும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தனர்.... தன் அறைக்கு சென்ற அன்பு எழிலைப் பார்க்க அவளோ அழுது கொண்டு இருக்க...

அன்பு " சாரி......" என்று கூற...

எழில் தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த இன்னொரு படுக்கை அறைக்குச் சென்றாள்...  அங்கு வந்த அன்பு

" இப்போ என்ன ஆச்சுனு இந்த ரூம்க்கு வந்த..... " என்க ...

அவளோ " இனி அங்க இருக்க பிடிக்கல..... உன்கூட பேச பிடிக்கல.... சோ இங்க இருக்க.... வில்லேஜ் மேங்கோகூடலா நீங்க கஷ்டப்பட்டு தங்க வேணாம், பேசவேணாம்.... நானும் இனி பேசமாட்ட... " என்க....

அவனோ " ஓஓஓ சரி.... ரொம்ப தேக்ஸ் " என்று அறையை விட்டு சென்றான்....

இருவரும் பேசிக்கொள்ளவில்லை.... ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்ககூட இல்லை.....  மூன்று நாட்கள் கடந்த நிலையில் இரவு உணவு உண்ணும் போது

எழில் இனியாவிடம் " எனக்கு வேல கெடச்சுருக்கு டி.... நாளைல இருந்து போகனும் " என்க...

இனியா " கங்ராட்ஸ் டி.... எந்த கம்பெனி???" என்க....

அன்பு " ஹேய் இனியா போச்சு அந்த கம்பெனிய இழுத்துமூடப் போறாங்க.... பாவம் ஓனர்ஸ் " என்றான்.... பாவம் அவனுக்கு தெரியாது எழில் இவர்களது நிறுவனத்திற்கு தான் வரப்போகிறாள் என்று....

இசை " கம்முனு இரு டா....." என்று எழிலைப் பார்த்து " எந்த கம்பெனி மா??" என்க.... (இன்ட்டர்வ்யூ HR தான் செய்து எழிலை தேர்வு சேய்தார்.... HRன் கையொப்பமே போதுமானது... MDயிடம் கையொப்பம் தேவை இல்லை .... இசைக்கும் தெரியாது)

எழில் " இழுச்சவாயன் கம்பெனி அண்ணா.... நீயே கண்டுபிடி நா சொல்ல மாட்ட " என்க....

இனியா " எனக்கு மட்டும் சொல்லு டி " என்க.... " நோ" என்ற ஒற்றை வார்த்தையை பதிலழித்தாள்...

நாளை முதல் எழில் இவர்களின் நிறுவனத்தில்..... இதே நிறுவனத்தில் அந்த "பைக்காரன்"க்கும் நாளையே முதல் நாள்.... இன்னும் இசை, இனியா பேசிக்கொள்ளாமல் இருக்கின்றனர்....  ஊருக்கு அனுப்பும் முன் மகாலட்சுமி, மேனகா, ரவி என மூவரும் தனித்தனியே பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தத்தொடங்கியிருந்தனர்...

Next part la pakkala ta ta 👋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro