28

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Romba romba sorry pa late update Ku.... One week aaa romba wrk wattpad aaa Sariya Vara mudiyala.... Update poda solli neraiya Peru private la sonninga romba happy aaa irunthuchu.. Sari vanga story kulla polam 😊.

- - - - -

இனியாவின் நிலமை மிகவும் மோசமாக ஆனது, அவளோ வலியால் துடிக்க வீட்டில் உள்ள அனைவரும் செயவதறியாது இறைவனை வேண்டிக்கொண்டிருக்க, அவளை பரிசோதனை செய்த மருத்துவர் இசையை தனியாக அழைத்து அவனிடம்...

" சார் உங்க வைஃப்க்கு திடீர்னு என்ன ஆச்சுனு தெரியல, ஆனா அவங்க ஒடம்புல சூடு அதிகம் ஆகீருக்கு... இத மெடிக்கல் டர்ம்ல சொன்னா அது அங்களுக்கு புரியாது.. உங்களுக்கு புரியபமாதிரி சொல்லனும்னா ஆபார்சன் ஆகார மாதிரி தான் இதுவும், ஆனா 9 மாசம் ஆனாதால கொழந்தைக்கு ஒன்னும் இல்ல காப்பாத்தீறலாம் .. ஆனா..." என்று இழுக்க... இசையோ ஆனா என்று மீண்டும் கேட்க..

மருத்துவர் " டெலிவரி ஆகரதுக்கு ஊசி போட்டு ட்ரை பண்ணலாம் பட் எங்கனால ஸ்யூரா சொல்ல முடியாது.. இந்த மன்த்ல இவங்களுக்கு இப்படி ஆக சேன்ஸ்ஸே இல்ல, எங்களுக்கு ஷாக்கா இருக்கு சார்... அம்மா, கொழந்த ரெண்டு பேருக்கும் ஆபத்து இல்லாம இருக்கனும்னா பெட்டர் ஆப்ரேசன் பண்ணி யூட்ரஸ்(கர்ப்பபை)  ரிமூவ் பண்ணனும் வேற வழி இல்ல... அப்படி பண்ணலனா கொழந்த கெடைக்காது... டைம் இல்ல ஒரு 2 மினிட்ஸ் திங்க் பண்ணீட்டு சொல்லுங்க... " என்க..

இசையோ " டாக்டர் இனியாக்கும், கொழந்தைக்கும் எதுவும் ஆககூடாது.. இதுல திங்க் பண்ண ஒன்னும் இல்ல.. நான் சைன் போட்டு தர எங்களுக்கு இந்த பேபி போதும்..." என்று அழுக அவனிடம் பேசி விதிமுறைகளின் படி கையொப்பம் பெற்றனர்... நேரம் கடக்க கடக்க இனியாவின் நிலமை மோசமாகி இருந்தது...

மகாலட்சுமி மணிமேகலையின் காதில் " கொழந்த பெறக்கறதுக்கு முன்னாடியே இவ்லோ கஷ்டப்படுத்துது... மணி எதுக்கும் ஜோசியர பாத்துக்கலாமா?? கொழந்த பெறந்ததும் மொதல்ல ஜோசியர பாக்க போகனும்" என்க..

அவரும் சரி என தலையசைத்தார்...  நேரம் ஆக ஆக படபடப்புடன் காத்திருக்க அவர்களை சந்தோசப்படுத்தும் விதமாக குழந்தையின் அழுகுரல் கேட்டது... சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த மருத்துவர் " பையன் பெறந்துருக்கான்" என்று கூறவும் அனைவரும் மகிழ்ச்சியில் திழைத்தனர்... இசை ஒவ்வொருவருக்கும் போன் செய்து குழந்தை பிறந்த செய்தியைக் கூறிக்கொண்டு இருந்தான்...

அன்புவுக்கு போன் செய்ய " தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் " எனவும், எழிலுக்கு போன் செய்ய " ஸ்விட் ஆஃப் " என்றும் வந்தது... குறுஞ்செய்தியாக குழந்தை பிறந்ததை அனுப்பி இருந்தான் இசை...

மணிமேகலை, குணசேகரன், தாத்தா, மகாலட்சுமி என நால்வரும் காலை விடிந்ததும் முதல் வேலையாக ஜாதகம் பார்க்கச் சென்றனர்.. ( இது வழக்கம் தான் பா.. கொழந்த பெறந்ததும் மொதல்ல அத தான் பாப்பாங்க... அது ரொம்ப தப்பு.. )

வழக்கமாக பார்ப்பவரிடம் சென்று குழந்தையின் பிறந்த நேரத்தைத் தர, அவரோ 12 கட்டங்களை வரைந்து எண்ணிக்கொண்டு இருந்தார்... சிறிது நேரம் கழித்து நால்வரையும் நோக்கி...

" ௐ நமோ பகவதே ஐயும் கிளியும் சவ்வும் கணபதி வசி வசி ஸ்வாகா..." என்று தொடங்கி குழந்தையின் ராசிப்படி பெற்றவர்களுக்கு நன்மை வந்து சேரும் என்றும்.. குழந்தையின் சிறப்புக்கள் என சிலவற்றைக் கூற அனைவரும் மகிழந்தனர்... ஆனால் கடைசியாக ஜோசியர்.

" கொழந்தை ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரத்துல பெறந்திருக்கறதால தாய்மாமனுக்கு (அன்பு) ஆகாது... " என்க அனைவரும் புரியாமல் விழிக்க தாத்தா

" ஆகாதுனா புரியல எந்த மாதிரி" என்று கேட்க.. அவரோ...

" ஐயா நோக்கு புரியற மாதிரி விளக்கம் தரேன் கேழுங்கோ.. கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்துல பெறந்தாங்க அவரோட தாய்மாமன் கம்சன அழிக்கறதுக்காக அந்த பிறவி எடுத்தாரு... ஜோசிய சாஸ்த்திரப்படி ரோகிணி நட்சத்திரத்துல தலைவாரிசு ஆண் வாரிசுனா தாய்மாமன் உயிருக்கு ஆபத்து,, ஒருவேல மாமன் நல்லா இருந்தா கொழந்தைக்கு எதாவது ஆகும்... நம்ம அன்பு ஜாதகத்துல சூரியன் உச்சத்துல இருக்கு அதேபோல கொழந்தைக்கு சந்திரன் உச்சத்துல இருக்கு.. இந்த ரெண்டும் எதிர்மறை.. அன்ப ரொம்ப கவனமா இருக்க சொல்லுங்க.. அப்றம் கொழந்த ஜாதகத்துல ராகு, கேதுவுக்கு உள்ள எல்லா கிரகமும் அடங்கி போகுது இது பாலகாலசர்ப்பரோஷம் அதுனால கொழந்தையும் கவனமா பாத்துக்கோங்க... அப்றம் காலசர்பதோஷம் இருந்தா குடும்பத்துல யாராவதுக்கு சிறைவாசம் ஏற்ப்படும் யாரும் கோவப்பட வேண்டாம்" என்று நால்வரையும் நன்றாக பயமேற்ற...

இறுதியில் மணிமேகலை " சாமி இதுக்கு பரிகாரம் எதுவும் இல்லயா" என்று கேட்க..

அவரோ " பரிகாரம் எதுவும் இல்ல விதி நடந்தே தான் தீரும்.. பெருமாள் கோவிலுக்கு போங்கோ அவரு பாத்து மனசு வெச்சா உண்டு... மனசார வேண்டிக்கோங்கோ எல்லாத்தையும் அந்த கண்ணன் ( நான்தா 😝😝) பாத்துக்குவான் குடும்பத்துல எல்லாருக்கு நல்லே செய்வான் " என்க..

மணிமேகலைக்கு அழுகையாக வரவும் தாத்தா " நீ ஏன் மா அழுகற.. ஜாதகம் சொல்லற எதுவும் நடந்துறாது... இது வெரும் கணக்கு தான் மா... கொழந்தையும் தெய்வமும் ஒன்னு அந்த கொழந்தனால யாருக்கும் எதுவும் ஆகாது அதேபோல கொழந்தைக்கும் எதுவும் ஆகாது.. " என்று சமாதானம் செய்ய...

மகாலட்சுமி " ஆமா விடுஞ்சு இவ்லோ நேரம் ஆச்சூ இன்னும் அன்பு, எழில் வரலையே " என்க...

அப்பொழுது தான் மீதம் இருந்த மூவரும் சிந்தித்தனர்.. அவனுக்கு போன் செய்ய எந்த பதிலும் இல்லை... நேரம் கடக்க கடக்க அனைவரும் பயந்தனர்... மாலை மணி 3 ஆக அவ்வளவு நேரம் ஆகியும் அவர்கள் வராததால் கலக்கம் ஏற்ப்பட குணசேகரனோ அன்பு வருவதாகச் சொன்ன எதிர் திசையில் அவனைத் தேடி சென்றார்...

கோவையிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்னை செல்லும் வழியில் அவரும் தேடிக்கொண்டே வர ( ரொம்ப தூரம் தான், ஆனாலும் பையன கணோம்னா பதட்டத்துல மூளை வேல செய்யல பாவம் )...  பழனியிலிருந்து திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் எதிர் திசையில் அன்புவின் கார் மரத்தில் மோதி நின்றிருப்பதைக்கண்ட குணசேகரன்...

அங்கு வண்டியை நிறுத்தி காரைப்பார்க்க அதனுள் அன்புவின் பொருட்களும், இரத்தமும் இருக்க பதரியவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரிக்க..

" ஆமாங்க சார், ஹஸ்பன்ட் அன்ட் வைஃப்... மேல முதல் மாடில இருக்காங்க " என்க.. அங்கு ஓடி சென்று பார்க்க... இருவரும் மயக்கத்தில் இருந்தனர்... ஒரு செவிலியரை அழைத்து என்ன என்று கேட்க.. அவரோ

" அந்த பொண்ணுக்கு ஒன்னு இல்ல சார் சும்மா அடிபட்ட வேகத்துக்கு இரத்தம் கட்டீருக்க.. ஊசி போட்டுருக்கு தூங்கறாங்க.. அந்த பையனுக்கு கைல நல்ல அடி, கால்ல இரும்பு என்னமோ கிழுச்சு காயம் ஆகீருக்கு இரத்தம் நெரையா போயிருச்சு. கட்டு போட்டுருக்கு வேற எந்த பிரட்சணையும் இல்ல" என்ற போதுதான் குணசேகரனுக்கு நிம்மதி ஆனது... ஊருக்கு அழைப்பு விடுத்து நடந்ததைக்கூறினார், யாரையும் வரவேண்டாம் இரண்டு நாட்கள் கழித்து தானே அழைத்து வரும்படி கூறினார்...

இரவு 8மணியளவில் எழில் கண்விழிக்க அவனருகில் அமர்ந்து இருந்த குணசேகரன் பேருக்குகூட அவளை விஷாரிக்கவில்லை...  அன்புவை பக்கத்தில் பார்க்க அவனிற்கு என்ன என்பதை செவிலியர் மூலம் அறிந்து கொண்டு அன்பு முழிப்பதற்காக காத்திருக்க அவன் இரவு 11மணியளவில் முழித்தான்...

அவனிடம் குணசேகரன் இனியாவிற்கு நடந்த அனைத்தையும் கூற அவளிற்கு தன் தந்தையின் போனை வாங்கி பேசினான், அதைத்தொடர்ந்து எழிலும் பேசினாள்...

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு ஊருக்கு வந்ததும் இனியா, இசையின் குழந்தையைக்காண மருத்துவமனைக்கு சென்றனர்...

சென்ற இடத்தில் மொத்த குடும்பமும் இருக்க அவரவர் பங்கிற்க்கு விஷாரிக்க பின்பு இனியா மற்றும் குழந்தையைக்காண அறையினுள் செல்ல... எழில்

" எப்படி டி இருக்க,,, ஒடம்பு பரவாலயா.. " என்று கண்களில் கண்ணீர் மின்னக்கேட்க அவளும் கண்ணீருடன் பதிலழிக்க..

எழில் " ஏன் டி எதாவது சேராதது சாப்டயா,,, இல்ல புட்பாய்சன் எதாவ்து ஆச்சா டி... " என்க...

அவளோ " இல்ல டி... நான் வழக்கம் போல தான் சாப்ட.. லாஸ்ட் வீக்கூட ப்ரஸ்சர், சுகர் எல்லாம் கரெக்ட்டா தான் இருந்துச்சு ரொம்ப கவனமா தான் இருந்த.. வேகமாகூட நடக்கல டி... நல்ல வேல என் பேபிக்கு ஒன்னும் ஆகல... அவன்...." என்று அழுக...

இசை " அதான் ஒன்னும் இல்லல மா... ஏன் அழுகற... " என்க..

இனியா " இல்ல டா ஜாதகம் பாத்துட்டு என் கொழந்தைய என்னலாம் சொல்லி பேசுனாங்க... என்னால தாங்க முடியல டா..." என்று அழுக..

அன்பு " என்ன மா பேசுனாங்க ஏன் அழுகற..." என்க...

இனியா " அண்ணா என் பையன் ஜாதகப்படி தாய்மாமன் உனக்கு ஆகாதாம்... அவன் பெறந்ததும் உன் இரத்தத்த பாத்துட்டானாம்.. உன்ன காவு வாங்க பாக்கறானாம்.. ஒன்னு நீ நல்லா இருப்பையாம் இல்ல பேபி நல்லா இருக்குமாம் " என்று அழுக..

அன்புவோ அவளிடம் " லூசூ அதெல்லா சும்மா டா.. அவங்க என்ன கடவுளா சொன்னா உடனே நடக்கறதுக்கு... உனக்கு யாரு இப்படியெல்லாம் சொல்லி தரது..." என்க..

அவளோ " பெரியம்மா, மேனகா அத்த அப்றம் பாக்க வரவங்க சிலர்... " என்க..

எழிலோ மனதிற்க்குள் " நெனச்ச அந்த மகாலட்சுமி சும்மாவே இருக்கமாட்டா.. " என்றெண்ண...

அன்புவோ " அப்படி இல்ல டா... உன் பையன் கடவுள் மாதிரி. ஏன்னா எங்களுக்கு ஒரு பெரிய ஆக்சிடண்ட் ஆக வேண்டியது இந்த குட்டி பெறந்த நல்ல நேரம் அத்தையும், மாமாவையும் காப்பாத்தீட்டான்... " என்று குட்டியை கைகளில் ஏந்தி சிரிக்க.. அவனும் பதிலுக்கு சிரித்தான்...

அப்பொழுது வந்த மணிமேகலை " டேய் அன்பு கொழந்த கொடிசுத்தி பெறந்திருக்கு, அவன தாய்மாமன் மொதல் மொதல்ல எண்ணெய்ல முகத்த காட்டி பாத்துட்டு தான் நேருல பாக்கனும்... இப்படி பாத்தா ஆகாது டா.." என்று கோவம் கொள்ள...

அன்புவோ பதிலுக்கு " அம்மா ப்ளீஸ் முட்டாள் தனமா பேசாதீங்க... அதெல்லா மூடநம்பிக்கை.. நம்பாதீங்க.. கடவுள நம்புங்க இந்த மாதிரி எவனோ ஒருத்தன் சொன்னான்னு அத நம்பி பேசாதீங்க.." என்று திட்டினான்...

இனியா " அண்ணா பயமா இருக்கு... பேபினால உனக்கு எதாவது ஆகுமா... பயமா இருக்கு.. " என்று அழுக..

அன்பு " அட லூசூ தங்கச்சி பேபினால எனக்கு என்ன ஆக போகுது அதெல்லா ஒன்னும் இல்ல மா, நம்பாத கண்ணத்தொட... அப்படியே எதாவது ஆனாலும் என் தங்கச்சிக்காக நான் உசுரகூட குடுப்பேன் டா..." என்க...

எழில் " ஹேய் இப்போ எதுக்கு சோகமா பேசுறீங்க... எவ்லோ சந்தோசமா இருக்க வேண்டிய நேரம் இது, யாரும் அழுக கூடாது... " என்று குழந்தையை எடுத்து கொஞ்சினாள்..

Enda update la jathagam pathi pottathu generalaaa therunjatha potturukken but athellam unmai illa yarum namba vendam... Jathagam la oru kind of maths and calculation than so athu apdiyee nadakkum nu illa.. nallatha senju nallathee nenaippom namakkum nallathee nadakkum...

Next part la pakkala bye...👋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro