9

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பானிபூரியை உண்டுவிட்டு வண்டியில் வேகமாக வந்த இசையும், இனியாவும் முதலில் வீட்டிற்கு வர,, எழில் தூங்கியதால் மெதுவான வேகத்தில் வண்டியை செலுத்திய அன்பு தாமதமாக வந்தான்.

இசையை எதிர் பாராமல் இனியா முதலில் உள்ளே சென்றாள் அதன் பின்பு இசை வந்தான் ...உள்ளே சென்ற இனியாவிடம் அனைவரும் "என்ன வாக்குனீங்க காட்டுங்க " என்க,, இனியாவோ சிறுமியை போல் உற்ச்சாகமாக ஒவ்வொன்றாக எடுத்து காட்டினாள். இசையும், அன்புவும் வாங்கிக் கொடுத்த அனைத்து ஆபரணங்களையும் ஸ்வாரஸ்யமாக காட்டிக்கொண்டு இருந்தாள்.

அப்பொழுது சரியாக அன்புவின் வண்டி வாசலில் வந்து நின்றது. அன்பு எழிலிடம் " எந்திரி வீடு வந்துருச்சு " என்க... எழில் நல்ல தூக்கத்தில் இருந்தாள்...

வண்டியின் கண்ணாடி வழியே அவளை பார்த்தவன் " எழில் எந்திரி... வீட்டுக்கு வந்துட்டோம்..." என்க.. எழில் தூக்கம் கலைந்து எழுந்து கீழ இறங்கினாள்... அதன் பின்பு அன்புவும் இறங்கி வர... இருவரும் ஜோடியாக வீட்டினுள் நுழைய

அதைக்கண்ட தாமரை "அண்ணி ஜோடிப்பொருத்தம் அம்சமா இருக்குல... நம்ம இசைகூட வடநாட்டு பையன் மாதிரி கலரு, இனியா நல்லா மார்டன் அவளும் வடநாட்டு பொன்னு மாதிரி இருக்கா. அதுங்க ரெண்டும் வடநாட்டு ஜோடி போல... ஆனா எழில் தமிழ் பொன்னு மாதிரி ட்ரஸ், ஜடை எல்லாம் இருக்கு... நம்ம அன்பு பாருங்க எவ்லோ மார்டனா இருந்தாலும் கம்பீரமா நடக்கற நடைலயே நம்ம ஊரு திமிரு தெறியுது..." என்க

அதற்கு மணிமேகலை " ஆமா அன்பு கொஞ்சம் திமுருதான்... பேசற பேச்சே ஒரு தோரணையாதான் இருக்கும்... " என்று சிரிக்க...

உள்ளே வந்த எழிலிடம் பார்வதி " நீ என்னலா வாங்குன மா... காட்டு..." என்க... எழில் புடவைகளைக் காட்ட

தாத்தா எழிலிடம் " ஏன் மா நகை எதுவும் எடுக்கலயா??? ஏன் ??? " என்க அனைவரும் அதையே கேட்க திருதிருவென முழித்த எழில் தன் கைகளை நீட்டி

" வளையல் வாங்கினேன் தாத்தா,,, அன்பு வாங்கி குடுத்தான்" என்க...

அதற்கு பார்வதி " மாமானு சொல்லுனு எத்தன தடவ சொல்றது எழில்...." என்க..

மகாலட்சுமி " ஏன் டி இனியா என்னனா 40 பவுன் வாங்கீருக்கா... நீ ஏன் 3பவுன் மட்டும் வாங்கீருக்க... உன் அண்ணுக்கும், புருசனுக்கும் உன்மேல அக்கறையே இல்லையா... அது சரி உன்ன கட்டிக்கோனு சொன்னதுக்கே அன்பு அந்த குதி குதிச்சான்... அப்றம் எப்டி உன்ன புடுச்சு நகையெல்லா " என எலக்காரமாக சிரித்தார்..

எழிலிற்கு அழுகையும் வரவில்லை, கோவமும் வரவில்லை ஏனென்றால் அவர் கூறியது உண்மைதானே என்று அமைதியாய் "நகைல என்ன அத்த இருக்கு... அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்... அப்றம் அவங்க எடுக்கதான் சொன்னாங்க நான்தா தலவலினு எதுவும் எடுக்கல" என்றாள்.

ஆனால் மகாலட்சுமி கூறிய வார்த்தை அனைவரையும் சோகமாக்கியது. நிலமையை மாற்ற இனியா " பெரியம்மா இது எங்க ரெண்டு பேருக்கும் தான்... நா வேற எழில் வேரையா... நாங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னு தான்" என்றாள்.

அதற்கு போலியாக சிரித்த மகாலட்சுமி மனதிற்க்குள் " ஓஓஓ ஒன்னா... இந்த கல்யாணத்த வெச்சே உங்க ரெண்டு பேரையும் பிரிக்கறன்டி.... என்மகள் தான் செல்லமா இருந்தா ஆனா எப்போ நீங்க ரெண்டு பேரும் பெறந்தீங்கலோ அப்பவே எல்லா போச்சு... ஓவரா தாங்கறாங்க... உங்க ரெண்டு குடும்பத்தையும் பிருச்சு நான் மட்டும் ரெண்டு குடும்பத்துக்கும் பொதுவா இருக்க போற " என நினைத்தார்.

அப்பொழுது எழில் தாத்தாவிடம் அமர்ந்து தாத்தாவின் விரல்களுக்கு சொடக்கு எடுத்துக்கொண்டே " தாத்தா" என்க..

தாத்தா " என்ன டா" என்க

எழில் " நா சென்னைக்கு போனா உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் " என்று தோள்களில் சாய்ந்து கொண்டாள்...

இனியாவிற்கும் அதை நினைத்து அழுகை வர அவளும் தாத்தாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்... அடுத்தடுத்து வரிசையா அன்புவை தவிர அனைவரும் கையை நீட்ட எழில் அனைவருக்கும் சொடக்கு எடுத்து விட்டாள்...

இனியா, எழில் இருவரின் உடைகளும் இசை, அன்புவின் அறைகளுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டு இருந்தது... இருவரும் வாங்கிய புத்தாடைகளை அவரவர் கணவர் அறைகளில் வைக்கப்போக...

எழில் உள்ளே செல்ல அங்கு அன்பு தன்னுடைய மடிக்கணினியில் எதையோ நோன்டிக்கொண்டு இருந்தான்... எழிலை எதேர்ச்சையாக திரும்பிப்பார்த்த அவன் " ஹேய் ஏன் சோகமா இருக்க?" என்க..

அதற்கு எழில் " அதெல்லா ஒன்னும் இல்ல" என்றாள்... ஆனால் முகமோ அவள் சோகத்தை திரையிட்டு காட்டியது...

அன்பு அவள் முன்பு கையை நீட்டி " எனக்கும் சொடக்கு எடுத்து விடுவயா ?? " என்றான்... எழில் அவனையே பார்க்க அவனோ " எல்லாருக்கு எடுத்துவிட்ட எனக்கு மட்டும் பண்ணல " என்றான்.

எழில் அவன் கையை பிடித்து சொடக்கு எடுத்து விட... அடுத்தபடியா அன்பு எழிலின் கையை பிடித்து சொடக்கு எடுத்துக் கொண்டே " என்ன ஆச்சு?? " என்றான் மென்மையான குரலில்...

அதற்கு எழில் " இங்க ரெண்டு மாசமா தாத்தா அப்றம் மூனு அப்பா... மூனு அம்மானு எல்லாருக்கும் ஒரே செல்லமா இருந்தன்... ஆனா இப்போ எல்லாரையும் விட்டுட்டு போறனு நெனைக்கும் போது கஷ்டமா இருக்கு.. எல்லாரையும் மிஸ் பண்ணுவ... " என்றாள் கண்ணீருடன்....

கண்ணீரை துடைத்துவிட்ட அன்பு " என்ன இது சின்ன பொன்னு மாதிரி அழுகற.... நீ 4 வருசம் படிக்கறதுக்காக எல்லாரையும் விட்டுட்டு தானு இருந்த அப்றம் என்ன??" என்க

அதற்கு எழில் " ம்ம்ம்ம் இருந்த.... ஆனா அது வேற இது வேற... அப்போ நா அவங்க வீட்டு பொன்னு இப்போ அப்டி இல்லல... உள்ள நம்ம என்ன பேசிகிட்டாலும் வெளிய அப்டி இல்லல... " என்றாள்...

அழுத அவளின் பக்கம் அமர்ந்த அன்பு " ஹேய் லட்டு... அழுகாத ப்ளீஸ்... எனக்கு யாராவ்து அழுகறத பாத்தா ஒரு மாதிரி இருக்கும்.... கண்ண தொட" என்றான்...

அதற்கு எழில் "ம்ம்ம்ம் " என்று கண்ணை துடைத்தவள் அப்பொழுது தான் உணர்ந்தாள் அன்புவின் பக்கமாக ஒட்டி அமர்ந்து இருந்ததை.. வேகமாக எழுந்து நின்ற எழில் " நா கீழ போற " என்று கூறிவிட்டு நகர்ந்தாள்..

இங்கு இவர்கள் இப்படி இருக்க இசை, இனியா ஜோடி...

இனியா உள்ளே வர கதவை சாத்தி தாலிட்ட இசை "ஹேய் பேசு டி முடியல... ஏன் டி பாக்கத்துலையே இருந்து பேசாம கொல்ற" என்க.

இனியா " கதவ எதுக்கு சாத்துனீங்க... பஸ்ட் கதவ தெறங்க.. " என்றாள்..

கோவம் கொண்ட அவளை அணைத்த இசை " மாமாகூட பேசமாட்டயா ?? " என்க...

சிறு நெருடலுடன் இனியா " பேச மாட்ட " என்று கூறினாள் ஆனால் அவள் கூறியவிதம் கொஞ்சும் தோனியில் இருந்தது...

கண்களைக் கண்ட இசை அவளின் இதழிற்கு அருகில் சென்று "நெஜமா ??" என்க... இனியாவிற்கு பேச்சு வரவில்லை.. (😝 காத்துதா வருது😝)

அவளின் கன்னத்தை கைகளில் ஏந்தியவன் " மாமாமேல லவ்வே இல்லையா??" என்க.. அவளின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் விடையளிக்க,, அவளின் இதழை சிறைபிடித்தான்...

இரண்டு நிமிடத்திற்கு பிறகுவிடுவித்த இசை " டேய் ஸ்வீட்டி (இனியாவோட செல்லப்பேரு) என்மேல கோவமா??" என்க.

அதற்கு அழுதுகொண்டே " ஆமா டா ஆமா... கோவம் தான்... நா உன்கூட பேசமாட்டேன் சும்மா இப்டிலா பண்ணா நான் பேசுவனு நெனைக்காத..." என்றாள்...

அதற்கு இசை " எப்டியெல்லா....." என்று அவளின் அருகில் செல்ல அவளோ கதவைத்திறந்து விட்டு "அம்மா கூப்டாங்க நா போற..." என்று மின்னலென ஓடி மறைந்தாள்...

இரவு நேர உணவை அனைவரும் உண்டு முடிக்க... எழில் தன் அறைக்கு வரும் வழியில் அவளை அழைத்த மகாலட்சுமி அவளிடம் " ஹேய் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்கூட வா " என்று மாடிக்கு அழைத்து சென்றார்..

எழில் "என்னங்க அத்த.... என்ன பேசனும்??" என்க

அதற்கு மகாலட்சுமி " நா உன் நல்லதுக்கு தான் சில விஷயம் சொல்லற அதகேட்டுக்கோ மா " என்க

அதற்கு எழில் "என்ன சொல்லுங்க அத்த " என்க

மகாலட்சுமி " இன்னைக்கு பாத்தயா உன்புருசனும் , இசையும் சேந்து இனியாக்கு எவ்லோ நக வாங்கி குடுத்துருக்காங்கனு" என்க

அவர் கூறுவதன் பொருள் அறியாமல் எழில் " எனக்கு தல மட்டும் வலிக்காம இருந்துருந்தா இன்னும் நெரையா நகை இனியாக்கு எடுத்து குடுத்துருப்பேன் " என்க

அதற்கு அவரோ " அடியேய் அறிவு கொட்டவளே... நீயும் உங்க அம்மா மாதிரி நாத்தனார்க்கு நல்லது செஞ்சு வாழ்க்கைய வீணாக்கீறாத... உங்க அப்பன்தான் என் தங்கச்சி, என் தங்கச்சினு அவளுக்கே எல்லா செய்வான்.. உங்க அம்மாவும் அறிவில்லாம நாத்தனார கொண்டாடுவா... நீயாவ்து உன்புருசன கைகுள்ள போட்டுக்கோ இல்லனா அவன் அவங்க அம்மா, தங்கச்சினு பாத்துட்டு உன்மேல பாசமா இருக்கமாட்டான் " என்க

அதற்கு எழில் " என்மேல பாசமா இல்லனா பரவால அத்த.... நா இந்த கல்யாணம் பண்ணிகிட்டதே மணிக்காவும், இனியாக்காவும் தான்... அவங்க சந்தோசமா இருந்தாலே எனக்கு போதும்... " என்க

அதற்கு மகாலட்சுமி " இப்போ பாசமா இருக்கற மாதிரி நடிப்பாங்க... போக போக தெறியும்... நாளைக்கே இனியா உண்டாகி கொழந்த பெறந்து உனக்கு கொழந்த இல்லனு வை எல்லாரும் உன்னதான் பேசுவாங்க அன்புக்கு புடிக்கலனா அவன் மனச மாத்த துப்பு இல்லனு... இனியாவ பாத்தயா எப்டி புருசன், அண்ணன், அம்மா னு எல்லாரையும் கைக்குள்ள வெச்சு அவளுக்கு தேவையானத எல்லா வாங்கிக்கறா..."

எழிலிற்கு கோவம் வந்தாலும் அத்தை என்னும் மறியாதைக்காக அமைதி காக்க...

அதைத்தொடர்ந்து மகாலட்சுமி " இங்க பாரு எழில் என்னோட பொன்னா நெனச்சு உன்கிட்ட சொல்லற.. அன்பு மனச மாத்தி அவன்கூட சேந்து நீ நல்லா இருக்கனும்.. இந்த குடும்பத்தோட மொதல் வாரிச நீ பெத்து குடுத்தாதான் உனக்கு நல்ல மறியாதை இருக்கும்... ஒருவேல இனியா முந்திகிட்ட உனக்கு மதிப்பே இல்ல... அன்ப நீ உன்வழிக்கு கொண்டு வந்து அம்மா, தங்கச்சிகிட்டலா அளவா பேச விடு... இப்பவே வெவரமா சொத்த எல்லாம் பிருச்சு வாங்கிக்கோ... உன் மாமியார், நாத்தனார உன் கன்ட்ரோல்ல வெச்சுக்கோ இல்லனா அவளு...." முடிப்பதற்க்குள்

எழில் " போது நிறுத்து நானும் போனா போகுது பெரியவங்கனு அமைதியா இருந்தா ரொம்ப பேசற.... இந்த வீட்ல யாருவேனா உன்ன நம்பி நீ சொல்லறத கேக்கலா... ஆனா நா கேக்கமாட்ட.... நீ யாரு நீ என்ன வில்லத்தனம் பண்ணுவ எல்லா எனக்கு தெறியும்... எங்க அம்மா, பெரியம்மாக்கெல்ல சண்ட மூட்டிவிட பாத்த அவங்க யாரும் சண்ட போட்டுகலனு இப்போ எங்களுக்குள்ளையா...." என்க

அதற்கு மகாலட்சுமி " நா ஒன்னும் பண்ணலயே.... " என்று முடிப்பதற்க்குள்

எழில் " சின்ன கொழந்தல இருந்து ப்ரண்ட்ஸ்ஸா இருக்க என்கிட்டையே நீ இனியா பத்தி பொறாம பேசுறனா.. அன்புக்கு வெளிய பொன்னு எடுத்துருந்தா இன்னும் எவ்லோ பேசுவ... அப்றம் கொழந்த பெத்துக்கறதெல்லாம் எங்க இஷ்டம் அத சொல்ல யாருக்கும் உரிமை இல்ல... எதெதெக்கெல்லா காம்பிடிஷன் வெக்கனும்னு வெவஸ்த்தை இல்ல.... எங்க அம்மா, பெரியம்மாவ நீ எவ்லோ பேசீருப்ப... பாவம் தாமரை மா அவங்களுக்கு கொழந்த இல்லனு எவ்லோ பழுச்சு காட்டுன... ஏன் இப்டி குடும்பத்த பிரிக்கறதுக்குனே அழையற...." என்று கடந்த காலத்தில் அவர் செய்ததற்க்கும் சேர்த்து வைத்தே திட்டினாள்...

கோவம் கொண்ட மகாலட்சுமி " ஆமா டி.... பிரிக்கறதுக்கு தான் அழையற.... நா சொல்லறத எழுதி வெச்சுக்கோ இந்த கல்யாணத்த வெச்சே உன்னையும், இனியாவையும் பிரிக்கற... வாழ்க்க முழுக்கா நீங்க ரெண்டு பேரும் பேசிக்காத மாதிரி பண்ற..." என்க...

அதற்கு எழில் " யாரு என்ன சொன்னாலும் நா இனியாவ விட்டு பிரியமாட்டேன்.... நீயும் எழுதி வெச்சுக்கோ இனியாவும் எழிலும் பிரியரதுனா அது எழில் செத்ததுக்கு அப்றம் தான்... " என்று கூறி முடிக்கையில் கோவத்தின் வெளிப்பாடாய் கண்களில் கண்ணீரும் ஆறாக ஓடியது....

இந்த உரையாடலை மாடியில் காற்று வாங்க வந்த இன்னொருவர் கேட்டு கண்களை துடைத்துக்கொண்டு சென்றார்.. (கேட்டது அன்பு இல்ல)

Next part la pakkala bye 👋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro