பகுதி 10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Part 10

பரபரப்பாக சென்ற வார  வேலை நாட்களில்  சனி ஞாயிறு இரு நாட்களும் தன் ஓய்வை எடுத்துக்கொள்ள   வீட்டில் இருந்த வைஷூ அன்று சனிக்கிழமை என்பதால் தன் தாய் வணங்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வரலாம் என்று நினைத்தாள் . கோவிலுக்கு செல்ல மகளுக்கு   வான்நீல நிறத்தில்  பாவாடையும் அதே நிற சோலியில் மெரூன் நிற குந்தன் ஸ்டோன்களுடன் ஜெர்துசி  வேலைபாடுகள் நிறைந்த உடையை அணிவித்து தோல்வரை இருந்த முடியில் பிரென்ச் பின்னலிட்டவள் கண்ணுக்கு மையிட்டு சிறு பொட்டும் வைத்தாள் . பின்பு பெண்ணின் கொழுகொழு கன்னங்களில் முத்தமிட்டு "சூப்பரா இருக்கு.... கலச்சிகாத... அம்மா ரெடியாகி வந்துடுறேன் குல்லு ... ஹால்ல இரு ...பாட்டிய டிஸ்டப் பண்ணாத ஓகே வா" என்றாள்.

"சரிம்மா டிவி பாக்கவா ? இந்த  longskirt வேற தடுக்குது... விளையாட கூட முடியாது".என்று சொல்லி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டது அந்த குட்டி வாண்டு.

"சரி போய் பாரு பாட்டிக்கு முட்டி வலிக்குதாம் அவங்கள கத்த வைக்காத  சரியா" என்று  கூறி அனுப்பினாள்.

தானும் தயாராகி  ஹாலுக்கு வந்தவள்  தலை சாய்த்து அமர்ந்திருந்த அத்தையை காணவும் " அத்த நீங்க டேப்பிளட் போட்டிங்களா ? இப்ப முட்டி வலி எப்படி இருக்கு? என்றாள் " கிழே குனிந்து அவர் முட்டியை நீவி விட்டபடி.

"இப்ப பரவாயில்லைடா நீ கிளம்பிட்டியா ? குழந்தையும் கூட்டிக்கிட்டு போற ...வெயிலுக்குள்ளே திரும்பிடு" என்றார்   உஷா அக்கறையாக.

"சரிங்க  அத்த  சீக்கிரமே வந்துடுவோம் நீங்க அனவசியமா நடக்காம பாத்து இருங்க" என்று கூறியவள் அவள் புக் செய்த கேப் வர உஷாவிடம் கூறிக் கொண்டு தாயும் மகளும் கோவிலுக்கு சென்றனர்.

30 நிமிட பயணத்தில் 300 கேள்விகளை கேட்டு விட்டாள் வானதி "அம்மா இந்த ஊர் வந்து இருக்கிங்களா?... நாம போகப்போற கோவிலுக்கு போய்  இருக்கிங்களா?... எல்லா இடமும் உங்களுக்கு தெரிஞ்சி இருக்கே!!!...அப்போ இங்க தாத்தா பாட்டி கூட வந்திங்களா?...  தனியா வந்திங்களா?...  இங்க தங்கி இருங்கிங்களா?..." (ஆனாலும் சமத்து குட்டி டா நீ உங்க அம்மா என்ன சொல்றான்னு பார்ப்போம் வா)

மகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதை விட வேறு எந்த  வேலையும் கஷ்டமாக தெரியவில்லை அவளுக்கு. ஒரு கட்டத்தில் "நீ சமத்து பேபியா  வந்தா அம்மா உனக்கு ஒரு சர்பிரைஸ்  வைச்சிருக்கேன்" என்றாள் அவளை  மறக்கடிக்கும்  விதமாக... அவளது ஊகம் வேலை செய்தது.

"அம்மா ..அம்மா.. என்ன சர்பிரைஸ் மா? சொல்லுங்க அம்மா பிளிஸ் மா" என்று தாடையை பிடித்து  கெஞ்சி கொண்டிருந்தது அந்த பிஞ்சு..."வீட்டுக்கு போனவுடனே கொடுக்குறேன்  ஓகே வா டியர்" மகளின்  அல்லி பூ கைகளை  பிடித்து  முத்தமிட்ட வண்ணம் கூறினாள் .

சரிம்மா என்ற வானதி கேள்வி கேட்பதை மறந்து சர்பிரைஸ் என்னவா? இருக்கும் என்ற சிந்தனையில் முழ்கினாள்.

அப்பாடா அவ சைலன்ட் ஆயிட்டா என்று மனதில்  நினைத்து கொண்டாள்  கோயில் வரவே  இருவரும்  வண்டியை விட்டு இறங்கி கோயிலுக்குள் சென்றனர் .

நம்ம ஊர் போல் அல்லாமல்  இங்கு  கோவில்கள் வேறுபட்ட அமைப்பில் இருக்கும். வெள்ளை மார்பில் கல்லினை கொண்டு செய்யப்பட்ட  ஆள் உயர ஆஞ்சநேயர் சிலை முன் நின்றவள்  இருகரம் கூப்பி கண்களை மூடி இறைவனின் சந்நிதானத்தில்  மனதினை அமைதி படுத்த முயன்றாளே தவிர முடியவகல்லை கடல் அலைப்போல் ஒரு இடத்தில் நிலை இல்லாமல் தவித்தது.

அவனை பார்த்த அன்று தனக்கு ஏற்பட்ட அவஸ்தைகள் ஏன்? அவனோடு வாழ்ந்த நாட்களின் தாக்கமா? அவனோடு இருந்த காலங்களில் அவன் மேல் வைத்த அன்பா? எது என்னை அசைத்தது?  எனக்குள் இருக்கும் ஆயிரம் கேள்விகளை யாரிடம் கேட்பேன்.

"எல்லாவற்றையும்   எதிர்பார்த்துதான் மும்பை வந்தேன் என் மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு  ஆனாலும் என் லைஃப்லயும் எல்லா விதமான சாவல்களையும் சந்திக்கும் சக்தி குறையாம இருக்கனும். அனுமனே என் நிலமையில தான் நீ வணங்கின சீதாவும் இருந்தாங்க அவங்களுக்கு பக்க பலமா இருந்த நீ என்னையும் கை விடமாட்ட என்ற நம்பிக்கையோட இருக்கேன்". என்று  தன் மனதில் இருப்பதை வேண்டினாள்.

அவர்கள்  பிரகாரத்தை சுற்ற செல்லும் நொடி பொழுதில்  வெள்ளையும் கிரேயும்  கலந்த  காம்பினேஷனில் டீ சர்ட்டும் கருப்பு ஜீன்சும் அணிந்திருந்தவன் முன்னேற்றியில் முடி விழுந்தபடி படி ஏறிக்கொண்டிருந்தான் நம்ம ஹீரோ  

கண்ணில் எதிர்பட்டவனை பார்த்தவள் தன் மனதில் உரு போட்டதின்  காரணமாக முகத்தில் எந்த வித உணர்வினையும் பிரதிபலிக்காமல்  சர்வ  சாதாரணமாக மகளின் கையை பற்றிக்கொண்டு  கீழே இறங்க நடந்து கொண்டிருந்தாள்.

வானதியின் லாங் ஸ்கட்டின் உபாயத்தால் தடுக்கி விழ போன  சிறியவளை விழாமல் தாங்கி பிடித்தவன் அவளின் உயரத்திற்கு முட்டி போட்டு " ஹாய் பேபி " என்று குழந்தையிடம் பேசலானான்.

அவனை பார்த்து சிரித்த வானதி "தாங்ஸ்  அங்....." என்று சொல்ல வாய் எடுக்க வாயை மூடியவன்" பி பிரண்ஸ்.... ஒகே யூ கால் மீ பிரண்ட் "என்று சிரித்தான்.

அவன் குழந்தையிடம்  பேசுவதற்கு ஆரம்பிக்கவும்
"குல்லு வா போலாம் நேரம் ஆச்சு" என்று அவசரபடுத்தினாள். எங்கே மகளின் முன்னாள் எதாவது வம்பு  வலப்பானோ என்று நினைத்த வைஷூ.

அவளின் செய்கைகளில் இதயத்தில் முள் குத்தியது போல் இருந்தாலும் வலியை பொருட்படுத்தாது முன்னேறினான். என்ன வைஷ்ணவி இப்படி ஓடுறீங்க ? உங்ககிட்ட பி.டி உஷா  தோத்துடுவாங்க போல என்றான்  கிண்டலாக

(ஏன்டி செல்லக்குட்டி நீதான் பேச மாட்டற... என் பொண்ணு கிட்டகூட பேச விடமாட்டுற.. ஏன்டி இப்படி இருக்க பட்டுக்குட்டி நீ என்ன சொன்னாலும் சரி அமுல்பேபி என்னோட பேபிய கொஞ்சாம போகமாட்டேன்டீ உனக்கு டீ போட்டு பேசினாதானே பிடிக்கும் அப்பிடியே செய்றேன் டி  லட்டு என் குட்டி லட்டுவ கொஞ்சிட்டு போறேன் டி)

" எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதான் கிளம்புறேன்" என்றாள் வைஷூ வேறு எங்கோ பார்த்தபடி.

"சரி அதை நான் நம்பிட்டேன் இவ நம்ம பொண்ணா" (இவரு அவ வாயால சொல்ல வைக்கிறாரம்)கௌஷிக்

"இவ என் பொண்ணு  என்றாள்" இறுக பற்றியபடி வைஷூ.

இவர்களை பார்த்து கொண்டு இருந்த வானதி" அம்மா இவர உங்களுக்கு முன்னாடியே தெரியுமா அம்மா உங்க பெர் எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்காரு"

(இப்ப என்னடி செய்யபோற என் பொண்ணு கேக்குறதுக்கு பதில் சொல்லுடி )

"அது அது வந்து குல்லு அம்மா வொர்க் பண்ற ஆபிஸ் இருக்குல்ல அதுக்கு வரவரு அம்மாவ இப்பதான் தெரியும்".என்று திக்கி திணறி கூறியவள் மனதில் இவ என் பொண்ணு மட்டும் தான் இவள யாரும் உரிமை கொண்டாட விட மாட்டேன் என்று கூறிக்கொண்டாள் .

இவர்கள் பேசி கொண்டிருக்கும் சமயம்  வயதான பெண்மணி அவர்களிடம்  வந்து “ வணக்கம்மா ....நான் ஒரு  வேண்டுதல் வைச்சிருந்தேன் ...அதுக்கு பத்து கல்யாணமான ஜோடிக்கு பிரசாதம் தரேன்னு வேண்டிக்கிட்டேன். என் வேண்டுதல் நிறைவடைய இன்னும் ஒரு ஜோடிக்கு பிரசாதம் தரணும் மறுக்காம நீங்க வாங்கிறீங்களா" என்றார் .

இவன் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்தது  வைஷூவின் முகம் இருண்டது. அவள் வேண்டாம் என கூற வாய் திறக்கும் சமயம்  கௌஷூக் "அவங்களோட வேண்டுதல் நம்மால் கெட்டதா இருக்க வேண்டாம் இங்க நீ யாரோ  நான் யாரோ நாம ஒன்னா ஒரு பொருள வாங்கினா அது அவருக்கு நல்லதுன்னா  ஏன் செய்ய கூடாது?".

"நான் உன்னை ஒன்னும் செய்யமாட்டேன் என்றான் முகத்தில் கல்லத்தனம் குடியேற". கௌஷிக்

"இதுக்குதான் இந்த வார்த்தைக்குதான் நான் வேண்டாமுன்ணு சொன்னேன் என்னால முடியாது நான் வாங்க மாட்டேன்". கோபத்துடன் கூறினாள் வைஷூ.

அந்த பெண்மணிக்கு  இவர்கள் பேசியது புரியவில்லை  அவர் "மறுபடியும்  அம்மா கொஞ்சம் உதவி பண்ணி என் வேண்டுதல் நிறைவேத்த தயவு பண்ணுங்க என் பேரனுக்காக வேண்டிகிட்டேன் "என்றார்.

அய்யோ..... கடவுளே உன் கிட்ட என் கஷ்டத  சொல்ல வந்த என்னை இப்படி  ஒரு சூழ்நிலையிலே மாட்டி விட்டுட்டயே. இது உனக்கே நல்லா இருக்கா ? இப்போ நான் என்ன பண்ணுவேன்? எனக்கு ஒரு வழி காட்டு கடவுளே என்று பிரார்தித்தவள் வேறு வழி இன்றி வாங்கிக் கொண்டாள்.

கிழே குனிந்து குழந்தையின் காதில் பேபிமா இப்போ உங்க அம்மா உன்னை கூட்டிக்கிட்டு போய்டுவாங்க நாம அப்புறம் பேசலாம் பாய் டா செல்லம் குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்து

அப்போது மின்னல் போல் இரண்டு முறை மின்னியது.  அந்த வெளிச்சம் பட சுற்றும் முற்றும் கண்களை சுழலவிட்டவள் மறுபடி பதில் கூறாது திரும்பினாள்.  மகளை கூட்டிக் கொண்டு வேக எட்டு வைத்து நடந்தவள் கேப் நின்றிருந்த இடத்தை அடைந்தாள் அவன் கூறியது போலவே தாயும் செய்யவே அவனை திரும்பி திரும்பி பார்த்த வண்ணமாக வானதியும் சென்றாள் . வைஷூவின் மனதில் இவனுக்கு நாம எதுக்கும் இடம் கொடுக்க கூடாது என்று காரில் ஏறி பறந்தாள்.

இங்க வா ராகுல் என்றான் கௌஷூக். துணின் மறைவில் நின்றிருந்த ராகுல் வெளியே வந்தான்  "என்ன ராகுல் போட்டோ எடுத்தியா " கௌஷூக் 
கையில் கேமராவுடன் இருந்தவன்  "எடுத்திட்டேன் பாஸ் நீங்களும் மேடமும் சூப்பர் பேர் பாஸ்" என்றான் ராகுல்

ராகுல் கூறியதில் இதழில் குறுநகை மலர  இருந்தவன் நேரே சென்று ஆஞ்சநேயர் சன்னதியை வணங்கினான்

"கடவுளே அவ கும்பிடுர சாமி  நீ தனியாதான் இருக்கிற... என்னையும் அவளையும் இது போல தனியா விட்டுடாத பிளிஸ் நான் அவ கூட  சேர எடுக்கற முயற்சிக்கு நீதான் பக்கபலமா இருக்கனும்".

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro