பகுதி 26

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பகுதி 26

"அம்மா...."

"என்ன டி ? வரும்போதே அம்மாவ தேடிக்கிட்டு வர?..." என்று ஸ்கூல் முடித்து வந்த காயத்திரியை டைனிங் டேபிலில் மல்லிகை சரங்களை தொடுத்த வண்ணம் இருந்த லலிதா கேட்க

"அம்மா உங்களை எதுக்கு மா... தேடப்போறேன்......என்றவளை ஏற இறங்க பார்க்க அவரின் பார்வையை பொருட்படுத்தாமல்  "அம்மா அக்கா எப்போம்மா வரும்....நம்ம கூட இருக்கதானே மாமா விட்டுட்டு போனாரு வந்த ரெண்டே நாள்ல  பிரெண்டோட ஊருக்கு போயிட்டாங்க......நேத்தே வரன்னு சொல்லுச்சி அந்த முண்டகண்ணி இன்னும் வரல" என்று அன்னையிடம் குறைபட்டு கொண்டிருக்க.

அவ என்ன ஊரை சுத்தி பாக்கவா போனா.....? அவ பிரண்டோட அப்பா டெத்துக்கு தானே போய் இருக்கா... வந்துடுவா.... நாளைக்கு சிவாவ அனுப்பி வைக்கசொல்லி போன் பண்ணி இருந்தா என்றார் லலிதா.

"என்னது நாளைக்கா!!!!  இது எல்லாம் டூ.....மச் நீங்க எதுவும் கேக்கவே மாட்டிங்களா.... இருங்க மாமாவுக்கு போன் பண்ணி சொல்றேன்...."என்றாள் காயத்ரி

"ஏய்!!!!! நண்டு என்ன பண்ற?... நாளைக்கு சிவா கூட்டிட்டு வந்துடுவான் அதுக்குள்ள எதையும் பண்ணி வைக்காத... இந்த பொண்ணு வேற எல்லா பிரண்ஸ்சுகளும் போறாங்க என்னோட குளோஸ் பிரண்ட்னு வேற ஒரே கெஞ்சல்... அதான் ஓகே சொன்னேன் உங்க ரெண்டுபேர் நடுவுலையும் மாட்டிக்கிட்டு நான் முழிக்கிறேன்டி..."என்றார் லலிதா எரிச்சலாக.

"போனாங்கல்ல.... வந்த ஒரே வாரத்தில் ஊருக்கு போறேன்னு சொல்லனும் அப்புறம் இருக்கு.எதுக்கும் 2 வீக்ஸ் இருக்க  முதல்ல மாமாகிட்ட பர்மிஷன் கேட்டுக்கறேன்".

"லலிதா அவ கேக்கறதும் கரெக்ட் தானே அவள பாக்கனும் பாக்கனுமுன்னு கிடந்து அடிச்சிகிட்ட ஆனா இப்போ அவள அனுப்பி வச்சிட்டு காயூவ ஏமாத்திக்கிட்டு இருக்க" என்று அறையிலிருந்து கண்ணாடியை அணிந்தவாறே வெளியே வந்தார் அருணாச்சலம்.

"பேசுங்க.....நல்லா பேசுங்க நீங்க ஏன் பேசமாட்டிங்க?.  எங்கேயும் போக வேண்டான்னு எவ்வளவு எடுத்து சொன்னேன் .  அவ என்ன சின்ன பொண்ணா? அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு...அவளுக்கு எல்லாம் தெரியும் ... சந்தோஷத்துல கூட இருக்கரத விட கஷ்டமான சமயத்துல கூட இருக்கனுமுன்னு பெரிய வியாக்கியானமெல்லாம் பேசி அனுப்பினிங்க இப்போ பழி எம்மேலயா இது ரொம்ப நல்லா இருக்கு" என்றபடி சுவாமி படத்தில் பூ சரங்களை அணிவித்தார்.

அசடு வழிந்தபடி சிறிய மகளை பார்த்தவர் மகளின் முறைப்பை கண்டு  நாளைக்கு வந்துடுவாடா அக்கா  என்றார். மகளின் பார்வையில் சிறிதும் மாற்றமில்லாமல் இருக்க  "மாப்பிள்ளைகிட்ட பேசி இன்னும் உன் கூட 1 வீக் இருக்கா போல கேக்குறேன் ஓகே வாடா"என்றார் காயத்திரியை பார்த்து.

முகத்தில் மகிழ்ச்சியுன் "அப்பா 1 வீக் இல்ல 2 வீக்ஸ் பர்மிஷன் கேட்டு வாங்கி தாங்க" .

"அதுகென்னடா பர்மிஷன் வாங்கி தறேன் ..."என்று மகளை செல்லம் கொஞ்சியவரை முறைத்து பார்த்த லலிதா "இப்படியே நல்ல செல்லங்கொடுங்க நான் சொன்னத  அப்புறம் எப்படி கேப்பாங்க" என்றார் கோபமாக.

"ஹேய் கத்திரிக்காய் இன்னைக்கு ஸ்கூல்ல நவ்யா கூட என்னடி சண்டை" என்று   கேட்டபடி ஆபீஸ் முடிந்து ஐந்து ஆறு ஃபைல்களுடன் உள்ளே வந்தான் சிவா.

"அதுக்குள்ள நீயூஸ் வந்துடுச்சா... கம்பளைன்ட் பாக்ஸ் நல்லாதான் வேலை செய்து". என்று நக்கலடித்தபடி தந்தையின் பக்கத்தில் பாதுகாப்பாய் அமர்ந்து கொண்டாள் காயத்திரி.

"அவன் என்ன கேட்கிறான் நீ என்ன சொல்ற  அவன் கேட்டதுக்கு பதில சொல்லுடி". என்ற அன்னையை பாவமாக பார்த்தபடி "இன்னும் எல் கே. ஜி பாப்பாவ டிரிட் பண்றாமாதிரி டீரீட் பண்றிங்க"  என்று குறைபட.

"காத்திக்காய் உனக்கும் அவளுக்கும் என்ன சண்டை??? நீங்க போட்ட சண்டைல கிளாசே உங்கள வேடிக்கை  பாத்துகிட்டு இருந்தது போல!!!!.... என்னன்னு கேளுங்க..." என்றான் இருவரையும் பார்த்தபடி.

அன்னையின் முறைப்பையும் தந்தையின்  அடக்கிய சிரிப்பையும் பார்த்தபடி "அங்க நடக்கறது டே டு டே அப்டேட் பண்றாங்களா?  ம்கும்" என்று அண்ணணுக்கு பழுப்பு காட்டியவள் "இன்னைக்கு  எங்களுக்கு பையோலாஜி டெஸ்ட் நடந்துச்சி" .

"ம்....நடந்துச்சி...."

"என் பிரண்ட் கருப்புநிலா அவங்க  அப்பாவ ஆஸ்பிட்டல சேர்ந்து இருக்காங்க அதனால....."

"ம்...அதனால..."

"அண்ணனை பார்வையால் எரித்தாள்". அதை பொருட்படுத்தாதவன் மேலும் சொல்ல ஊக்கம் கொடுக்க கடுப்பானவள்.

"அவ நைட் புல்லா படிக்கல அப்டர்நூண் டெஸ்ட்இருக்கு இந்த டெஸ்ட்ல நல்ல மார்க் எடுக்கலன்னா  பிரக்ட்டிகல் மார்க்ல கைய வைச்சாடுவேன்னு  மேம் சொல்ல அவ அழ அரம்பிச்சிட்டா.....சோ என்னால முடிஞ்ச ஹெல்ப்.... அவளுக்கு டெஸ்ட்ல கொஞ்சம் காட்டினேன்.... இதை மேம்கிட்ட போட்டுகொடுத்து எங்களுக்கு பனிஷ்மெட் கொடுக்க வைச்சிட்டா...போதுமா மத்தத சொன்னவங்க இதை சொல்லலியா உன்கிட்ட?". என்று காயத்திரி கோபமாக பாய.

" சொன்னாங்க...நான் சொல்றத விட நீ உன்னோட மடுலேஷன்ல சொன்னாதான் கேக்கறவங்களுக்கு செமையா இருக்கும் என கிண்டலடிக்க..."

"அப்பா பாருங்கப்பா அண்ணன எப்படி கிண்டலடிக்கிறான்னு தடிமாடு அந்த  வெள்ளை தக்காளி வேற என்னலெல்லாம் சொல்லுச்சி" என்று எரிச்சல் கலந்த குரலில் கேட்க.

"காயத்திரி.... உன்னை விட எவ்வளவு பெரியவங்க அவங்கள போய் இப்படி கிண்டல் பண்ணி பேசற உனக்கு பாடம் சொல்லி கொடுக்கிற டீச்சர் உன் அண்ணனோட பிரெண்டா இருந்தாலும் இப்படித்தான் மரியாதை இல்லாமல் பேசுவியா ? அதுமட்டும் இல்லாம நீ செஞ்சதும் சரியா?". என்று கடுமையான குரலுடன் லலிதா கேட்க...  "லலிதா ஏன் வந்ததுல இருந்து குழந்தைய திட்டிகிட்டே இருக்க?".என்று மகளின் தலையை  நீவிவிட்டார் அருணாசலம்.

"இன்னும் மடியில தூக்கி வைச்சி கொஞ்சிங்க  நல்லா இருக்கும்" என்று கணவரை முறைக்க அந்த பார்வையில் அடங்கியவர் "என் தங்க பொண்ணு இதுபோல இன்னொரு முறை செய்யாதடா ராஜாத்தி" என்று  மகளை பார்த்து கூற

"ம் சரிப்பா என்ற மகள் தப்பித்தோம்  பிழைத்தோம் என இடத்தை காலி செய்தாள். "நான் சொல்லிட்டேன் லலிதா இனி ஒழுங்கா இருப்பா...."

"போதும்.... வேணா... ரெண்டு பேரும் போயிருங்க" என்றார் லலிதா கோபமாக.

...................

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro