பகுதி 36

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பகுதி 36

  குளியலறைக்குள் சென்றவள் ஷவரை திறந்துவிட்டு யோசனையில் முழ்கினாள். "இன்னைக்கு நடந்தது  நிஜமா கற்பனையா!?!!... அவர்... அவர் என்கிட்ட பேசினாரே!!!  எப்படி??.. ரொம்ப கேஷ்வலா டிரஸ் பண்ணி இருந்தாரே!!   எப்படி??  நான் ஒருவேளை அவரை பத்தியே யோசிக்கிறேனோ!!?!...   ஏன் இப்படியெல்லாம் நடக்குது???... " என்றவள்  கௌஷிக் பற்றிய சிந்தனையில் அரைமணி நேரமாய் ஷவரிலேயே நின்றிருக்க  இன்னும் கதவை திறந்து வைஷ்ணவி வெளியே வராத காரணத்தால்  வந்த நீலா கதவை தட்டி "வைஷூ என்ன தூங்கிட்டியா??  இல்ல கனவு காணுறியா?? இன்னைக்கு ரொம்ப அர்ஜன்ட் வொர்க் இருக்குன்னு உள்ள புகுந்துகிட்டவ இப்போ வெளியவராம உள்ளயே இருக்க !??!." என்று கேட்க

தன்தலையில் தட்டிக்கொண்ட வைஷ்ணவி "இதோ வரேன் அண்ணி  நீங்க போங்க" என்று குளியலை முடித்து வெளியே வந்தாள்.

வந்தவளை எல்லோரும் வியப்பாய் பார்க்க "ஹி ஹி "என்று அனைவரின் பார்வைக்கும் பதிலாய்  வழிந்தபடி அலுவலகம் செல்ல தயாரானாள்....

மதிய உணவிற்காக அத்தை செய்து கொடுத்த உணவினைக்கூட மறந்தவள் காலை குளியலை முடித்து அழகாய் தயராய் வந்த வானதியை பார்த்ததும் அவள் உயரத்திற்க்கு அமர்ந்து "மாமகூடவும் அத்தைகூடவும் சமத்தா இருப்பையாம் அம்மா வரும்போது உனக்கும் தம்பிக்கும் சர்பிரைஸ் வங்கிட்டு வருவேனாம்" என்றாள் வைஷூ.

"சரிமா நான் சமத்தா குட் கேர்ள்ளா இருக்கேன் மா அந்த சர்பிரைஸ் எனக்கு மட்டும் என்னன்னு சொல்லுங்க மா"  என்று செல்லங்கொஞ்ச

"ம்கூம்... இப்போ சொல்ல மாட்டேனே இவினிங் தான் தருவேன் சோ இப்ப என்ன செய்யனும் சொல்லுங்க" .வைஷூ

"கலரிங்தானே......  ஓகே செய்றேன் .. ஆனா சர்பிரைஸ் மறக்காம வந்திடனும் டீலா" வானதி

சற்று யோசிப்பது போல் பாவனை செய்தவள் "ஓகே டீல்"என்று கூறி   தாயும் மகளும் தம்சப் காட்டிக்கொண்டனர்.

வைஷூவை அனைத்து" ஐ லவ் யூ மா" என்று  வானதி கூற  "லவ் யூடா செல்லக்குட்டி" என்று முத்தம் வைத்து எழுந்தவள் தூங்கிக்கொண்டிருந்த  சத்தியனுக்கும் முத்தம் வைத்து சென்றாள்.

எலுமிச்சை வண்ணத்தில் டாப்பும் அதற்க்கு ஏற்ற வகையில் கருநீலத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தவள் அதிக ஒப்பனை இல்லாமல் அதே சமயம் அடக்க ஒடுக்கமுமாய் இல்லாமல்  மார்டன் பெண்ணாக வந்தாள். "இன்னைக்கு எப்படியும்  அவரை பத்தி எண்ணமே வரக்கூடாது எல்லோரும் ஏதோ ஏலியன பாக்குராப்போல ஒருமாதிரி பாக்குராங்க.... யார் வந்தாங்கன்னு சொன்னா இன்னும் என்ன செஞ்சிருப்பாங்களோ.... நல்ல வேளை முழுசா சொல்லி மொக்க வாங்கல வாங்கனவரையும் போதும்.....  அப்போ காலைல நடந்ததுதான் என்ன என் கனவா முழுச்சிக்கிட்டேவா கனவுகண்டேன்..... !!?". என்று நினைத்தபடியே எதிரில் வரும் நபரை பார்க்காமல் மோத அவளை பக்கத்தில் இருந்த  கண்ணாடி தடுப்பில் மோதாமல் தாங்கி பிடித்தான் கௌஷிக்

தாங்கிபிடித்த கைகளை விலக்காமல் "ஹாய் வைஷூ". என்றான் கௌஷிக்.

அவனையே வைத்த கண் வாங்காமல் வியப்பாய் பார்த்துங்கொண்டிருந்தாள்  வைஷ்ணவி. அவளின் வியப்பில் கண்கள் படபடவென அடித்துக்கொள்ள அவளை பிடித்திருந்த கைகளிலேயே உலுக்கியவன் "ஹாய்  வைஷூ" என்றான்

ஆஹ்... என்றவள் அவனிடமிருந்து விலகி நின்று தன் கைகளில் கிள்ளிக்கொண்டாள் "ஸ்... ஆ.. வலிக்குது அப்போ இது கனவு இல்ல" என்று தனக்கு தானே பேசிக்கொண்டவளை பார்த்தவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

"என்ன மேடம் உங்களுக்குள்ளாவே பேசிக்கிறிங்க!??!... இங்க இருந்து பேசரிங்கன்னா அது என்னை பத்திதான் இருக்கும்.. எனி இன்டிரஸ்டிங் மேட்டர்!?!". என்று தோல்களை குலுக்கிய கௌஷிக்  சற்று முன்னேறி வர

"ஹே... ஹே... ஸ்டாப் ஸ்டாப் அங்கயே நில்லுங்க..."  என்று கையை காட்டி அவனை நிறுத்தியவள் " என்னது உங்கள பத்தி நினைச்சேனா!!!   நல்ல வேடிக்கைதான் அதை விட முக்கியமான  வேலையெல்லாம் எனக்காக வெய்ட்டிங்ல இருக்கு உங்களபத்தி நினைக்க என்ன இருக்கு!!??..   என்றாள் காரமாக

இதுக்கெல்லாம் அசருபவனா நம்ம கௌஷிக் "என்னைபத்தி நினைக்கிறது முக்கியமில்லைதான்... நினைக்கவும் ஒன்றுமில்லைதான்...  ஆனா நான் கொடுத்த வேலையபத்தி நினைக்கறது உங்களுக்கு முக்கியமாதுன்னு நினைக்கிறேன்... என்றான் சின்ன புன்னகையுடன்.

வைஷூ கௌஷிக்கை நிராகரிப்பதற்காக அவனை  முக்கியமில்லை என்று கூறினாலும் கௌஷிக் இயல்பாய் அந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அவனே தான் முக்கியமில்லை என்று கூறும்போது அவள் மனதில் சுருக்கென்ற வலியை  உணர்ந்தாள் மௌளனமாக நின்றிருந்தாள்.

அவள் எதிரே தன் கைகளை ஆட்டி "ஹலோ... ஹலோ... என்றவன்  என்ன மேடம் அந்த வொர்க் முக்கியம்தானே" என்றான். "ம்.. ஆமாம் சார்...  சொல்லுங்க இப்போ என்ன அதுக்கு அதான் எல்லாம் பிக்ஸ் ஆகியாச்சி வொர்க் ஸ்டார்ட் பண்ணபோறோம்" என்றாள்.

"என் டார்லிங்க்காக கட்டரது அதுல ஒரு சின்ன தப்புகூட வந்துட கூடாது அதுக்குதான் உங்களுக்கு சொல்றேன்" என்று  அவன் கூறியதில் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல் முருக்கி கொண்டாள்.

"சரி வைஷூ நாளைக்கு சைட்டுக்கு வந்திடு அங்க நம்ம பிராஜக்ட்டோட வொர்க் ஸ்டார்ட் பண்ண பூஜை வைச்சிருக்கேன்..  அப்புறம் இது பர்சனாலாவும் இன்வைட் பண்றேன் சோ என்னோட குட்டி ஏஞ்சலையும் கூட்டிக்கிட்டு வா" என்று அழைக்க

"என்ன விட்ட பேசிக்கிட்டே போறிங்க will you please stop calling vaishu.... call me vaishnavi ok ...   "இது ஆப்பீஸ் இங்க  நீங்க கஸ்டமர் இதுல மட்டும் தான் சம்மந்தபட்டு இருக்கிங்க...  சோ என்கூட பர்சனலா எந்த வித சம்மந்தமும் உங்களுக்கு இல்லை. உங்கள  ஒரு மூன்றாவது மனுஷனாகவோகூட எங்ககூட நான்  சம்மந்த படுத்திக்க விரும்பல"..  என்று அவள் சீற

அவளின் சீற்றத்திற்க்கும் எந்தவித ரியாக்ஷனையும் பிரதிபலிக்காமல். "இங்க பாருங்க மிஸஸ் வைஷ்ணவிகௌஷிக் நம்ம பொண்ணை நீங்க கூட்டிக்கிட்டு வரவில்லைன்னா அதுக்கு ரியாக்ஷ்ன நம்ம பொண்ணுக்கிட்ட இருந்துதான் நான் ஆரம்பிப்பேன். அது உங்களுக்கு சம்மதமா...  மிஸஸ் வைஷ்ணவிகௌஷிக்.....  என்ன சொல்றிங்க... !!??.  என்று அமைதியாய் ஆனால் அழுத்தமாய் வேறு வழிகிடைக்க கூடாது  என்று கேள்வி எழுப்ப.

பதிலை கூறாமல் முழித்து கொண்டு நின்றாள். அவளின் விழிபிதுங்களில் கௌஷிகின் கைகள் தானாய் அவளின் கன்னத்தை தட்ட "டேக் கேர் குலாபி நாளைக்கு நீயும் நம்ம பொண்ணுமா வரனும் என்ன டார்லிங்" என்று கூறி  சென்றான்.

அவளை யாரும் கவனிக்கவில்லை என்றாலும் அனைவரின் பார்வையும் தன்னையே பார்ப்பது போல் ஒரு பிரம்மை எந்த வேலையிலும் மனம் ஒன்றி செய்ய முடியவில்லை எதிலும் அவன் முகம்  தெரிந்தது. செவிகளில் அவன் கூறி சென்ற வார்த்தைகள் ரீங்காரமிட்டது.

"இவரு சொன்னது போல வானதிகிட்ட கிளோஸ் ஆகிட்டா என்ன செய்றது... அவ என்னை விட்டு அவ டேடிகிட்ட போய்டுவாளா??  என்றது ஒரு மனம் இவ்வளவு நாள் அப்பா என்ற ஒரு வார்த்தையகூட அவ லைஃப்ல வரவிடாம வைச்சிருந்தயே அவர்தான் அப்பான்னு தெரிஞ்சா போகாமா என்ன செய்வா?? என்றது மற்றோரு மனம்
அவரா சுமந்தாரு  நான்தானே அவளை சுமந்தேன் எனக்குதான் அவ சொந்தம் என்று ஒருமனம் வாதிட  ஹா...ஹா.. இந்த பாச்சா  உன் பொண்ணுகிட்ட பலிக்குமா புதுசா ஒரு சொந்தம் அவ எதிர்பாக்காத சொந்தம் கிடைச்சா தானாவே மனசு அவர் பக்கம் சாஞ்சுடும் அசடே" என்று மனம் அவளை ஏளனம் செய்ய "இல்லை" என்று உரக்கவே கத்திவிட்டு தலையைப் பிடித்துக்கொண்டாள் .

______________________________________________

"ஹலோ அம்மா"

"சொல்லுடா காயு என்ன பண்ற? எப்படி இருக்க?".

"மா போதும் ரெண்டுநாள் முன்னாடிதானே பண்ணேன் அப்போ எப்படி இருந்தேனோ அப்படியேதான் இருக்கேன்"...

"வாயி வாயி இந்த வாய் இல்லனா உன்னை நாய் தூக்கிட்டு போய்டும் டி "என்று  சிரிக்க

"மா ஒரு 50 கேஜ் தாஜ்மஹாலை  எப்படிமா நாய் தூக்கிட்டு போகும்".

"ரொம்ப பேசுற அது சரி சாப்பிட்டயா?"

"ம் சப்பிட்டேன் மா நீங்க சப்பிட்டிங்களா? டேபிளேட் போட்டிங்களா ?"

"ம் ஆச்சிடா "

"அம்மா அண்ணா அண்ணி வந்துட்டாங்களா குட்டி என்ன பண்றான்"?.

"இல்லடா 1வாரம் ஆகுமாம் உஷாவுக்கும் பொண்ண பாக்க ஆசை இருக்காதா ?? இருந்துட்டு வரட்டும். வைஷு கூடவே இருக்கா இங்க வந்துகூட ரொம்ப நாள்  ஆச்சி !... என்று வருத்தபட

"ம் சரிமா நான் அக்காகிட்டயும், அண்ணாகிட்டயும் அப்புறம் பேசிக்கிறேன் அப்பா எங்கே? "
 
      "சிவா இல்லைல அதான் ஏதோ  ஆர்டராம் அதை பத்தி பேசிக்கிட்டு இருக்காரு  "

"சரிமா ரொம்ப நேரம் முழிக்காம தூங்குங்க அப்பாகிட்டயும் சொல்லுங்க நாளைக்கு பண்றேன்" என்றவள் போனை வைத்தாள்.

வாட்ச்சை பார்த்தவள் தலையில் கைவைத்து அச்சச்சோ டைம் ஆகிடுச்சி என்று வேகமாக போக கையில் கோக்குடன் யூனிவர்சிட்டி கேப்ரியாவில் கருந்து கோக்குடன் வந்தவனின் மேல் இடித்து இருவரும் விழுந்தனர்.

அவனின் முகத்தை பார்க்காமல் "அய்யோ சாரி சாரி" என்று எழுந்து அவனை கைகொடுத்து தூக்க பார்க்க அவன் நிமிந்து அவளின் முகத்தை பார்த்ததும் தீயை தொட்டதுபோல் கையை இழுத்துக்கொண்டாள்.

அவன் மட்டும் நீட்டியகையுடன் அமர்ந்திருக்க "ஆள பாத்து வரமாட்டியா கண்ணு என்ன முதுகுலையா வைச்சிருக்க ஒரு பொறுமை வேணா"  என்று எகிறியவள் அங்கிருந்து போக

தானே எழுந்து நின்றவன் "ஹேய் நில்லு நில்லு முதல்ல சாரி கேட்டவ முகத்தை பார்த்ததும் என்னை திட்ற...  என்ன என்  நெத்தியில என்ன இளிச்சவாயன்னு ஒட்டி இருக்கா ??"

"அடடே!!!  எங்க சார் இளிச்சவாயின்னு ஒட்டி இருக்கு..  அதான் எங்க குடும்பத்துக்கே எழுதி ஒட்டிட்டிங்களே இளிச்சவாயின்னு ... நம்பி வந்த பொண்ண இப்படி நாடுரோட்டுல விட்டுட்டுபோன  உங்களுக்கெல்லாம் மானம் ரோசம்மெல்லாம் ஒரு கேடு... திட்டினவுடனே ரோஷம் பொத்துக்கிட்டு வருதோ.... மனசாட்சியே இல்லாத ஜென்மம்  ச்ச்சி..." என்று மரியாதை இல்லாமல் பேச....

பளார் என்று அறைந்தவன் "சே .... என்ன நடந்ததுன்னு தெரியுமா எதுவும் தெரியாம பேசாதே ... !!போனா போகுது பொண்ணு பொண்ணுனு பொறுத்து போனா தலை மேல ஏறியா ஆடுற உன்கிட்ட எவ்வளவு சொல்லியும் திருந்தமாட்ட ஆள விடு   என்று இடத்தை விட்டு அகன்றான்.

"என்னையே அடிச்சிட்டல உன்னை உன்னை இடியட்  எருமை மங்கி போட உன்னை என்ன செய்றேன் பாரு முண்டம் முண்டம்...
என்று அவறை திட்டி தீர்த்தவள் கைகளை எடுத்து முகத்தை துடைக்க வாட்ச்சை பார்த்தாள். அச்சச்சோ போச்சே ஓடு ஓடு என்று ஜாகையை ரிசிடென்ஸிக்கு கட்டினாள்.

"ஸாரி ஸ்டெல்லா கொஞ்சம் லேட் ஆகிடுச்சி" என்றபடி பரபரப்புடன் அந்த அமெரிக்க ரிசிடன்ஸிக்குள் நுழைந்த காயூ  நுனி நாக்கு ஆங்கிலத்தில் மன்னிப்பு  கேட்க அந்த   ஹோட்டலின்  பெண் மேலாளர் ஒரு சிநேக பார்வையுடன் தலையாட்டினாள்.

விர்ஜுனியா ஸ்டேட் ஜார்ஜ் வாஷிங்டன்னில் இருந்து 45 நிமிட பயணத்தில் இருக்கும் அந்த மருத்துவ கல்லூரியில்  mbbs இறுதி ஆண்டு மாணவி காயத்ரி.  அதே யூனிவர்சிட்டியில் இறுதி ஆண்டு மாணவன் தான் கிர்ஷ். இருவருக்கும் யூனிவர்சிட்டியில் சேர்ந்த புதிதில் இருந்தே பிரச்சனை எப்போதும் அவளின் அக்காவுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவத்துக்கு இவனை பார்க்குபொதெல்லாம்  அவனை திட்டி பழி தீர்த்துக்கொள்வாள் இன்றும் அதுபோலவே அவனை பார்த்தவுடன் ஏற்பட்ட கோவத்தில் வார்த்தை தடிக்க அமைதியின் அம்சமாய் இருந்தவன் அறைந்துவிட்டான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro