பகுதி 44

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பகுதி 44

விடியலின் போது உறங்கியவள் மறுநாள் குழந்தையின் சத்தம் கேட்டு எழுந்தாள்... பக்கத்தில் அவன் இல்லாமல் இருக்க சற்று நிம்மதியில் படுத்திருக்க மறுபடியும் வானதி "அம்மா" என்று அழைத்தாள். "எழுந்துட்டிங்களா குல்லு??.... வாடா மா.." என்று பக்கத்தில் அமர்த்திக்கொண்டு அப்படியே எழுந்து மகளின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டாள்.

தலைமுடியில் விரல்வைத்து அன்னை தனக்கு செய்வது போல் பூ போன்ற தன்பிஞ்சு விரல்களை வைத்து வருடிய வானதியின் கைகளை எடுத்து முத்தம் கொடுத்தவள் "நேற்றெல்லாம் அம்மாவ மிஸ் பண்ணிங்களா செல்லம்.... நைட் சாப்பிட்டிங்களா டா...... குல்லுமா இங்க எப்ப வந்து படுத்திங்க.... என்றாள் குழந்தையிடம்

"மிஸ் பண்ணேன்..." வானதி கூற குழந்தையின் கன்னத்தை தன் கன்னத்தோடு வைத்துக்கொண்டாள் வைஷு. "ஆனா சிண்டு என்னை பார்த்துக்கிட்டாங்க நான் திரும்பி ஈவினிங் வந்து பார்த்தேன். நீங்க தூங்கிட்டு இருந்திங்க சிண்டு வந்து உங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டார். அதனால கார்டன்ல விளையாடிட்டு இருந்தோம் மா...". இங்க இருக்க தாத்தா கூட அருணாச்சல தாத்தா போல என் கூட விளையாடுராரு மா.... ஆனா ஒரு ஆண்டி இருக்காங்க அவங்க பேரு கூட ம்..... நேகா அவங்க என்னை பார்த்த முறைச்சிட்டே இருக்காங்கமா" என்று கூற .... "நீ அவங்க இருக்கர பக்கம் போகதடா செல்லம்" என்று கன்னம் தட்டினாள் வைஷு. " அப்புறம் மீரா ஜெஸ்வீன் கூட ஹைடன் சீக் விளையாடினோம்..... மா தான்யா சத்யனும் இங்க இருந்திருந்தா இன்னும் ஜாலியா இருந்திருக்கும்ல? என்று கேள்வியாய் வானதி முடித்தாள்" மறுபடியும் தாயின் முடியை கோதியபடி "விளையாடிய பிறகும் வந்து பார்த்தேன் அப்பவும் தூங்கிட்டுதான் இருந்திங்க... பூஜா பெரியம்மா சத்தம் போடாதிங்க, அம்மாவ டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு அப்பா சொல்லி இருக்கார்லன்னு என்னை வெளிய கூட்டிட்டு போய் டின்னர் ஊட்டி விட்டாங்க... தாத்தா எங்க எல்லாருக்கும் கதை சொன்னார். நான் அப்படியே தூங்கிட்டேன் மா.... ஆனா நான் எப்படிமா இங்க வந்தேன் !?!....". என்று தாயை பார்த்து கேட்க

மகள் கேட்ட கேள்விக்கு கோலிக்குண்டு கண்களை பெரிதாக்கி விழிப்பது போல் மகளை பார்த்தவள் "நான் எப்ப கட்டில்ல வந்தென்னே தெரியல இதுல நீ எப்படி இங்க வந்தன்னு கேட்டா என்ன பதில் சொல்றது இது எல்லாம் உங்க அப்பாவோட வேலைதான்" என்று யோசித்தளுக்கு கதவு திறக்கும் அரவம் கேட்க வரும் வழியை பார்த்திருந்தாள்.

"ரெண்டு ஏஞ்சல்சும் எழுந்தாச்சா!!!.... சோ கீயூட்..." என்று மகளின் அருகில் வந்தான் அலுவலக உடை அல்லாமல் டி சர்ட் டிரக் பேண்டுடன் இருந்தவனை விச்சித்திரமாக பார்த்தவள் இவர் இன்னும் ஆபிஸ் கிளம்பளயா இங்கயே சுத்திக்கிட்டு இருக்காரு ( அடியே மண்டு அது அவனோட ஆபிஸ் அவன் போலனாலும் சரி போகலைனாலும் சரி வேலை நடக்கும் இது அவனோட வீடு நீ இருக்கரது அவனோட ரூம் அவன் இங்க இல்லாம பாக்கத்துவீட்டுலயா உட்கார்ந்து இருப்பான்😂😂😂😂) வைஷு எழுந்து அமர்ந்துகொண்டாள் "பேபி டால் நல்லா தூங்கினிங்களா டார்லிங்!?!.." என்று மனைவியை ஒரக்கண்ணால் பார்த்துக்கொண்டே மகளிடம் கேட்க

"ம்கூம் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை பார்வை என்கிட்ட கேள்வி பொண்ணுகிட்ட" என்று வைஷு மனதில் ஓட "ஓ நல்லா தூங்கனனே.... ஆனா சிண்டு நான் எப்படி இங்க வந்தேன்?!?.. நான் ஹால்ல தாத்தா கிட்ட கதைதானே கேட்டுட்டு இருந்தேன்.....!?!" என்று சந்தேகம் கேட்கவும்

"ரொம்ப பெரிய டவுட்டா இருக்கே லட்டுகுட்டிக்கு...?!?. உங்க சிண்ட்டுதான் இங்க கொண்டுவந்து படுக்கவைச்சேன் டார்லிங்.

"நீங்க இருக்கற இந்த ரூம்லயா நாங்களும் இருக்கனும்" என்று உற்ச்சகமாய் அடுத்த கேள்வியை கேட்க

"ஆமாண்டா பேபிமா நான் டாடி ,அவங்க மம்மி, நீ பாப்பா, அதான் எல்லாரும் ஒன்னா இந்த ரூம்ல இருக்கோம்... தாத்தா தனியா உங்களுக்கு ரூம் அரேஞ்ச் பண்ணாங்க... சிண்டுதான் நோ.. நோ.. பாப்பா எங்க ரூம்லதான இருப்பான்னு நான் தூக்கிட்டு வந்துட்டேன்".

"நல்ல சிண்டு" என்று அவனின் கழுத்தை கட்டிக்கொள்ள "சரி வாங்க... பிரஷ் ஆகிடுங்க" என்று பாத்ரூம் அழைத்து செல்ல

"குல்லு இரு நான் வரேன் என்று எழுந்து கொண்டாள்" வைஷ்ணவி

"நான் இவள ரெடி பண்றேன் வைஷு... நீ ரெடியாகி கீழ வா... வெளியே போறோம்". என்று கூற

அவன் கேட்டவுடனே நொடியும் தாமதிக்காமல் "எனக்கு ஆபீஸ்ல கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் போய்ட்டு இருக்கு... சைட்டுக்கும் இன்னைக்கு போகனும்.. நீங்க சொன்ன டைம்லாம் என்னால லீவ் போட முடியாது" என்று திட்டவட்டமாக கூற

"ஹலோ, ஹலோ... மேடம்.கொஞ்சம் வைட் கரோ... அந்த கன்ஸ்ட்ரக்ஷன்ல நீ மட்டும் தான் வேலை செய்ராப்போல இருக்கு !?!...ஒரு நாள் லீவ் போட்டா ஒன்னும் ஆகாது...".

என் வேலைய நான் போய்தான் பார்க்கனும் மத்தவங்க தலைல கட்டி எனக்கு பழக்கம் இல்லை... நான் அங்க அவசியம் இருக்கனும்.... பில்டிங் மெட்டிரியல்ஸ் எல்லாம் இன்னைக்கு வரும் அண்ட் மேனேஜர் வேற சைட் பார்க்கலாம்னு சொல்லி இருந்தார். நிறைய சைட் வொர்க் போயிட்டே இருக்கு இத்தனை வேலை வைச்சிக்கிட்டு... இன்னைக்கு லீவா நோ வே ஆபீஸ் போயே ஆகனும்". என்றாள் வைஷ்ணவி விடாபிடியாக

அவள் பின்னாடி எட்டி பார்த்தவன் "கொஞ்சம் உன் பின்னாடி இருக்க டைம் பீஸ் பாக்குறியா டியர்.." என்று கௌஷிக் கூற மணி 10 ஐ நெருங்கி கொண்டிருந்தது அதை பார்த்தவள் அடித்து பிடித்து எழுந்து கொள்ள "ஏ...ஏ... என்ன இப்படி எழுந்துக்குற!?!... கொஞ்சம் ஜாக்கிரதை கிழே கிழ விழந்துட போற... அப்புறம் நான்தான் தூக்கனும்... யப்பா!! என்னா வைட்டுடா!?!... இடுப்பு பிடிச்சிக்கிச்சிடா சாமி!!!..." என்று போலியாக வருத்தப்பட "அப்புறம் உன்னை வெளியே கூட்டிட்டு போக முடியாதபடி ஆகிடும் பேபி" என்றான் சிந்தனையாய்

வைஷுவிற்க்கு கோபம் சுர் என்று ஏறியது
"நான் ஏன் உங்க கூட வரனும்... உங்க பொண்ணுகூடதானே இருக்கனமுன்னு நினைச்சிங்க... சோ அவள மட்டும் கூட்டிட்டு போங்க. எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்... என்று நகர்ந்தவள் " உங்கள யாரு என்னை தூக்க சொன்னது... நைட் கேட்டதுக்கு என்னமோ ஹிரோ மாதிரி டையலாக் எல்லாம் விட்டிங்க இப்போ உங்க கண்ணுக்கு குண்டா இருக்கேனா!?!... அப்படி இருந்தா இருந்துட்டு போறேன்... அதுல உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்ல நீங்க என்னை தூக்கவும் தேவை இல்லை..." என்று பொறிந்தாள்.

(ம்... உன் கூடவும் இருக்கதான் கூட்டி வந்தேன்னு சொன்னா உடனே வரேன்னு சொல்லி கூடவே வரவாப்போற......உன்னை கொஞ்சம் விட்டுதான் பிடிக்கனும்) "ஓகே நாங்க போய்ட்டு வறோம்... லட்டுக்குட்டி உடனே போய் ரெடியாகி வாங்க பார்கலாம்" என்று மகளுக்கு கூற

இருவரது உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த வானதி "சிண்டு எனக்கு ஃபர்ஸ்ட் இதை சொல்லுங்க.... நீங்க அம்மாவையும் தூக்கனிங்களா?!?!" என்றாள் ஆச்சர்ய முகபாவனையுடன் மகள்

சிரித்துக்கொண்டே ஆமாம் என்று தலை ஆட்டியவனின் கைகளை பிடித்து "வாவ்.......
ப்பா செம பவர் அம்மாவையே தூக்கிட்டிங்க!!!... நீங்க சூப்பர் மேன் தான்" என்று தகப்பனின் புகழ் பாடிய வானதியின் முதுகில் ஒன்று போட்டாள் வைஷ்ணவி.

"வா.. வந்து குளி... அப்புறம் கதை பேசு எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு" என்று கடுகடுத்தாள். வானதியின் உயரத்திறக்கு மண்டியிட்டவன் குழந்தையின் முதுகை நீவி விட்டு "உங்க அம்மாவுக்கு என்னை புகழ்ந்தா பிடிக்காதுடா... நீ போய் சமத்தா குளிச்சிட்டு வா வெளியே போய்ட்டு வரலாம்"...என்றான். அவளுக்கும் கேட்க வேண்டும் என்ற நோக்கில்.

தோல்களில் முகவாயை இடித்தவள் "ம்கூம் ரொம்பதான் அப்பாவும் பொண்ணும் பாசத்தை பொழியிரிங்க.... போடி உள்ள போ" என்று அவனை பார்த்து கொண்டே குளியலறைக்குள் வானதியை அழைத்து சென்றாள்.

வானதியும் வைஷுவும் மாடியிலிருந்து இறங்கி வர கேஷ்வலாக கௌஷிக் அணிந்திருந்த ஆடையில் கூடுதல் அழகுடன் இருந்தான் கருநீல நிற ஜீன்ஸ் வெள்ளை நிற டிசர்ட் இளமஞ்சள் நிற ஸ்டைலிஷ் மேல் சட்டை என அணிந்திருந்தவன் இவர்கள் கீழ் இறங்குவந்தை பார்த்து டைனிங்க் டேபிளில் அமர்ந்தான்.

"குல்லுமா நான் ஆபிஸ் போறேன்... பாப்பா ஒழுங்கா இருக்கனும் சரியா".என்றபடி மம்தா எடுத்து வந்திருந்த சப்பாதியையும் சப்ஜியையும் மகளுக்கும் தனக்கும் போட்டுக் கொண்டவள் கௌஷிக்கின் பக்கத்தில் தள்ளி வைத்தாள்.

"ஹாய் கௌஷிக்".. என்றபடி நேகவும் டேபிளில் அமர "என்ன கௌஷிக் சாப்பிடலையா" என்றாள் நேகா

"சாப்பிடனும் நேகா நீ?".

"நானும்தான் .... " என்றவள் வைஷ்ணவியை அப்போதுதான் கவனிப்பது போல் "ஹாய் வைஷ்ணவி" என்று வேண்டா வெறுப்பாக கௌஷிக்கின் முன்னால் எதையும் காட்டிக்கொள்ளாமல் சிநேகமாய் இருப்பதைபோல் முகத்தை வைத்து கூறினாள் நேகா

"ஹாய்" என்ற சிறு புன்னகையுடன் நிறுத்திக்கொண்டாள் வைஷு . என்ன நினைத்தாலோ மகள் கூறியதில் இருந்து வைஷ்ணவிக்கு அவளின் பேச்சு நடை உடை எதுவும் பிடித்தமாக இல்லை அதனால் அவளின் பேச்சிற்க்கு பதில் சொல்லியவள் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினாள்.

கௌஷிக் சாப்பதியை எடுக்கும் சமயம்
அவன் தட்டு காலியாக இருப்பதை பார்த்த நேகா" நான் வைக்கிறேன்" என்று அவனுக்கு சாப்பதியையும் சாப்ஜியையும் பரிமாற கடுகடுத்த முகத்துடனேயே அவளின் வழிசலை பாரத்துகொண்டே சாப்பிட்டு எழுந்தாள் வைஷு.

பூஜாவிடம் குல்லுவினை பற்றியும் அவளின் பழக்க வழக்கங்கள் பற்றியும் கூறியவள் அவளை பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு மகளிடம் வந்தாள் "நான் கிளம்புறேன் குல்லுமா யாரையும் தொந்தரவு பண்ணகூடாது... சேட்டை செய்யகூடாது... சமத்தா இருக்கனும்... என்று கூறி அலுவலகம் செல்ல கிளம்பி நின்றாள்.

"இரு வைஷு நான் வந்து டிராப் பண்றேன்". என்றான் கௌஷிக்

"இட்ஸ் ஒகே இங்கயே கேப் புக் பண்ணிக்கிறேன். நீங்க நிதானமா சாப்பிடுங்க" என்று வைஷு கூற

"கொஞ்சம் இரு நாங்களும் வந்துடுறோம்" என்று கணவனும் மகளும் மேசையில் இருந்து எழுந்து கொண்டர்

சாப்பிட்டு கொண்டிருந்த நேகா "கௌஷிக் எனக்கும் கொஞ்சம் ஷாப்பிங் போகனும். அங்கில் நீங்க வெளியே போறதா சொன்னார் என்னையும் கூட்டிட்டு போறிங்களா??... எனக்கும் ஊரை சுத்தி பார்த்தா போல இருக்கும் அதே சமயம் உங்க கூட வந்தா ஷாப்பிங் பண்ண ஈசியாவும் இருக்கும்" என்று கேட்க

நேகாவின் மேல் ஒரு நல் எண்ணம் இல்லாமல் இருந்தாலும் கௌஷிக்கின் மேல் இருக்கும் நம்பிக்கை என்றும் ஆட்டம் கண்டதில்லை அதனால் அவள் போக்கில் வைஷ்ணவி இருக்க...மனைவியின் முகம் பார்த்தான் அவளின் உணர்ச்சிகளை காட்டாத முகமாய் இருந்தது. நேற்றே நேகா பேசும் போது நாகரிகமில்லாமல் உடனே போய்விட்டோம் இப்பவும் அதுபோல் முடியாது என்று நடந்து கொண்டோமேயானால் நான்றாக இருக்காது என்று எண்ணியவன் "ம் சரி நேகா... வைஷுக்கு டைம் அச்சு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வரியா?". என்றான்.

"நான் ரெடிதான் கௌஷிக்". என்று உடனே அவனின் அருகில் வந்து நின்று கொண்டாள் நேகா.

"இப்படியேவா..... !!வரப்போற ??" என்றான் கௌஷிக்

ஆங்காங்கே கிழித்து தொங்க விட்டார்போல் மேல்சட்டை அதற்க்கு சற்றும் பொருந்தா நிறத்தில் இருக்கிய ஸ்கர்ட்டை அணிந்திருந்தாள் நேகா "ஆமா நல்லா இல்லையா கௌஷிக்???" என்று தனது உடையை ஒரு முறை பார்த்து கேட்க

"ம்... ஏக பொறுத்தம்" என்று உள்ளுக்குள் கூறியவன் "நல்லா இருக்கு" என்றான். "வெளிய நாய் கண்டா விடாது எதுக்கும் பாத்து வா" என்று தனக்குள்ளேயே சொல்லி சென்றான்..

அவர்களின் பேச்சுகளை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு எரிச்சல் ஏற்பட "எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு... என்னை விட்டா நான் போய்ட்டே இருப்பேன்.... உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் உங்களுக்கு ஆயிரத்துஎட்டு வேலை இருக்கும் இதுவும் ஒரு வேலையா செய்யனுமா??" என்று கடுப்பாய் கூற

"இங்க இருக்கிர 3மாதமும் நான்தான் உன்னை ஆபிஸ்ல டிராப் பண்ணுவேன். எனக்கு ஆயிரத்து எட்டு வேலை இருந்தாலும் அதுல முதல் வேலை இதுதான்.... இது உனக்காக மட்டும் இல்லை... என் பொண்ணுக்காகவும் தான்" என்று தன் மகளுக்கு என்பதில் அழுத்தம் கொடுத்து வெகுசாதரண குரலில் கூறி காரை எடுக்க சென்றான்.

"எதுக்கெடுத்தாலும் பொண்ணுக்காகதான் பொண்ணுக்காதான்னு சொல்ல வேண்டியது நான் இல்லாம அவர் பொண்ணு மட்டும் எப்படி வந்தாளாம்.... ரொம்ப கடுப்பேத்தர டா உனக்கு மரியாதையே இல்லை சொல்லிட்டேன்... மனதிற்ககுள் அவனை வசைபாடிக் கொண்டாள் வைஷ்ணவி.

நிறுத்தி வைத்த காரில் முன் இருக்கையில் நேகா ஏறிக்கொள்ள கேள்வியாய் அவளை பார்த்தான் கௌஷிக்

"எனக்கு பிரண்ட்ல உட்கார்ந்து வரதுதான் ரொம்ப பிடிக்கும் கௌஷிக்.... அதுவும் இல்லாம உன்கூட இப்போதானே ஃபர்ஸ்ட் டைம் டிரைவிங் வரேன். அதை என்ஜாய் பண்ணபோறேன்.... என்று கூறியவள் நான் கௌஷிக் பக்கத்துல உட்காரலாம் இல்லையா வைஷு" என்று எதுவும் அறியாத பிள்ளபோல் முகத்தை வைத்துக்கொண்டு வைஷ்ணவியிடம் இந்தியில் கேட்க

"தாரலமா உட்காந்துக்கோ நேகா" என்று இந்தியிலையே பதில் அளித்தவள் "பிளைட்ல வந்தியே பைலட் சீட்லயா உட்கார்ந்துட்டு வந்த.?!?... பிரண்ட்ல உட்காரணுமா!! ம்கூம் .." என்று வாய்குள்ளேயே தமிழில் முனுமுனுத்துக் கொண்டாள்

அவளின் முனுமுனுப்பைக் கேட்ட கௌஷிக்கிற்கு இதழில் புன்னகை பூக்க அதை அவள் தெரியாமல் சாதரணமாக வைத்துக்கொண்டவன் வண்டியை கிளப்பினான் பின்னிருக்கையில் இருந்த வைஷ்ணவியும் வானதியும் ஆளுக்கு ஒருவராக ஜன்னல் புறத்தில் பார்வையை பதித்திருக்க ரியர்வியூவ் மிரரை சரி செய்தவன் தன் மனைவியின் முகத்தை அதில் பார்த்துக்கொண்டே வந்தான்

"மும்பை ரொம்பா ஹாட்டா இருக்கு ல!!?!!.. கௌஷிக்..... உங்களுக்கு நியாபகம் இருக்கா??... நான் சின்ன பொண்ணா இருந்தப்போ நீ நான் கரண் எல்லாம் அந்த இடத்துல நின்னு தானே மரம் ஏறினோம்...." என்று ஆரம்பித்து அவளின் சிறு வயது பள்ளி கல்லூரி என்று கார்கிளம்பியதிலிருந்து ஓயாமல் பேசியபடியே வந்த நேகாவிற்க்கு

"ம்...." என்று ஒற்றை சொல்லை மட்டுமே உதிர்த்தான் கௌஷிக்

நேகா கூறிய எதுவும் அவன் செவி வழி சென்றதே தவிர மூளையிலும் மனதிலும் எதுவும் பதியவில்லை சாலையிலேயே கண்ணாய் இருந்தாலும் மனைவியை ரசித்தவண்ணமே வாகனத்தை செலுத்தி வந்தான் கௌஷிக்

"ஒரு பொண்ண லுசுன்னு சொல்லக்கூடாது... ஆனா நீ ரொம்ப படுத்தர எப்ப எனக்கு கண்ட்ரோல் மீஸ்ஆகி கத்திடுவேனோன்னு இருக்கு... .என் பொருமையை ரொம்ப சோதிக்கரமா நீ.... நைட்டு வேற இவருக்கிட்ட மாட்டிக்கிட்டேன்.... இப்போ உன்கிட்ட நீ பேசுறேன் என்ற பேர்ல அறுத்துகிட்டு இருக்க எப்படா முடியும் இந்த எப் எம் சே..... காலைலேயே வா!!?.... ஆபிஸ்ல என்ன நடக்க காத்துகிட்டு இருக்கோ??.... இவரு வேற அடிக்கு 58 வாட்டி கண்ணாடியையே பாக்கராரு இவர் கூட வந்தது தப்பா போச்சி... பேசாம நாளைல இருந்து நம்ம வீட்டுக்கே போய்டுவோமா?? இல்ல இல்லை... ஒரு மூனு மாசம் தாக்கு பிடிக்க முடியாதா??? என்ன ??? எவ்வளவு தூரம்தான் போறாருன்னு பாத்துடுவோம்..... என்று தன் மனதில் கணக்கை போட்டவளுக்கு அலுவலகம் வர தம்பித்தோம் பிழைத்தோம் என மகளின் நெற்றியில் இதழ் பதித்து ஆயிரம் முறை ஜாக்கிரதை பத்திரம் என்று கூறியவள் அலுவகத்தில் நுழைந்தாள்.

அவளை அலுவலகத்தில் இறக்கி விட்டவர்கள் நேராக ஷாபிங்மாலுக்கு சென்றனர்.

மாலுக்கு வந்ததில் இருந்து "இது பாரு கௌஷிக்... அது பாரு கௌஷிக்" என்று நசநசத்துக்கொண்டே இருந்த நேகாவை "அங்க இருக்கு பாரு காஸ்மெடட்டிக்ஸ் அது வாங்கனும்னு சொல்லித்தானே வந்த.... போய் வாங்கிட்டு இரு நான் டாய்ஸ் இருக்க பக்கம் போறேன்" என்றவன் குல்லுவை அழைத்துக்கொண்டு வேறு கடையில் நுழைந்தான்".

"சிண்டு அது சூப்பரா இருக்குல்ல".... என்று வானதி மகிழ்ச்சியாக பார்த்துக்கொண்டு இருந்தாள்

"அப்போது......"

.....................................................................................

வார இறுதி நாட்களில் படிப்பிற்க்கு என்று நேரம் ஒதுக்கிய காயத்ரி தனக்கும் ஒரு ரிப்பிரஷ்ஷிங்கிற்காக அந்த ரெஸ்டாரண்டிலேயே வேலைக்கு வந்திருந்தாள் பலதரப்பட்ட மனிதர்களை பார்க்கும் போதும் பழகும் போதும் மனதிலும் முளையிலும் ஏற்படும் அழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்வை உணர்வாள் அதற்காகவே இந்த வேலைக்கு விரும்பி வந்தாள்.

காயூ வருவதை பார்த்த ஸ்டெல்லா உரிமையாக "உனக்கு எக்சாம் நேருங்குதுன்னு சொன்ன இங்க வந்திருக்க!!!... படிக்க வேண்டியதுதானே??". என்று கடிந்துகொள்ள

"படிச்சிக்கிட்டே இருந்தா படிச்சதும் மறந்திடும் ஸ்டெல்லுமா.... எனக்கு மைன்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணணும் சோ டுடே இங்க வந்துட்டேன்...". என்றவள் "அப்புறம் பாக்கலாம் . நான் உள்ள போய் எல்லாருக்கும் ஒரு அட்டென்டன்ஸ் போட்டுட்டு வந்துடுறேன்" என்று உள்ளே சென்றாள்.

காயூவின் தோழியுடன் பேசிக்கொண்டே வந்த கிர்ஷ் ஹே "அங்க பாரு ரெஸ்ட்ரண்ட் வா அங்க போய் பேசலாம்.... என்று கிர்ஷும் தோழியும் ரெஸ்டாரண்டில் இருந்த டேபிளில் அமர்ந்து சர்வண்ட்டை அழைக்க

அவர்கள் வந்து அமர்ந்ததும் முதுகுபுறம் மட்டும் தெரிந்ததால் கஸ்டமர்ஸ் என்று நினைத்து "கேன் ஐ ஹெல்ப் யூ" என்று வந்து சிரித்த முகமாக நின்றவளின் முகம் கருத்தது.

"ஹேய் காயூ!!! இங்கயா இருக்க?!?....". என்று தோழி எழுந்து காது கடிக்க...

"ஆமா தெரியாதா....???. தெரியாதது போல கேக்குற???" என்றாள் கடுமையான முகத்துடனே

" சே.. சே... இல்லை படிப்பு படிப்புன்னு ரூம்லயே இருப்ப... ஆன இங்க வேலைக்கு வந்துருக்கியேன்னு கேட்டேன் " தோழி

கிர்ஷ் காயூவை பார்ப்பதை தவிர்த்து அவன் அனிந்திருந்த கண்ணாடியை கழட்டி டேபிலில் வைத்து அதில் எடுத்து கைகளில் விளையாடியபடியே இருந்தான்.

தான் சொல்லியும் இவன் தன் தோழியுடன் ஊர்சுற்றவும் உள்ளுக்குள் புகைந்த கோபம் கண்களில் கனலாய் அவனை எரிக்க கண்கள் இரண்டும் கிரிஷ்ஷிடம் இருக்க தோழியிடம் "நான் படிக்கரது இருக்கட்டும் .... நீ படிக்கமா ஊர் சுத்திட்டு இருக்க .....??? உனக்கு இங்க என்ன வேலை?? அதுவும் இவன்கூட??" வார்த்தைகள் அனலாய் வீச

"காயு அன்னைக்கு சொன்னேன்ல...
மனசுல இருக்கரத சொல்லப்போறேனு இன்னைக்குதான் டைம் கிடைச்சது அதான் வெளியே கூட்டிட்டு வந்தேன்..." என்றாள் அவனை பார்த்துக்கொண்டே

"ஹே வந்ததுக்கு எதையும் ஆர்டர் பண்ணாம அவங்ககிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்க???" என்றவன் "ஆடர்சொல்றேன் எடுத்துக்க 2 கோல்ட்காஃபி அண்ட் 2எக் கட்லட்" என்றான்

அவனை பார்த்து முறைப்புடனே சென்றவள் கிரிஷ் கூறிய உணவினையும் காபியையும் கொண்டு வந்தாள் தோழி கிரிஷ்ஷிடம் கிப்ட் பாக்சை கொடுக்க அதை வாங்குவதற்க்குள் கொண்டு வந்த கோல்காபியை கிரிஷ்ஷின் முகத்தில் அபிஷேகம் செய்ய அவன் சுதாரிப்பதற்க்குள் எக் கட்லட்டை அவன் தலையில் கொட்டி கவிழ்த்தாள்.

"ஏய் ஏன்டி...?!????.... .இப்படி பண்ண" என்று தோழி ஆவசரமாய் பதற

"இங்க பாரு... அவனுக்கு விழுந்தது எல்லாம் உனக்கு விழும்.... வாயமூடி சைலண்டா இரு சொல்லிட்டேன் ...

"டேய் ஒரு வாட்டி சொன்னா புரியாதா??? அன்னைக்குதானே சொல்லிட்டு வந்தேன்..... நான் சொன்னத காத்துல பறக்கவிட்டுட்டு இவகூட வந்துட்டல ???'

அவள் அபிஷேகம் பண்ணிய கோல்ட்காஃபியை முகத்தில் இருந்து வழித்து போட்டவன்.... பேந்த பேந்த அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்... "அப்பவே சொன்னல என்கிட்ட ஜாக்கரதையா இருன்னு... ஒருத்தி பேசனுன்னு வந்து கூப்பிட்டவுடனே நாய்குட்டி மாதிரியே அவ பின்னாடியே வந்துட்டியா?!?!... உனக்கு அறிவில்லை!?!... படிக்கதானே வந்த... அந்த வேலைய விட்டுட்டு மத்த வேலையெல்லாம் பார்த்துகிட்டு இருக்க " என்று அவனை திட்ட

"ஹே உனக்கு என்னதான்டி வேணும்...??? எதுக்கு இப்படி பிரச்சனை பண்ற???... நான் படிக்கிறது, படிக்காதது என் இஷ்ட்டம்.. உன்கிட்ட யாரும் என்னை பார்த்துக்கசொல்லி சொன்னாங்களா!!!?!" எதுக்குடி தம்தூம்ன்னு குதிக்கிர" என்று அவன் பாய

"நான் அப்படித்தான் குதிப்பேன்.... நீ ஏண்டா அவ கூட வந்த...??".

"நான் யார் கூட வந்தா...
உனக்கு என்னடி..??? உன் வேலைய பார்த்துக்கிட்டு போடி"....

"என்னையா!! போடின்னு சொல்ற!!!.. உன்னை...". என்று அவனை தள்ளி விட அவளையும் இழுத்துக்கொண்டு டேபிலில் விழுந்தான்.

அவன் செய்கையில்.தடுமாறியவள் "தடிமாடு ஏண்ட இழுத்த??".

"நீ ஏண்டி தள்ளி விட்ட ???".

"ஏய் பேச்சை மாத்தாத... அவ கூட எங்கயும் போககூடாது.... அவ்வளவுதான்..".

"நீ சொன்னா??? நான் கேக்னுமா ???....நான் ஏன்டி அவ கூட போககூடாது ?!?".

" அது அது அவ என்கிட்ட என்ன சொன்னா தெரியுமா.... உன்னை லவ் பண்றாளாம்.... உன்னை டேட்டிங் கூப்பிட்டு போகப்போறாளாம்....". என்றாள் கையை பிசைந்தபடி

"அவ என்னதானே லவ் பண்றா??... டேட்டிங் கூப்பிரா???... அதுல உனக்கு என்னடி??? அது எல்லம் இங்க சர்வசாதரணம்... அதுக்கு ஏன்?? இவ்வளவு ரியக்ட் பண்ற??". என்று கிர்ஷ் கேட்க

"அதெல்லாம் எனக்கு தெரியாது... நீ போககூடாதுன்னா.. போககூடாதுதான்..." என்று அவன் சட்டையை கொத்தாக பிடிக்க

"ஏய் உனக்கு என்ன தாண்டி பிரச்சனை??? ஏன் சீன் கிரியேட் பண்ணிக்கிட்டு இருக்க??? நானும் உன்கிட்ட பிராப்ளம் வரகூடாதுன்னு ஒதுங்கிபோனாலும் எதுக்கு என்னை தேடி வந்து பிராப்ளம் பண்ற??? கை எடு ..கை எடுடி... என்னை விடுன்னு சொன்ன.. விடு..". என்று அவளின் கையை சட்டையிலிருந்து உறுவியவன் "உனக்கு என்னமோ ஆகிடுச்சி அதை கியுர் பண்ணு அப்புறம் படி" என்று அவளுக்கு புத்தி சொல்ல

"என்னை பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா???". என்று எரிச்சலாய் கேட்க

"நான் என் வாயல உன்னை பைத்தியன்னு சொல்லல தாயே... ஆன நீயே அதுதான் உண்மைங்கிறாப்போல நடந்துக்கிற..." என்றான் ஏளனமாய்

"அப்போ நான் பைத்தியமா!???!!!. நான் பைத்தியமா!!?!!" என்று அவள் அவனை போட்டு மொத்து மொத்தென்று மொத்த தடுக்க வந்த தோழியை ஒரு விரல் நீட்டி எச்சரிக்கையாய் கை ஆட்டியவள் செய்கையாலயே தள்ளி போக சொன்னாள்.

"ஏய் நிறுத்து டி ...எருமை.. எருமை.. ஏன்டி அடிக்கிற??? ஏய் விடுடி ராட்சசி... விடுடி வலிக்குதுடி... ஏய் விடுடி ... என்று கத்தினான்.

"வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டும்... யாரு நான் நான் ராட்சசியா??? அவ என்ன உலக பேரழகியா!! சொல்லுடா?? அவ என்ன உலகபேரழகியா?? ஆமான்டா நான் ராட்சசிதான்... அப்படித்தான் இருப்பேன்.. அதுக்கு அவ கூட போவியா.. சொல்லு போவியா...".

அதற்கு அர்த்தமாய் சிரித்தவன்" நான் எதுக்கு அவகூட போககூடாது?!? அவளை லவ் பண்ண கூடாது?@? நீயே ஒரு காரணத்தை சொல்லு நான் ஒத்துக்குறேன்"....

"கடவுளே அதுதான் தெரிஞ்சி தொலைக்க மாட்டதே!!!!!... உன்கூட இவ இல்லை யாராவது பொண்ணு பேசினாகூட கடுப்பா வருதே!!!". என்றாள் . அவள் கூறுவதை கேட்டவனுக்கு புன்னகை தவழ அதை கண்டவள் "சிரிக்காத சிரிச்ச பல்ல தட்டி கைல கொடுத்துடவேன்." என்று மிரட்டினாள் காயூ

(காயூவின் தோழி கிரிஷிடம் வந்து காதலை சொல்ல கிர்ஷ் அதை மறுத்தான். விடப்பிடியாக தோழி கிர்ஷை இம்சை செய்ய "நான் காயூவ லவ் பண்றேன்" என்று பட்டென கூறினான்.

அதை கேட்ட தோழி விழுந்து விழுந்து சிரித்தாள்

"இப்ப என்ன ஜோக் சொன்னேன்னு நீ சிரிக்கிற" என்றான் கிர்ஷ் கோபமாய்

"உன்னை கண்டாலே இல்லை.... இல்லை.. உன் பேச்சேடுத்தாலே அவ தண்டவமாடுவா..!!! இதுல நீ அவளை லவ் பண்ற!!?!.. எல்லாம நடக்குற காரியமா!?!.. உன்னை லவ் பண்ற என்னை விட்டுட்டு உன்னை அடியோட வெறுக்கிரவள போய் லவ் பணறியே" என்று கூற

"அவ என்னை லவ் பண்றா" என்று அடித்து கூறினான் கிர்ஷ்

"நீ என்னை தவிர்க்க இப்படி காதல் கீதல்ன்னு பொய் சொல்ற" என்று தோழி கத்த

"என் கூடவா.... உனக்கு மட்டும் இல்லை அவளுக்கும் அதை நிறுப்பிக்கிறேன்.... என்று காயூ வேலை செய்யும் இடத்திற்க்கு அழைத்து சென்றான் கிரிஷ். )

"அது எனக்கு தெரியுமே செல்லம்..." என்று அவளின் மோவாயை நிமிர்த்த அவள் கையை தட்டி விட்டாள். "தொடாமா சொல்லு" என்றாள்.

"நீ என்னை லவ் பண்ற செல்லம்...."

அவள் சிலையாய் நின்றாள் கண்கள் படபடவேன அடித்துக்கொண்டது ?!. நா!!!!.. லவ் பண்றேனா !?!..."

"ஆமா... நீ... நீதான்... என்னை லவ் பண்ற.... அதான் என்கூட யாரவது ஒரு பொண்ணு பேசினாலோ..., சிரிச்சாலோ... எரிச்சாலாவும் கோபமாகவும் வருது"..

"அப்படியா!?!....". என்று ஆர்ச்சர்யமாக வினவ.

"ஓ..!!!! .. அதை இன்னும் நீ நம்பலையா?!?!...... இப்போ நம்ப வைக்கிறேன் செல்லம்.... என்றவன் அவள் தோழியிடம் சென்று "ஐ லவ்" என்று ஆரம்பிக்கும் முன் சரமாரி அடிகளை பரிசாய் காயூ கொடுக்க அவளின் கைகளை இருக்கி பிடித்தவன் அவனின் அனைத்து அடிகளுக்கு பதில் அன்பு முத்தங்களை பரிசாக பெற்றான்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro