நினைவு 1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

N.S கல்வி குழுமம்.. திருச்சி நகரத்திற்கு அப்பால் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கல்லூரி.... பொறியியல் படிப்புகளுக்கான கல்லூரி ... ஆர்ட்ஸ் & சயன்ஸ் பிரிவு என்று பிரமாண்டமான கட்டிடங்களே கல்லூரியின் பழமையையும் பெருமையையும் பறைச்சாற்றியது... இப்போது பணம் இருந்தால் படிக்காதவனை கூட சேர்த்துக் கொள்ளும் கல்லூரிகளில் இருந்து மாறுப்பட்ட ஒன்று.... படிப்பும் வேண்டும் பணமும்‌ வேண்டும் அப்போது தான் இங்கு‌ படிக்க இடம் கிடைக்கும் ... இந்த கல்லூரியில் இடம் கிடைத்தால் பெற்றவர்கள் சாதனையை நடத்தியதாய் பெருமைப்பட்டு கொள்வார்கள்...

அத்தகைய பெருமை வாய்ந்த அக்கல்லூரி

காலை வேளையில்..... பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது...

வண்ணமயமாக மாணவ மாணவிகள் இளமைக்கே உள்ள துள்ளலோடு வலம்வர அதற்கு தாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்பது போல் பேராசிரியர்களும் நேர்த்தியான உடை அணிந்து அவர்களுக்கே உள்ள கம்பீரத்தோடு அலுவலக அறையை நோக்கி சென்றுக் கொண்டிருக்க

பார்ப்பதற்கு மாணவியை போன்ற தோற்றத்துடனும் உடையில் பேராசிரியர் போன்றும் துள்ளலான நடையுடனும் அவளுடைய அக்மார்க் புன்னகையுடன்
அங்குள்ளவர்களின் வணக்கங்களுக்கு பதில் அளித்தவாறே அலுவலக அறையினுள் உள்நுழைந்தாள் நம் கதாநாயகி யாழ்இனியா

மாநிறத்தில் லட்சணமான வட்ட முகத்தில் சிறிய பொட்டிட்டு வகிட்டில் குங்குமமிட்டு காட்டன் சேலையில் பெண்மைக்கே உரிய மிடுக்கோடு கையொப்பமிட்டு வெளியே வந்தவளை அவள் ஆருயிர் தோழி பரிதா முறைத்துக் கொண்டிருந்தாள்...

அவளை சற்றும் கண்டுக் கொள்ளாமல் நக்கல் சிரிப்போடு சென்றவளை கண்டு இன்னும் கோபம் கொண்டு அவளை நோக்கி சென்றவள்

"ஏய் இனியா எரும.. நான் கோவமா நின்னுட்டு இருக்குறத பார்த்தும் கண்டுக்காம போற.. உனக்கு எவ்வளவு கொழுப்பு " என கோபமாய் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பேசியவளை பார்த்து இனியாக்கு சிரிப்பு தான் வந்தது...

ஆனால் சிரித்தால் அதற்கும் தன் தோழி பொங்குவாள் என்பதால் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவள் " ஏன் என் பரி செல்லம் கோவமா இருக்கு" என கொஞ்சலாய் கேட்க

"ஏன்டி... உனக்கு தெரியாதா.. இன்னைக்கு உன்னை பிங் சேரி தானே கட்டிட்டு வரச்சொன்னேன்"

(உங்க மைண்ட் வாய்ஸ் கரெக்ட் தான் .. ஏன்மா பரிதா பிங் சேலைக்கு தான் இந்த அலப்பறையா... ) என குழந்தை போல் முகம் சுளித்தவளை கண்டு இனியாவிற்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது...

ஏனெனில் தன்னிடம் மட்டும் தான் பரிதா இப்படி பேசுவாள் ..அதுவும் தனக்காக தான் என்பது அவள் அறிந்ததே ..

பரிதா இனியாவின் உயிர் தோழி பள்ளி பருவத்திலிருந்தே அவளோடு பயணிப்பவள்...பரிதா கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுநிலை படிப்பு முடித்து பேராசிரியராய் இனியாவோடு இக்கல்லூரியிலே வேலை செய்கிறாள் .. இனியா கணக்கு பாடப்பிரிவில் முதுநிலை முடித்தவள்... பரிதாவிற்கு அவள் அம்மா மட்டுமே ... ஏற்கனவே கல்யாணம் வேண்டாம் என்று இருந்தவள் இப்போது தன் தோழியின் நிலையை கண்டு அந்த முடிவில் தீர்க்கமாக இருக்கிறாள்

இன்னும் முறைத்துக் கொண்டு இருக்கும் பரிதாவை கண்ட இனியா

"முறைச்சு பார்க்க நான் என்ன உன்‌ முறைப்பையனா.. பரி செல்லோ.. ஒரு பிங் கலருக்கு உன் மூஞ்சி பிங் ஆகலாமா .. விடு‌ பேபி‌.."

"ம்ம்ச்ச்ச்.. யாரும் என்னை கொஞ்சி‌ சமாதானப் படுத்த வேண்டாம்.." என்று முகத்தை தூக்கிவைத்துக் கொண்டவளை பார்த்து இனியா பாவமாய்‌ பார்க்க

"ஏன் இனியா .. உனக்கு பிடித்ததை யாருக்காவோ அதுவும் உன்னை கஷ்டப்படித்தி சென்றவனுக்காக வெறுக்குற.... இப்படி என் இனியா இருக்கிறத என்னால் பார்க்க முடியவில்லை டி.. " என கோபமாய் ஆரம்பித்து ஏக்கமாய் முடித்தவளை கண்டு ஒரு விரக்தி புன்னகையோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்..

ஒரு காலத்தில் பிங் நிறத்தின் மீது பைத்தியமாய் திரிந்தவள் .. கலகல பேச்சினால் அனைவரையும் தன் வசப்படுத்தியவள் .. தைரியமாய் பிரச்சினைகளை கையாள்பவள்.. இன்று அமைதியின் உருவாய் .. வெளியில் செயற்கையாய் சிரித்து ... மனதிற்குள் மருகும் தன் தோழியின் நிலை கண்டு அவனின் மேல் கோபமாய் வந்தது பரிக்கு .. இருந்தும் ஒன்றும் செய்ய இயலாத தன் கையாலகாத தனத்தை நொந்தவளாய் வகுப்பறையை நோக்கிச் சென்றாள்

இனியாவோ தன் வாழ்க்கையை பற்றிய யோசனையில் இருந்தால்

வகுப்பில் நுழைந்த பின் அவள் எல்லாவற்றையும் மறந்தவளாய் தன் வேலையான பாடத்தை கவனிக்க ஆரம்பித்தாள் ...

அவள் தன் வாழ்க்கையை பற்றிய கவலையை முற்றிலும் மறப்பதும் புத்துணர்ச்சியாய் உணர்வதும் வகுப்பறையில் தான்

இவளுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு மாணவர்களிடையே .. இவள் நட்பாக பழகுவதாலும் சந்தேகங்களை பொறுமையாக தீர்த்து வைப்பத்தாலும் பிடித்தமான ஆசிரியராய் வலம் வந்தால்

தன் வகுப்பு நேரத்தை முடித்தவள் மதிய இடைவெளியில் சாப்பிட ஆசிரியர்களுக்கான அறையினுள் சென்றால் .. பரித்தாவும் இணைந்து கொண்டாள் .. எப்பொழுதும் எல்லா பெண் ஆசிரியர்களும் ஒன்றாக உணவு உண்பது அவர்களுக்கு வழக்கமான ஒன்று.. அதே போல் உணவை பகிர்ந்து கொள்வதும்..

இனியாவின் சாம்பார் சாதத்தை பரிதா பகிர்ந்து கொள்ள அவளின் உணவை இவள் ருசி பார்க்க என இவர்கள் பேசி சிரித்துக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே பியூன் வந்து மீட்டிங் 2 மணி அளவில் நடக்க இருப்பதாகவும் அனைவரும் கண்டிப்பாக வருமாறு  கூறினார்

அதை கேட்டதும் ஏன் இந்த தீடீர் மீட்டிங் என தங்களுக்குள் சல சலக்க ஆரம்பித்தனர்...

ரிசல்ட் ஒழுங்கா வரலன்னு சம்பளத்தை பிடிக்க போறோம் என்று சொல்வதற்கா இருக்குமோ என ஒரு சிலர் யோசிக்க

இல்ல அடுத்த வருஷம் மாணாக்களை அதிகமா சேர்க்க வேண்டும் என்று இப்போவே சொல்றதுக்கா இருக்குமோ என ஒரு ஆசிரியர் சொல்ல

ஏன் இப்படி நம்ம யோசிச்சுட்டு இருக்கணும் .. மீட்டிங்கில் பாத்துக்கலாம் என்று பரித்தாவும் இனியாவும் தங்கள் சாப்பிடும் வேலையை தொடர்ந்தனர்..( நமக்கு சாப்பாடு தானே முக்கியம்)

2 மணி அளவில் மீட்டிங் ஹால்லில் n.s. ஆர்ட்ஸ் அண்ட சயின்ஸ் கல்லூரியின் பேராசிரியர்கள் நிரம்ப தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போதே அக்கல்லூரியின் தாளாளர் மற்றும் நிறுவனரான கிருஷ்ணசாமி புன்சிரிப்புடன் வர அக்கல்லூரியின் முதல்வர் துணை முதல்வர் ஆகியோர் இறுகிய முகத்தோடும் உள்ஙுழைந்தனர்

இதை பார்த்து கொண்டிருந்தவர்கள் கேள்வியோடு நோக்க அவர்களை இன்னும் குழப்பாமல் நாளை மறுநாளில் இருந்து புதிய தாளாளர் பொறுப்பு ஏற்க இருப்பதாகவும் தனக்கு வயதாகிய காரணத்தால் தான் இதில் இருந்து விடைப் பெற இருப்பதாகவும் தனக்கு அளித்த ஆதரவை அவருக்கும் அளிக்குமாறும் கூறிய கிருஷ்ணசாமி விடைப்பெற்றார்

மீண்டும் தங்களுக்குள் பேசியவாரே வகுப்புகளுக்கு செல்ல " என்னடி அவரா முடிவு எடுத்துச் சொல்லிட்டு போறாரு " என யோசனையோ பரிதா கேட்க

"அவரு கல்லூரி அவர் தான் முடிவு எடுக்கனும் .. அதுக்கு ஏன் நீ பீல் பண்ற மச்சி " என இனியா நக்கலாய் கேட்க

"இல்ல டி .. ஏற்கனவே நம்ம காலேஜ்ல் எவனும் சைட் அடக்கிற மாதிரி இல்லை.. இப்ப வரவனும் எப்படியும் அங்கிளா தான் இருக்க போறாரு.. அதுவும் புதுசா வந்து என்னலாம் நம்ம கொடுமை படுத்த போறாரு .. இப்போ இருக்குறவரு தாத்தாவா இருந்தாலும் தங்கமான மனுஷன்" என சீரியஸாக புலம்ப

"அடிப்பாவி ..உனக்கு இருந்தாலும் ஓவர் வாய்கொழுப்பு தான்.. இருடி சைட்டா அடிக்குற.. உன்னவனிடம் போட்டு கொடுக்கிறேன்" என மிரட்டும் தோனியில் சொன்னாள்..

அதை கேட்டு அரண்டவாளாய் "ஏய் இனியா .. இப்படிலாம் தப்பா பேசப்படாது... பாவம் இந்த ரீடர்ஸ் .. ஸ்டோரி ஆரம்பிக்கும் போதே இப்படி சொன்னா என்னை பற்றி என்ன நினைப்பார்கள்... நான் முரட்டு சிங்கிள் மக்களே... " என மூச்சி விடாமல் பேசியவளை பார்த்து

தலையில் அடித்துக் கொண்டவள் "கடவுளே ..!! இவளெல்லாம்... முரண்டு சிங்களாம்..." என திட்ட ஆரம்பித்த இனியாவை

"மச்சி வேணாம் .. போதும் .. பாவம் கடவுள் அவர தொந்தரவு பண்ணிட்டு ..வா மச்சி நம்ம வேலையை பார்ப்போம்" என இழுத்துச் சென்றவளை பார்த்து இனியாவும் சிரித்துக் கொண்டே பின் சென்றாள்..

ஆனால் ஏனோ இனியா மனதில் ஒரு இனம்புரியாத கலக்கம் இருந்தது.. ஏதோ ஒரு சோதனை தனக்கு வர இருப்பதாய் ஒரு உணர்வு..

ஹாய் செல்லம்ஸ்.!!! என்னுடைய முதல் அத்தியாயம் போட்டாச்சு ... நீங்க என்ன பண்ணுவிங்களாம் சமத்தா படிச்சுட்டு உங்கள் கமென்ட்ஸ் மூலமா என் கதையின் நிறை குறைகளை சொல்லிங்களாம்.. ரொம்ப கழுவி ஊத்தனும் என்று தோனுனா தனியா திட்டுங்க .. மனசு தாங்காது ... அடுத்த அத்தியாயத்தோடு வந்து உங்களை சந்திக்கிறேன் ..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro