நினைவு 2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கல்லூரி முடித்து பரிதாவிடம் விடைப்பெற்றவள் தன் ஸ்கூட்டியில் பலவிதமான எண்ணங்கள் மனதை குழப்ப கடந்த காலத்தை பற்றிய எண்ணத்துடனே வீட்டை அடைந்தாள்...

சோர்வோடே உள்ளே ஙழைந்தவளை " அம்மா வந்தாச்சு " என்ற அவள் மழலை செல்வங்களின் குறலே வரவேற்றது...

ஆம் .. சங்கமித்ரா அகில்மித்ரன்.. இரட்டையராய் பிறந்த நான்கு வயது வாண்டுகள்... அம்மாவின் மனக்கவலைக்கு ஆறுதலாய் இருக்கும் அழகு செல்லங்கள்...

அதில் புத்துணர்ச்சியாய் உணர்ந்தவள்... " ஐய்...என்னோடு குட்டிமாவும் பப்புகுட்டியும் இவ்வளவு சந்தோசமா இருக்கிங்களே .. " என ஆசையாய் அணைத்து முத்துமிட்டவளை குழந்தைகளும் அவள் கண்ணங்களில் மாறி மாறி தன் இதழ் பதிக்க .. அதில் ஒரு நிமிடம் சந்தோசத்தோடு சேர்ந்து இவர்களுக்காக தானே வாழ்கிறோம் என்ற வலியில் கண் கலங்கியவள் அதை அவர்கள் காணா வண்ணம் மறைத்த இனியா...

"எங்கடா அம்மம்மா காணோம்" என்றதை

கேட்டு வெளியே வந்த அவள் அம்மா சுந்தரி... " வாடா இனிக்குட்டி .. போய் ப்ரஸ் ஆகிட்டு வா ... வந்தோனே இந்த வாண்டுகளோட விளையாட ஆரம்பித்து விடாதே" என அறிவுரை வழங்க...

"மா.. நான் என்ன சின்ன பிள்ளையாமா" என சிரித்து கொண்டே கேட்டாள்

"எல்லாம் அம்மாக்களுக்கும் எவ்வளவு வயசானாலும் தன் பிள்ளைகள் சின்ன பிள்ளைகள் தான் அது உனக்கே போக போக தெரியும்" என்றவளை ஆமோதிப்பதாய்

"அதும் கரெக்ட் தான் ... நான் போய் ப்ரஸ் ஆகிட்டு வரேன் மா" என்று சென்ற இனியாவை பார்த்தவள்

.. என் பிள்ளைக்கு மட்டும் எவ்வளவு கஷ்டம் என்று நினைத்து பெருமூச்சுவிட்டவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்....

ப்ரஸ் ஆகி வந்தவள் தன் மழலைகள் இரண்டும் அமைதியாக உட்கார்ந்து இருப்பதை கண்டவள் சிரித்துக் கொண்டே ..

"என்ன என் பட்டூஸ் இரண்டு பேரும் இவ்வளவு சமத்தா இருக்கிங்களே .. என்ன வேணும் உங்களுக்கு.. " என தன் பிள்ளைகள் மனதை உணர்ந்தவளாய் கேள்வி எழுப்ப ...

தங்களுக்குள் பார்த்துக் கொண்ட குழந்தைகள் நீ சொல்லு என இருவரும் போட்டியிட ..

"அகில் நீ தானே பிக் பாய் சொல்லுவ . நீ தான் சொல்லனும்" என சங்கி சொல்ல

"உன்ன தான் அம்மாக்கு ரொம்ப பிடிக்கும் சொல்லுவ .. நீ சொல்லு " என சண்டையிட

இதை பார்த்த இனியா அருகில் வந்து அணைத்துக் கொண்டவள்.
." பட்டூஸ் ..அம்மா கண்டிப்பா திட்ட மாட்டேன்.. சொல்லுங்க டா" என சமாதானமாய் பேச

"ப்ராமிச்" என இருவரும் கேட்க ...

"பிங்கி ப்ராமிஸ்" என்று குழந்தைக்கு ஈடாய் பதில் அளிக்க அதில் நம்பிக்கை வந்தவனாய்

பிக் பாய் அகில்..." அம்மா .. நாணா .. பாவம் தானே .. நீங்க டூ விட்டிங்களாம் மா.. தப்பு பண்ணா திட்டிட்டு சே விடுங்க மா.. நாணா சாப்பிடவே இல்லையாமா " என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூற

கோபமாக இனியா முறைக்க "அம்மா ப்ராமிச் பண்ணிருக்கிங்க .. திட்டகூடாது" என அகில் குட்டிக்கு ஆதரவாய் சங்கி அம்மாவை மிரட்டினாள்

மனதுக்குள் சிரித்து கொண்டவள் வெளியில் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு ..." அம்மா மட்டும் பாவம் இல்லையா .. நாணா தான் என்னோட சண்ட போட்டான்" என்று சொன்னவுடன்

"ஆமா அம்மா பாவம் .. நாணா தான் பேட் பாய் .. நீங்க பேச வேணாம் மா" என ஆறுதல் சொல்ல

அடிப்பாவி என்பதை போல பார்த்தவள் .. வாலு... என
கொஞ்சினாள்

"சரி என் பட்டூஸ் சொல்லி நான் பேசாம இருப்பேனா .. நான் பேசுறேன் ..." என்றதும்

"ஐய்ய்ய் நீங்க தான் என் செல்ல அம்மா" என கட்டிக்கொள்ள

"ஆனால் என் பட்டூஸ் ஒன்னு பண்ணனுமே அதுக்கு... " என்று இனியா புருவம் உயர்த்தி கேட்டதும்

"என்னமா " என்று அகில் கேட்க

"சீக்கிரமா ஹோம் ஒர்க் முடிச்சுட்டு சமத்தா சாப்பிட்டனுமே .."  என்று கேள்வியாய் பார்க்க

"இதோ பண்றேன் மா " என அகில் குட்டி ஓட .. சங்கியோ திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள்..

அவளுக்கு பிடிக்காதது இது இரண்டும் தான் ... ஆனால் படிப்பில் கவனமில்லாமல் இல்லை அவளால் ஒரு இடத்தில் படிக்க இயலாது... துறுதுறுவென இருப்பாள்.. அவளை பார்த்துக் கொள்வதே அகில் குட்டியின் பெரிய வேலையாக இருக்கும்...

அவளை பார்த்து சிரித்த இனியா ஒரு வழியாய் அவர்களை வீட்டு பாடம் செய்ய வைத்து ( எப்பா இப்போலாம் எவ்வளவு கொடுக்குறாங்க பாவி பயல்க) இரவு உணவு உண்ண வைத்து அவர்களை கதை சொல்லி தூங்க வைக்க அவர்களோ நாணாவோடு கண்டிப்பாக பேச வேண்டும் என்ற கட்டளைக்கு பிறகே தூங்கினர்...

அவள் அம்மாவிற்கு மாத்திரை கொடுத்தவள் "சரி மா .. தூங்கு" என்று செல்ல எத்தனிக்க...

இனிக்குட்டி "எழில் தம்பிட்ட சண்டை போடாம பேசு மா...சீக்கிரம் தூங்கு " என்ற தன் அன்னையை முறைத்தவள்

"நான் எதோ வேண்டும் என்றே சண்டை போடுவது போல் சொல்ற.. ஓவர் மா இது .. அவனுக்கு மட்டும் எல்லாம் சப்போர்ட் பண்றிங்க" என சிறுப்பிள்ளை போல் சண்டையிட்டவளை..

"ஏய்.. இனிக்குட்டி .. உனக்காக தான் சொல்றேன்" என்ற தன் அம்மாவை சந்தேகமாய் பார்த்தவுடன்

"ஆமா இனி .. அவனிடம் சண்டை போட்டுட்டு நீ தான் கஷ்டப்படுவ .. அதான்" என்று வருத்தமாக சொன்னாள்

அது உண்மை தான் என்றாலும் அவள் அம்மா வருந்தவதை விரும்பாமல் ..."சரி சரி.. ஓவரா ஐஸ் வைக்காத மா .." என்று விளையாட்டாய் சொல்லி சிரித்தவளை

"வாலு .. சரி நான் தூங்க போறேன்" என்று அவள் அம்மா செல்ல

இவளும் எழில் என்கிற எழிலனுக்கு வீடியோகால் செய்தால் ... அவன் இப்போது பிலிப்பைன்ஸில் இருக்கிறான்..

அதை எதிர்பார்த்து இருந்தவன் உடனே அட்டென்ட் செய்தவன்..

"ஹாய் பெட்டர் ஹாப் (better half) என்னடி என் செல்லம்ஸ் தூங்கிட்டாங்களா... நீ சாப்பிட்டியா" என்று கேள்வி கணைகளை தொடர

அதற்கு " உம்ம்ம்ம்" என்ற பதில் மட்டுமே எதிர் பக்கதிலிருந்து வந்து கொண்டிருக்க...

"அய்யோ.. செம காண்டுல இருக்கா போலவே" என்று மனதுக்குள் நினைத்தவன்...

"ஏய் இனிக்குட்டி.. சாரி டி .. தெரியாம பேசிட்டேன் .. இனிமே அப்படி பேசமாட்டேன் டா... நீ பேசாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா... சாப்பிட கூட இல்லை" என அவன் சீரியஸாக பேச

இனியாவிற்கே குற்ற உணர்வாய் ஆகிவிட்டது... உண்மையில் கோபம் எல்லாம் அவனிடம் இல்லை.. சிறுபிள்ளை கோபித்துக் கொள்வது போல் தான் அவனிடம்.. அதற்கு ஆறுதலும் அவனிடமே தேடுவாள்... இருந்தாலும் அவள் சந்தேகமாய்

" நீ சாப்பிட்டலயா.. நம்ம முடியவில்லையே...உலகமே அழிந்தாலும் நீ அது மாறிலாம் சாப்பிடாமா இருக்கமாட்டியே எழி" என நக்கலாக கேட்க..

"உண்மையா தான் டி பிஎச்" ( better half short form) .. என பேசிக் கொண்டிருக்கும் போதே ..

அவன் நண்பன் வருண் .. "மச்சான்.. சப்வேல ( subway ) நம்ம ஆர்டர் பண்ணது வந்துட்டு டா.. வா சாப்பிட்டலாம்.. " என்று கத்திக்கொண்டே இவன் அருகில் வந்தவன்

இனியாவை கண்டவன் " சாரி தங்கச்சி .. நீங்க பேசிட்டு இருந்ததை பார்க்கவில்லை" என்றவன் அவளிடம் நலம் விசாரிக்க அதற்கு பதில் அளித்தவள் கண்கள் அவன் கையில் இருந்ததை கேள்வியாய் எழிலிடம் நோக்க..

அதற்கும் வருணே " சிஸ்டர் .. இது எப்படி  எங்களுக்கு போதுமானதா இருக்கும் என்று  தானே பார்க்குறிங்க .. நாங்க ஏற்கனவே பிரியாணி சாப்பிட்டோம் .. இப்போ லைட்டா இது சாப்பிட்டு தூங்கலாம் என்று.." என்று சிரித்துக் கொண்டே பேசினான் ..

அப்போது தான் எழில் முறைப்பது கண்டு தான் ஏதோ உளரிவிட்டோம் என்றுணர்ந்தவன் பாய் சிஸ்டர் என்றவன் அஙகிருந்து ஓடிவிட்டான்...

அடப்பாவி திரும்பவும் முதலில் இருந்தா.. (எதுக்குனா இனியா திட்டுவாளே ..) என்று திருட்டுமுழி முழித்துக் கொண்டு பாவமாய் பார்க்க

அதில் இனியா சிரிக்க அதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவன்...

ஒரு நிமிடம் அவள் சிரிப்பதை ரசிக்கவும் செய்தான்..

"போதும் டி சிரிச்சது.. நான் பல்ப் வாங்குனா சந்தோசப்படுவியே " என்று சொன்னவனிடம்..

"ஆமா செல்லம் .. அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன்" என்று அவனிடம் வம்பு செய்தவள் பின்பு கல்லூரியில் நடந்தது.. தாளாளர் மாற இருப்பது.. அவள் பட்டூஸ் செய்த சேட்டைகள் .. என அனைத்தையும் ஒப்பித்து முடித்தவள் .. அவனுக்கு இரவு நேரம் ஆகியதால் விடைப்பெற்றாள்..

எழில் தான் இப்போது இவளுக்கு இருக்கும் முதுகெழும்பு அவன் ஒருவனால் மட்டுமே தான் இப்போது கொஞ்சமாவது தைரியமாய் உயிரோட்டத்தோடு வலம் வருகிறாள்.. ஆனால் தன்னால் அவன் வாழ்க்கையும் பாழாகிவிட்டதே என்ற மனக்கவலையும் உண்டு...

பார்ப்போம் காலம் தான் அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்...

ஹாய் செல்லம்ஸ்.. அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன் .. முதல் எபிக்கு நீங்க கொடுத்த வோட்ஸ் கமெண்ட்ஸ் நன்றி மக்களே.. இந்த எபியும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் செல்லம்ஸ்.. நெகட்டிவ் கமென்ட்ஸ் வரவேற்கப்படுகிறது

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro