நினைவு 5

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

செழியன் நியாபகம் வந்துவிட்டது என்று கத்தியவுடன் .. அருண் சந்தோசத்தோடு சேர்ந்து ஒரு வித ஆர்வத்துடன் அவனை பார்க்க...

" என் கனவுலகில் மச்சான் அடிக்கடி இவள் தான் வருவாள்....ஆனால் என்ன அதில் இன்னும் கொஞ்சம் ஒல்லியா இருப்பா.. சில நேரங்களில் கருவுற்ற பெண்ணாகவும் அவளை நான் கவனித்துக் கொள்வதும் போலவும் வரும் .. நீயும் இந்த கனவில் அவளோட வருவ மச்சான் ...அவள் உன்னை அண்ணானு சொல்லுவா.. இன்னொருத்தனும் வருவான்.. அவன் அவளிடம் ரொம்ப க்ளோஸ்ஸா இருப்பான்.. அவன் அவளுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவான்.. நீங்க இரண்டு பேரும் சேர்ந்துட்டு என்னிடம் வம்பு பண்ணுவிங்க.. ஆனால் எதுக்காகவும் என்னை விட்டுக் கொடுக்கவே மாட்டாள்" என கண்ணில் அவன் முகமலர்ச்சி பிரதிபலிக்க சொல்லிக் கொண்டிருந்தவனை பார்த்து அருணுக்கு உண்மையில் கவலையாக இருந்தது...

நினைவுகளை கனவுகளாய் நினைத்துக் கொண்டிருக்கிறானே .. என மனதில் வருந்தியவன்.. பேசாமல் அவனிடம் உண்மையை சொல்லிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதே அவனுடைய மொபைல் ரிங் ஆனது ...

அதில் யார் என்று பார்த்தவன் .. அதானே பார்த்தேன் இன்னும் என்னடா பாடிகார்ட் போன் பண்ணலயேனு... என்று மனதில் புலம்பியவன்...

"ஹலோ ஹலோ.. யாரு.. காதில் விழலயே.. " என்று செழியனை பார்த்தவன்..

அப்படியே வெளியில் சென்றான் ... " ஹலோ சொல்லுங்க சார்.. இப்ப தான் எங்க நியாபகம் வருதோ.." என்று நக்கலாக கேட்க..

"ஆமா.. உங்களை மறக்க முடியுர காரியத்தையா நீங்க பண்ணிருக்கிங்க.. " என்று குத்தலாக வந்தது எதிர்குரல்..

அய்யோ செம பார்ம்ல இருக்கானே.. சரி சமாளிப்போம் .. " டேய் எதா இருந்தாலும் நேரா கேளு.. சும்மா "

"இங்க பாரு அருண்.. நான் எதுக்கு கால் பண்ணேனு உனக்கு தெரியாதா.. சரி என் வாயாலே கேட்கனும் என்று நீ ஆசைப்படுறியா.. ஏன்டா இனியா காலேஜ்க்கு வந்துருகிங்க.. அவளை நிம்மதியாவே இருக்க விட மாட்டிங்களா.. பாவம் டா அவ..." என உடைந்த குரலில் சொன்னவனின் பாசத்தில் நெகிழ்ந்தவன்...

" எழில்.. என்னடா எங்களை போய் இப்படி நினைக்கிற.. இனியா எனக்கும் தங்கச்சி டா.. ஏற்கனவே அவள் வாழ்க்கையில் நடந்ததுக்கு நானும் வருத்தப்பட்டுட்டு தான் இருக்கேன் .. நீ அவளுக்காக மட்டும் தான் வருத்தப்படுவ.. ஆனால் நான் செழியன் படும் கஷ்டத்தையும் பார்த்துட்டு இருக்கேன் டா" என்று வருத்தத்துடன் சொல்லி முடித்தான்..

"அவனுக்கு என்னடா .. அவன் ஜாலியா தான் இருப்பான்" என எரிச்சலாக வந்தது எழில் குரல்

" அவன் சத்தியமா சந்தோசமா இல்லை... நீங்கலாம் அவனை விட்டு வந்ததுக்கு அப்பறம் என்னலாமோ நடந்துருச்சு எழில்.. என்று நடந்ததை கூறியவன்... இப்போ கூட அவன் கனவாய் நினைத்து சொன்னதை சொன்னான்.. இனியா மீதான காதல் இப்போதும் இருக்கு .. பேசாம உண்மையை சொல்லிரலாம் என்று தோனுது டா.. ஆனால் இனியா வேற சொல்லக் கூடாது என ப்ராமிஸ் வாங்கிவச்சுருக்கா .. அதும் இல்லாமல் அவன் கடந்த காலத்தை பற்றி சொல்லி அதை நியாபகம் படுத்த முயற்சி செய்து எதாவது ஆச்சுனா .. பயமா இருக்கு" என அருண் சொல்லி முடித்தான் ..

அதை பற்றி எழில் யோசிக்க.. அருண் " எழில் சப்போஸ் அவுங்க இரண்டு பேரும் திரும்ப சேரனும் என்று முடிவு எடுத்தா நீ என்னடா பண்ணுவ" என்று பயந்தப்படியே கேட்க...

அவன் பயந்தை உணர்ந்தவன் '
" த கிரேட் அருண் என் பதிலுக்கு பயந்து நடுங்கிட்டே பேசுறானே. ஹா ஹா.." என்று சிரிக்க

"டேய் .. பரதேசி.. பாடிகார்ட் ஆக இருக்கும் உன்னிடம் பயந்து தானே ஆகனும்.... என் நண்பனோடே வாழ்க்கையே உன் கைலே இருக்கே.. என்ன பண்ண" என்று சிவாஜி ஸ்டைலில் கூற

சிரித்தவன்.. "மச்சான் .. இனியா முடிவு தான் இதில் இருக்கு.. ஆனால் அவள் சந்தோசம் தான் முக்கியம்.. அவளுக்கு திரும்ப கஷ்டம் வருவதை நான் எப்போது அனுமதிக்க மாட்டேன்..'" என சீரியஸாக பேச

"ஆமா சார்.... நீங்க சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும்.. " என சம்மந்தமில்லாமல் பேசிய அருணை..

"டேய் லூசு .. என்னடா தீடிரென மரியாதைலாம்.கொடுக்குற... " என்று எழில் கேட்க..

"கண்டிப்பா சார்... செழியன் இங்க தான் இருக்கான்... சொல்லிரேன் சார்.." என்க

"ஹா ஹா .. ஓஓஓஓஓ.. உன் பாய்ப்ரண்ட் இருக்கானே.. " வேனும் என்றே அவனை சீண்ட
வெளியே பேச முடியாமல் பல்லை கடித்துக் கொண்டே ..

"சரி சார் தேங்க் யு" என்று அவசரமாய் போனை வைத்தவனை செழியன் யார் போனில் என்று விசாரிக்க

"அய்யோ.. இவனுக்கு ஆன்சர் பண்ண ப்ரிபேர் பண்றதுக்குள்ள கேட்டுடானே... ஏன்டா என் உசுர வாங்குறான்களோ .. பாவம் டா அருண் நீ" மனதுக்குள்ளே புலம்பினான்

(. ஏன் அருண் ப்ரண்ட்னு சொல்லாம பொய் சொல்றான் என்று நீங்க கேக்குறது காதுல விழுது அது ஏன்னா ஒரு முறை அருண் எழில் என்ற தன் நண்பன் பேசுகிறான் என்று செழியன் கூற எப்படி எனக்கு தெரியாத உனக்கு நண்பன் இருக்கிறான் .. அவனை எப்படி சந்திச்ச .. அப்போ நான் எங்க இருந்தேன்.. என்று கேள்விகளை அடுக்க.. அதில் இருந்த தப்பிக்க அருண் உளர ஆனால் அவன் அதை நம்பவில்லை)

டேய் என்று மீண்டும் செழியன் கத்த அதில் நிகழ்க்கு வந்தவன்

"ஓ.. அதுவா .. அது வந்து .. வந்து..
என்று என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க

"அதான் வந்துட்டியா.. சீக்கிரம் சொல்லி தொலை" என்றான் நக்கலாக ..

அவனை முறைத்தவன் " ஆ.. ப்ரன்சிபல் டா" என்க

"எதுக்கு போன் பண்ணாரு.." என்று சந்தேகமாய் கேட்க..

" உம்ம்ம்.. அது சீக்ரெட் " என சீரியஸாக கூற

"என்னடா உங்க இரண்டு பேருக்கும் அப்படி ஒரு சீக்ரெட்' என செழியன் இவன் விட்டால் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பான் என்று நினைத்தவன்

"தெய்வமே பசிக்குது இப்போ சாப்பிடுவோம் அப்பறமா பேசலாம்" என செழியனை இழுத்துக் கொண்டு சென்றான்..

வீட்டிற்கு வந்த இனியா தன் குழந்தைகளுக்காக சிரித்துக் கொண்டு அவர்களிடம் விளையாடிக் கொண்டிருந்தாள்...ஆனால் அவள் மனமோ குழப்பத்தில் இருந்தது..

அவனை தினமும் பார்த்து தன்னால் அமைதியாய் பேசாமல் இருக்க முடியுமா.. அவனுக்காக வேலையை விட்டால் இது போல் சம்பளத்தில் வேலை கிடைப்பது கடினம் .. அதும் இல்லாமல் அவனை தினமும் பார்க்கும் வாய்ப்பை ஏன் தவற விட வேண்டும் என்றும் அவளுக்கு எண்ணம் தோன்றியது

இவள் யோசித்துக் கொண்டு இருக்கும் அவள் பட்டூஸ் சண்டையிட்டு கொண்டிருந்தனர்..

அதை கவனித்தவள் அவர்களிடம் என்ன என்று விசாரிக்க..

சங்கி.." அம்மா இவனுக்கு ஹிந்தியே தெரியல மா.. இவன போய் சொல்லிக் கொடுக்க சொல்றியே மா.. " என தலையில் கை வைத்துக் கொள்ள..

அகில் குட்டியோ " அம்மா .. நான் கரெக்ட்டா தான் மா சொல்லிக் கொடுக்கிறேன் .. இவ தான் அவுங்க மிஸ் சொல்லிக் கொடுத்த மாதிரி இல்லனு சொல்லி சண்டை பிடிக்குறா" என வாதிட்டான்..

"அம்மா .. இவன விட மிஸ் தானே பிக் கேர்ள் நிறைய படிச்சுருக்காங்க..." என இவளும் விடாமல் பேச இனியா தான் யாருக்கு சப்போர்ட் செய்வது என்பது போல் முழித்துக் கொண்டிருந்தாள..

பின்பு எதோ ஒன்று தோன்றியவளாய் தன் மொபைலை எடுத்தவள்.. என்ன வார்த்தை என்று கேட்டு கூகுளில் நாய் என்ற வார்த்தை ஹிந்தியில் தேட அதில் குத்தா என்று இருந்தது..

அதை அவர்களிடம் கூற " பாரு அம்மு .. நான் சொன்னது தான் கரெக்ட்" என அகில் பழிப்புக் காட்ட அவனை முறைத்தவள்

"அதெல்லாம் இல்லை எங்கு மிஸ் சொன்ன குத் தான் ரைட் " என்று மீண்டும் ஆரம்பித்தவளை

அம்மாவும் மகனும் பார்த்து சிரித்துக்கொண்டே ஆமா ஆமா உங்க மிஸ் சொன்னது தான் கரெக்ட் எங்களை விட்று மா என தப்பித்து ஓடினர்..

ஏனெனில் அவள் எப்படியும் ஒத்துக்க மாட்டாள் .. ஆனால் பேசி பேசியே மற்றவர்களையும் அவள் சொல்வது சரி என்று சம்மதிக்க செய்வாள்...

அப்போது எழில் இனியாவை அழைக்க தன் பிள்ளைகளை பேச செய்தாள்..

தான் பேச அவளின் நலனை கேட்டவன்.. " இனிக்குட்டி.. நான் அருணிடம் பேசுனேன் டி" என்க

அவள் அதற்கு பதிலில்லாமல் அமைதியாய் இருக்க

" ஏய்.. பெட்டர் ஹாப்.. நான் பேசுறது கேக்குதா.. " என்று அருண் கத்த

"இருக்கேன் சொல்லு " என்ற அழுத்தமான அவள் சொல்வதிலே அவள் கோபம் தெரிந்தாலும் தான் சொல்ல வருவதை சொல்ல நினைத்தவன்..

எழில் செழியன் கனவாய் நினைத்து பேசியது.. அவன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் .. எல்லாவற்றையும் கூற அவள் அழுக ஆரம்பித்து விட்டாள்

அழும் குரலை கேட்ட எழில்.. " இப்போ அழுகுறதுக்கான டைம் இல்லை இனிகுட்டி.. உன்னோட வாழ்க்கை பற்றிய முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது.. உனக்கு ஏற்கனவே அறிவு கொஞ்சம் பொறுமையா தான் செயல் படும்.. இப்படி அழுதுட்டு இருந்தா அது துருப்பிடிச்சுடுமே .. அய்யஹோ" என்று அவன் பேசி முடிக்க..

" டேய்.. உன் ப்ரைன் .. என்னோடது செம ஸார்ப்பாக்கும்.." என்று நொடித்துக் கொண்டாள்..

அதை நான் நம்பனும்னா ... நீ சமத்தா அழுகாம.. வாழ்க்கையில் என்ன நடக்குதோ அதெல்லாம் தைரியமா சந்திக்கனும் இனிக்குட்டி.. என்னோட பெட்டர் ஹாப் செம போல்ட்... எதுக்குமே கலங்கமாட்டா... அழுதா கோழைனு சொல்லுவ.. அது நம்மள வீக் ஆக்கிறும் என்று சொல்லுவ.. அந்த இனியா திரும்ப எனக்கு வேணும்.. நான் மார்னிங் கால் பண்ணுவேன்.. அப்போ ஒரு முடிவு பண்ணிச் சொல்லு .. ஓகே வா என்றவன் போனை வைத்தான்..

இனியா என்ன செய்ய போகிறாள்.. மாறுவாளா.. செழியன் மீண்டும் அவள் வாழ்க்கையில் இடம் தருவாளா.. பார்ப்போம்...

ஹாய் நட்பூஸ்.. தாமதமான அப்டேட்க்கு மன்னிக்கவும்.. அடுத்த பதிவை முடிந்த வரை சீக்கிரம் பதிவிடுகிறேன்.. வோட்ஸ் வருகிறது.. ஆனால் கமென்ட்ஸ் குறைவாக உள்ளது.. உங்களுடைய கருத்தே என் கதையின் போக்கை என் எழுத்தின் குறைகளை உணரச் செய்யும்..
அதனால் குறைகள் ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.. நன்றி😍😍

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro