நினைவு 9

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அருண் இனியாவை அழைத்துக் கொண்டு சென்றுக் கொண்டிருக்க ..அண்ணா என்ற அவள் அழைப்பை கேட்டவுடன் சொல்லு மா என்றவுடன்

" நீங்க என்னை வீட்டுக்கு வெளியிலே விட்டுட்டு கிளம்புங்க .."என்றவள் அதற்கு மேல் பேசுவதற்கு திணரினால்..
( உண்மையில் இவள் இருக்கும் இடமறிந்தால் மீண்டும் தன் பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயந்தால்.. அருணின் மீது அளவு கடந்த நம்பிக்கை இருந்தாலும் பிள்ளைகளின் முன் அது ஆட்டம் கண்டது)

இதை கேட்டவுடன் அருணுக்கு வருத்தத்தோடு சேர்ந்து சிறிது கோபம் எட்டி பார்த்தாலும் அவளின் நிலை உணர்ந்து
" ஏன்மா வீட்டுக்கு வந்தா உன் சாப்பாட்ட பிடிங்கி சாப்பிட்டு விடுவேனு பயப்படுறியா.. நான் இப்ப ஸ்டிக்ட் டையட்டில் இருக்கேனாக்கும் " என அவன் பேச்சை மாற்ற சீரியஸாக சொல்வதை கேட்டு சிரித்து விட்டாள்...

அவள் சிரிப்பதை கண்டவன்..
" ஏன் இனியா சிரிக்கிற.. உண்மையில தான் நம்புமா நம்பு"
என்று அவள் மனநிலையை மாற்ற விரும்பி சீரியஸாக சொல்ல இன்னும் சிரித்தாள் .. பின்பு அவன் முறைப்பதை கண்டவள் சிரிப்பதை நிறுத்திவிட்டு அதுனால தான் மதியம் கம்மியா சாப்பிட்டிங்களா என நக்கலாக சிரிக்க ஆரம்பித்தவுடன் வண்டியை நிறுத்தினான்..

ஏன்டா அண்ணா நிப்பாட்டிட்ட என்று கேள்வியாய் நோக்க உன் வீடு என்று கண்ணாலே சுட்டிக்காட்டினான்..

அதை கண்டவள் பதற்றமாக.. "நீங்க வர வேணாமே .. ப்ளீஸ் .. குட்டீஸ்க்கு யாருனு சொல்லனு தெரியல.. அதும் இல்லாமல் இத்தனை நாள் இல்லாத புது உறவு அவர்களுக்கு தேவை இல்லை" என்று நினைக்கிறேன் என்று சற்று காட்டமாக பேச

அதை கேட்ட அருணின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க... அதை கண்ட இனியா ஏதோ பேச வாய் எடுக்க..

"நாங்கள் ஒன்னும் உறவு வேணாம் என்று ஒதுங்கவில்லை...நீதான் எங்களை ஒதுக்கிவிட்டாய்.. நான் யார் தடுத்தாலும் வீட்டுக்கு வர தான் போறேன் .".என்று அழுத்தமாக கூற அதில் அவன் உறுதி அப்பட்டமாக தெரிந்தது..

இதற்கு மேல் அவனிடம் வாதிட முடியாது என்று நினைத்தவள் சரி சமாளிப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவளுடைய வாண்டுகள் அம்மா என்றழைத்தப்படியே அவளிடம் வந்தனர் ...

அவர்களை அணைத்தவள் தன்னோட வந்த ஜீவனைய் மறந்தவளாய் குழந்தைகளோடு உள்ளே செல்ல

அதை எதும் உணராது அந்த குழந்தைகளையே ஆராய்ந்துக் கொண்டிருந்தவனுக்கு தன் நண்பன் இப்படிபட்ட சந்தோசத்தை இழந்தவிட்டானே என்ற வருத்தம் மேலோங்கியது ..

இப்படியே யோசித்தப்படி அதே இடத்தில் நிற்க அப்போது தான் அவனை பற்றி நியாபகம் வந்த இனியா அவளை வீட்டிற்குள் அழைத்தாள்.. ( நல்ல வேளை இப்பவாது நியாபகம் வந்துச்சே😊)

உள்ளே சென்றவன் குழந்தைகளை ஏக்கத்தோடு பார்க்க அதை புரிந்துக் கொண்டவள்...

"பட்டூஸ் .. மாமாக்கு ஹாய் சொல்லுங்க" என்க அம்மாவின் பேச்சை கேட்டு

"ஹாய் மாமா "ஒருமித்த குரலில் கூறினாலும் யார் என்ற புது உறவு என்ற ரீதியிலே பார்த்து வைக்க அதை புரிந்துக் கொண்டவன் அவர்களை அழைத்து தன் அருகில் வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்... அறிமுகப்படலத்திற்கு பின்

"சாரி டா குட்டீஸ்.. இந்த மாமா உங்களுக்கு எதுமே இன்னைக்கு வாங்கி வரல.. " என்றதும்

"பரவாயில்லை மாமா... எங்களுக்கு எது பிடிக்கும் என்று தெரியாதுல்ல.. நாங்க இப்போ சொல்றோம் .. அடுத்த தடவை பார்க்கும் போது வாங்கி வாங்க" என சிரித்த முகத்தோடு சொன்னவனை பார்க்க அப்படியே அவனின் பொறுமை நிதானம் தெளிவு எல்லாம் செழியனை போல் இருந்தது அருணுக்கு..

"ஆமா மாமா.. பயந்துட கூடாது அவனொட லிஸ்ட் பார்த்து.. அவன் சாக்லேட்ஸ் நிறைய சாப்பிடுவான்.. பேட் பார் ஹெல்த் சொன்னா கேட்கவே மாட்டான்" என்று பெரிய மனிஷியாய் அவனை கலாய்த்ததும்

" அவள் சொல்றது எல்லாமே பொய் .. " என அகில் குட்டியும் வாதிட அவர்களை பார்த்து சிரித்தவன் இருவரையும் கலங்கிய கண்களோடு வாஞ்சயாய் அணைத்துக் கொண்டான்...

அப்போது அங்கு வந்த இனியாவின் அன்னை அருணை வரவேற்று உபசரித்தார்.. சிறிது நேரம் குழந்தைகளோடு நேரம் செலவிட்டவன் மனது குதூகலமாய் உணர்ந்தது..

அவனின் மனதில் தீடிரென அந்த சந்தேகம் ஏற்பட அதை எப்படி இனியாவிடம் கேட்பது என்று யோசித்தவன் பின்பு ஒரு முடிவு. எடுத்தவனாய் ..

" இனியா .. அது வந்து.. சங்கிகுட்டி .. இப்போ எப்படி இருக்கா" என தயங்கியப்படியே கேட்டதும்.. ( குட்டீஸ்க்கு காதில் விழாம )

இனியாவின் முகம் இறுகியது.. ஆனால் அதை உடனே மாற்றியவள் " அவளுக்கென்ன நல்லா தானே இருக்கா" என முகத்தில் உணர்வுகளை காட்டாது கூறினாள்.. பல வருடங்களாய் அனுபவித்த காயம் உணர்வுகளை மறைக்க கற்றுக்கொடுத்திருந்தது...

"ம்ச்ச்... சங்கியோடு ஹெல்த் கண்டிஜன் எப்படி இருக்க .. இப்போ அவளோட " என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கைநீட்டி தடுத்தவள்

"அண்ணா ப்ளீஸ் இதை பற்றி நீங்க தெரிஞ்சு எதும் ஆக போறது இல்லைனு நினைக்கிறேன் " கோபமாக கூறியவள் மனது உலன்று கொண்டிருந்தது.. இதற்காக தானே என் மகளை வேண்டாம் என்றார்கள் ...

அப்போது ஆதரிக்காதவர்கள் இப்போது மட்டும் எதற்கு என்று வசைப்பாட .. அவுங்களுக்கு தெரியாம மறைஞ்சு வாழ்ந்தது யாருமா அப்போ நீ போராடிருக்கனும்.. ஒருதருக்காக ஒட்டுமொத்த குடும்பத்தையும் விட்டுட்டு வந்துட்டு என்று அவள் மனசாட்சி குரல் எழுப்ப அதை அடக்கியவள் அருணை பார்க்க..

அவன் குழந்தைகளிடம் விடைப்பெற்றவன் அடிக்கடி வருவேன் என்ற செய்தியோடே விடைப்பெற்றான்..

வீட்டுக்கு சென்ற செழியனோ அருணை மனதில் திட்டிக்கொண்டிருந்தான்..

"பரதேசி .. என் யாழ்க்குட்டியை ட்ராப் பண்ணவிடாம பண்ணிடானே.. சான்ஸ்ஸ மிஸ் பண்ணிட்டேனே " என புலம்பிக்கொண்டிருக்க

விசில் அடித்தவாரு சிரித்த முகத்தோடு உள்ளே ஙழைந்த அருணை பார்த்தவுடன் இன்னும் கோபம் கொதிக்கலமாக அவனை கொலைவெறியோடு நெருங்கி அடிக்க ஆரம்பித்து விட்டான் ( பாவம் இந்த அருண் பையன் .. ஹா ஹா)

அடித்த அடியில் பொறுக்க முடியாதவன் ..

" டேய் ஏன்டா அடிக்கிற .. சொல்லிட்டு அடிடா.." என்றவனின் பேச்சில் ஒரு நிமிடம் நிறுத்தியவன் அவனை பிடித்தவாறே ( எஸ்கேப் ஆகாம)

"நீயெல்லாம் ஒரு நண்பனா.. ஏன்டா நான் என் யாழ்குட்டியை ட்ராப் பண்ணி என் லவ்வை வளர்க்கலாம் .. நாங்க பேச நேரம் கிடைக்கும் என்று பார்த்தால் .. அவள் என்னான என்னோட வரத் தயங்குறா .. நீ என்னான பாசமலர்க்காக அவளை கூட்டிட்டு ஓடுற" என்று திட்டியவாறே மீண்டும் அடிக்க தொடங்க..

அருணோ அவனின் கோபத்திற்கான காரணத்தை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தான் ( செழியன் சார் அவன் வாயிலே ரெண்டு விடுங்க.. எவ்ளோ கொழுப்பு இந்த அருணுக்கு ... என் டார்லிங்கயே கலாய்க்குறான்😀😉)

இதில் இன்னும் கடுப்பானவன் அடிப்பதை நிறுத்தி விட்டு முறைக்க ...கஷ்டப்பட்டு தன் சிரிப்பை கட்டுப்படுத்திய அருண்..

செழியனின் தோளில் கைப்போட சின்னபிள்ளை போல் தட்டிவிட்டவனை பார்த்து சிரித்துக்கொண்டே " மச்சான்.. லவ் வந்த உடனே எவ்ளோ பெரிய
அப்பாட்டக்கரா இருந்தாலும் அவுங்களோட மனசு லேசாகிடுதுல .. அதும் இல்லாம காதலால் மட்டும் தான் மனிதனின் மென்மையான குணம் வெளிப்படுதுல"என்ற அருணை அதிசயமாய் பார்த்தவன் ..

"ஆமா அருண்.. காலம் கடந்து வந்த என் காதல் கைக்கூடுமானு தான் தெரியலை.. எதோ யாழை பார்த்தும் அவள் தான் என்னவள் அப்படினு ஒரு உணர்வு .. நமக்கு சொந்தமானவள் உரிமை தோனுது டா .. அதும் இல்லாமல் அவளோடு பல நாள் வாழ்ந்தது போல நினைவுகளா இல்ல கனவானு தெரியலை .. வந்து வந்து போது டா.. ஆனால் அது மாதிரி நிகழ்வுகள் வரும் போது நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் டா" என்று உணர்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்தவனை அதற்கு மேல் சோதிக்க விரும்பாமல்

" செழியா .. சப்போஸ் அவள் உனக்கு முன்னமே சொந்தமானவளா இருந்தா என்னடா பண்ணுவ " என்ற அருண் கேட்க

"அப்படி மட்டும் இருந்தால் இந்த உலகத்திலே சந்தோசமானவன் நானா தான் டா இருப்பேன் .. ஆனால் அது மாதிரி நடக்க தான் வாய்ப்பு இல்லையே" என்று சிறு ஏக்கத்தோடு கூறிய நண்பனை வாஞ்சையாய் பார்த்தவன்..

"மச்சான் அவள் உனக்கு மட்டும் தான் சொந்தமானவள்.. அதை மட்டும் இப்போதைக்கு மனசுல வச்சுக்கிட்டு தங்கச்சியை எப்படி காதல்ல திக்குமுக்காட வைக்கிறது என்று மட்டும் யோசி டா " என்று அருண் சொல்ல அதை கேட்டதும் குதூகலமாக

"அப்படிங்குற.. நீயே சொல்லிட்ட .. இனி அய்யாவோடு லவ் பெர்பாமன்ஸ மட்டும் பாரு.. நண்பன்டா" என அணைத்துக்கொண்டான்

இவர்கள் இவ்வாறு மகிழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்க

இவர்கள் கல்லூரியில் பேசியதை கேட்ட கருப்பு ஆடு அதை தன் விசுவாசியிடம் விவரித்தது ...

அதைக் கேட்ட அக்கூட்ட தலைவன்.. "செழியன் இப்படிலாம் பிரச்சினையை கண்டுக்காம விடுற ஆள் இல்லையே.." என்க

அதற்கு " இல்லை .. இந்த இனியாவை தூக்குனா இந்த பிரச்சினை தீர்ந்துடும் என்று நினைக்கிறேன் " என்ற அவன் கையாளய் பார்த்து சிரித்த அந்த தலைவன்

" ஹா ஹா ஹா..( அதாங்க வில்லன் சிரிப்பானல அப்படி).. இனியாவ தூக்குனா செழியன் சும்மா இருப்பானா..இரண்டு பேரையும் தூக்கனும் டா .. ஆனால் அதுக்கு முன்ன அவுங்களோட ஒவ்வொரு அசைவையும் கவனிக்கனும் .. அதிலும் செழியன் நடவடிக்கை" என்றவர் .. போன தடவை நீ தப்பிச்சுட்ட .. இந்த தடவை உயிரோட விட மாட்டேன் டா செழியா என மனதில் வன்மத்தோட உறுதி பூண்டான்

ஹாய் நட்புகளே நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன் .. என்னையும் என் கதையையும் மறக்காமல் இருந்ததற்கும் உங்களுடைய ஆதரவுக்கும் நன்றி நட்புகளே.. உங்கள் ஆதரவால் தான் மீண்டும் கதையை தொடர்கிறேன்.. நன்றி செல்லம்ஸ்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro