காதல் 16

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

❤️அவனது கடைசி குறுஞ்செய்தியை பார்த்தனர்...

"ஏன் என்ன மீட் பண்ண ஒத்துக்க மாட்டுற பேபி😞....டோன்ட் யு லைக் மீ!!

அதை படித்த இருவரும்,ஒருவரை ஒருவர் சிறிது நேரம் யோசனையோடு பார்த்துக் கொண்ட பின்னர்,அவனுக்கு பதில் அனுப்பினர்...

ஓகே வருண்...அடுத்த சன்டே நம்ப மீட் பண்ணலாம்...

அனு கதவு திறக்கும் சத்தத்தை கேட்டவர்கள்,அவள் வெளியே வருவதற்கு முன் கைப்பேசியை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு ஏதும் அறியாதது போல் அமைதியாக இருந்தனர்...

அனு ட்ரெஸிங் டேபிளின் முன் நின்று தலைவாறிக் கொண்டே அதன் கண்ணாடியில் மாதவியும் சாதனாவும் கண்களாலே ஏதோ பேசுவதை கவனித்தால்...

ஏய் ப்ராடுங்களா!!எனக்கு தெரியாம ஏதோ கேடிதனம் பண்ற மாறி இருக்கே?என்ன பண்ணீங்க??என அனு கேட்ட

இருவரும் ஏதும் இல்லையே என்பது போல் தோள்களை குலுக்க....அலைபாயும் அவர்களின் கண்கள் அனுவிற்கு ஏதோ உள்ளது என்று உணர்த்தியது....

அந்த நிமிடம் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வர....அதை எடுத்து படித்தவள் இருவரையும் எரிக்கும் பார்வையில் பார்த்தாள்...

என்ன பண்றோனு தெரிஞ்சிதா பண்றீங்களா👿👿நான் அவன எதுக்கு மீட் பண்ண மாட்டனு உங்களுக்கு தெரியாதா???

எல்லாம் தெரிஞ்சுதா பண்ணோ...என சனா கூற

எவ்வளோ நாள்தாடி இப்டி பயந்துட்டே இருக்க போர??நீ இந்த முறை அவனை மீட் பண்ணியே ஆகனும்,என்ன நடந்தாலும் பேஸ் பண்ணலாம்...என மாதவி கூற,அதற்கு அனுவின் தோள்களை தொட்டு சனாவும் நம்பிக்கை ஊட்டினாள்...

என்ன நடந்தாலும் நான் அவனை மீட் பண்ண ரெடியா இல்ல...என அனு மனதில் எண்ணியதற்கு காரணம்...

அவள் தாயுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர்...ஒரு அண்ணன்,ஒரு தங்கை...அவர்கள் அப்பா தன் கௌரவத்திற்கு எதையும் செய்பவர்...

அதை அறிந்த அவர்களின் அண்ணா தன் காதலை வீட்டில் உள்ள அனைவரிடத்திலும் மறைத்து அனுவின் தாயிடம் மட்டும் பகிர்ந்து கொண்டார்...

தரகரை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களின் காதல் திருமணத்தை,பெரியவர்களால் நிச்சயித்த திருமணம் போல் செய்ய எல்லாவற்றையும் தயார் செய்திருந்தார்...அதையும் இவர்களிடம் பகிர்ந்துள்ளார்...

அந்த வயதிற்கே உரிய விளையாட்டு தன்மையுடன் இருந்தவர்கள் தான் கூறிய அனைத்தையும் தன் தங்கையிடம் பகிரும் நேரம்,அவர்கள் தந்தை அவற்றை கேட்டுவிட்டார்...

தான் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் அல்லது தன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்,அப்படி செல்லும் பொருட்டு தன் சொத்தில் எந்த பங்கும் இல்லை என்றார்..

தன் காதலே முக்கியம் என வீட்டை விட்டு வெளியேறினார்,தன் காதலை காட்டி கொடுத்த தன் தங்கையை துரோகியாய் கருதியவாறு...

அந்த ஊரிலே அவர்களின் முதல் மகனான வருண் பிறந்தான்...சில வருடங்களில் அனுவின் அம்மாவின் திருமணமும் முடிந்து அனு பிறந்தால்...

எத்தனையோ முறை தன் அண்ணனிடம் பேச சென்ற அனுவின் அம்மாவிற்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது....சிறிது காலத்தில் அவர் குடும்பம் சென்னைக்கு குடிப்பெயர்ந்தது....

தன் தூரத்து சொந்தம் ஒருவரின் மூலமாக தன் அண்ணன் நல்ல நிலைமையில் இருப்பதாகவும் அவரின் மகன் ஃபாஷன் டிசைனிங் படிப்பதாகவும் அறிந்தார்...

சென்னையிலே இருந்தும் தன் அண்ணன் குடும்பத்தை பற்றி ஏதும் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள்...

அனுவிற்கே இவை அனைத்தையும் அவள் கல்லூரி படிக்கும் போதே கூறினார்...தன் அண்ணன் மகனை அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்புவதாகவும் அப்பொழுதே எல்லாம் பழைய நிலைக்கு திரும்பும் என்றார்...

அதன் வெளிபாடே இவர்களின் வருணை தேடும் படலத்தின் மூல காரணம்....

வீட்டில் தனக்காக பார்த்த மாப்பிள்ளையின் பெயரை கேட்டவுடன் மணமகளுக்கு அவன் தன்னவன் என்னும் உரிமையில் ஒரு காதல் உணர்வு வருமே அந்த உணர்வையே அனுவும் உணர்ந்தால்....

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அவனை நேரில் பார்த்தால் ஏதோ விதத்தில் தன் குடும்பத்தை பற்றி தெரிய வரும் என்ற பயமே அனுவின் இந்த தயக்கத்திற்கு காரணம்...

அவனை இப்பொழுது பார்க்க கூடாது என்று எண்ணியவளுக்கு,விதியின் படி அது விரைவில் நடக்கவிருப்பதை அறியாமல் இருந்தாள்....

அவளை சமாதானம் படுத்திய பின் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்...

மாதவி அடுத்த நாள் ரித்விக்கை சந்திக்க போவதை எண்ணி நர்வஸ்ஸாக இருந்தால்...

அவளின் வாட்ரொபை பல முறை ஆராய்ந்த பின்னர் கருப்பு நிற ஜீன்ஸும் நீல நிற குர்தி டாப்பையும் தேர்ந்தெடுத்தால்...அவனிடம் என்ன பேச வேண்டும், என்னவெல்லாம் கேள்வி கேட்பான் என எண்ணியவள் அப்படியே உறங்கிப் போனாள்...

சாதனா இப்போ லேட் ஆயிடிச்சு நாளைக்கு நீ காலேஜ்கு போறதுக்கு முன்னாடி இரண்டு வரன் வந்திருக்கு அதை பாத்து உன் முடிவ சொல்லிட்டு போ என அவளின் அம்மா கூற இதற்கு மேல் இதை தவிர்க்க முடியாது என்று உணர்ந்தவள் தலையசைத்தபடி தன் அறைக்குள் நுழைந்தால்



இனி வரும் அடுத்தடுத்த அத்தியாத்தில் நம் கதாநாயகர்களின் அறிமுகம் இருக்கும்....இவர்களின் நட்பை தாண்டி காதலையும் இனி பார்ப்போம்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro