காதல் 31

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

💕சாதனாவின் வீட்டார் ஜவுளி கடையை வந்தடைந்த சில நிமிடங்களில் ஜீவனின் குடும்பத்தாரும் அங்கு வந்து சேர்ந்தனர்....

ஏற்கனவே ஜீவனை வெளுத்து வாங்கிய சாதனாவை மேலும் உசுப்பேற்றும் வண்ணம் ஜீவனின் அம்மா,அவனுக்கு தவிர்க்க முடியாது வேலை இருப்பதால் வர இயலாததையும் இல்லையேல் அவன் இப்படி செய்பவன் இல்லை எனவும் அவனை புகழ்ந்து தள்ள....

ஆமா என்னவிட என்ன முக்கியமான மன்னாங்கட்டி வேலை அவனுக்கு😤கல்யாணத்தப்போ நான் அலங்கரிச்சிக்க போறது அவனுக்காக ஆனா இப்போ அதுக்காக புடவை தேர்ந்தெடுக்க சார் வர மாட்டாரம்...இதுல இவங்க அந்த இடியட்கு கான்டக்ட் சர்ட்டிப்பிகேட் கொடுக்குறாங்க😕எனப் பாரபச்சம் பாராமல் தன் மாமியாரையும் வசைப்பாடினால் சாதனா😂

போதும்டி உன் மாமியாரையாவது விட்டு வை அவங்கள கண்ணுலையே எரிச்சிடாத😅என மாதவி வம்பிழுக்க அவளையும் முறைத்து வைத்தால் சாதனா...

அங்கு வேலை பார்ப்பவர் எந்த நிறுத்தில் புடவை எடுத்து காண்பிக்க வேண்டும் எனக் கேட்க எங்கோ பார்த்தபடி சாதனா பச்சை நிறம் எனச் சொல்ல அனுவும் சாதனாவும் ஒரே சமயத்தில் சிரித்தனர்...

எதுக்கு இப்போ பல்லை காட்டிறீங்க...சாதனா பற்களை கடித்தபடி கேட்க இல்லடி நீ அறை மென்டல்னு எங்களுக்கே தெரியும் அதை ஊருக்கே தெரியப்படுத்த கல்யாணத்தப்போ அந்த கலர் தேவையா??அனு முகத்தை சீர்யசாக வைத்துக் கொண்டு சொல்ல...

இரண்டு பேரும் இங்கிருந்து ஓடிட்டா உங்களுக்கு நல்லது இல்லைனா என்றவளை அழைத்த ஜீவனின் அம்மா அவளிடம் சில புடவைகளை காண்பித்தார்...

சாதனாவிற்கு எந்த புடவையும் தனித்துவமாகவும் மனம் கவர்ந்ததாகவும் தோன்றவில்லை..."எல்லாம் அவனாலதா மார்னிங்கே இப்படி மூட் ஆப் பண்ணிட்டான்"எனக் கிடைத்த இடைவேளியில் ஜீவனை திட்டித் தீர்த்தாள்....

எவ்வளவு நேரம்தா ப்ரோ இப்படி பார்த்துட்டே இருக்க போறீங்க...இங்க வந்து அவளுக்கு ஹெல்ப் பண்ணுங்க...என்ற மாதவியை குரலை கேட்ட பின்னரே அவர்களுக்கு பின் இருக்கும் இருக்கையில் ஜீவன் கேப் போட்டு கொண்டு அமர்ந்திருப்பதை கவனித்தனர்...

அனைவரும் அவனிடம் பேசிய பின்னர் அவனை சாதனாவுடன் சேர்ந்து புடவையை சேர்ந்தெடுக்க சொல்ல"ப்ளஷர் இஸ் மைன்"என்றவாறு அவளை பார்த்து கண் அடித்தவன் அவளிடம் நகர்ந்தான்...

அங்கு வேலை பார்ப்பவர் பல வண்ண புடவைகளை எடுத்து காண்பிக்க...சாதனாவை முந்திக் கொண்டு ஜீவன் புடவைகளை புரட்டிப் போட்டு கொண்டிருந்தான்...

அவன் செய்வதை பார்த்து பெரியவர்கள் அனைவரும் சிரிக்க...சாதனா தன் புறம் இருந்த நாற்காலியை இழுத்து உட்காருங்க ஜீவன் என்றபடி அவனை அதில் தள்ளிவிடாத குறையாக உட்கார வைத்தாள்...

இப்படியே நீங்க செலக்ட் பண்ணப் போதும் ஓகேவா??!

அவள் கேட்க அவன் உதடை சுளித்தபடி தலையசைத்தான்...

அதன் பின் ஒவ்வொறு புடவையை கையில் எடுக்கும் போதும் அது நன்றாக இல்லையென்றால் அவன் முகபாவனையில் அதை வெளிப்படுத்தினான்...

எல்லா புடவைகளிலும் ஒவ்வொறு குறை சொன்னவனை முறைத்தவள் குங்குமம் மற்றும் கோல்டன் நிறத்தினாலான பட்டுபுடவையை கையில் எடுத்தால்....இவ்வளவு நல்ல புடவைகளையே பிடிக்காதவனுக்கு இதுவும் பிடிக்காமல்தான் போக போகிறது என அதையும் அவள் ஒதிக்கி வைக்க கைகளை உயர்த்திய நேரம்...

அவளது இடதுபுறம் அமர்ந்திருந்த ஜீவன் அவளின் முந்தனயை பிடித்து இழுக்க...சுற்றி பார்த்த சாதனா பெரியவர்கள் அனைவரும் அவரவர் வேலையில் மும்மரமாக இருக்க,அவன் முக அளவிற்கு குனிந்து என்ன எனக் கேட்க,அவளின் செவியின் புறம் நெருங்கியவன் இப்படி ஒரு சாரியைதா என் பொண்டாட்டிக்காக இவ்வளவு நேரம் தேடிட்டு இருந்த!!!என்றவனின் கடைசி வார்த்தையில் அவனது உதடு அவளை உரச சாதனா வேகமாக அவனிடம் இருந்து விலகி நிமிர்ந்தால்...

சாதனா உதட்டின் ஓரம் வந்த சிரிப்பை கட்டுப்படுத்தி அவன் குறிப்பிட்ட அந்த புடவையை நிராகரிக்கும் வண்ணம் அதை ஒதிக்கி வைத்து அடுத்த புடவையை பார்க்க துவங்கினால்...அதில் கோபம் அடைந்தவன் "அம்மா நான் இப்போ வந்துட்ற" என்றபடி அழைப்பு வராத கைப்பேசியை தன் காதில் வைத்தப்படி அங்கிருந்து நகர்ந்தான்...

பத்து நிமிடத்திற்கு பின் வந்தவனை பார்த்த அவனது அம்மா... என்னடா பேசி முடிச்சிட்டியா??சாதனாவுக்கு புடவை எடுத்தாச்சி இப்போ உனக்குதா...கோட்-சூட் எடுக்கப் போறியா இல்ல செர்வானியா என வினவினார்...

அப்பொழுதே பட்டுப்புடவை சுங்குப் போட்டு அவர்கள் கையில் வந்து சேர்ந்தது...அது அவன் தேர்ந்தெடுத்த புடவையாய் இருக்க அவனது கண்கள் சாதனாவை தேடியது...

அவள் அவனை பார்த்து கண் அடிக்க...உதடை சுளித்தபடி தன் தாயிடம் செர்வானியே ஃபைன்மா!!நீங்களும் சாதனாவும் செலக்ட் பண்ணுங்க...நான் பசங்க ப்ராக்டீஷை அப்படியே விட்டுட்டு வந்தறிக்க,சோ ஐ எவ் டூ கோ!!என்றான்

கிளம்புவதாக குறிப்பிடும் வண்ணம் சாதனாவை ஒரு பார்வை பார்த்தவன்,சாதனாவின் பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு புறப்பட்டான்.....

💕💕💕💕💕💕💕💕💕

ஜீவனிக்கு ஆடை எடுத்தப் பின் பெரியவர்கள் அனைவரும் புறப்பட,மூவரும் தாங்கள் மேலும் ஷாபிங் செய்ய வேண்டி உள்ளதாக கூறி அங்கேயே இருந்தனர்....

தன் தோழிகளுடன் நாள் முழுவதும் செலவிட்டதில்,மாதவி சைலன்ட் மோடில் வைத்திருந்த மொபைலை மறந்தேப் போனால்...

அடுத்த நாள் மாலை நடக்கவிருக்கும் சூட்டிங்கிற்கு இரண்டு பிரபலமான நகைச்சுவையாளர்களுக்கு கால் செய்து அவர்களது வருகையை உறுதி செய்துக் கொண்டு அவர்களுக்கு ஷெட்யூலை சொல்லும் பொறுப்பை மாதவியிடம் கொண்டிருந்தான்....எங்காவது சென்று சுற்றித் திரியும் வேலை என்றால் அதை தன் மற்ற இரு உதவி இயக்குநர்களிடம் கொடுக்கும் ரித்விக்,மாதவிக்கு மட்டும் இதுப் போன்ற சுலபமான வேலையை கொடுப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தான்....

இவற்றை நினைவு வைத்துக் கொள்ள தன் கைப்பேசியில் நினைவுட்டலில் பதிவு செய்திருந்தால்,இப்பொழுது அது சைலன்ட் மோடில் இருப்பதால் அதை முழுவதுமாக மறந்திருந்தால்......

💕💕💕💕💕💕💕💕

தன் தோழிகளிடம் வருணிற்காக சட்டை எடுத்துக் கொண்டு வருவதாக கூறி ஜென்ஸ் செக்ஷனிற்கு சென்ற அனுஷியா அங்கு வருண் அத்தை மாமனுடன் இருப்பதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தவள்...வருண் அவன் தாய் தந்தையிடம் தன்னை எவ்வாறு அறிமுகப்படுத்துகிறான் என அறிந்துக் கொள்ள எண்ணிணாள்...

அவர்களிடம் விரைந்தவள்...புத்துணர்ச்சியாய் உணர்ச்சிப் பொங்கும் குறளில்

"ஹாய் வருண்"😉 என்றாள்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro