12.பாலதர்ஷா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

12. பாலதர்ஷா

கடலானது சூரியனை முழுமையாக விழுங்கி தன் பசியினை தீர்த்துக்கொண்திருக்க அந்த அந்தி நேரத்தில் செவ்வானத்தையே தோற்கடிப்பது போல் அவன் விழிகளானது அனலை கக்கிக் கொண்டிருந்தது.

கால்மேல் கால்போட்டு இராஜ தோறணையுடன் அமர்ந்திருந்து போனில் வழங்கப்பட்ட தகவலினை மிக சிரர்த்தையுடன் கேட்டுக் கொண்டிருந்தவன், எதிர்புறம் துண்டிக்கப்பட்ட அழைப்பினை உணர்ந்து கையிலிருந்த விலைமதிப்பற்ற போனினை ஆக்கோரசமாக தரையில் போட்டு உடைத்தான்.

பார்வையோ அவன் முன் கைகட்டி நின்ற கூட்டத்தில் ஒருவனை மட்டும் கூர்மையாக பார்தத்தபடி எழுந்தவன்,  அவன் எதிர்பாராத நொடி நெஞ்சின் மேல் ஓர் உதை விட்டான்.

அவனது எதிர்பாராத தீடீர் தாக்குதலில் மற்றவர்கள் பயந்து போய், பின்னோக்கி இரண்டு அடிகளை எடுத்து வைத்து விழித்தபடி நிற்க,

அடிபட்டு தரையில் கிடந்தவனோ எதுவும் புரியாது பாவமாக அவனை பார்த்தான்.

"ஒரு வேலைய உன்கிட்ட நம்பி தந்தா அந்த  வேலையை உன்னால சரியா செய்ய முடியாதாடா? நாயே!
நீ மட்டும் சரியா செய்திருந்தா மறுபடியும் என் விஷயத்தில அந்த பரதேசி தலையிடுவானா? இதுல வேற அவன் உயிரோடயே இருக்க மாட்டான், அப்பிடியே உயிரோட இருந்தாலும் சுயநினைவோட இருக்கமாட்டான்னு பில்டப் பண்ணி, அதுக்கு ஊக்க தொகையா பணமும் வாங்கிருக்க.
என்னையே ஏமாத்துறியா...? உன்னை எல்லாம்....." என அந்த இடம் அதிருமளவு கத்தியவன் அருகில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவனை சுடுவதற்கு குறிவைத்து  அழுத்த, அவன் கையிலிருந்த துப்பாக்கியோ பறந்துபோய் சுவற்றுடன் மோதுண்டு தரையில் கிடந்தது.

ஏற்கனவே ஆத்திரத்திலிருந்தவன், கையிலிருந்த துப்பாக்கியை யாரோ தட்டிவிட்டதும் ஆக்ரோசமாய் திரும்பி யாரென பார்த்தான்.

அது வேறு யாருமில்லை அவனது தந்தை ஆறுமுகம் தான்.

"எதுக்குப்பா துப்பாக்கிய தட்டிவிட்டிங்க? இவன் செய்த வேலைக்கு....?"  என பற்களை நறநறவென அவனை பார்த்து இவன் கடிக்க,

"எத்தனை வாட்டி சொல்லிருக்கேன், எதுவா இருந்தாலும் பொறுமையா கேன்டில் பண்ணணும்னு." என அவனது தோள்களை தட்டி சமாதானம் செய்தவர்,

"இப்போ என்னாச்சுன்னு இவன்மேல கோபப்பட்ட...?" என்றார்.

"என்னாச்சா...? இந்த பரதேசிய அந்த போலீஸ் காரனை கொல்லச்சொல்லி அனுப்பினா, இவன் அவனை தூண்டிவிட்டு வந்திருக்கான்.  இப்போ  அவன் என்னடான்னா நம்மள வேரோட பிடுங்க திட்டம் போட்டிருக்கான்.

இத்தனை நாள் யாருக்கும் தெரியாம நடத்திட்டிருந்த எல்லா வேலையும் இப்போ இவனோட அலட்சியத்தினால வெளி வரப்போகுது. நாமளும் மாட்டிக்கிட்டு கூண்டோட களி திங்க போறோம். இவன் மட்டும் அவனை கொன்னிருந்தா திரும்ப நம்ம ரூட்ல கிராஸ் பண்ணுவானா?"  என தந்தை ஏதோ குற்றம் புரிந்தவரைப்போல் அவரிடம் வினா எழுப்பினான்.

"சரிடா...! இப்போ இவன் அவனை கொல்லாததுக்கும், அவன் நம்மள பிடிக்கிறதுக்கும் என்ன சம்மந்தம்?" என்றார் புரியாமல்.

"என்ன சம்மந்தமா....?  இதுவரைக்கும் நம்ம போதை பொருள் கடத்துற வேலையில மட்டும் தான் தலையிட்டிட்டு இருந்தான். இப்போ பசங்கள கடத்தி பிஸினஸ் பண்றதும் தெரிய வந்திடிச்சு.  அதோட அவனை வேற தாக்கியிருக்கோம். போலீஸ் காரன் புத்தி தன்னையே சந்தேகப்பட வைக்கும், நாம வேற அவனை சீண்டி விட்டுட்டோம்... இனி சும்மா இருப்பான்னா நினைக்கிறீங்க ஜானுக்கும் முழத்துக்கும் முடிச்சு போட்டு நம்மள தூக்கப் போறான்." என்றவன் கோபம் இப்போது அவருக்கும் புரிந்தது.

"ம்ம்... சரி நீ டென்ஷன் ஆகாத, அவன் நம்ம ஆளு வேற, அவனுக்கும் என்ன இவன் புளைப்பான்னு தெரியுமா என்ன?  நாம எப்பிடியாவது சமாளிச்சுப்போம். ஆனா உனக்கு அவன் கடத்தல் விவகாரமா கெச் போட்ட  மேட்டர் யாரு சொன்னா?" என்றார்.

"யாரு சொல்லுவா? டேஷனிலயே நம்பிக்கையான நாய் ஒன்னு வளர்க்குறோமே! அவன்தான் சொன்னான்." என்றான்.

"சரி விடு....!  இதை நான் பாத்துக்குறேன்." என்றவள் அவன் தோள் மேல் கை வைத்து அழைத்து சென்றார்.

Pratilipi id: பாலதர்ஷா

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro